Featured Post

புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்

இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால்  நூல் வாசிப்பு மரபுகள்  மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...

Thursday, January 30, 2014

செந்தமிழும் நாப்பழக்கம்


நிறைய படித்தவராக இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் மேடையில் பேசுவது என்றால் சிலருக்கு தயக்கம் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. கல்வியில்லாதவனும்ஒருவருடைய குறிப்பை அறியாதவனும்ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரங்களாகவே கருதப்படுவர் என்ற கருத்தை, கீழ்க்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

   கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
   
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
    
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    
மாட்டா தவன்நல் மரம். (13)  
                                                                             மூதுரை -ஔவையார்
கிளைகளை உடையனவாகியும்கொம்புகளை உடையனவாகியும்,  காட்டினுள்ளே நிற்கின்ற,  அந்த மரங்கள்நல்ல மரங்கள் அல்ல  கற்றோர் சபையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை படிக்கமாட்டாமல் நின்றவனும்,  பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே,  நல்ல மரங்களாம் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் மேடையில் பேசுவது தன்னியல்பாக வந்துவிடும் என்பதை,

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்ற கருத்தை,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என உரைப்பார் ஔவையார்.

8 comments:

 1. சிறப்பான பாடல்களின் துணை கொண்டு அருமையாக சொன்னீர்கள் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமையான பாடல்களைப் பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே!

  ReplyDelete
 3. எமக்கும் அந்த பயம் உண்டு.என்ன செய்வது ?
  வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 4. தங்கள் அருமையான விளக்கத்தை வரவேற்கிறேன்.

  தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

  ReplyDelete
 5. அருமையான பாடல். இதுவரை நான் அறியாத பாடல். சிறு வயதில் குழந்தைகளை சுதந்திரமாக பேச விட்டு கேட்டால், பெரியவர் ஆன பின்பு பேச்சு அவர்களுக்கு ஒரு பயங்கரமான விஷயமாக ஆகாது. நாம்தான் பள்ளியில் பேசும் பிள்ளைகளை கரும்பலகையில் பெயர் எழுதி தண்டிக்கிறோமே,, இயல்பாக ஏதாவது குழந்தைகள் பேசினாலே ஷ்ஷ்,ஷ் என பயமுறுத்தி அவர்களை பேசா மடந்தைகளாக ஆக்குகிறோமே.. பின்பு அவர்கள் பெரியவர்களாக ஆனால் என்ன பெரிய பதவியில் அமர்ந்தால் என்ன நல் மரங்களாக நிற்க வேண்டியது தான்.

  ReplyDelete
 6. மேடையில் பேசும் கலையை அன்றே ஔவையார் சொல்லி இருக்கும் விதம் அருமை !
  த ம 4

  ReplyDelete
 7. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  அன்பு வாழ்த்துகள்.

  மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

  வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

  ReplyDelete