தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்!ஒரு பெரியவர்
பத்துப்பாட்டுலே எட்டாவது பாட்டா இருக்கிற குறிஞ்சிப்பாட்டை பார்த்துக்கிட்டு இருந்தார்.
பிரகத்தன்ங்கற அரசனுக்கு, தமிழ் நயத்தைத் தெரிவிக்கறதுக்காக கபிலரால் பாடப்பட்டது அது.
அதுலே வர்ற வர்ணனைகள்- பழக்கவழக்கங்கள்ளே மனசைப் பறிகொடுத்துப் பார்த்துக்கிட்டருந்தார் அந்தப் பெரியவர்.
ஒர் இடத்திலே தலைவியும் தோழியும் பலவித மலர்களைப் பறிச்சு ஒரு பாறையிலே குவிக்கிறதா செய்தி வருது.
அதுலே 99 மலர்களோட பேரு வருது!
அந்த இடத்தைக் கவனிச்சிப் பார்க்கிறப்போ..
நடுவிலே சில அடிகள் விட்டுப்போயிருக்குங்கறது புரிஞ்சது.
ஏட்டுலேயும் அதுக்கான இடம் விடப்பட்டிருந்தது
செங்காந்தள் . பூ-வுலேயிருந்து செம்பூ வரைக்கும் வரிசையா பல மலர்களோட பேர் வருது. செஙகோடுவேரிங்கற பூவுக்கும்  கூவிளம்பூவுக்கும் இடையிலே உள்ள பகுதிதான் காணாமேப் போயிருந்தது. அதுவே எத்தனை பூ இருந்த்தோ தெரியவில்லையே!
அழகான பூ மாலையிலே நடுவிலே சில பூ உதிர்ந்து போனது மாதிரி இருந்தது.
அந்தப் பூக்களை எப்படிக் கண்டுபிடிக்கறதுங்கறது? எங்கு கண்டுபிடிக்கறது? பழைய சுவடிகள்  யார்கிட்டயாவது இருந்தா வங்கிப்புரட்டிப்பார்க்கலாம்.

அந்தப் பெரியவருக்கு இருப்புக் கொள்ளலே...
இரவுபகலா தூக்கம் வரலே.. தேடாத இடமும் இல்லே..
இன்னும் ஓர் இடம் பாக்கி இருந்தது.அவருக்கு ஞாபகம் வந்த்து.
அதுதான் தருமபுர ஆதீன மடம்.
ஒருநாள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு இன்னொருத்தரைக் (பொன்னுச்சாமி செட்டியார்) கூட அழைச்சிக்கிட்டு தருமபுரம்போனார்.
அங்கே ஆதினத் தலைவர் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் ஒரு சாய்வு நாற்காலியிலே சாய்ந்து உக்கார்ந்திருந்தார்.இந்தப் பெரியவர் தன் கையோட கொண்டாந்திருந்த கற்கண்டுப் பொட்டலத்தை  அவருக்கு முன்னாடி வச்சார். தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.


“ஐயா நான் கும்பகோணம் காலேஜிலே தமிழ்ப் பண்டிதனா இருக்கேன்.. என்பெயர் உ.வே சாமிநாதய்யர்...
தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிப்பிக்கத் தொடங்கியிருக்கேன்.அப்படின்னு ஆரம்பிச்சு வந்த விசயத்தைச் சொன்னார்.
ஆதீனத் தலைவர் நிமிர்ந்து பார்த்தார்.
நாளைக்கு வரலாமே! ன்னார்.
சரின்னு சொல்லிப்புட்டு இவர் மாயூரத்துக்கு வந்துட்டார்.
ராத்திரு பூரா தூக்கமில்லை. எப்போ விடியும்னு காத்திருந்தார். ஒரு வழியா விடிஞ்சது.
மறுபடியும் புறப்பட்டு ஏழுமணிக்குத் தருமபுரம் போனார். அங்கேயிருந்த சில ஓதுவார்களையும் கணக்குப்பிள்ளைகளையும் உதவி செய்யும்படி தேசிகர் கட்டளையிட்டார்.


அங்கேயிருந்த நூல் நிலையத்துக்குப் போனார்.அங்கே ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள். ஒவ்வொண்ணா எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்டிருக்கார்.
“பத்துப்பாட்டு எங்கேயாவது கண்ணுலபடுதான்னு“
பகல் பன்னிரண்டு மணியாச்சு! தேடினது கிடைக்கலே!சாப்பிட்டு மறுபடி தேட ஆரம்பிச்சாங்க.இருட்டிப்போச்சு! உயரமான குத்துவிளக்குக் கொண்டாந்து வச்சாங்க! அந்த வெளிச்சத்தை வச்சிக்கிட்டு ராத்திரி எட்டு மணிவரைக்கும் தேடினாங்க! அப்போ ஆதீனத் தலைவர் மாணிக்கவாசக தேசிகர் அங்கே வந்தார். டாக்டர் உ.வே.சா எழுந்திருச்சார். அவர் நின்றபடியே கையமர்த்தி “ஏதாவது கிடைச்சுதா?“ ன்னார்.
“எனக்கு அதிர்ஷ்டமில்லை!“ன்னு சோர்வா பதில் சொன்னார்.
அந்த சமயம், காறுபாறு ஸ்ரீ சுவாமிநாத தம்பிரான் அங்கே வந்தார்.


சில நாளைக்கு முன்னாடி பதினெட்டாம் பெருக்குலே காவிரிலேவிடுறதுக்குச் சில பழைய கணக்குச்சுவடிகளையும் – வீணாப் போன சுவடிகளையும் சின்னத் தேர்ல வச்சு இழுத்துக்கிட்டுப்போனாங்க. அதுலே சிலதை எடுத்துப் பீரோ மேலே வச்சிருக்கேன்.அதுலே ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம்ன்னு அதைக் கொண்டாரச் சொல்லிக்கொடுத்தார். அதுக்குள் ரொம் நேரம் ஆயிட்டுது... அதனாலே அதை எடுத்துக்கிட்டு கும்பகோணம் வந்துட்டார் டாக்டர் உ.வே.சா
இதுவரைக்கும் அவர் தேடின விவரம் அதுலே கிடைச்சுது. எப்படி இருந்திருக்கும் அவருக்கு?
விடுபட்ட பூ மூணு. அதாவது தேமா- தேமாம்பூ, மணிச்சிகை – செம்மணிப்பூ, அப்புறம் பெருமூங்கிற் பூ (குறிஞ்சிப்பாட்டு 64-5உரை)
தமிழ்த்தாத்தா தருமபுரத்துக்கு அந்த ஓலைகளை அனுப்பிவச்சார். நன்றிக் கடிதமும் எழுதினார்.ஆத்துலே போகஇருந்த அந்த விவரம் இன்றைக்கு நமக்குக் கிடைச்சதுக்குக் காரணம் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்.
இந்தக் காலத்து எழுத்தாளர் ஒருத்தர். என்னுடைய நண்பர். அவர் என்ன பண்ணுவார் தெரியுமா? ஒவ்வொரு வருசமும் 18ஆம் பெருக்கு ஆத்துலே புதுவெள்ளம் வர்ற அன்னிக்குத் தன்னுடைய புத்தகங்களையெல்லாம் மறக்காமே எடுத்துக்கிட்டு ஒரு கோயில்லே கொண்டுபோய் வச்சு  பூசை பண்ணுவார்.
“என்னங்க உங்களுக்கு அவ்வளவு பக்தியா?ன்னு கேட்டேன்.
“அட அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே சார்...
வீட்டுலே வச்சிருந்தா 18ஆம் பெருக்கு அன்னிக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப்போய் ஆத்துலே விட்டிடுவாங்க சார் எங்க வீட்டுக்காரம்மா! அதனாலேதான் முன்னெச்சரிக்கையா அன்னைக்கு அப்படி நடந்துக்கறேன் அப்படின்னார்.


தொடர்புடைய இடுகை


குறி்ஞ்சிப்பாட்டு

35 comments:

 1. //வீட்டுலே வச்சிருந்தா 18ஆம் பெருக்கு அன்னிக்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப்போய் ஆத்துலே விட்டிடுவாங்க சார் எங்க வீட்டுக்காரம்மா! அதனாலேதான் முன்னெச்சரிக்கையா அன்னைக்கு அப்படி நடந்துக்கறேன் அப்படின்னார்.// :))

  இன்று தான் இந்தப் பாடல் பற்றி படித்து எழுதிக்கொண்டு இருந்தேன். இன்று உங்கள் பக்கத்தில் இந்தப் பாடல் பற்றிய இன்னுமோர் தகவல்....

  பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பதிவும் கண்டு மகிழ்ந்தேன் அன்பரே..
   நன்று.

   Delete
 2. //டாக்டர் உ.வே.சா//


  இது கூட புதிய தகவலாகவே இருக்கிறது.... மெய்யாலுமா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாரத் பாரதி

   Delete
 3. தமிழ்த்தாத்தாவின் தமிழ் மீதான பற்று குறித்து அறிந்தேன்.
  நன்றி முனைவரே.

  ReplyDelete
  Replies
  1. மகி்ழ்ச்சி குமார்

   Delete
 4. //ஆத்துலே போகஇருந்த அந்த விவரம் இன்றைக்கு நமக்குக் கிடைச்சதுக்குக் காரணம் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்.//

  தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் வாழ்க்கை வரலாறு பற்றி சமீபத்தில் முழுவதும் படித்தேன். கண் கலங்கிப்போனேன். அவர்கள் செய்ததல்லவோ தமிழ்த் தொண்டு. நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவையையும் சேர்ந்து அளித்ததற்கு என் கூடுதல் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் தமிழ்த்தேடல் மகிழ்வளிக்கிறது ஐயா..
   நீண்டநாட்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கு நன்றி.

   Delete
 5. தென்கச்சியாரின் இன்று ஒரு தகவல் என்றால்
  இருக்கும் வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு வானொலி
  முன்னால் அமர்ந்திருந்த காலம்..
  கண்களில் நிழலாடுது முனைவரே...

  ReplyDelete
  Replies
  1. மறக்கமுடியாத மனிதர் அன்பரே..
   நினைத்தவுடன் அவர் பேசிய குரல் காதில் இன்னும் ஒலிப்பது போல இருக்கிறது.

   Delete
 6. உ.வே சாமிநாதய்யரின் உழைப்பு புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி விச்சு

   Delete
 7. நல்லதொரு உணர்வுபூர்வமான பகிர்வு குணா !

  ReplyDelete
 8. அறியாத அருமையான புதிய தகவல்
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அருமை நண்பரே

  தமிழ்த் தாத்தா சாமிநாதய்யர் போன்றோர் நம் செல்வங்களை கொஞ்சமேனும் மீட்டு காத்த்னர்.எவ்வளவோ இழந்து விட்டோம்.

  அடிக்க்கடி கொஞ்சம் பழைய[எங்களுக்கு புதிது ஹி ஹி] தமிழ் சொற்கள்[மன்னிக்கவும் விளகத்துடன்] சொல்லிக் கொடுக்க வேண்டுகிறோம்.பதிவில் கலந்து அவ்வப்போது எழுதினால் அனைவருக்கும் பழகி விடும்.

  பல்முறை தமிழ் சொற்கள் சில விடயங்களுக்கு இருக்கிறதா என தடவி தடவி தேடும் போது வருவது குற்ற உணர்வே.தமிழில் அச்சொல் இருக்கிறது நம்க்குத் தெரியவில்லை என்பதுதான்.

  தொடருட்டும் உங்கள் தமிழ்ப் பணி

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சார்வாகன்

   Delete
 10. தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையரின் தமிழ்த் தொண்டினை நினைவு கூர்ந்த தமிழ் முனைவருக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா.

   Delete
 11. அந்த மூன்று மலர்களையும் தேடி
  எங்களுக்குக் கொடுத்தீர்களே....
  நீங்களும் தமிழ் தாத்தா அளவிற்கு
  எங்கள் மனத்தில் உயர்ந்து விட்டீர்கள்.
  வாழ்க உங்கள் தமிழ் பணி!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அரோனா

   Delete
 12. நல்ல தகவல்! அனைவரும் அறியத் தந்தீர்
  நன்றி!
  சா இராமாநுசம்

  ReplyDelete
 13. அருமையான தகவல் அண்ணா. நன்றி

  ReplyDelete
 14. பாராட்டதக்க தாத்தா மிக நெகிழ்வா தகவல்.

  ReplyDelete
 15. தமிழ் தாத்தாவின் தொண்டு அற்புதம்!

  நம்ம கிட்ட இருக்கிற இலக்கியங்கள் ஆற்றில் கரைத்தது போக மிச்சமே என்று அறியும் போது!! மிகவும் வருத்தமாகவே இருக்கிறது..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி குடிமகன்

   Delete