வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

காரைக்குடிக்குப் பெருமைசேர்த்தவர்கள்

எனது இளங்கலை, முதுகலை, மற்றும் ஆய்வுப்படிப்புகளுக்காக காரைக்குடியில்தான் பத்து ஆண்டுகள் செலவுசெய்தேன்.அதனால் காரைக்குடிக்குச் சென்றால் ஏதோ சொந்த ஊருக்குச் சென்ற உணர்வு ஏற்படும். கடந்த வாரம் காரைக்குடிக்குச் சென்றபோது கண்ணதாசன் மணிமண்டபத்தில், ஒரு நிகழ்வுக்காக வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையில் காரைக்குடிக்குப் பெருமை சேர்த்தவர்களை நிழற்படமாக வெளியிட்டிருந்தார்கள். நான் அறியாத பல சாதனையாளர்களை அறிந்துகொண்டேன். இது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றியது. இந்த வழிமுறையை நாம் ஒவ்வொருவரும் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் கடைபிடிக்கலாமே. 

8 கருத்துகள்:

  1. வணக்கம்

    நீங்கள் சொல்லும் யோசனையும் சரிதான் ...இருந்தாலும் செயல் வடிவில் உதித்தால் நன்றுதான்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான முயற்சி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சி! ஒவ்வொருவரும் அவர்கள் பகுதியில் இப்படி பெருமை சேர்த்தவர்களைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்!

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்.புதிதாக ஓரிடத்திற்கு செல்பவர்களுக்கு பயன்படக்கூடியதாகவும் இருக்கும். ஆன்றோர்களை போற்றியதாகவும் அமையும்

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய சொந்த ஊர் காரைக்குடி. தங்களின் இந்த பதிவால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு ஊரிலும் கடைப்பிடித்தால், நிறைய சாதனையாளர்களை தெரிந்துக்கொள்ள முடியும்.
    இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. நம் ஊரில் இன்னும் நிறையப் பேர் கொடைவள்ளல்களாய் இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு