வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 30 நவம்பர், 2020

முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம் (Tamil Edition) Kindle Edition

 



பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டும் சில செய்திகளை விரித்துப் பேசும் தொழில்நுட்ப நூல் மரபுகள் தமிழில் ஆங்காங்கே அறுந்து கிடக்கின்றன என்பது உண்மை. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு மாற்றுப் பார்வை தேவைப்படுகிறது என்று தெரிகிறது.

“முழங்கு குரல் வேலி நனந்தலை உலகம்“ என்று தலைப்பிடப் பெற்றுள்ள இச்சிறு கையேடு ஓர் ஆய்வுத் துப்பு.
அரச வேலி - பாண்டு கம்பளம் என்று பெயரிடப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய தரவு - தேடல் முயற்சியின் கிளையாகவும், மரபுவழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தாரின் தமிழ்புத்தாண்டு புரிதல் முயற்சியின் கிளைப் பயனாகவும் தட்டுப்பட்ட சான்றுகளின் தொகுப்பு இவையாகும்.
இவற்றைப் பலதரப்பட்ட தமிழ் ஆய்வாளர்கள் பல நிலைகளில் ஆய்வு செய்து செம்மைப்படுத்தித் தமிழுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பது எமது விழைவு.

(தென்னன் மெய்ம்மன்)


மின்னூல் பதிவிறக்க முகவரி


திருக்குறள் - அதிகாரம் - 101. நன்றியில் செல்வம்

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல். - 1001   

சேர்த்த பொருளை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயனில்லை

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு. - 1002

பொருள்தான் எல்லாம் என எண்ணி ஈயாதவர் இழிவானவர்

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை. - 1003

புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பவர்  நிலத்துக்கு சுமையாவர்    

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன். - 1004

பிறருக்கு உதவாத ஒருவனின் மறைவுக்குப் பின் ஏதும் எஞ்சி நிற்காது

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்க்கிய

கோடியுண் டாயினும் இல். - 1005

வழங்கி, அனுபவித்து வாழாதவர்களுக்கு பொருளால் பயனில்லை

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான். - 1006

நுகராமல், வழங்காமல் வாழ்பவன், சேர்த்த செல்வத்தின் நோயாவான்

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று. - 1007

உதவாதவன் செல்வம், பேரழகி தனித்து முதுமையடைந்தது போன்றது

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று. - 1008

கஞ்சனின் செல்வம், ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தது போன்றது

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர். - 1009

அன்பு, அறம் நீக்கிச் சேர்த்த செல்வத்தை பிறரே அனுபவிப்பர் 

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து. - 1010

வள்ளல் வறுமையடைதல் மேகம் வறண்டதைப் போன்றது

வெள்ளி, 27 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 100. பண்புடைமை

 

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. - 991

யாரும் பண்புடையாளராவதற்கு எளிமையே நல்ல வழி

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. - 992

அன்பும், நல்ல குடும்பத்தில் பிறத்தலும் பண்பாளரின் அடையாமாகும்

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. - 993

உறுப்புகளின் சிறப்பைவிட பண்பின் சிறப்பே ஒப்பிடத்தக்கது

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு. - 94

அன்புடன், நன்மை செய்தவர்களை உலகம் பாராட்டும்

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு. -995

விளையாட்டுக்கும் ஒருவரையும்  இகழாமல், பண்புடன் நடந்துகொள்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். - 996

பண்புடையவர்களால் தான் இவ்வுலகமே அழியாது உள்ளது

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர். - 997

அரம்போன்ற கூர்மையான அறிவும், பண்பின்றிப் பயனில்லை

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்

பண்பாற்றார் ஆதல் கடை.- 998

தீங்கிழைத்தவரிடமும் பண்பின்றி நடத்தல் இழுக்காகும்  

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள். - 999

சிரிக்கும் பண்பில்லாதவர்களுக்குப் பகலும் இரவு போன்றதே

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று. - 1000

பண்பிலாதார் பெற்ற செல்வம், பாத்திரத்தால் பால் கெட்டது போன்றது


வியாழன், 26 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 99. சான்றாண்மை



கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. - 981

நற்குணமுடையோர் கடமை இதுவென அறிந்து ஆற்றுவர்    

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்தும் உள்ளதூஉம் அன்று. - 982

பிற நலன்களைவிட குணநலமே சான்றோரின் அடையாமாகும் 

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு        

ஐந்துசால் பூன்றிய தூண். - 983

அன்பு, நாணம், ஒற்றுமை, தனிநோக்கு, உண்மை சான்றோரியல்புகள்

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு.- 984

கொல்லாமை, பிறர் குற்றங்களைக் கூறாமை சான்றோர் இயல்வு

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை.- 985

பணிவால் மாறுபட்டவர்களையும் வெல்லும் இயல்பினரே சான்றோர் 

சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல். - 986

சிறியோரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்வதே மேன்மையின் உரைகல்

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு. - 987

தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்வதே சான்றாண்மை எனப்படும்

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

திண்மை உண் டாகப் பெறின். - 988

சால்பு என்ற மனம் பக்குவப்பட்டவருக்கு வறுமை இழிவானதல்ல 

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். - 989

உலகு மாறினாலும் மாறாத இயல்புடையோர் சான்றாண்மைக் கடலாவர்

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்றோ பொறை. - 990

சான்றோர் தன் நிலை மாறினால் இந்த நிலம் தாங்காது


புதன், 25 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 98. பெருமை


 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல். - 971

புகழுடன் வாழ்வதே சிறப்பு, இகழுடன் வாழ்வது இழிவு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். - 972

