Sunday, September 23, 2012

உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்(2011-2012)

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்.என்ன இந்தியாவின் பெயரைக் காணோமே என்று தேடறீங்களா?
உங்க நாட்டுப் பற்றுக்கு அளவே இல்லையா?

உங்களுக்குப் பேராசைதான்...


இந்த இடமாவது கிடைத்ததே....


கனவு காணுங்கள்...

என்று சொன்னதை நாம் சரியாத்தானே புரிந்து கொண்டிருக்கிறோமா?

உணவு
உடை
உறைவிடம்
கல்வி
ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்
தொழில்நுட்பம்

என பல்வேறு நிலைகளில் நாம் பின் தங்கியிருந்தாலும்

மக்கள் தொகை
இலஞ்சம்
ஊழல்
மது

என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..


தொடர்புடைய இடுகைகள்

18 comments:

 1. நானும் இந்தியாவைத்தான் தேடினேன்... எனக்கும் பேராசைதான் முனைவரே....

  ReplyDelete
  Replies
  1. நம் ஆசையும் ஒருநாள் நிறைவேறும் நண்பா.

   Delete
 2. முனைவர் ஐயா... ஏதாவது ஊக்குவிப்பு கொடுப்பது போல் பதிவு இருக்கும் என்றே நினைத்தேன்...

  சுதந்திரம் வாங்கி 65 வருடம் தானே ஆகிறது...

  ReplyDelete
  Replies
  1. ஆம் அருணா செல்வம்.. மெதுவாக ஒருநாள் நாமும் முதலிடத்துக்கு வருவோம்..

   Delete
 3. Replies
  1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சீனி.

   Delete
 4. கடந்த முறை டெல்லி IIT 225 ஆம் இடத்தில் இருந்தது.. இப்போது மும்பை முந்திவிட்டது போல!

  நாம் என்றுதான் முதல் 100 இடங்களுக்குள் வரப்போகிறோமோ தெரியவில்லை! :( :(

  ReplyDelete
 5. கனவு காணுங்கள் நண்பர்களே..!!

  முதலிடத்தில் கூட வரலாம்...

  ஒரே ஒரு கண்டிஷன்.. தூங்கும்போது குறட்டை ஒலி எழுப்ப கூடாது..!!!

  ReplyDelete
 6. I thought JNU is listed as world's one of the best Universities. Very disappointing that from the largest and most populated country not able to get a place here.

  Australia Tamil News

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்குக் காரணம். கடமையைச் செய்வோம் கல்விமுறையை மறுபரிசீலனை செய்வோம்..

   ஒருநாள் நாமும் சாதிப்போம்.

   Delete
 7. //மக்கள் தொகை, இலஞ்சம், ஊழல், மது

  என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..
  //

  மாணவச் சமூகத்தை விளிப்புணர்வுர செய்தால் வருங்காலமாவது வெளிச்சமாய் இருக்கும்,,,

  நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. உணரவேண்டிய உண்மை.

   நம்மால் ஆனவரை உணர்த்துவோம்.

   Delete
 8. நம்ம நாட்டு கல்வி முறையில நிறைய மாற்றம் கொண்டு வரணும். அப்போத்தான், இந்த பட்டியல்ல கொஞ்சம் முன்னேறி வர முடியும்னு தோணுது. கல்விய கலவின்னு சொல்லறமாதிரி ஆளுங்கதான் நம்ம நாட்டுல முக்கிய பதவிகள்ல இருக்காங்க. நான் நம்மோட MLA, MP , அமைச்சர்கள் இவங்களத்தாங்க சொல்லறேன்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கூறுவது மறுக்கமுடியாத உண்மை நண்பா..

   தங்ள் அறிவுறுத்தலுக்கு நன்றிகள்.

   Delete
 9. கல்விமுறையிலும் மாணவர்களை நடத்தும் முறையிலும் தேர்வு முறையிலும்கூட மாற்றம் வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.

  ReplyDelete
 10. நம்ம நாடு முன்னேறும் என்று நம்பிக்கையோடு இருப்போம்... (வேறு வழி...?)

  ReplyDelete