வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தமிழ் மின் உள்ளடக்கங்கள்: Tamil E-Contents (Tamil Edition) Kindle Edition

     


   தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்ற கருத்துக்குச் சான்றாக, இயல், இசை, நாடகம் என வளர்ந்த முத்தமிழானது அறிவியல் தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்துள்ளது. அறிவியல் தமிழ் விரிவான பரப்புடையது. அறிவியல் தமிழின் ஒரு கூறாகவே கணினித் தமிழ் வளர்ச்சியடைந்துள்ளது. electronic content என்ற சொல்லைத் தமிழில் மின்னணு உள்ளடக்கம் என்று மொழிபெயர்க்கலாம். e-book என்ற சொல்லைத் தமிழில் மின் புத்தகம் அல்லது மின்னூல் என்று அழைப்பதுபோல, மின்னணு உள்ளடக்கம் என்ற சொல்லை மின் உள்ளடக்கம் என்று அழைக்கிறோம்.


        கணினி வழியே இணையத்தின் பல்வேறு மின் உள்ளடக்கங்களை அவரவர் தாய்மொழியில் உருவாக்கி வருகிறோம். தமிழில் பல்வேறு மின் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்கள் என்ற இந்த நூலில் தமிழ் எழுத்துரு வளர்ச்சி முதல் தமிழ் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா, மின்னூல், யூடியூப், குறுஞ்செயலிகள் என பல்வேறு மின் உள்ளடக்கங்கள் குறித்த செய்திகள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த நூலின் நிறைவாக விரைவு எதிர்வினைக் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் வழியாக இந்த நூலில் குறிப்பிடப்பட்ட நுட்பான செய்திகளைக் காணொலி வாயிலாகவும் செயல்முறை விளக்கமாகக் காண்பதற்கான யூடியூப் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இணையவழியே கல்வி கற்பித்து வரும் இன்றைய காலகட்டத்தில் தமிழில் பல்வேறு நிலைகளில் தமிழ் மின் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் இந்த நூல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


மின்னுலைப் பெற.. https://amzn.to/2ZlLXKj


தமிழ் மின் உள்ளடக்கங்கள்: 


வியாழன், 11 பிப்ரவரி, 2021

தேன் சொட்டும் தமிழ்த்துளிகள் - செ.சிந்து (Kindle Edition)வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

எனும் மகாகவி பாரதியாரின் வாய்மொழிக்கேற்ப, நாம் பூமியில் அறச்செயல்கள் செய்து ஒழுக்க நெறியில் வாழ்ந்திட, ‘தெய்வப் புலவரான திருவள்ளுவர்’ எழுதிய அறிவுப் பெட்டகம் திருக்குறள். அதன்மீது சிறுவயதிலிருந்து நான் கொண்ட காதலால், இந்நூலை எனது கவிதைகளால், அதிகாரத்துக்கு ஒரு கவிதை என 133 கவிதைகளை இக்கால வாழ்வியலுக்கேற்ப  எளிமையாக எழுதியுள்ளேன்.

மனிதன் மனிதனாக வாழ
மனிதன் மனிதனுக்கு கூறிய அறவுரை - திருக்குறள்’
எனும் வரிகளுக்கேற்ப, எனக்கான எளிய நடையில் இந்நூலைப் படைத்துள்ளேன்.
நிறைகள் இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். தங்களது கருத்துகள் எதுவாக இருப்பினும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
-செ.சிந்து

 

மின்னூலைப் பெறுவதற்கான இணைப்புதிங்கள், 8 பிப்ரவரி, 2021

வடிவேல் எறிந்த வான்பகை: தமிழ் உயராய்வுச் சான்றுகள் (Tamil Edition) Kindle Edition

தமிழ் மரபில் வேல் என்ற கருவியை ஏந்திய வேந்தா்கள், மறவா் என அனைவரும் முருகனை முன்னோன் என்று போற்றிய செய்தி இலக்கியப் பரப்பில் பரவலாகப் பதிவாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியப் பரப்பு மிகவும் விாிவானது. அதனில் செவ்விலக்கியங்களாகத் தமிழறிஞா்களால் வரைவு செய்யப் பெற்றுள்ள செம்மொழி இலக்கண இலக்கியங்கள் என்ற நூலில் இருந்து மட்டும் முதற்கட்டமாக 459 சான்றுகள் பட்டியல் இடப்பெற்றுள்ளன. அத்தகையதொரு பட்டியலே இந்நூல். இப்பட்டியல் எட்டுப் பிாிவுகளில் செய்திகளை வகைப்படுத்தி இருக்கிறது. பிற இலக்கியங்களில் உள்ள வேல் பற்றிய செய்திகளை ஒப்பிடுவதற்கு இந்தப் பகுப்பு முறை பயன்படும் என்று நம்பலாம். உலகைச் சுற்றி வரும் வான வீதியில் கோள் ஒழுங்கு தடுமாறும் போது கோள் வலிமையினால் நோ்த்தி செய்த தமிழா்கள் ஏந்திய கருவியே வேல் என்று புாிந்து கொள்ள இச்சான்றுகள் வாய்ப்பாக அமைகின்றன. ஆய்வாளா்களே இவற்றைத் திறனாய்வு செய்திட வேண்டும். உண்மைத் தன்மை இருப்பின் அது தானாகத் தாக்குப் பிடிக்கும் என்று நம்புவோம்.


மின்னூல் பதிவிறக்க முகவரி


வடிவேல் எறிந்த வான்பகை: தமிழ் உயராய்வுச் சான்றுகள் (Tamil Edition) Kindle Edition