எழுத்துக்கும் உயிர் உண்டு

புரியும்படி எழுதுவது வரம்! புரியாமல் எழுதுவது சாபம்!.

மனிதர்களில் நான் கண்ட மூன்றுவகை..

புகழ் மலர்கள்

உண்மையான புகழ் மலர்கள் ஒருவனின் கல்லறையில்தான் மலர்கின்றன .

Saturday, September 6, 2014

Friday, September 5, 2014

ஆசிரியர் தின சிறப்புக் கவிதைஆசிரியர்களைப் போற்றுவோம்..
  
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!

வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.

சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!

இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..

கவிதையை எழுதியவர்.


வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு.

Wednesday, August 27, 2014

தொழில்நுட்பத்தின் கையில் மனிதன்!

காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியை அரிமா நோக்கில் பார்த்தால், புறா தூது, முரசறைந்து செய்து சொல்லுதல், தூதுவர் இதன் வரிசையில், தந்தி, வானொலி,  தொலைபேசி. அலைபேசி, திறன்பேசி, தொலைக்காட்சி, கணினி, மின்னஞ்சல், இணையம் என காலந்தோறும் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் இந்த உலகைச் சுருக்கிவிட்டன என்பதை உணரமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுபரவிய உயிர்களை இணைக்கும் ஆற்றலாக இன்று தொழில்நுட்பங்கள் மாறிட்டன. இச்சூழலில் மனதில் ஒரு கேள்வி எழுகிறது.

மனிதன் கையில் தொழில்நுட்மா? தொழில்நுட்பத்தின் கையில் மனிதனா? என்பதே அது..

சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்..