Saturday, November 14, 2009

கூகைக்கோழியார்
இலக்கை இயம்புவதே இலக்கியம். தமிழ் இலக்கியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையுமே இலக்காக இயம்பியுள்ளன.

அறவழியே பொருளைத் தேடி அதை இன்பத்துக்குச் செலவழித்தால் வீடுபேறு கிடைக்கும் என்பது தமிழ் இலக்கியங்களின் அடிப்படையாக உள்ளது.

அறவழியே தேடுவதே பொருள்
அந்தப் பொருளை இன்பத்திற்கே செலவழிக்க வேண்டும்.
அப்போது வீடுபேறு தானே கிடைக்கும்.

இன்பம், வீடுபேறு (சொர்க்கம்)

சிற்றின்பம், பேரின்பம் என இன்பம் இருவகைப்படும்.
நமக்குத் தோன்றும் சுயநல ஆசைகள் யாவும் சிற்றின்பங்களே.
வீடு பேறு அடைய எண்ணுவதே பேரின்பம்.

சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.


நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…

சொர்க்கம் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் ஒரு குறியீடு.
நரகம் என்பது மக்களை அச்சுறுத்தி நல்வழிப்படுத்தும் முயற்சி.


இன்பம் என்பது யாது?

கொடுத்து மகிழ்தலே இன்பம்.
அடுத்தவருக்குக் கொடுத்து அவரின் முகமலர்ச்சி காண்தலே இன்பம்.
இறந்த பின்பு சொர்க்கம் சென்று அங்கு கொடுத்து மகிழமுடியாது என்று அறிவுறுத்துகிறது இப்பாடல்,


'வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே
364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி
(புறநானூறு)

பாடலின் பொருள்

வாடாத பொன்மாலையை பாடினி அணியவும்,
நீர்நிலையில் பூக்காத எரிபோலும் பொற்றாமைரை மலரை பாணன் பெற்று மகிழவும்,
கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்தி அதன் ஊனை தீயிலிட்டுச்சுட்டு, அந்த சுவையான ஊன் உணவை கள்ளோடு இரவலர்க்கு இட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்வோம் அதுவே இன்பம் வா..
என்று அரசனைப் புலவர் அழைப்பதாக இப்பாடல் அமைகிறது.

(அரசன் பாடினிக்குப் பொன்மாலையும், பாணனுக்கு பொற்றாமரையும் பரிசில் தந்து கள்ளும் ஊன் உணவும் கொடுதது மகிழ்விப்பது மரபாகும்)
(ஈத்துவக்கும்) கொடுத்து மகிழும் இன்பத்தின் இன்றியமையாமையை,


மறப்போரைச் செய்பவனே, முதிய மரத்தின் பொந்துகளிலிருந்து கேட்போர் அஞ்சத்தக்க குரலில் கூகை என்னும் பேராந்தை கூவ,
பிணங்களை இட்டுவைக்கும் ஈமத்தாழிகள் நிறைந்த சுடுகாடு சென்றபின்னர் கொடுத்து மகிழும் இவ்வின்பம் கிடைக்குமா..?
அதனால் உயிரோடு இருக்கும் இல்வாழ்க்கையிலேயே கொடுத்து அடுத்தவர் மகிழ்வதைப் பார்த்து இன்பம் காண் என்கிறார் புலவர்.

வாழ்க்கை நிலையில்லாதது!
கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!


என்ற கருத்தை எடுத்தியம்பிய இப் புலவரின் பெயர் கிடைக்கவில்லை.அதனால் இப்பாடலில் சிறந்த தொடராக அமைந்த கூகைக் கோழி என்பதே இவருக்கு கூகைக்கோழியார் என்று பெயர் தோன்ற காரணமானது…

16 comments:

 1. நன்றாக உள்ளது எழுதுங்கள்

  ReplyDelete
 2. வழக்கம் போல அருமையான விளக்கம்..

  ReplyDelete
 3. நல்ல தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 4. சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
  பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.

  வாழ்க்கை நிலையில்லாதது!
  கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
  இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!

  உண்மை கருத்துக்கள் உணர்ந்தால் சுகம்...

  ReplyDelete
 5. Fவிக்கிழவன் said...

  நன்றாக உள்ளது எழுதுங்கள்/

  நன்ற கவிக்கிழவன்.

  ReplyDelete
 6. கலகலப்ரியா said...

  வழக்கம் போல அருமையான விளக்கம்./

  நன்றி பிரியா..

  ReplyDelete
 7. Blogger சந்ரு said...

  நல்ல தகவல்கள்... பகிர்வுக்கு நன்றிகள்.

  கருத்துரைக்கு நன்றி சந்ரு..

  ReplyDelete
 8. தமிழரசி said...

  சொர்க்கமும் நரகமும் எங்கோ உள்ளது என்று நாம் எண்ணுவதால் தான் திரும்பிய திசையெல்லாம் கோயில்களும்,
  பாவத்தின் புதையல்களாக உண்டியல்களும் காட்சிளிக்கின்றன.

  வாழ்க்கை நிலையில்லாதது!
  கொடுத்து மகிழ்வதே இன்பமானது!
  இந்த வாய்ப்பு இறந்தபின்பு கிடைக்காது!

  உண்மை கருத்துக்கள் உணர்ந்தால் சுகம்/

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்..

  ReplyDelete
 9. "கொடுத்து மகிழ்தலே இன்பம்".நல்ல தகவலும் விளக்கமும்.

  ReplyDelete
 10. //நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…//

  ஆகா... உண்மையான விளக்கம்..

  ReplyDelete
 11. பாடலின் விளக்கம்... மற்றும் சொல்லவந்த கரு அனைத்தும் அழகு... பாராட்டுகள்

  ReplyDelete
 12. மாதேவி said...

  "கொடுத்து மகிழ்தலே இன்பம்".நல்ல தகவலும் விளக்கமும்./

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி..

  ReplyDelete
 13. ஆ.ஞானசேகரன் said...

  //நாம் வாழ்க்கையிலேயே சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பதை நாம் உணர்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுள்களே, நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமே…//

  ஆகா... உண்மையான விளக்கம்.

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 14. Blogger ஆ.ஞானசேகரன் said...

  பாடலின் விளக்கம்... மற்றும் சொல்லவந்த கரு அனைத்தும் அழகு... பாராட்டுகள்..


  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 15. கூகைக்கோழின்னா ஆந்தைங்களா?

  ReplyDelete
 16. ஆமாங்க இராஜ்குமார்

  ReplyDelete