வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 31 அக்டோபர், 2009

இசைக்கு மயங்கிய கிளிகள்.




இன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை எதிர்பாராத விதமாகப் பார்ப்பதும்,காதல் கொள்வதும்,
அதனால் முதல்நாள் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திக்க முயற்சிப்பதும்,
பின் தன் நண்பனின் வாயிலாகவோ, அந்தப்பெண்ணின் தோழியின் வாயிலாகவோ மீண்டும் சந்திக்கவோ எண்ணுவதுண்டு இதற்கு சங்க காலத்தில் இருந்த பெயர்,

இயற்கைப் புணர்ச்சி
இடந்தலைப்பாடு
பாங்கர்கூட்டம்..
.

தலைவன் தலைவியை எதிர்பாராமல் பார்ப்பது இயற்கைப் புணர்ச்சியாகும், முன் சந்தித்த இடத்திலேயே மீண்டும் சந்திப்பது இடந்தலைப்பாடு, தோழியின் வாயிலாகவோ, தோழனின் வாயிலாகவோ ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வர் அதற்குப் பாங்கர் கூட்டம் என்றும் தோழியிற் புணர்ச்சி என்றும் பெயர்கள் உண்டு..


அகத்துறைகளுள் ஒன்றாகவுள்ள “பாங்கர்க்கு உரைத்தது“ என்னும் துறையை விளக்குவதாக இப்பாடல் அமைகிறது.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவன் தலைவியைச் சந்திக்க விரும்பினான். அதனால் தலைவியின் பண்புகளைப் பாங்கனிடம் கூறுகிறான். தலைவியின் பண்புநலன்களையும் அவள் மீது தலைவன் கொண்ட காதலையும் கேட்ட பாங்கன் அவர்களின் சந்திப்புக்குத் துணைநிற்பான்.


தலைவி தினையில் படியும் கிளிகளை ஓட்டுவதற்கு குளிர் என்னும் இசைக்கருவியை இசைக்கிறாள். தன் குரலாலும் ஒலி எழுப்புகிறாள். ஆனால் கிளிகளோ அவ்விடத்திலேயே நிலையாகத் தங்கிவிட்டன. கிளிகள் யாவும் குளிர் என்னும் இசைக்கருவியின் இசைக்கு மயங்கியதாலேயே அங்கு தங்கின. தலைவியின் குரல் மிகவும் இனிமையானவையாக இருந்தன. அதனால் கிளிகள் தலைவியின் குரலை தம் இனத்தின் குரல் என்றே கருதின. தாம் முயன்றும் கிளிகளை விரட்ட முடியவில்லையே என்று வருந்தினாள் தலைவி. கிளிகளைக் கூட விரட்ட முடியவில்லையே என்று தாய் தன்னைக் கடிந்து கொள்வாளே என்பதை எண்ணியவுடன் தலைவிக்கு அழுகையே வந்துவிட்டது
.

இயலாமை, அச்சம் காரணமாக தலைவி அழுதநிலையிலும் தனக்கு இனியவளாக இருத்தலை பாங்கனுக்கு உணர்த்தினான் தலைவன்.

பாடல் இதோ…


291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிறி, ‘அவள் விளி’ என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.


கபிலர்
குறுந்தொகை.291.

இசைமருத்துவம் குறித்த பல செய்திகளை உள்ளடக்கிய சங்க இலக்கியத்தில் இசைக்கு மயங்கிய விலங்கினங்கள், புள்ளினங்கள் பற்றிய பல குறிப்புக்களையும் காணமுடிகிறது. அவ்வடிப்படையில் இப்பாடல் வாயிலாக இசைக்கு மயங்கிய கிளிகளின் நிலையை கபிலர் அழகாக இயமபியுள்ளார்.

இன்றைய சூழலில் இப்பாடலை நோக்கும் போது…

கிளிகள் இசைக்கு மயங்குமா..?
தலைவியின் குரல் கிளியின் குரல் போல இருந்திருக்குமா..?
தலைவி இந்த அளவுக்குப் பேதைத் தன்மையாக இருப்பாளா..?

என்ற வினாக்களெல்லாம் தோன்றும். சங்ககால மக்கள் வாழ்ந்த இயற்கையோடு இயைந்த சூழலோடு ஒப்பு நோக்கும் போது இப்பாடலின் இயல்பு நிலை புரியும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை.....

எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமை தொல்காப்பியருக்குரியது.
அகம், புறம் எனப்பாகுபாடு பெற்ற வாழ்க்கைக்கு காதலும் வீரமும் அடிப்படையாக அமைந்தது.
அகம் களவு, கற்பு எனப்பாகுபாடு பெற்றது. களவியல், கற்பியல், அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியன வாழ்க்கைக்கான இலக்கணங்களாக அமைகின்றன.
மெய்பாட்டியல் வழி இன்றைய உளவியலும்,
உவமவியல் வழி அணிகளின் வளர்ச்சியும்
செய்யுளியல் வழி யாப்பிலக்கண வளர்ச்சியும்
மரபியல், உரியியல் வழி அகராதி நிகண்டுகளின் வளர்ச்சியும் அமைகிறது.
அவ்வடிப்படையில் பல சிறப்புகளையும் கொண்ட தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் உரை இணையத்தில் கி்டைப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவுள்ளது. நூலகத்தில் கிடைத்த பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையின் ஐபேப்பர் வடிவம்...

தொல்காப்பயிம் பொருளதிகாரம் உரை

வியாழன், 29 அக்டோபர், 2009

தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரை..

தொல்காப்பியத்துக்கு பல உரையாசிரியர்கள் உண்டு எனினும். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை செய்த பெருமை இளம்பூரணருக்குரியது.

எழுத்ததிகாரத்துக்கு இளம்பூரணரின் உரையும்
சொல்லதிகாரத்துக்கு சேனாவரையர் உரையும்
பொருளதிகாரத்துக்கு பேராசிரியரின் உரையும் போற்றத்தக்கனவாகவுள்ளன.

நூலகம் இணையதளத்தில் கிடைத்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையின் ஐபேப்பர் வடிவம் இதோ...





தொல்காப்பியம் சொல்லதிகாரம்- சேனாவரையர் உரையுடன்

புதன், 28 அக்டோபர், 2009

தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியர் உரை....

தொல்காப்பியம் தமிழ் இலக்கண நூல்களுள் மிகவும் பழமையானது.
எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டது.
யாப்பு,அணி என்னும் இலக்கண மரபுகளும் தொலகாப்பியத்திலிருந்தே வளர்ச்சி பெற்றன.
தமிழ் என்னும் மொழிக்கான இலக்கண மரபுகளுடன் வாழ்க்கைக்கான இலக்கணத்தையும் வகுத்த சிறப்பு தொல்காப்பியருக்கு உண்டு. இன்றைய அறிவியல் வளர்ச்சியில் தமிழ் மூல நூல்கள் யாவும் இணையத்தில் பல வடிவங்களில் கிடைக்கின்றன. ஆயினும் உரைநூல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. இந்நிலையில் நூலகம் என்னும் இணையதளத்தில் பல அரிய நூல்களும் மூலநூலாகவும், உரை நூல்களாகவும் பிடிஎப் முறையில் கிடைப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்..
நூலகம் இணையதளத்தில் கிடைத்த தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரை ஐபேப்பர் வடிவில்..

Thol-ezhuthu urai

இதனை பெரிதாக்கிப் படிக்கவும், பதிவிறக்கிக் கொள்ளவும் முடியும்..

செவ்வாய், 20 அக்டோபர், 2009

தமிழ் எழுத்துருக்களைப் பேச்சு(எம்பி3) வடிவில் மாற்ற...







வலையில் உலவிக்கொண்டிருந்த போது வியப்பான செய்தி ஒன்றைக் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையத்தில் தமிழ் எழுதுவதே கடினமாக இருந்தது. பிறகு யுனிகோடு வரவால் இணையத்தில் தமிழ் எழுதுவது பரவலானது. என்.எச்.எம், அழகி, இகலப்பை உள்ளிட்ட இலவச மென்பொருள்களை யாவரும் எளிய முறையில் பயன்படுத்தியதால் இணையத்தில் தமிழ் இணையில்லா வளர்ச்சி பெற்றது. வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறும் நிலை வந்தது.

இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……

இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப் முறையிலும்,
யுனிகோடு முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில்
ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே கிடைக்கும் நிலைஉள்ளது.

வெற்றிப்படிகள்

சொற்பொழிவுகளின் வானொலி ஒலிக்கோப்புகள்

ஒலிப்புத்தகங்கள்

என எம்பி 3 வடிவில் தமிழ்த் தரவுகள் கிடைக்கின்ற நிலையில்…..
தமிழ் எழுத்துருக்களை பேச்சுருக்களாக மாற்றும் வசதியை நீண்ட நாட்களாகவே எதிர்நோக்கியிருந்தேன்..

