வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 மார்ச், 2016

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவரின் குரல்..


இ-மெயிலை நான் கண்டுபிடித் தேன், ஆனால் நிற வெறி காரண மாக 

அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் 

சிவா அய்யா துரை தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் 

சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74)  அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-

மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், 

இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து 

ஆங்கில செய்தி நிறுவனங்களும் புகழாரம் சூட்டி யுள்ளன. ஆனால் அந்த 

அங்கீகாரம், கவுரவம் தனக்குச் சொந்த மானது என்று அமெரிக்காவில் வாழும் 

தமிழர் சிவா அய்யாதுரை உரிமை கோரியுள்ளார். இ-மெயிலுக்கான 

காப்புரிமையும் அவரிடமே உள்ளது. இந்த விவ காரம் குறித்து ட்விட்டரில் 

அவர் கூறியிருப்பதாவது:
என்னுடைய 14-வது வயதில் மின்னஞ்சலுக்கான மென் பொருளை 
உருவாக்கினேன். அதற்கு இ-மெயில் என்று பெயர் சூட்டினேன். அதற்கு முன்பு 
ஒரு கணினிக்கும் இன்னொரு கணினிக்கும் நேரடி இணைப்பின் மூலம் 
தகவல் அனுப்பும் சேவை இருந்தது. அதில் வெறும் வார்த்தை களை 
(டெக்ஸ்ட் மெசேஜ்) மட்டுமே அனுப்ப முடியும். அதைதான் ரேமண்ட் 

கண்டுபிடித்தார். நான்தான் முதன்முதலில் கணினி மூலம் தகவல்களை 

அனுப்பும் மென்பொருளை உருவாக் கினேன். நான் கண்டுபிடித்த இ-மெயில், 

டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. இ-மெயிலில் உள்ள இன் பாக்ஸ், அவுட்பாக்ஸ், சிசி, 

பிசிசி, டேட்டா, பார்வர்டு, ரீப்ளை உட்பட அனைத்தையும் நான்தான் 

உருவாக்கினேன். அதற்கான காப் புரிமையை 1982-ல் பெற்றேன். ஆனால் 

எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. அதற்கு 

காரணம் நான் இந்தியன், கருப்பு நிறத்தவன், புலம் பெயர்ந்தவன். இன்று 

சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது உண்மை, நீதியின் தினம். 

உண்மைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் 

தெரிவித்துள்ளார். சிவா அய்யாதுரையின் தந்தை ராஜபாளையம் 

அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்தவர். தாயார் மீனாட்சி தூத்துக்குடி 

மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர்.

அறிந்துகொள்வோம்..

மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழன்..!!
இன்று உலக மக்கள் அனைவருமே தனித்தனியாக ஒரு முகவரியை 
வைத்துள்ளன.புரியவில்லையா.ஒரே வீட்டில் இருந்தாலும் தனித் தனியே 
ஒரு முகவரி அத்தாங்க மின்னஞ்சல் முகவரி தான் அப்படி சொல்லுறேன் 
நண்பர்களே..!!
இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் மின்னஞ்சல் என்பது மிகவும் தேவையான ஒன்று என்று ஆகிவிட்டது.
இந்த மின்னஞ்சலைக் கண்டுபிடித்தவர் ஒரு ‘தமிழன்’ என அறியும்போது 
‘தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா’ என்று நெற்றிப் புருவம் 
மேலே ஏறுகின்றது! நரம்புகளில் ஏதோ ஓர் உணர்வு முறுக்கேறுகின்றது.
வெள்ளைத் தாளில் தூவலைப்(பேனா) பிடித்து கடிதம் எழுதிய பாரம்பரிய 
முறையை மாற்றிப்போட்டு மின்னியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 
மின்மடல் எழுதும் புதிய பரிணாமம்தான் இந்த மின்னஞ்சல். ஆனால், 
இன்றோ அதனுடைய பயன்பாடு பல்வகைப்பட்டதாக மாறிவிட்டது. நவின 
உலகத்தில் மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ முடியாதோ அப்படி 
ஆகிவிட்டது இந்த மின்னஞ்சல். இ-மெயில் எனப்படும் மின்னஞ்சல் 
இல்லாமல் இன்றைய உலகத்தில் வாழ முடியாது என்னும் நிலைமை 
வந்துவிட்டது.

ஆகக் கடைசியாக வந்திருக்கும் முகநூல் (Facebook), டுவிட்டர் (Twitter), கூகிள் + 
(g+) யூ டியூப் (You Tube) என்று எந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டாலும் 
இந்த மின்னஞ்சல் இல்லாமல் எதுவும் செயல்படாது; எதிலும் நாம் செயல்பட 
முடியாது.
சிவா ஐயாதுரை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த பொழுது 14 வயது 
இளைஞராக இருந்தார் என்னும் செய்தியை அறியும்போது நமக்குப் பெரும் 
வியப்பும் பெருமிதமும் ஏற்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மின்னஞ்சல் தொழில்நுட்பத்தைக் 
கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது அதனை அமெரிக்க 
அரசாங்கம் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. குடியேற்ற சிறுபான்மை 
இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ இவருக்கு உரிய 
உறுதிபாட்டையும் காப்புரிமையையும் கொடுக்கவில்லை. இதனால், 
மின்னஞ்சலுக்குப் பலரும் சொந்தம் கொண்டாடினர்.
ஆனாலும், 4 ஆண்டுகள் கழித்து 1982ஆம் ஆண்டு ஆகத்து 30ஆம் நாள் 
சிவாஐயாதுரையின் அரிய கண்டுபிடிப்புக்கு உரிய உறுதிப்பாடும் மின்னஞ்சல்
காப்புரிமையும் (e-mail copyright) வழங்கப்பட்டது.
இ-மெயில் (e-mail) என்ற பெயரை உருவாக்கியவரும் இவர்தான். அதோடு, 
மின்னஞ்சலின் உள்ளடக்கங்கள் (inbox, outbox, draft), செயல்முறைகள் (reply, 
forward, attachment, broadcasting), குறிப்பான்கள் (to, from, subject, Cc, Bcc, Date, Body) 
ஆகிய எல்லாவற்றையும் உருவாக்கியவரும் பெயரிட்டவரும் இவரேதான்.

சிவா ஐயாத்துரையின் கண்டுபிடிப்பு இன்று உலகத்தையே கட்டிப்போட்டுத் 
தன் வயப்படுத்தி இருக்கிறது. தமிழனால் முடியும்! தமிழன் சாதிக்கப் 
பிறந்தவன்! என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் சாதனைத் 
தமிழன் சிவா ஐயாதுரை.

தமிழின் குரலாக இந்தத் தமிழனின் குரலை ஒலிக்கச் செய்வோம்...

4 கருத்துகள்:

  1. கருத்துகள் யாரும் சொல்லவில்லையே! தமிழனை தமிழனே பாராட்டத் தயக்கமா!

    பதிலளிநீக்கு
  2. தமிழின் குரலாக இந்த தமிழனின் குரலை ஒலிக்கச் செய்வோம் ஐயா.த.ம.9

    வாழ்க தமிழ்,வளர்க தமிழ்.தமிழில் தமிழனின் குரலை ஒலிக்கச் செய்திடுவோம் ஐயா.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒரு தமிழரின் மெருமை மிகு கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்,சுரேந்திரன் குண்டூர்.

    பதிலளிநீக்கு