Friday, January 21, 2011

மேகக் கணினி (கிளவுட் கம்யூட்டிங்)


வள்ளுவர் இன்றிருந்தால்..

சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
உழந்தும் கணினியே தலை

கணினி கற்று வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஅவர் பின்செல் பவர்

என்று பாடியிருப்பார்.
ஆரம்ப கால கணினிகளுக்கு நிறைய இடம் தேவைப்பட்டது. குறைந்த கொள்திறனும், நினைவுத் திறனும் கொண்ட அக்கணிகளும் தனித்தே செயல்பட்டு வந்தன. காலம் செல்லச் செல்ல கணிகளுக்கிடையே தொடர்புகொள்ளும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இன்று பெரு வையமே சிறு கிராமமாக இணையத்தால் சுருங்கிப்போனது. எல்லையற்ற நினைவுத் திறனையும், கொள்திறனையும் நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.

மேகக் கணினி.


மேகம் எவ்வாறு எல்லோருக்கும் பயன்படுகிறதோ அதுபோல இணையமும் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் உருவானதே மேகக் கணினி. பல கணினிகளும், சேவையகங்களும் இணையத்தால் தொடர்பு கொள்ளும் நுட்பமே மேகக் கணினி.

தற்கால அதிவேகக் கணினி

 மூளையைப் போல சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்கவேண்டும் என்ற மனிதனின் தேடலின் விளைவு சூப்பர்கணினி உருவாக்கப்பட்டுள்ளது.
 முதலில் எலியைப்போல சிந்திக்கும் கணினி உருவாக்கப்பட்டது.தற்போது ஐபிஎம் நிறுவனம் பூனையைப்போல சிந்திக்கும் கணினியை உருவாக்கியுள்ளது.
 1,47,456 பிராசசர்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நினைவகம் 144 டெராபைட் ஆகும். நாம் பயன்படுத்தும் கணியைவிட இலட்சம் மடங்கு சக்திவாய்ந்தது இக்கணினியாகும்.
 இன்று பயன்பாட்டிலுள்ள கணினிகள் மனிதனைப்போல 1விழுக்காடுதான் சிந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேகக் கணினியின் தனிச்சிறப்புகள்.

ழ கணினிகள் மட்டும் போதுமானது மென்பொருள்கள் மேகத்தில் கிடைக்கும், அதனை கணினியில் நிறுவத் தேவையில்லை. நம் ஆவணங்களை பூமிப்பந்;தின் எந்த இடத்திலிருந்தும்; இணையத்தின் உதவியோடு உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
ழ கணினிகள் எந்த இயங்குதளத்தையும் பெற்றிருக்கலாம்.
ழ பழைய கணினிகூட போதுமானது. எதிர்காலத்தில் கணினிகள் எதுவும் தேவைப்படாது. பேனா வடிவில் கூட கணினிகள் வந்துவிடும்.
ழ நம் கணினிகளில் அதிகமான கொள்திறன் இருக்கவேண்டிய தேவையில்லை. மாறாக அதிகமான நினைவுத் திறனிருந்தால் போதுமானது.
ழ மேகக் கணினி வழியாக மிகப்பெரிய பயன்பாடுகளைக் கூட நம் உலவியின் துணைகொண்டு எளிதாகச் செய்துவிடமுடியும். சான்றாக… கூகுள், ஸ்கைப், மைக்ரோசாப்;டு எனப் பல நிறுவனங்களும் மேகக் கணினிநுட்பத்துடன் தம்மை இணைத்துக்கொண்டு பல வகையான மென்பொருட்களை வழங்கிவருகின்றன. அம்மென்பொருள்களைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
ழ இதனால் நம் கணினிக்கென மென்பொருகளை வாங்கவோ நிறுவவோ தேவையில்லை.
ழ இப்போது மேகக் கணினிக்கென தனியாக இயங்குதளங்களும் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனத்தாரின் குரோம், ஐகிளவுடு மற்றும் குட்எஸ் ஆகியன வழக்கில் உள்ளன. இவ்வியங்குதளங்களின் வழியாக கூகுளின் எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இயங்குதளத்துக்கு குறைந்த அளவு 256 எம்பி ரேமும் 35 எம்பி அளவுடைய வன்தட்டும் போதுமானது.
ழ பயனர்களுக்கு மென்பொருள்களைத் தருவது, சேமிப்புக்கான பெரிய பாதுகாப்பான இடமளிப்பது, இணைய சேவைகளைத் தருவது, என இதன் பயன்படுகள் நீண்டுகொண்டே செல்லும்...
காலத்தின் தேவை – மேகக் கணினி.
இன்றைய நிலையில் கணினி இல்லாத துறைகளே எதுவுமில்லை. அதனால் கணினி நம் முதன்மையான தேவையாகிறது. நாம் செல்லுமிடங்களிலெல்லாம் நம் கணினியைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது. இந்நிலையில்,

