நிறைய படித்தவராக இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் மேடையில் பேசுவது என்றால் சிலருக்கு தயக்கம் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரங்களாகவே கருதப்படுவர் என்ற கருத்தை, கீழ்க்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம். (13)
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம். (13)
மூதுரை -ஔவையார்
கிளைகளை உடையனவாகியும், கொம்புகளை உடையனவாகியும், காட்டினுள்ளே நிற்கின்ற, அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல கற்றோர் சபையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை, படிக்கமாட்டாமல்
நின்றவனும், பிறர் குறிப்பை
அறியமாட்டாதவனுமே, நல்ல மரங்களாம் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.
முயற்சியும், பயிற்சியும் இருந்தால் மேடையில் பேசுவது தன்னியல்பாக வந்துவிடும் என்பதை,
வரைய
வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும்
பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும்.
நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும்.
ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே
பதிந்திருந்தால்தான் வரும் என்ற கருத்தை,
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என
உரைப்பார் ஔவையார்.
