Tuesday, April 3, 2012

இவர் யார் என்று தெரிகிறதா…?


நண்பரின் வீட்டுக்குச் சென்ற ஒருவர் பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு இடத்தில் இருந்துகொண்டு தன்னை அழைத்துச் செல்லுமாறு சொல்லியிருக்கிறார். இவரும் சரி நீங்க வள்ளுவர் சிலைக்குக் கீழே நில்லுங்க வந்து கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்..

அவரும் வந்து பார்த்திருக்கிறார் இவரைக் காணோம்..
அலைபேசியில் தொடர்புகொண்டு ஏம்பா எங்கே இருக்க? என்று கேட்க அவரும் நான் நீ சொன்னமாதிரி வள்ளுவர் சிலைக்குக் கீழேதான்பா நிற்கிறேன் என்றிருக்கிறார்.

நானும் அங்கே தாம்பா இருக்கேன். சரியா சொல்லு உனக்கு முன்னாடி எந்தக் கடையிருக்கு என்று கேட்டிருக்கிறார்.

அவரும் தனக்கு முன் இருந்த நகைக்கடை, துணிக்கடை அடையாளங்களைச் சொல்ல இவருக்குப் புரிந்துவிட்டது தன் நண்பர் எங்கே நிற்கிறார் என்று..

அங்கு சென்று பார்த்தால் அந்த நண்பர் இருந்த இடம் வள்ளுவர் சிலையில்லை..  காந்தி சிலை..!

இவர் அவரைப்பார்த்து கேட்டிருக்கிறார்..

ஏம்பா.. நல்லாப் பார்த்தியா? இது வள்ளுவர் சிலையா? காந்தி சிலையா? என்று..

அவரும் பார்த்து வள்ளுவர் சிலைதானேப்பா என்றிருக்கிறார்.

நல்லாப் பாருப்பா இவரு காந்தி கையில கம்பெல்லாம் வச்சிருக்காரு என்று சொல்ல..

அவரும் அசராமல்..

“நான் கூட வள்ளுவர் தான் சேவ் பண்ணிட்டு வந்திட்டாரோன்னு நினைச்சிட்டேன் என்றிருக்கிறார்.

இந்த அனுபவத்தை நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

இதை முற்றிலும் கற்பனை என்றோ நகைச்சுவை என்றோ என்னால் புறந்தள்ளிவிடமுடியவில்லை.

பல நாடுகளில் பெரிய பெரிய அறிஞர்களுக்கெல்லாம் வாழும் காலத்தே சிலை வைத்திருக்கிறார்கள், வைத்து வருகிறார்கள்.

நாமோ ரூபாய் நோட்டுகளில் காந்திபடம் அச்சடித்தும், பேருந்துகளில் குறளுக்கு அருகே நிழற்படம் கூட வைத்தும் வள்ளுவரை அடையாளம் தெரியாதவர்களாகத்தான் வாழ்கிறோம்

நம்மால் முடிந்தவரை...

நாட்டு விடுதலைக்காக உழைத்த தலைவர்களையும்
தமிழ்வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழறிஞர்களையும்
வாழும் தலைமுறையினருக்கும்
எதிர்காலத்தலைமுறையினருக்கும்

தெரியப்படுத்துவது நம் கடமையாகும்..

சரி இன்று தங்கள் தமிழறிவுக்கு ஒரு தேர்வு..

இவர் யார் என்று தெரிகிறதா?
கொடையில் சிறந்தவன் கர்ணனா? தர்மனா? என்று பலர் பேசிக்கொண்டிருக்க எனக்கு நினைவுக்கு வந்தவரோ இவர்தான்!

இவரைப் பற்றி இன்றைய தலைமுறையினர் எந்த அளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதை அறியவே இவ்விடுகை.

உங்களுக்குத் தெரிந்தவரை கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே..

இவர் யாரென்று கண்டறிய முயற்சித்த, கண்டறிந்து சொன்ன அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்..

ஆம் நண்பர்களே இவர் குமண வள்ளல்தான்.தன்னை நம்பி வந்த புலவரை ஏமாற்றாது தன் தலைக்கு நிறைய பரிசு காத்திருக்கிறது. இந்தா என் தலையைக் கொய்துகொள் என்ற மாமனிதர் தான் இவர்.
குமணன் கதையைப் பாட்டி சொல்கிறார் கேளுங்கள்
தன்மானம்=உயிர்


26 comments:

 1. //“நான் கூட வள்ளுவர் தான் சேவ் பண்ணிட்டு வந்திட்டாரோன்னு நினைச்சிட்டேன் //

  ஆஹா.. என்னவொரு சமாளிப்பு.

  ReplyDelete
 2. சரியாக நினைவுக்கு கொண்டுவர முடியவில்லை...முனைவர் அவர்களே !! யோசித்துக்கொண்டிருக்கிறேன்.!!

  ReplyDelete
 3. தனது சிரத்தை கொடையாக கொடுக்க முன் வந்த குமணன் தானே அவர்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் சரியான பதிலுக்குப் பாராட்டுக்கள் கோகுல்.

   Delete
 4. காந்திக்கும் வள்ளுவருக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட இருக்காங்களா

  படத்தில் இருப்பவர் வள்ளல் பாரி என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள் சதீஷ் இவர் குமணவள்ளல்.

   Delete
 5. ஆம் முனைவரே,
  இன்றைய தலைமுறைகள் சினிமா நட்சத்திரங்களையும்
  விளையாட்டு வீரர்களையும் நினைவில் வைத்துக்கொண்ட அளவு
  நாட்டு விடுதலைக்காக உழைத்த தலைவர்களையும்
  தமிழ்வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழறிஞர்களையும்
  நினைவில் வைத்துக்கொள்ள சந்தர்ப்பங்களும்
  சாதகங்களும் அமையவில்லை.. அமைந்தாலும் அதை
  ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை...

  நினைவேற்றுவது நம் கடமை..

  உங்கள் விடுவினாக்கான விடை தெரியவில்லை
  முனைவரே..
  உங்கள் விடைக்காக காத்திருக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. இவர்தான் குமணவள்ளல் அன்பரே..
   இவரைப் பற்றிய மேலும் விவரங்களை அறிய இந்த இடுகையை மீண்டும் பாருங்களேன்..

   இணைப்புகளை இற்றைப்படுத்தியிருக்கிறேன்.

   Delete
 6. உண்மையா கற்பனையா எனத் தெரியாவிட்டாலும் சம்பவம் சிரிப்பைத் தந்தது.
  சிலை வைக்கும் கலாச்சாரம் தேவையற்றது. இது எனது கருத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து சிந்திக்கத்தக்கது..

   Delete
 7. enna sir !
  seyya naadum naamalum-
  appadi!

  varalaare theriyaamal-
  vaazhkirom!
  ungal pani sirakkattum!

  ReplyDelete
 8. கொடை வள்ளல் குமணன்!சரிதானா?

  ReplyDelete
  Replies
  1. சரிதான் அன்பரே
   வாழ்த்துக்கள்.

   Delete
 9. வள்ளல் குமணன் தன் தம்பி இளங்குமணனால் நாடு கடத்தப்பட்டு பொருளின்றி காட்டில் வாழும் நிலையில், குமணனின் தலைக்கு அவன் தம்பி இளங்குமணன் பரிசு அறிவித்திருந்தான். இதை அறியாத புலவர் பெருந்தலைச்சத்தனார் குமணனை கண்டு பாடி பாரிஸில் வாங்க வந்தார். புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்து தன் தலையை கொய்து தன் தம்பி இளங்குமணனிடம் கொடுத்து பரிடு பெற்றுக்கொள்ள சொன்னான்.(இக்காட்சி தான் ஓவியத்தில் உள்ளது) குமணன் தந்த வாளே தனக்குப் போதும் என்று வாளைமட்டும் எடுத்துக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டி நிகழ்ந்ததைக் கூறி பரிசு பெற்றுகொண்டார்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் விரிவான விளக்கங்களுக்கு நன்றி
   வாழ்த்துக்கள் சிந்தை

   Delete
 10. வள்ளலாகிய மன்னனொருவன் சூழ்நிலை காரணமாக தலை மறைவு வாழ்க்கை வாழும் காலத்தில் பரிசில் பெற வந்த ஒரு புலவனுக்கு தர ஏதும் இல்லாத நிலையில் தன தலை கொய்து பரிசில் பெற்று செல்ல தன வாளை தரும் நிகழ்ச்சியே இப்படம் நமக்கு உணர்த்துகிறது.


  தமிழ் பாடத்தில் படித்த நினைவு. குமணன் என நினைவூட்டிய மற்ற பின்னூட்டாளர்களுக்கு நன்றி !!


  திருக்குறள் பற்றி பேசி கொண்டிருந்த போது நண்பன் ஒருவன் திருவள்ளுவர் ஏன் தலைப்பாகை கட்டி கொண்டிருக்கிறார் என்று கேட்டான் ??....!!

  ReplyDelete
  Replies
  1. இவர்களுக்கு நம்மால் முடிந்தவரை மரபுகளைப் புரியவைப்போம் நண்பா வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றிகள்.

   Delete
 11. செத்தும் கொடுத்தான் சீதக்காதி பற்றி பதிவு எழுதவும்.

  ReplyDelete
  Replies
  1. சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர்பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்'
   என்றும் அழைக்கப்பெறும்.
   மேலும் இவரைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்துக்கு உங்களை அழைக்கிறேன்.

   http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF

   Delete
 12. thamizhai valarkka naam enna seiyyalaam, mannikkavum enakku thamizh visaippalagai illai evvaaru thamizhil padhividuvadhu enbadhai vilakkumaaru kettukolgiren nandri
  surendranath1973@gmail.com

  ReplyDelete