 எளிதில் எடுத்துச்செல்ல வசதியான குறைந்த எடைகொண்ட, கைக்கு அடக்கமான, அதிக கொள்திறன் கொண்ட கணினி நம் அடிப்படைத் தேவையாகிறது.
 இன்றைய வழக்கில் அலைபேசிகள் கூட இணைய வசதி கொண்ட கணினியாகப் பயன்பட்டு வருகின்றன.
 எதிர்காலத்தில் இன்னும் சிறிய சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் பேனா அளவில் கூட கணினிகள் பயன்பாட்டுக்கு வரலாம். அதன் வழி பெறும் ஒளியால் நமக்கான கணினித் திரையும், தட்டச்சுப்பலகையும் மாயத்தோற்றம் போல காணக்கிடைக்கும். அக்காலத்தில் நமக்கு இன்றைய மென்பொருள்போல வன்பொருள்களின் தேவையும் குறையும்.
 பிளாபி, சிடி, டிவிடி, பென்டிரைவ், பிளாஸ்டிரைவ், மெமரி கார்டு என பல புறநினைவுக் கருவிகளைப் பயன்படுத்தி வந்த நாம்… ஏடிரைவ், ரேபிட்சேர், பிளிப்டிரைவ், பிரீடிரைவ்,ஹக் டிரைவ், மீடியாபயர், 4சேர் என காலம்தோறும் நம் கோப்புகளைச் சேமித்துக் கொள்ள பல வழிகளைப் பின்பற்றி வருகிறோம்..
 கிணறு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிணற்று நீர் பயன்படும், ஆனால் மழையோ எல்லோருக்கும் பயன்படும். அது போல் இன்றைய கணினி மற்றும் இணைய உலகம், தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மிகவும் பயன்படுவதாகவுள்ளது. சராசரி மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இம்மேகக் கணினி.
 இந்நிலையில் மேகக் கணினி காலத்தின் கட்டாயத் தேவையாகிறது. நானறிந்தவரை எனக்குப் புரிந்தவரை இந்த “மேகக் கணினி (கிளவுட் கம்யுட்டிங்)” என்னும் தொழில்நுட்பத்தை விளக்கியிருக்கிறேன்.இந்த தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், பயன்படுத்துவதும் நாம் சம காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன். தெரிந்தவர்கள் தாமறிந்த செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாமே...

45 comments:

 1. முனைவருக்கு வணக்கம்... தரமிக்க கணினித் தகவல் வியக்க வைக்கிறது பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. மேகம் விடு தூது .......... மேகக்கணினி .... அருமையான பகிர்வு.

  ReplyDelete
 3. அருமையான கட்டுரை..அருமையான பகிர்வு...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 4. @சி. கருணாகரசு வணக்கம் வருக நண்பரே..
  தங்கள் கருத்துரைக்கு நன்றி

  ReplyDelete
 5. வியக்க வைத்தது குணா..மேகக் கணினி கவிதையாய் இருக்கிறது தலைப்பே...