ஆம் ஆங்கில எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள

ஸ்போக்கன் டெக்ஸ்ட்,
ஓட்காட்ஸ்ட் என பல இணையதளங்கள் அணிவகுத்து நின்றாலும் தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள ஒரு வசதி இல்லையே என எண்ணியதுண்டு.

அச்சூழலிலும் தமிங்கில முறையில் தமிழ் எழுத்துருக்களை அத்தளங்களில் இட்டு ஒலிக்கோப்பாக முயன்றேன்.

இந்நிலையில் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக ஆக்கிக்கொள்ள உதவுவதாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.

இணையதள முகவரி

செய்முறை விளக்க முகவரி

இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் மாற்ற வேண்டிய யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை அந்த கட்டத்தில் இட்டு சமர்ப்பிக்கவும்.
பிறகு பதிவிறக்கினால் எம்பி3 வடிவில் கிடைக்கும்.

நீ்ங்கள் இடைவெளி, புள்ளி இட்டதற்கு இணங்க ஓர் ஆணின் குரலில் உங்கள் தமிழ்ப்பதிவு ஒலிக்கும்.

இணையத்தில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதைக் கருதுகிறேன்.

ஆம் எழுத்துக்களைப் படிக்கும் நிலைக்கு ஒரு மாற்றாக இவ்வொலி முறை அமையும்.

சங்க இலக்கியம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வடிவில் உருவாக்கிக்கொள்ள இம்முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

இதனை இணைய இணைப்பின் போது மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
மாறாக ஒரு மென்பொருளாக உருவாக்கி ஆப்லைன் எனப்படும் இணைய இணைப்பில்லா நிலையிலும் பயன்படு்த்தும் வசதியை ஏற்படுத்தினால் மேலும் நன்றாக இருக்கும்..

வெள்ளி, 9 அக்டோபர், 2009

பல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..




இன்றைய சூழலில் பல தொழில்நுட்பத் தகவல்களையும் வீடியோ வாயிலாக விளக்குவது பெருவழக்காக உள்ளது. அவ்வடிப்படையில் யூடியூப் (http://www.youtube.com/) என்னும் தளம் சிறந்து விளங்குகிறது. பல தொழில்நுட்ப விளக்கங்களும் இத்தளத்தில் விளக்கப் படங்களாகவே காண முடிகிறது.
தொழில்நுட்பச் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடிய காலம் சென்று இப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வடிவில் தேடுவதே பரவலாக உள்ளது.

பிடிஎப் கோப்பை வேர்டாக மாற்ற வேண்டுமா..?

வேர்டை பிடிஎப்பாக மாற்ற வேண்டுமா..?

gif கோப்பினை உருவாக்கவேண்டுமா..?

இத்தளத்தில் கிடைக்கும் வீடியோ பாடல்களின் ஒலியை மட்டும் எவ்வாறு பிரித்தெடுப்பது என்பதை முன்பு கண்டோம்.

என நமக்குத் தேவையான தொழில்நுட்பத்தகவல்கள் வீடியோ வடிவிலேயே கிடைப்பது வரவேற்கத்தக்க ஒன்றாக விளங்குகிறது.

வீடியோக்களைத் பதிவிறக்கிக் கொள்ள பல இணையதளங்களும் உதவுகின்றன.சான்றாக(கீப்வைட்) யூடியூப் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது என்பதை விளக்குவதாக இந்த விளக்கப் படம் அமைகிறது.

இவ்வாறு ஒவ்வொன்றாக பதிவிறக்கிய வீடியோ கோப்புகள் பலவற்றையும் ஒரே கோப்பாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் பல இணையதளங்கள் வழங்குகின்றன.
அவற்றுள் இத்தளம் இலவச மென்பொருள் வழங்குவதாகவும்,பயன்படுத்த எளியதாகவும் விளங்குகிறது.
இச்சுட்டியை அழுத்தி அம்மென்பொருளைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

அடுத்து அந்த மென்பொருளுக்கான் ஐகானை அழுத்தினால் ஒரு பட்டியல் பெட்டி தோன்றும்..

