திங்கள், 16 ஏப்ரல், 2012

இதுவும் கடன் தானே..

கடன் இல்லாமல் வாழ்பவர்கள் யார்?
ஏழை முதல் பணக்காரர்வரை அவரவர் தகுதிக்கேற்ப கடனின் மதிப்பும் அதிகமாக இருக்கிறது!

கடன் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது பணம் தான்!

சிலநேரங்களில் நினைத்துப்பார்ப்பேன் இவை மட்டும்தான் கடனா?
 • நிலம்,நீர்,தீ,காற்று,வான் என்னும் இயற்கையின் கூறுகளிடமிருந்து பெற்ற இந்த உடல் இயற்கையிடம் நாம் பெற்ற கடன் தானே..               நாமே கொடுக்க மறந்தாலும், மறுத்தாலும் இயற்கை நம்மிடமிருந்து நம்மைப் பறிமுதல் செய்துகொள்கிறதே, இதுவும் ஒருவகைக் கடன் தானே!

 • நம் பெற்றோர் நம்மைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.                    என்றாலும் அவர்களுக்கு நாம் எவ்வளவு செய்தாலும் இந்த வளர்ப்புக் கடனை முழுவதும் அடைக்கமுடியாதே..                                         இருந்தாலும் நம் குழந்தைகள் நாம் பெற்றோரிடம் பெற்ற கடனுக்கு வட்டிபோட்டு வசூல் செய்துகொ்ளகிறார்களே..                                                                                             இதுவும் ஒருவகைக் கடன் தானே என்று..
இப்படிக் கடன் குறித்து நாம் சிந்திக்கும் இவ்வேளையில் பழந்தமிழ் அகப்பாடல் ஒன்று.. 

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


இந்தப் பாடலின் பொருளைக் காண இங்கே சொடுக்கவும்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு..

To bring forth and rear a son is my duty.
To make him noble is the father’s.
To make spears for him is the blacksmith’s.
To show him good ways is the king’s.
And to bear
a bright sword and do battle,
to butcher enemy elephants,
and come back:
that is the young man’s duty.
Poet: Ponmutiyar
Translated by A.K.Ramanujan


ஒப்புநோக்கத்தக்க பாடல்

7 கருத்துகள்:

 1. ரொம்ப நாளைக்கு பிறகு அகநானூறு புறநானூறு பற்றி சிந்திக்கவைத்தது தங்களது பதிவு ..,

  கடன் குறிந்த தங்களது முகவுரை சிந்தனை அருமை ..!

  பதிலளிநீக்கு
 2. கடனைப்பற்றி அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் பேராசிரியரே..எப்படியிருக்கீங்க..ரொம்ப நாளுக்கப்புறம் தமிழ் புத்தகத்தை புரட்டின மாதிரியான மகிழ்ச்சி.உங்களுக்கு நிகர் நீங்கதான்..

  பதிலளிநீக்கு
 4. வாழ்வில் நாம் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
  நமக்கு கிடைக்கும் நல்லது கேட்டது எல்லாம்..
  ஒருவகையில் நாம் பெற்ற கடன்களே..
  அருமையான விளக்கப் பாடல் முனைவரே..

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு

  வாழ்த்துகள்..

  உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
  DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ் DailyLib

  To get the Vote Button

  தமிழ் DailyLib Vote Button

  உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

  நன்றி
  தமிழ் DailyLib

  பதிலளிநீக்கு