  ReplyDelete
 6. செமயான பதிவு செம்மையான வடிவில்

  ReplyDelete
 7. கணினித் தகவல் அருமை.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. அருமையான கட்டுரையைத் தந்திருக்கிறீர்கள் முனைவர் அவர்களே. கடலூரைச் சேர்ந்த திரு.சுரேஷ் அவர்கள் உருவாக்கிய OrangeScape நிறுவனம் (http://www.orangescape.com/about/management-team/) உலக அளவில் முன்னனி மேகக் கணிமை சேவைகளுள் (Cloud computing service vendor) ஒன்று என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான்,மைக்ரோசாப்ட்,ஐபிஎம்,ஆரக்கிள்.. போன்ற மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் வரிசையில் நம்மவர் ஒருவர் ஆரம்பித்த நிறுவனமும் இருக்கிறதென்பது எவ்வளவு பெருமையான விடயம். மேகக் கணிமை வழங்குதலில் விரைவில் அந்நிறுவனம் முதலிடத்தைப் பிடிக்க வாழ்த்துவோம்.

  ReplyDelete
 9. து. சூசை பிரகாசம் இன்றைய கணினி உலகத்தில் மிகவும் அருமையான செய்தி கூறியமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 10. கணினிக் குறள் அருமை முனைவரே.

  ReplyDelete
 11. @ந.ர.செ. ராஜ்குமார் மிக்க மகிழ்ச்சி நண்பரே.. தங்கள் கருத்து மேகக் கணிமை நுட்பத்தை அறிந்து வெளியிட்டது ஆகையால் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் நண்பா

  ReplyDelete
 12. @TAMILSOOSAI தங்கள் கருத்துரைக்கு நன்றி சூசை

  ReplyDelete
 13. யாம் அறியாத தகவல்கள்....

  ReplyDelete
 14. @தங்கராஜ்..., கருத்துரைக்கு நன்றி தங்கராஜ்

  ReplyDelete
 15. @செல்வமுரளி மேகக்கணினி பற்றிய பல நுட்பங்களை வழங்கி வரும் தங்களின் கருத்துரை இக்கட்டுரைக்குப் பெரிதும் சிறப்பளிப்பதாகவுள்ளது நண்பரே நன்றி!!

  ReplyDelete
 16. பிளாக்கரில் அனைத்து லிங்க்கும் (open link in new tab) அடுத்த டேபிள் திறக்க

  http://vandhemadharam.blogspot.com/2010/08/open-link-in-new-tab_09.html

  ReplyDelete
 17. பிளாக்கரில் அனைத்து லிங்க்கும் (open link in new tab) அடுத்த டேபிள் திறக்க

  http://vandhemadharam.blogspot.com/2010/08/open-link-in-new-tab_09.html

  ReplyDelete
 18. @சசிகுமார் தங்கள் தொழில்நுட்பக்குறிப்புக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 19. வார்த்தைகளில் இப்படி ஒரு ஜாலமா.. அருமைங்க...

  ReplyDelete
 20. ஐயா, தாமதமான வருகைக்கு முதலில் மன்னிக்கவும்,

  மேகக் கணினிபற்றி தெளிவான கட்டுரை அதுவும் உங்களின் கணினிதமிழில் அழகாக பதிவு செய்துள்ளீர்கள் ஐயா அருமை

  கணினி குறளுடன் ஆரம்பித்தவிதம் சூப்பர்

  ReplyDelete
 21. உங்களின் தமிழ்ப்பணி தொடர்ந்து சிறக்க என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  ReplyDelete
 22. மேகக்கணினி .... அருமையான பகிர்வு.

  ReplyDelete
 23. மேகக் கணினி பற்றி எளிமையாய்,
  விரிவாய் கட்டுரை.
  நன்றிகள்!

  ReplyDelete
 24. cloud computingக்கு வேறேதும் பெயர் வைத்திருக்கலாம். என்றாலும் நல்லதொரு பதிவு. நன்றி. :)

  ReplyDelete
 25. so nice for clouds computer information thank you by ak alavudeen

  ReplyDelete
 26. @அன்னு எனக்குத் தோன்றிய பெயரை வைத்தேன் நண்பா..

  தங்களுக்கு எதுவும் நல்ல பெயர் தோன்றினால் சொல்லுங்களேன்..

  கலைச்சொல்லாக்கத்தில் நாம் இன்னும் தன்னிறைவடையாத நிலையில்தான் இருக்கிறோம் நண்பா..

  ReplyDelete
 27. வாழ்த்துகள் பேரா. குணசீலன். நல்ல பதிவு.

  ReplyDelete