கடல்
மணல், அலைகள்
ஊருக்கு கிழக்கே
உள்ள
பெருங்கடல் ஓர
மெல்லாம்,
கீரியின் உடல்
வண் ணம்போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தின்
இளைஞர் போலப்
பூரிப்பால்
ஏறும்; வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.
கீரியின் உடல் வண்ணத்தையும் கடற்கரையின் மணல் மெத்தையையும் ஒப்பிட்டு உரைக்கிறார். கடல் அலை வந்து செல்வது கல்விநிலையத்துக்கு வரும் இளைஞர் போல என்றுரைக்கிறார். இவ்வாறு இயற்கையிடமிருந்து நாம் பெற்றதும் பெவேண்டியதும் நிறையவுள்ளன.