வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

இன்றைய சிந்தனைகள்எமது கல்லூரி செய்திப்பலகையிலும், வலைப்பதிவிலும், சமூகத்தளங்ளிலும் நான் வெளியிட்ட சிந்தனைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்த நூல் உருாவக்கத்தில் துணைநின்ற அன்புள்ளங்களுக்கு என்றும் என் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.


புதன், 6 டிசம்பர், 2017

கருத்தரங்க அழைப்பிதழ்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மூன்றாவது ஆண்டாக தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் 12.12.2017 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.
மலேசியா, அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு பேராளர்களின் கட்டுரைகளும், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்களின் கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஆய்வுக்கோவை அன்று வெளியிடப்படவுள்ளது.
மலாயாப் பல்கலைக்கழக, இந்தியவியல் துறையிலிருந்து முனைவர் எஸ்.குமரன் ஐயா அவர்களும், கேரளா, கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலிருந்து, ரீனு ஜார்ஜ் அவர்களும் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை சிறப்பிக்கவுள்ளனர். இக்கருத்தரங்கம் சிறப்பாக அமைய கட்டுரை நல்கிய பேராளர்களுக்கு நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.