வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 ஜூன், 2020

சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதை விளக்கம்1. மாதவியின் நாட்டியப் பயிற்சி்

தெய்வ மால்வரைத் திருமுனி அருள

எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு

தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய

மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர்

சிறப்பில் குன்றாச் செய்கையொடு பொருந்திய

பிறப்பில் குன்றாப் பெருந்தோள் மடந்தை

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்றிக்

கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்

ஏழாண் டியற்றி ஓரீரா றாண்டில்

சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி

தெய்வ மால்வரை என்று போற்றப்படும் பொதியமலை முனிவன் அகத்தியன். அவன் அருளினால் இந்திரன் மகன் சயந்தன் சாபம் பெற்றான். சாபத்தால் மூங்கிலாக மாறிக் கிடந்தான். அந்த மூங்கிலால் செய்யப்பட்டது தலைக்கோல்.  அந்தத் தலைக்கோலை விருதாகப் பெற்றாள் உருப்பசி (ஊர்வசி). உருப்பசி வானவர் மகளிருள் ஒருத்தி. இவள் சிறப்பில் குன்றா நாட்டியக்காரி. ஊர்வசியின் பிறப்பில் குறைவில்லாப் பிறப்பில் தோன்றியவள் மாதவி. மாதவி தேனொழுகும் கூந்தலை உடையவள். இவளுக்கு ஆடல், பாடல், அழகுபடுத்திக்கொள்ளும் ஒப்பனை ஆகிய கலைகள் மூன்றனுள் ஒன்றிலும் குறைவுபடாமல் இருக்கும்படி ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. பன்னிரண்டாம்  வயதில் இவளது கலைத்திறத்தை மன்னருக்குக் காட்ட அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஞாயிறு, 28 ஜூன், 2020

கூகுள் மீட் செயலி - பயன்பாடு மற்றும் பயனுள்ள ஐந்து குரோம் நீட்சிகள்
கூகுள் மீட் செயலி என்றால் என்ன?
கூகுள் மீட் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
கூகுள் மீட் செயலியில் பயன்படுத்துவதற்கான ஐந்து குரோம் நீட்சிகள் குறித்த விளக்கமாக இப்பதிவு அமைகிறது.

வெள்ளி, 26 ஜூன், 2020

லிப்ரே அலுவல் தொகுப்பு அறிமுகம் - Introduction to LibreOffice

லிப்ரே ஆபீஸ் என அழைக்கப்படும் திறந்தமூலகட்டற்ற மென்பொருளை எவ்வாறு
பதிவிறக்குவது,?
நிறுவுவது?
பயன்படுத்துவது?
வசதிகள் யாவை?
ஆகிய கேள்விகளுக்கு விடையளிப்பதாக இப்பதிவு அமைகிறது.

செவ்வாய், 23 ஜூன், 2020

இதழியல் அறம் - திரு.ரீ.சிவக்குமார் (சுகுணா திவாகர்)


பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய இணையவழி ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிலரங்கின் இரண்டாம் நாள் (23.06.20) நிகழ்வாக “இதழியல் அறம் - என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் இதழாசிரியர் திரு.ரீ.சிவக்குமார் (சுகுணா திவாகர்) அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்,

இதழியல் அறம்
ஊடகவியல் அறம்
தனிமனித இதழியல் அறம்
இதழிகளின் இன்றைய நிலை
இதழியலாளர்களின் சூழல்கள் குறித்து செறிவான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும் நடுநிலையோடு பதிலளித்தார்.

இவ்வுரையானது, இதழியல் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறங்களைப் போதிக்கும்.

கருத்துரைப் படிவம் கீழே உள்ளது. இன்று இரவு 9 மணிவரை தா்ஙகள் கருத்துரை வழங்கலாம்

https://forms.gle/wJXngiiJcL2CTovi7

சனி, 20 ஜூன், 2020

வலைப்பதிவுக்குக் களப்பெயர் பெறுவது எப்படி?


வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை தொடர்பதிவின் வரிசையில் 3 வது பதிவாக இப்பதிவு அமைகிறது. இப்பதிவில் வலைப்பதிவுக்கு களப்பெயர் (டொமைன் நேம்) பெறும் வழிகளுள் கூகுள் டொமைன் மற்றும் கோ டாடி இணையம் வழியாக களப்பெயர் பெறும் வழிகளை செயல்முறை விளக்கமாக வழங்கியுள்ளேன்.

வெள்ளி, 19 ஜூன், 2020

திறந்த கல்வி வளங்கள் I open educational resources


திறந்த கல்வி வளங்கள் என்றால் என்ன?
திறந்த கல்வி வளங்கள் எத்தனை வடிவங்களில் கிடைக்கின்றன?
திறந்த கல்வி வழங்களுக்கான தகுதிகள் யாவை?
திறந்த கல்வி வளங்களை வழங்கும் இணையதளங்கள் யாவை?
ஆகிய கேள்விகளுக்கான பதிலாக இப்பதிவு அமைகிறது.