எவ்வுயிர்க்கும் பிறப்பு பொதுவானது, செயலே பெருமை தருகிறது     

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர். - 973

மேலானவர், கீழானவர் என்பது பண்பாலேயே மதிப்பிடப்படுகிறது    

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழிகின் உண்டு. - 974

கற்புடைய மகளிரைப்போல சிறப்பை, ஒழுக்கத்தால் ஒருவனடைவான்

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல். - 975

அரிய செயல்களை உரியமுறையில் செய்பவரே பெருமையுடையவர்

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. - 976

பெரியோரைப் போற்றி ஏற்கும் பண்பு சிறியோர்க்கு வாய்ப்பதில்லை

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்.

சீரல் லவர்கண் படின். -977

செல்வமும், பதவியும் பண்பில்லாதவரிடம்  மதிப்பிழந்து போகிறது 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து. -978

பணிவதே பெருமை, தற்பெருமை கொள்வதே சிறுமையின் அடையாளம்

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல். - 979

தற்பெருமையின்மையே பெருமை, தற்பெருமைகொள்வது சிறுமை    

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும். - 980

பெரியோர் சிறப்பையும், சிறியோர் குறையையும் காண்பர்

செவ்வாய், 24 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 97. மானம்

 


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல். - 961

மானத்திற்கு இழுக்கானதை எந்நிலையிலும் செய்யற்க   

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர். - 962

புகழுக்காக மானத்தை விடாதவரே, புகழுடன் வாழ்வர்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு. - 963

உயர்வில் பணிவும், வறுமையில் உயர்வும் வேண்டும்   

தலையின் இழிந்த மயிரினையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை. - 964

தன் நிலையில் தாழ்ந்தவர், உதிர்ந்த தலைமுடிக்கு சமமானவர்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின். -965

மலைபோன்றவரும் சிறுதவறினால் தன்னிலை குன்றிவிடுவர்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை. - 966

இகழ்வாரின் பின்சென்றால் புகழும், நல்வாழ்வும் கிடைக்காகது

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று. - 967

தன்னை மதியாதவரின் பின்சென்று வாழ்வதின் அழிவதே மேல்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து. - 968

மானம் அழிந்தபின் உடலைப் போற்றி வாழாதே

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின். - 969

முடிஉதிர்ந்தால் மானும், மானம் இழந்தால் நல்லோரும் உயிர் நீ்ப்பர்

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. - 970

அவமானத்தால் இறந்தாரை உலகம் வணங்கும்

திங்கள், 23 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 96. குடிமை

 


இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்

செப்பமும் நாணும் ஒருங்கு. - 951

நேர்மையும், நாணமும் நற்குடியில் பிறந்தவரிடம் மட்டுமே இருக்கும்  

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்

இழுக்கார் குடிப்பிறந் தார். - 952

ஒழுக்கம், வாய்மை, நாணம் மூன்றும் நற்குடியில் பிறந்தார்க்கே உரியது

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்

வகையென்ப வாய்மைக் குடிக்கு. - 953

புன்னகை, கொடை, இனியசொல், இகழாமை நற்குடியாளர் இயல்புகள் 

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர். - 954

பணத்துக்காக நற்குடும்பத்தில் பிறந்தவர் இழிவான செயல் செய்யார் 

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று. - 955

வறுமை நிலையிலும் நற்குடும்பத்தில் பிறந்தோர் வழங்குவர் 

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற

குலம்பற்றி வாழ்தும் என் பார். - 956

வறுமையுற்றாலும் நற்குடியில் பிறந்தோர் வஞ்சகம் செய்யார் 

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.- 957

நற்குடும்பத்தினார் குற்றம் நிலவின் களங்கம்போல பெரிதாகத் தெரியும்

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.- 958

நல்லவானயினும் குற்றம் செய்தால் அவன் குடிப்பிறப்பை ஆய்க 

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். - 959

விளைந்த பயிர் நிலத்தையும், பேசிய வார்த்தை குலத்தையும் காட்டும்

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு. - 960

பணிவும், நாணமுமே குலப்பெருமையைக் காட்டும்

சனி, 21 நவம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 95. மருந்து

 




மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. - 941

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றே நோயின் தோற்றக் கூறு  

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். - 942

செரித்தபின் உணவு உண்டால், உடலுக்கு மருந்தே தேவையில்லை 

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. - 943

நீண்டகாலம் வாழ, அளவுடன் உண்பதே மிகச்சிறந்த வழி

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து. - 944

செரித்தபின், காலத்துடன், ஏற்ற உணவை உண்ணவேண்டும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. - 945

மாறுபாடில்லாத உணவை, அளவுடன் உண்டால் நோயில்லை

இழவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய். - 946

அளவுடன் உண்டால் நலம்! அதிகமாக உண்டால் நோய்!

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும். - 947

பசியின் அளவறியாமல் அதிமாக உண்பவன் நோயாளியாவான்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல். - 948

நோயின் தன்மை, அதன் காரணம், அதை நீக்கும் வழியறிந்து செய்  

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.- 949

நோயாளி, நோயளவு, காலம் கருதி மருத்துவம் செய்யவேண்டும் 

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து. - 950

நோயாளி, மருத்துவர், மருந்து, துணைபுரிபவர் நான்கே மருத்துவம்