Featured Post

புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்

இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால்  நூல் வாசிப்பு மரபுகள்  மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...

Wednesday, July 24, 2013

சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.
             
(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
 தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,
                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்ன்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதைஅதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்
·         வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து வினோத ரசமஞ்சரி என்று வெளியிட்டார்.
·         வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார்.குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.
·         செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.
·         ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது குசிகர் குட்டிக்கதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
·         மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
·         கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
·         சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
·         மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது         டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன்], கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.


மாதிரி வினாக்கள்
இரண்டு மதிப்பெண் வினா
1.        சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
2.        தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
ஐந்து மதிப்பெண் வினாக்கள்
3.        புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைப் பணி குறித்து எழுதுக.
4.        தமிழர் மரபில் இருந்த தொன்மையான கதைகள் யாவை?
பத்து மதிப்பெண் வினாக்கள்
5.        தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை விளக்கி எழுதுக.

6.        காலந்தோறும் தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்க.

17 comments:

 1. சிறுகதைக்கான விளக்கம்போலவே
  கட்டுரையும் சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும்
  பல அரிய தகவல்களையும் கொண்டிருந்தது
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
  2. இந்த சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் எனும் கட்டுரை வரைய பயன்படுத்திய நூல்கள் என்ன ஐயா?

   Delete
 2. எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்கக் கூடாது...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 3. //அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை// அப்போ அது பேரு நாவல் இல்லையா :-)

  //மாதிரி வினாக்கள்// அய்யய்யோ இங்கையும் எக்சாமா... ஐ ஆம் பாவம்

  நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சீனு.

   Delete
 4. தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...
  வாழ்த்துக்கள் முனைவரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

   Delete
 5. சிறுகதை எழுத்தாளர்களை உலகம் நிச்சயம் மறக்காது. ரொம்பவும் உண்மை.

  கல்லூரி மாணவர்களுடன் நானும் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நாங்களும் பதில் எழுதணுமா? நான் எஸ்கேப்!

  இந்தக் கட்டுரையில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
  நன்றி முனைவர் அவர்களே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா. பல கல்லூரி மாணவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு குறித்து இணையத்தில் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மாதிரி வினாக்களுடன் வெளியிட்டேன்.

   நன்றி.

   Delete
 6. தமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடிகள் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. பிரெஞ்சு சிறுகதை மன்னன் மொப்பசானுக்கு இணையாக தமிழ்நாட்டின் மொப்பசான் என்று பாராட்டப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களின் சில சிறுகதைகளை வாசித்து ரசித்து வியந்திருக்கிறேன். சிறுகதையில் ஆர்வமுள்ள அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே அம்மா.

   Delete
 7. வணக்கம் முனைவரே...

  இன்றைய வலைச்சரப் பதிவில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

  நேரமிருப்பின் வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7.html

  நன்றி...

  வாழ்த்துக்களுடன் சே.குமார்

  ReplyDelete
 8. வணக்கம்
  இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்
  பார்வைக்கு.http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_7.html?showComment=1378510950808#c1748643670372318665

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரை வாழ்த்துகள்

  ReplyDelete
 10. நல்ல பயனுள்ள பதிவு முனைவரே.....

  ReplyDelete