வியாழன், 18 ஜூன், 2020

ஊடகக்களங்களும் கருத்தாடல்களும் - இணையவழிப் பயிலரங்க அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்!
பூ.சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை ஏற்பாடு செய்துள்ள
இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் 22-6-2020 முதல்
24-6-2020 முடிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
தலைப்பு: “ஊடகக்களங்களும் கருத்தாடல்களும்”
பயிலரங்கம் நாள்தோறும் காலை 10 மணிமுதல் 11 மணிவரை Google meet செயலி
வழியாக நடைபெறும். மேலும் YOU TUBE வாயிலாகவும் நேரலையாகக் கண்டு
பயிற்சி பெறலாம். இப்பயிலரங்கத்தில் பேராசிரியர் பெருமக்கள்
கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம். பதிவு செய்யக் கடைசி நாள் 21-6-2020.
பதிவுக்கட்டணம் கிடையாது.
ஒவ்வொரு நாளும் அமர்வின் போது பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். மூன்று நாட்களும் பங்கேற்று, பயிலரங்கத்திற்கு வலுசேர்க்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். மூன்று நாட்களும் பங்குபெற்றுப் பின்னூட்டங்களைப் பூர்த்தி செய்து
அனுப்புபவர்களுக்கு மின்சான்றிதழ் மின்னஞ்சல்வழியாக அனுப்பப்படும். கூட்டத்திற்கான கூகுள் மீட் அழைப்புக் குறியீடு 21.06.2020 அன்று தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்புவோம். மிக்க
நன்றி.
பதிவு செய்வதற்கான இணைப்பு -https://forms.gle/kFiAbR9Lv1SEpaaQ7
You tube channel. gunathamizh
பயிலரங்கத்தலைவர்
முனைவர் சோ. பத்மாவதி
தமிழ்த்துறைத் தலைவர்.
தொடர்புக்கு
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் இரா. செல்வி
இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை
9488202797
r.selvi1967@gmail. Com

செவ்வாய், 16 ஜூன், 2020

தொடித்தலை விழுத்தண்டினார்

சங்க இலக்கியத்தில் தொடரால் பெயர்பெற்றவர்கள் வரிசையில் தொடித்தலை விழுத்தண்டினார் என்ற புலவரின் பெயர்க்காரணத்தை அவர் இயற்றிய பாடல் வழி விளக்குகிறது இப்பதிவு. இப்பதிவு ரீட் அலவுட் என்ற நுட்பத்தின் வழியாக தமிழ் எழுத்துகளை  கணினி வழி வாசித்துப் பதிவு செய்யப்பட்டது.


ஞாயிறு, 14 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை I இடுகை வெளியீடு, தளவமைப்பு, தீம் (BtoA P...


BTOA 2 என்ற பெயரில் வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை என்ற தொடர்பதிவின் வரிசையில் இரண்டாவது பதிவாக இப்பதிவு வெளியிடப்படுகிறது.

இப்பதிவில் வலைப்பதிவில் எவ்வாறு நாம் இடுகைகளை வெளியிடுவது, அதன் தளவமைப்பு மற்றும் தீம் பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

அழகு பற்றிய 20 பொன்மொழிகள்

 

1.   அழகு சிறிதுகாலம் நிலைத்திருக்கும் ஒரு கடுமையான ஆட்சி - சாக்ரடீஸ்

2.   உலகிலுள்ள எல்லா பரிந்துரைக்  கடிதங்களையும்விட மேலானது அழகு

 - அரிஸ்டாட்டல்

3.   அழகு இயற்கை அளித்துள்ள பேறு. பிளேட்டோ

4.   அழகு இயற்கையின் உன்னதமான ஒரு பரிசு. -ஹோமர்

5.   அழகு எங்கும் உள்ளது ஆனால் அதை யாவராலும் பார்க்க முடியாது முடியாது – கன்பூசியஸ்

6.   அழகை விரும்பும் இதயத்துக்கு எப்போதும் வயதாகாது – ஆல்பர்ட் ஐன்ஸ்டின்

7.   அழகு என்பது ஆற்றல், புன்னகை அதன் வாள் - ஜான் ரே

8.   பட்டாம்பூச்சிகள் தங்கள் இறக்கைகளைப் பார்க்க முடியாது. அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன என்பதை அவற்றால் பார்க்க முடியாது, ஆனால் பிறரால் பார்க்க முடியும். மக்களும் அப்படித்தான். – யாரோ

9.   உங்கள் வெளிப்புற அழகு கண்களுக்குப் பிடிக்கும், உங்கள் உள் அழகு இதயங்களுக்குப் பிடிக்கும்.- ஸ்டீவன் அட்ச்சன்

10. அழகாக இருப்பது என்பது, நீங்கள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லை. நீங்கள் உங்களை ஏற்றுக்கொள்வது. - திக் நட் ஹன்

11. நீங்கள் உங்களைச் சுற்றி அழகை உருவாக்கும் போதெல்லாம், நீங்கள் உங்கள் சொந்த ஆன்மாவை மீட்டெடுக்கிறீர்கள்.- ஆலிஸ் வாக்கர்

12. இயற்கையின் அழகைக் காண கடவுள் கண்களையும், ஒருவருக்கொருவர் அழகைக் காண இதயங்களையும் கொடுத்தார்.-யாரோ

13. அழகாக எதையும் பார்க்கும் வாய்ப்பை ஒருபோதும் இழக்காதீர்கள், ஏனென்றால் அழகு என்பது கடவுளின் கையெழுத்து.- ரால்ப் வால்டோ எமர்சன்

14. அழகு முகத்தில் இல்லை; அழகு இதயத்தில் ஒரு ஒளி. " கலீல் ஜிப்ரான்

15. வெளி அழகு ஒரு பரிசு. உள் அழகு என்பது ஒரு சாதனை. 

  ராண்டி ஜி. ஃபைன்

16. அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது. கிரேக்க பழமொழி

17. சுருக்கமாக, சொற்களின் கவிதைகளை அழகின் தான் உருவாக்கம் என்று நான் வரையறுப்பேன் - எட்கர் ஆலன் போ

18. ஒரு புன்னகை பிரபஞ்சத்தின் அழகை பெரிதும் அதிகரிக்கிறது. ஸ்ரீ சின்மோய்

19. வாழ்க்கையின் இரண்டு முக்கிய பரிசுகளில், அழகு மற்றும் உண்மை, நான் முதல் அன்பான இதயத்திலும், இரண்டாவதாக ஒரு தொழிலாளியின் கையிலும் கண்டேன்.- கலீல் ஜிப்ரான்

20. "வெளிப்புற அழகு ஈர்க்கிறது, ஆனால் உள் அழகு வசீகரிக்கிறது." - கேட் ஏஞ்சல்


வியாழன், 11 ஜூன், 2020

தமிழ் எழுத்துணரி நுட்பங்கள் இரண்டு lTwo Tamil OCR Techniques


படங்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்தாக்கம் செய்தல், மின்வருடப்பட்ட நூல்களிலிருந்து தமிழ் ஒருங்குறி எழுத்தாக்கம் செய்தல் ஆகிய இரு நுட்பங்களை கூகுள் ஆவணத்தைப் பயன்படுத்தி எழுத்துணரியாக்கம் செய்யும் வழிமுறைகளை செயல்முறையாக விளக்கியுள்ளேன். 

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.சனி, 6 ஜூன், 2020

தேய்புரிப்பழங்கயிற்றினார் I சங்கச் சாரல்

சங்கச் சாரல் என்ற தொடரின் வரிசையில் தேய்புரி பழங்கயிற்றினார் என்ற புலவரின் பெயர்க்காரணத்தை அவர் எழுதிய பாடல் வழி விளக்குவதாக இப்பதிவு அமைகிறது.

வியாழன், 4 ஜூன், 2020

செம்புலப் பெயல் நீரார் I சங்கச் சாரல் I


சங்க இலக்கியத்தின் பெருமைகளைப் பேசும் சங்கச்சாரல் தொடரின் வரிசையில், செம்புலப் பெயல் நீரார் எழுதிய குறுந்தொகைப் பாடல் குறித்த  எனது சிந்தனைகளை கணினியின் குரலில் பேசவைக்க முயற்சி செய்துள்ளேன்.. தொடரால் பெயர்பெற்ற புலவர்கள் வரிசையில் வேர்களைத்தேடி என்ற வலைப்பதிவில் நான் எழுதிய சங்கப் புலவர்களின் பாடல்கள் குறித்த எனது சிந்தனைகளை சங்கச்சாரலில் தொடர்ந்து வழங்கவுள்ளேன்

புதன், 3 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)


            புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் வந்து மக்களைத் தன்வயப்படுத்தும் இக்காலத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் காலத்தைக் கடந்து நிலைத்திருப்பதில்லை.   சில தொழில்நுட்பங்கள் மட்டுமே காலத்தை வென்று நிலைபெறுகின்றன. அவ்வடிப்படையில் வலைப்பதிவுகள் தனிச்சிறப்பு பெறுகின்றன. வலைப்பதிவு (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் கலந்துரையாடுவதற்குமான வழிமுறைகள், இணையதளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் இலவசமாகத் தம் கருத்துகளை தம் மொழியில் வெளியிட இவ்வலைப்பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.

செவ்வாய், 2 ஜூன், 2020

ஆசிரியர்களுக்குத் தேவையான 5 குரோம் நீட்சிகள்


குரோம் வெப்சுடோரில் கிடைக்கும் நீட்சிகளுள், ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஐந்து நீட்சிகளை அறிமுகம் செய்வதாக இப்பதிவு அமைகிறது.
விளக்கப் பகுதிகள்