Wednesday, April 18, 2012

சங்க ஓவியங்கள்பள்ளியில் படித்த காலத்திலேயே தமிழ் மொழியின் மீது ஏதோ இனம்புரியாத பற்று இருந்துவந்தது. அப்போது கேட்ட கதைகள் மனதில் இன்னும் நிழலாடுகிறது.


என அப்போது கேட்ட சின்னச்சின்னக் கதைகள் மனதில் விதையாய் விழுந்தன.

கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது, அறிவியலா? தமிழா? என இருபெரும் துறைகள் என்முன்நின்றன.இருந்தாலும் மனம் சங்க இலக்கியத்தின் மீது கொண்ட பற்றால் உரிமையோடு தமிழைத் தேர்ந்தெடுத்தது.

தமிழ் இளங்கலை பயின்றபோது,

செம்புலப் பெயல்நீரார்,அணிலாடுமுன்றிலார், தேய்புரிபழங்கயிற்றினார் என்னும் புலவர்களின் பெயர்களுக்கான காரணம் அறிந்தபோது சங்கஇலக்கியத்தின் மீது மேலும் பற்றுதல் ஏற்பட்டது.

என்னும் பாடல்களைப் படித்தபோது சங்கஇலக்கியத்தின் மீது காதல் ஏற்பட்டது.

முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றகாலத்தில்,
போன்ற பாடல்களில் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணர்ந்துகொண்டேன்.

மு.வரதராசன் - பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை.
வ.சுப.மாணிக்கனார் – தமிழ்க்காதல்
ஆகிய நூல்களைப் படித்த காலத்தில் நாமும் சங்கஇலக்கியத்தை ஆய்வுசெய்யவேண்டும் என்ற எண்ணம் கருக்கொண்டது.

ஆய்வியல் நிறைஞர், மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக சங்கஇலக்கியத்தில் முழுதும் வாசிக்கும் பெருவாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சங்கஇலக்கியத்தில் ஒலிமாசுமாடு, இசைமருத்துவம், ஒலிக்குறிப்புக்கூறுகள் என்னும் மூன்று நோக்கங்களில் நான் செய்த ஆய்வில் சங்கஇலக்கிய மாந்தர்களின் பேச்சு என் காதுகளில் கேட்க ஆரம்பித்தது. காட்சி என் கண்களுக்குத் தெரிந்தது.

நான் கண்ட காட்சிகளை தமிழுலகத்துக்கும் காண்பிக்கவேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
2007 ஆம் ஆண்டு தமிழ் வலையுலகம் எனக்கு அறிமுகமானது. இன்று வரை புதிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்று வருகிறேன். இந்தத் தலைமுறையினரின் தொழில்நுட்பங்களிலெல்லாம் சங்கஇலக்கியத்தைப் பதிவு செய்யவேண்டும் என்ற வேட்கையில் இந்த வலையில் தொடர்ந்து சங்க இலக்கியம் குறித்து எழுதிவருகிறேன்.
புதிதாக எதுவும் சொல்லிவிட்டேன் என்று என்றுமே எண்ணியதில்லை.என்றாலும் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் புதிதாக ஏதாவது சொல்லவேண்டும் என்றே எண்ணியிருக்கிறேன். 


இதுவரை எழுதிய கட்டுரைகளில் தொடரால் பெயர் பெற்றபுலவர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து
“உயிருள்ள பெயர்கள் என்ற பெயரில் நூலாக பதிப்பித்துள்ளேன். இரண்டாவதாக வலையுலக தமிழுறவுகளால் அதிகமாக பார்வையிடப்பட்ட சங்கஇலக்கியக் காட்சிகளை 40 கட்டுரைகளாகத் தொகுத்து உங்கள் மறுமொழிகளோடு வெளியிடவுள்ளேன்.இந்த நூலுக்கு “சங்க ஓவியங்கள்“ என்று பெயரிட்டுள்ளேன். சங்க ஓவியங்களைக் காண இங்கே சொடுக்கவும்.32 comments:

 1. பள்ளியில் பயின்ற காலத்தில் கேட்ட கதைகளில் இன்றும் என் நெஞ்சை விட்டு நீங்காத கதைகளில் ஒன்று

  தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த பசுக்கன்றுக்காக தனது மகனை அதே தேர்க்காலில் நசுக்கி கொன்று நீதி எல்லா உயிர்களுக்கும் ஒன்றுதான் என்று உணர்த்திய மன்னன் மனுநீதிச்சோழன் என்றும் என் நெஞ்சில் வாழும் நீதிமான் ...!

  ReplyDelete
  Replies
  1. அனுபவப் பகிர்வுக்கு நன்றி நண்பா.

   Delete
 2. தங்களது நூல் மிகப்பெரிய வெற்றியை பெற எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 3. //கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் போது, அறிவியலா? தமிழா? என இருபெரும் துறைகள் என்முன்நின்றன.இருந்தாலும் மனம் சங்க இலக்கியத்தின் மீது கொண்ட பற்றால் உரிமையோடு தமிழைத் தேர்ந்தெடுத்தது.//

  நீங்கள் தமிழைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.தமிழ் வளர்க்க கணினியைப் பயன்படுத்தி வருவது பாராட்டத் தக்கது.தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. முனை‌வரையா... நான் ‘உயிருள்ள பெயர்கள்’ புத்தகத்தைப் படிக்க விரும்புகிறேன். நான் செய்ய வேண்டியது யாது என்பதைத் தெரிவித்து உதவுங்களேன். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அன்பரே இரண்டாவது நூலையும் பதிப்பித்துவிட்டு நூல் வெளியீட்டுவிழா நடதத இருக்கிறேன் பிறகுதான் என் நூல்களைப் பரவலாக்க இருக்கிறேன்.
   விரைவில் நூல் பெறும் விவரங்களைத் தருகிறேன் அன்பரே.

   தங்கள் அன்புக்கு நன்றி.

   Delete
 5. வெற்றி பெற வாழ்த்துகள் முனைவரே.

  ReplyDelete
 6. விதைத்த விதைகள் எல்லாம் வீறுகொண்டு
  நிலம்கீறி இன்று விரல் முனையிலிருந்து
  தமிழமுது சொட்டும் எழுத்துக்களாய் ஊறி வருகிறது
  முனைவரே...
  நூல் வெளியீட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  இன்னும் பல் நூல்கள் வெளியிட இறைவனும் தமிழன்னையும்
  அருள் புரியட்டும்..

  ReplyDelete
 7. புத்தகம் உங்கள் பெயரை சங்கென முழங்கட்டும்.புத்தகம் கிடைக்கும் இடத்தை குறிப்பிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது நூலையும் பதிப்பித்துவிட்டு நூல் வெளியீட்டுவிழா நடதத இருக்கிறேன் பிறகுதான் என் நூல்களைப் பரவலாக்க இருக்கிறேன்.
   விரைவில் நூல் பெறும் விவரங்களைத் தருகிறேன் கவிஞரே..

   Delete
 8. முனைவர் அவர்களுக்கு வணக்கம்! நல்ல யோசனை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 10. நூல் வெளியீட்டுக்கு என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. புத்தகம் கிடைக்கும் இடத்தை குறிப்பிட்டால் நல்லது......

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது நூலையும் பதிப்பித்துவிட்டு நூல் வெளியீட்டுவிழா நடத்த இருக்கிறேன் பிறகுதான் என் நூல்களைப் பரவலாக்க இருக்கிறேன்.
   விரைவில் நூல் பெறும் விவரங்களைத் தருகிறேன் அன்பரே.

   Delete
 12. DEAR SIR

  I AM IN NEWDELHI

  I WANT UR BOOK UYIRULLA PAIYARGAL

  HOW TO COLLECT THAT BOOK AND HOW TO SEND MONEY

  PLEASE TELL THE DETAILS

  MY MAIL ID vaitheesmax@gmail.com

  ReplyDelete
  Replies
  1. அன்பரே இரண்டாவது நூலையும் பதிப்பித்துவிட்டு நூல் வெளியீட்டுவிழா நடதத இருக்கிறேன் பிறகுதான் என் நூல்களைப் பரவலாக்க இருக்கிறேன்.
   விரைவில் நூல் பெறும் விவரங்களைத் தருகிறேன் அன்பரே.

   Delete
 13. தமிழின் மீது கொண்ட பற்று, தீரா தாகம் நீங்கள் புத்தகம் வெளிக்கொணர்ந்த விதத்தில் வெளிப்படுகிறது. உழைப்போர்க்கே வெற்றிக்கனி. மேன்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete