இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பாடங்களுள் ஒன்றான தமிழ் குறித்த
விளக்கங்களை இந்த தளத்திலும் எனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக தமிழ்ப் பாடத்திட்டத்தை இன்று வழங்கியுள்ளேன்.
இந்தியக் குடிமைப்
பணித்தேர்வு
(Union Public Service Commission)
CIVIL
SERVICES MAIN EXAMINATION
தமிழ்
விருப்பப்பாடம்
பாடத்திட்டம்
தமிழ் இலக்கியம் -
தாள் - I
பகுதி
-1:
தமிழ்மொழி வரலாறு
∙ முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்
∙பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட
மொழிகளிலும் தமிழ்மொழி
பெறுமிடம்
∙ திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்
∙ சங்க இலக்கிய மொழி
∙ இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்
∙வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள், வினைகள், பெயரடைகள், வினையுரிச்சொற்கள், காலங்காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள்.
∙ பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்
∙ வட்டார, சமுதாயக் கிளை மொழிகள்
∙ எழுத்து மொழி, பேச்சு மொழிக்கிடையே உள்ள
வேறுபாடுகள்.