வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 மே, 2015

பொன்மொழிகள் 30 (தமிழ் & ஆங்கிலம்)

        
     
        1.      you are never loser until you have quit trying – CA.RAJENDRA KUMAR.P விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள் தோற்பதில்லை.

2.       Great spirits have always faced severe opposition from mediocre minds மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்.

3.       Never discourage anyone who makes continual progress,no matter how slow. ஒருவர் தொடர்ந்து எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும் அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள்.

4.        Always do your best. What you plant now, you will harvest later. - Og Mandino உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்வீர்கள்!

5.       Opportunities are usually disguised by hard work, so most people don't recognize them. -Ann Landers வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பு என்னும் மாறுவேடமிட்டுத்தான் வருகின்றன. ஆனால் பல மக்களுக்கு அதை அடையாளம் கண்டுகொள்ளத் தெரிவதில்லை.

6.       When you think big, your results are big. - Thomas J. Vilord நீங்கள் பெரிதாக எண்ணினால் உங்களுக்குக் கிடைப்பதும் பெரிதாகவே இருக்கும்.

7.       Your current conditions do not reflect your ultimate potential. - Anthony Robbins உங்கள் தற்போதைய நிலை உங்கள் கடைசி நிலையைப் பிரதிபலிப்பதில்லை.

8.       Continuous learning is the minimum requirement for success in any field! - Denis Waitley தொடர்ச்சியான கற்றல் என்பது வெற்றிக்கான குறைந்தபட்ச தேவையாகும்.