அதில் நாம் ஒன்றிணைக்க வேண்டிய வி.எல்.சி ஒளிக்கோப்புகளை தெரிவுசெய்து கொள்ள வேண்டும். பிறகு என்ன வகை ஒளிக்கோப்பாக ஒன்றிணைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டால் போதும் நீங்கள் சேமித்து வைத்த சிறுசிறு ஒளிக்கோப்புகள்(vlc) எல்லாம் ஒன்றிணைந்து ஒரே கோப்பாகக் காட்சியளிக்கும். இடைவெளி இன்றி தொடர்ச்சியாக உங்கள் வீடியோக்களைக் கண்டு மகிழலாம்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

சங்ககால அறுவை மருத்துவம்




சங்க கால மக்களின் அறிவியல் குறித்த அறிவு வியப்பளிப்பதாகவுள்ளது. சங்கஇலக்கியங்களின் வழியாக, சங்கத் தமிழர்களின் மருத்துவவியல் அறிவை அறிந்து கொள்ளமுடிகிறது. “இசை மருத்துவம்“ உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் சங்க காலத்தமிழர்கள் நன்கு தேர்ச்சி அடைந்திருந்தனர்.

“பழந்தமிழர் அறிவியல்“ என்னும் தலைப்பில் தமிழர் அறிவியல்ச் சிந்தனைகளைத் தொடர்கட்டுரையாக வழங்கவுள்ளேன். பழந்தமிழர்களின் அறுவை மருத்துவம் குறித்த சிந்தனையை இக்கட்டுரையில்
காண்போம்.

சங்க இலக்கியம் எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்க நூலாகும். புறம் சார்ந்த இந்நூல் சேரமன்னர்களைப் பற்றிய நூலாக விளங்குகிறது. இந்நூலில் பழந்தமிழர்தம் அறுவை மருத்துவம் குறித்த செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.

பாடல் இதோ...

42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
“இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள◌் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,


அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒள◌ிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.


பாடல் சொல்லும் அறுவை மருத்துவம் குறித்த செய்தி….

சேரமன்னனின் கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறவந்த புலவர், சேரனின் வீரர்களின் வீரத்தை
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“பனை மாலையும், வீரக்கழலையும் கொண்ட உன் வீரர்கள்,
மீன் கொத்திப்பறவை மீனைப் பிடிக்க குளத்தில் மூழ்கி எழுந்தது போன்ற வெள்ளிய ஊசியினது நீண்ட
கூர்மையால் தைத்ததால் ஏற்பட்ட வடுவினை மார்பில் கொண்டவர்களாக உள்ளனர்.“
மீன்கொத்திப் பறவையின் கூர்மையான மூக்கினைப் போன்ற கூர்மையான ஊசிகளால் போரி◌்ல் கிழிந்த
உடல் பாகங்களை அவர்கள் தைத்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சங்கத்தமிழர்கள் அறுவை மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருந்தனர் என்பது இவ்வடிகள் வாயிலாகப்
புலனாகிறது.
இத்தகைய வீரம் வாய்ந்த வீரகளுக்கு அரசனான சேரனின் புகழை புலவர் மேலும் இவ்வாறு
குறிப்பிடுகிறார்.
போரில் பகைவரை வஞ்சிக்காமல் எதிர்நின்று கொன்று வெற்றியைத் தந்தாய். நல்ல கள்ளை தனக்கென
ஏதும் வைத்துக்கொள்ளாமல் மகிழ்வோடு வீரர்களுக்கு வழங்குகிறாய்.
கூத்தரது பெரிய சுற்றம் மகிழுமாறு நல்ல குதிரைகளை வழங்கினாய்.
மக்களெல்லாம் வியக்குமாறு பகையரசர் அழியுமாறு வெற்றி பெறுகிறாய் உனது பேராற்றலைக் கண்டு
பிற மன்னர்களும், வீரர்களும் போற்ற உயர்ந் களிற்று யானை மீது வருகிறாய்.
என்று பாடுகிறார்.
இதுவே பாடலின் பொருள்.

வேட்டையாடுதல், போரிடுதல் உள்ளிட்ட பல சூழல்களில் உடல் உறுப்புகளில் காயமும், சிதைவும்
ஏற்பட்டிருக்கக்கூடும். அப்போது அக்காலத்தில் சிதைந்த உடல்பகுதிகளை இன்று அறுவைமருத்துவத்தில் தையலிடுவது போல தையலிட்டிருக்கின்றனர். அவர்கள் அறுவைமருத்துவத்தில் தையலிடப் பயன்படுத்திய
ஊசி மிகவும் கூர்மையாக மீன்கொத்திப் பறவையின் மூக்கினைப் போல இருந்தமை இப்பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது.