வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 மே, 2015

பொன்மொழிகள் 30 (தமிழ் & ஆங்கிலம்)

        
     
        1.      you are never loser until you have quit trying – CA.RAJENDRA KUMAR.P விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள் தோற்பதில்லை.

2.       Great spirits have always faced severe opposition from mediocre minds மன ஆற்றலுடையவா்கள் சாதாரணமான மனங்களிலிருந்து வரும் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருப்பார்கள்.

3.       Never discourage anyone who makes continual progress,no matter how slow. ஒருவர் தொடர்ந்து எவ்வளவு மெதுவாக முன்னேறினாலும் அவரது ஊக்கத்தைக் கெடுக்காதீர்கள்.

4.        Always do your best. What you plant now, you will harvest later. - Og Mandino உங்களால் எதை சிறப்பாக செய்யமுடியுமோ அதையே எப்போதும் செய்யுங்கள்.எதை விதைக்கிறீர்களோ! அதையே அறுவடை செய்வீர்கள்!

5.       Opportunities are usually disguised by hard work, so most people don't recognize them. -Ann Landers வாய்ப்புகள் பொதுவாக கடின உழைப்பு என்னும் மாறுவேடமிட்டுத்தான் வருகின்றன. ஆனால் பல மக்களுக்கு அதை அடையாளம் கண்டுகொள்ளத் தெரிவதில்லை.

6.       When you think big, your results are big. - Thomas J. Vilord நீங்கள் பெரிதாக எண்ணினால் உங்களுக்குக் கிடைப்பதும் பெரிதாகவே இருக்கும்.

7.       Your current conditions do not reflect your ultimate potential. - Anthony Robbins உங்கள் தற்போதைய நிலை உங்கள் கடைசி நிலையைப் பிரதிபலிப்பதில்லை.

8.       Continuous learning is the minimum requirement for success in any field! - Denis Waitley தொடர்ச்சியான கற்றல் என்பது வெற்றிக்கான குறைந்தபட்ச தேவையாகும்.9.       Never confuse a single defeat with a final defeat. - F. Scott Fitzgerald முதல் தோல்விக்கும் கடைசித் தோல்விக்கும் குழப்பம் வேண்டாம்.

10.   Great works are performed not by strength, but perseverance. - Dr. Samuel Johnson மிகப் பெரிய வேலைகள் விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன. அவரது வலிமையால் அல்ல.

11.   Life is change; growth is optional. Choose wisely. - Karen Kaiser Clark வாழ்க்கை மாற்றங்களுக்குரியது – வளர்ச்சி நம் விருப்பத்துக்குரியது – புத்திசாலித்தனமாகத் தேர்வுசெய்துகொள்ளலாம்.

12.   I am the captain of my soul. I am the master of my fate. - William Henley என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன்

13.    Success is neither a high jump nor a long jump; it is the steps of a marathon. unknown வெற்றி என்பது உயரம் தாண்டுதலோ, நீளம் தாண்டுதலோ அல்ல அது ஒரு மராத்தான்.

14.   Life without risk is not worth living. - Charles Lindbergh
ஆபத்தில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை மதிப்பில்லாதது.

15.    A thousand mile journey begins with one step. - Lao Tsu ஆயிரம் மைல் பயணம் கூட ஒரு அடியில் தான் தொடங்குகிறது.

16.   Success is a journey, not a destination.- Ben Sweetland வெற்றி என்பது பயணம். அதற்கு எல்லை இல்லை.

17.   Without continual growth and progress, such words as improvement, achievement, and success have no meaning. - Benjamin Franklin தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இல்லாமல், முன்னேற்றம், சாதனை, வெற்றி போன்ற வார்த்தைகளுக்குப் பொருள் இல்லை.

18.   “If you judge people, you have no time to love them.”  Mother Teresa நீங்கள் மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால் அவர்களிடம் அன்புகாட்ட உங்களுக்கு நேரம் இருக்காது.

19.   “In the middle of every difficulty lies opportunity.” - Albert Einstein ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் வாய்ப்பு உள்ளது.

20.   “This too shall pass.” – Persian Sufi Poets இது கூட கடந்துபோகும்.

21.   Minds are like parachutes - they only function when open. - Thomas Dewar மனம் என்பது வான்குடையைப் போன்றது. அதில் பறந்துசெல்பவர் மட்டுமே திறந்து கொள்ளமுடியும்.

22.   The real secret to success is enthusiasm. - Walter Chrysler வெற்றியின் உண்மையான ரகசியம் உற்சாகம்.

23.   There is no great success without great commitment. Unknown – பெரிய பொறுப்புகள் இல்லாமல் பெரிய வெற்றிகள் இல்லை.

24.   To learn, you have to listen. To improve, you have to try. - Thomas Jefferson அறிய, நீங்கள் கேட்க வேண்டும். மேம்படுத்த, நீங்கள் முயற்சிக்க வேண்டும். 

25.   Every great achievement was once considered impossible. unknown – எல்லா பெரிய சாதனைகளும் ஒருவரால் முடியாது என்று கருதப்பட்டவை.

26.   I will... until. - Brian Tracy நான்..... வரை.... – பிரைன் டிரேசி

27.   Success in the end erases all the mistakes along the way. - Chinese Proverb இறுதியில் வெற்றி தன் வழியில் அனைத்துத் தவறுகளையும் அழிக்கிறது. 

28.   The only difference between dreams and achievements is hard work. - Mayor Chris Bollwage. கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் இடையே உள்ள ஒரே வித்யாசம் கடின உழைப்பு மட்டுமே.

29.   Why? Why not? Why not you? Why not now? – Aslan ஏன்? ஏன் இல்லை? ஏன் கூடாது? ஏன் இப்போது கூடாது? – அஸ்லான்

30.   If you want your dreams to come true then WAKE UP! - unknown உங்கள் கனவு நனவாக வேண்டுமா? விழித்து எழுங்கள்! - யாரோ 

19 கருத்துகள்:

 1. வணக்கம்
  எல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

   நீக்கு
 2. அருமை ஐயா...

  சேமித்துக் கொண்டேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. தொகுத்து வைத்துத் திரும்பத் திரும்ப படிக்கவேண்டியவை. மிகவும் அருமையாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 4. வகுப்பறையில் ஒட்டிவைக்கவேண்டிய அட்டகாசமான பழமொழிகளும், மொழிபெயர்ப்பு!!!! மிகமிக அருமை ஐயா!

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (11.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:
  வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/11.html

  பதிலளிநீக்கு
 6. அருமையான மொழிகளை அழகுற தமிழில் மொழிபெயர்த்து தந்தமைக்கு நன்றி. குறித்தும் வைத்துக் கொண்டோம்....

  பதிலளிநீக்கு
 7. ஒவ்வொன்றும் முத்தான மொழிகள், நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. இனிய பொன்மொழிகள்
  எல்லோரும்
  கருத்திற்கொண்டால்
  நன்றென்பேன்!

  பதிலளிநீக்கு
 9. The following comment is regarding your "iru thalaik koLLi eRumbu" article. Can you please comment on this?

  I have read elsewhere that there is a species of ant called koLLi eRumbu. Due to a genetic aberration some of them have two heads (iru thalai). The two heads are fused at an angle to each other. When it moves the instructions come from both heads (brains) with the result the ant has a difficult time obeying both commands. Hence it goes in a zig-zag direction. Can you relate to this phenomenon? The same dilemma attributed to the thalaivi in muththoLLAyiram and thalaivan in aganAnUru will also apply here. Can you shed some light on this? National Geographic has published some videos wherein a snake has two heads----fused together onto a single body---- a genetic aberration. They showed when it moved it was moving in a zig-zag direction, not the usual wavy movement of a regular snake.

  பதிலளிநீக்கு
 10. Pl read the following for instances of 2-headed creatures. I bring this up in connection with iru thalaik koLLi eRumbu
  https://en.wikipedia.org/wiki/Polycephaly

  பதிலளிநீக்கு


 11. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

  பதிலளிநீக்கு


 12. புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு