Tuesday, July 12, 2011

இங்கிலீசு தெரிஞ்சவங்க மட்டும் வாங்க!!


உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ள இந்நாளில் பல்வேறு மொழி பேசுவோரும் அதில் சரிபாதியாக ஆங்கிலத்தையே பேசுகிறார்கள்.

எனக்கு வந்த குறுந்தகவல் இன்றைய டமிலின் டமிலனின் நிலையை அழகாகப் படம் பிடித்துக்காட்டியது.


பியூர் இங்கிலீஸ் ஸ்டோரி உங்களுக்கு இங்கிலீஸ் தெரியலைன்னா டெலிட் பண்ணீடுங்க.

தேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.
1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை
அட் த டைம் 1 காக்கா கம் அன்ட்
அபேஸ் த வடை.
தென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.
ஏ நரி கம் அன்ட் செட்
“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”
தென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.
டொபக்கடீன்னு வடை பெல் டவுன்
த நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே

மாறல்

“ வடை போச்சே“
ஆர் யு சிரிக்கிங்?(( மொழி போச்சே!! ))1.இன்றைய சூழலில் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழைத் தமிழாகவும் பேசுவோரை பார்ப்பதே அரிதாகிவிட்டது.

2.பிறமொழி கலவாது தமிழ் பேசுவோர் யாரும் இருந்தால் இவ்வுலகம் அவர்களை அந்நியர்களைப் பார்ப்பதுபோலத்தான் பார்க்கிறது.

3. ஒரு மொழி அழிந்தால் அந்த இனத்தின் பண்பாடு, நாகரீகம்,கலாச்சாரம் என எல்லாமே அழிந்து போகும் என்பது ஏன் இவர்களுக்குப் புரியமாட்டேங்குது??

24 comments:

 1. அழகிய தங்கிலீஸ் பதிவு

  ReplyDelete
 2. நகைச்சுவையாக இருந்தாலும் இதன் விளைவு பெரியது...
  சிந்திக்க வேண்டும் ...

  ReplyDelete
 3. ஹா ஹா செம கதை. ஆனால் இது சிரிக்கும் விஷயமல்ல தமிழை பாதிக்கு மேல் ஆங்கிலம் அழித்து விட்டது.

  ReplyDelete
 4. அது சரி... இதுதான் நண்பா இன்றைய நிலை.

  ReplyDelete
 5. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது பதிவு..!

  வாழ்த்துக்கள் முனைவர் அவர்களே..!

  ReplyDelete
 6. மொழியின் வளமை தெரியாதவர்கள் செய்யும் கேலி கூத்து. சிரிப்புக்காக இருந்தாலும் இன்றைய நிலையில் ஆங்கிலமும் தமிழும் அப்படித்தான் பேசப்படுகின்றன. இப்படியே போனால் வடையுடன் மொழியும் போய்விடும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஓ...பாட்டி கதை மொழி மாற்றமோ !

  ReplyDelete
 8. அருமையான பதிவு ஐயா,உங்களின் கருத்தை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 9. ஆம் குணசீலன், எனக்கு இது போலவே இராமாயணமும் குறுந்தகவலாக வந்தது,படிக்கவே முடியவில்லை கோபம்தான் வந்தது.
  நல்ல பதிவு தாய் மொழி பற்றிய விழிப்புணர்வு கட்டாயம் எற்பட வேண்டும்.

  ReplyDelete
 10. பண்பாடு நாகரீகமெல்லாம் மலையேறிவிட்டதாகத் தான் தெரிகிறது... தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டுமா என்ற தலைப்பை ஒட்டி ஒரு “நீயா நானா” நிகழ்ச்சி உண்டு.. அதில், “அவசியமில்லை” என்ற தரப்பினரின் வாதங்கள் தான் இன்றைய நிதர்சனம்...

  அந்த நிகச்சியில் வந்திருந்த சிறப்பு விருந்தினர் ஒருவர் சொன்னது...
  “சீனாக்காரன் சீன மொழி படிக்கிறான், சீனா வளர்கிறது, ஜப்பான்காரன் ஜப்பான் மொழி படிக்கிறான், ஜப்பான் வளர்கிறது, இந்தியாக்காரன் ஆங்கிலம் படிக்கிறான், அமெரிக்கா வளர்கிறது”

  தமிழனுக்கு மொழி என்பது இதயத்திற்கு அருகில் இருந்து பர்ஸுக்கு அருகில் வந்துவிட்டது. மொழியால் அமெளண்ட் ஆதாயம் வரும் என்றால் மொழி படிக்கலாம்.. இல்லாட்டி டோண்ட் ஸ்டடி... :)

  ReplyDelete
 11. நாகரிகம்
  கலாசாரம்

  ReplyDelete
 12. கலக்கல் காமெடி நண்பரே !!!

  ReplyDelete
 13. கருத்துரையளித்த அன்பு நெஞ்சங்களே நன்றி நன்றி நன்றி!!

  ReplyDelete
 14. நாம் எத்தனை அறிவுரைகளைக் கூறினாலும் நம் மக்கள் “செவிடன் காதில் ஊதிய சங்கு போல”த் தான் இருப்பார்கள்...

  கிராமங்களில் கூட தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது...

  நாட்டில் எல்லாமே கலப்பினம் ஆகி விட்டது.....

  ReplyDelete
 15. ஆங்கில பாடலா? நான் தமிழ் திரைப்பட பாடல் என்று நினத்துவிட்டேன்!!!

  ReplyDelete
 16. ஆங்கில பாடலா?!!
  நான் தமிழ் திரைப்படப் பாடல் என்று நினைத்துவிட்டேன்.

  ReplyDelete
 17. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் தங்கராஜ்
  சீனிவாசன்.

  ReplyDelete
 18. ஹா ஹா ஹா
  நல்ல பதிவு வாழ்த்துக்கள்
  அண்ணன் முத்து நிலவன் அவர்களின் தளம் மூலம் வந்தேன்..
  http://www.malartharu.org/2014/01/word-verification.html

  ReplyDelete
 19. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோhttp://blogintamil.blogspot.com/2014/12/2009.html?showComment=1418843328533#c6833658329650163781

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 20. good poem thank you for sharing this

  HR Interview Questions

  ReplyDelete
 21. பாட்டி கதை மொழி மாற்றம் Kinindia

  ReplyDelete