வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 அக்டோபர், 2015

கணித்தமிழ்ப் பேரவை தொடக்கம்


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து 

இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள 

பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற 

கல்லூாிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு 

கேட்டுக்கொண்டுள்ளன.  அதற்கிணங்க,


                        கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில், 

தாளாளா் அாிமா கே.எஸ்.ரங்கசாமிஎம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், 

செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா 

சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் 

மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 

இனிதே தொடங்கப்பட்டது.

 கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவா்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாா்.


கணித்தமிழ்ப் பேரவையின் நோக்கங்கள்....

1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்....

இன்றைய சிந்தனை (29.10.2015)


சனி, 17 அக்டோபர், 2015

கண்ணதாசன் ஓவியம்நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை !


என்று பாடிய கவியரசா் கண்ணதாசன் அவா்களை 

மனக்கண்முன் நிறுத்தும் உயிரோட்டான ஓவியம் 

வரைந்தவா் 

சு.லாவண்யா இளங்கலை வேதியியல் 

மூன்றாமாண்டு.

இன்றைய சிந்தனை (17.10.2015)


வெள்ளி, 9 அக்டோபர், 2015

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு

அன்பான தமிழ் உறவுகளே..

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம்         
              பரவும் வகை செய்தல் வேண்டும்”                            
  
 “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்”

என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் எங்கள் கல்லூரியின் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை இணைந்து “தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தாளர்கள் பார்வையில் இயற்கை” என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிளான கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ், ஆங்கில இலக்கியங்களின் சிறப்பியல்புகளை ஒப்பீட்டு முறையில் அறிந்துகொள்ளும் முயற்சியாக இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் சிறப்பாக நடைபெறத் தாங்கள் துணைநிற்குமாறு அன்புடன் அழைக்கிறோம்வெள்ளி, 2 அக்டோபர், 2015

இப்படியொரு விழாவைப் பாா்த்திருக்கிறீா்களா?

விழா என்பது பண்பாட்டின் அடையாளமாக,

 செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக,

புதுமையின் வடிவமாக

வெள்ளிவிழா, தங்கவிழா, வைர விழா என பல்வேறு விழாக்கள் 

காலந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கென 
நடத்தப்படும் விழாக்கள் அவ்விழாக்களுள் 
என்றுமே தனிச்சிறப்புடையன. 

ஏனென்றால் மற்ற விழாக்கள் ஒரு தனிமனிதனின் 

செல்வச்செழிப்பையோ, பதவி மற்றும் நட்புவட்டத்தின் சிறப்பையோ 

காட்டுவதாக அமையும். 

ஆனால் தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்கள். 

தமிழன் என்றோர் இனமுண்டு தனியேஅவர்க்கோர் குணமுண்டு''

என்று தமிழ் இனத்தின் மாண்பை இயம்புவதாக அமைவதே தமிழ் 

விழாக்களின் தனிச்சிறப்புகளாகும். 

தமிழ் மொழிக்கென நடத்தப்படும் 

விழாக்களுள், காலத்துக்கு ஏற்ப தமிழின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் 

கொண்டு நடத்தப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழா வரலாற்றில் ஒரு 

குறிப்பிடத்தக்க விழாவாக அமைகிறது. 


முச்சங்கம் வைத்ததும் 

மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.

மின் வெளியில்

வலைமொழியில் 

சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.

யாதும் ஊராக யாவரும் கேளிராக 

உலகு பரவி வாழும் தமிழர்களை 

இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க 

வேண்டும்!

என்ற முழக்கத்துடன் 

கொண்டாடப்படும் இந்த வலைப்பதிவா் திருவிழாவுக்கு 

வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.