தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். மனித குல
வளர்ச்சி என்பது கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது.
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். மனித குல
வளர்ச்சி என்பது கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பறவைகளும் விலங்குகளும் மனிதர்கள் போல பேசுவதில்லை..
என்றாலும்
அவை வெளிப்படுத்தும் ஒலிகளுக்குள் புரிதல் நிகழ்கிறது..
மனிதரின்
மொழிகளில் பல வகை உண்டு..
இருவர்
இருவேறு மொழிகளில் உரையாடும்போது அவர்களுக்குள் தவறான புரிதல் ஏற்படுவது இயல்பு.
ஆனால் ஒரு மொழியை நன்றாக அறிந்த இருவர் உரையாடும்போதும் தவறான புரிதல்
தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
அறிவு,
அனுபவம், ஆர்வம், தேடல் என பல்வேறு பண்புகளால் புரிதல் என்பது ஒருவருக்கொருவர்
வேறுபடுகிறது..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பொறுப்பு
(Responsibility) மற்றும் கடமை (Duty) ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றாலும், அவற்றுக்கு இடையே நுட்பமான
வேறுபாடு உண்டு.
கடமை என்பது,
சமூகம், சட்டம் அல்லது விதிமுறைகளால் நமக்கு வழங்கப்பட்ட
செயல். பொறுப்பு என்பது, ஒரு செயலின் விளைவுகளுக்குத்
தானே முழுமையான பொறுப்பேற்கும் மனநிலை.
கடமை, வெளிப்புறத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படுவது
பொறுப்பு மனதிலிருந்து
தானாக எழுவது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
எல்லைகளற்றது
வானம். ஆனால் நிலம் மனிதர்களால் எல்லைகளாகப் பகுக்கப்பட்டது. நிலங்களில் மட்டுமல்ல
மனித மனங்களிலும் எல்லைக்கோடுகள் உண்டு. தெரிந்தே எல்லைகளை மீறுவோர் பலர்.
தெரியாமல் எல்லைகளைத் தாண்டுவோர் சிலர். எது எல்லை என்றே தெரியாதவர்கள் பலர். யாதும்
ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது எல்லைகளைக் கடந்த
உயரிய சிந்தனை.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல,
திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும்
வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும்
ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம்,
புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால், இவை அனைத்தையும் அடைந்த
பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம்
இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற
இடம் கிடைக்காது.
"போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால்
போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை
குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக
வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வாழ்க்கை என்பது நமக்கு நடப்பவற்றில் 10 சதவீதமும், அதற்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பதில் 90 சதவீதமும் அடங்கியுள்ளது.,
வயது, அனுபவம், இடம், காலம், மனநிலை, சுற்றத்தார்
சார்ந்து
சூழ்நிலைகளும் அதை எதிர்கொள்வோர் இயல்புகளும் மாறுகின்றன.
‘வாழ்க்கை மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பார் கன்பூசியஸ்.
சவாலான சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவோர்,
மன உறுதியுடையவர்களாகவும், திட்டமிடும் பண்புள்ளவர்களாகவும்
இருப்பார்கள். எதிர்மறையான சூழலில் பதற்றமடையாமல்,
பொறுமையுடன் செயல்பட்டு,
தகுந்த முடிவுகளை எடுத்து,
இலக்கை அடைவர்.
இன்பமான சூழல்களில் சிலர் நன்றியுணர்வையும்,
பணிவையும் வெளிப்படுத்துவர்.
துன்பமான சூழல்களில் சிலர், பொறுமை, துணிவு,
விடாமுயற்சி, தன்மானம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்துவர்.
எல்லா சூழல்களும் நம் வாழ்க்கையில் நம்மை
மேம்படுத்துகின்றன.
நம் அறிவைக் கூர்மைப்படுத்துகின்றன. அனுபவத்தை
வழங்குகின்றன.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புகழ்
பெற வாழவேண்டும் என்பது மனித இயல்பு.
ஈதல்
இசைபட வாழ்தல், தோன்றின் புகழொடு தோன்றுக என்றெல்லாம் திருவள்ளுவர் உரைத்துள்ளார்.
என்றாலும்
எல்லோரும் புகழ்பெற வாழ்வதில்லை.
புகழைத்
தேடிச்செல்வோர் பலர், ஆனால் புகழ் சிலரை மட்டுமே தேடிச்செல்வதுண்டு.
அவ்வாறு
புகழ் பெறாதவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதுண்டு.
தற்புகழ்ச்சி,
தற்பெருமை, சுயதம்பட்டம் என பலவாறு அழைத்தாலும்.
சில
நேரங்களில் இதனால் நன்மையும் பலநேரங்களில் தீமையும் விளைகிறது.
உடையது விளம்பேல் என்பது ஔவையார் வாக்கு
கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்துவிட்டுத் தம்மைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். நீர் நிறைந்த குடம் தளும்பாது; குறை குடமே தளும்பும் என உரைக்கிறது பழமாழி நானூறு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
மக்களே போல்வர்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல,
ஆளைப் பார்த்து எடை போடாதே.
என்றெல்லாம்
பழமாழிகள் உண்டு.
கடைகளில் காய்கறி வாங்கும்போதோ ஏதாவதொரு பொருள்
வாங்கும்போதோ..
பார்த்துப் பார்த்து வாங்குவோம். அவ்வாறு வாங்கியும் சில
நேரங்களில் நாம் தரமற்ற பொருளை விலைகொடுத்து வாங்கிவிட்டோமே என வருந்துவதுண்டு.
அதுபோல, எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்றோ எல்லோரும்
தீயவர்கள் என்றோ முடிவுசெய்துவிடமுடியாது.
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம் என உரைக்கிறது உலகநீதி.
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று
பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
காலம் மட்டும்தான் பொன்போன்றதா, என்றால், காலத்தைக் காட்டிலும்
மதிப்புமிக்கவை பல உண்டு.
காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கது
காலம் என்பார்கள். ஆம் யாவருக்கும் 24 மணிநேரம் பொதுவானதாக இருந்தாலும் எல்லோரும் அதை
ஒரே மாதிரி பயன்படுத்துவதில்லை.
பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பை, வாழ்க்கையின்
மதிப்பை, உழைப்பின் மதிப்பை, நேரத்தின் மதிப்பை, பணத்தின் மதிப்பை இப்படி பல்வேறு
மதிப்புகளையும் உணர்த்துகிறார்கள். பெற்றோர்களே எல்லா மதிப்புகளையும் உணர்த்த முடியாது
என்பதால்தான் கல்வி நிலையங்களில் மேலும் இம்மதிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
பெற்றோரிடமும் கல்வி நிலையங்களிலும் இம்மதிப்பை உணராதவர்கள் வாழ்க்கையில் அனுபவம் வழியாக இம்மதிப்பை உணர்கிறார்கள். ஆனால் அனுபவம் பாடம் நடத்திய பிறகு தேர்வு வைக்காது. தேர்வு வைத்தபின்தான் பாடம் நடத்தும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
கற்றலும் கடைப்பிடித்தலும், வாழ்வில் உயர்வதற்கான திறவுகோல்களாகும். கல்வியின் நோக்கம்,
தேர்வில் மதிப்பெண் பெறுவது, பட்டம் பெறுவதுமட்டும் அல்ல.
கற்ற கல்வியானது ஒரு மனிதனின் ஒழுக்கத்திலும்,
அவன் எடுக்கும் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.
திருவள்ளுவர்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391) என்றார்.
எதையும் தெளிவாகக் கற்க வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது;
கற்ற அறநெறிகளின் வழியில், வாழ்க்கை அமைய வேண்டும். அறிவு என்பது வழிகாட்டும் ஒளி என்றால்,
அந்த ஒளியில் நடப்பதே உண்மையான அறம். எல்லா நேரமும் கற்ற கல்வியை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலுமா
என்று சிந்தித்த வள்ளுவர் நிற்க அதற்குத் தக என்றார். சூழல்களுக்குத் தக சரியாக நிற்பதே
அறிவின் வெளிப்பாடு.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்,
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும் என்றார். அதனால் நாம் வாழ்வில் எந்த சூழலில் உண்மை பேசவேண்டும், எந்த சூழலில் பொய்பேசவேண்டும் என்று சிந்தித்துப் பேசவேண்டும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம் என்கிறது உலகநீதி
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்றார் அகத்தியர்
சிந்தை தெளிவாக்கு என்று
பாடிய பாரதி
பேயாய் உழலுஞ் சிறுமனமே!
பேணாய் என்சொல் இன்று முதல் நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண் என்று பாடியுள்ளார்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வாய்ப்பு
என்றவுடன் பலருக்கும்
வேலை, வாய்ப்பு தொழில் வாய்ப்பு தான் நினைவுக்கு வரும் ஆனால்
இவை இரண்டையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன…
காலையில்
சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். நிலவை, நட்சத்திரங்களை, வானவில்லை இயற்கையின்
ஒவ்வொரு அசைவுகளையும் காண்பதற்காகக் காத்திருப்பவர்கள் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பைப்
பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கவிஞராகலாம், ஓவியராகலாம், நிழற்படக்கலைஞராகலாம்.
பொழுதுபோக்குக்காக
விளையாடுவோர் பலர். சிலர் விளையாட்டுதான் தம் வாழ்க்கை என்று அதில் உள்ள வாய்ப்பை உணர்ந்து
விளையாட்டில் புகழ்பெறுகிறார்கள்.
பொருள் தேடுகிறேன்,
பிள்ளைகளின் கனவுகளுக்காக உழைக்கிறேன், அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று
பொருள் தேடுவோரில்
எத்தனை பேருக்கு பிள்ளைகளோடு நேரம் ஒதுக்க வாய்ப்புக்
கிடைத்திருக்கிறது.
இவ்வாறு நம்மைச் சுற்றி பல வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக மனிதர்களை, வாய்ப்பில்லை என வாடுவோர், வாய்ப்புகளைத்
தேடுவோர், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோர் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
அறிவுடைமை
அதிகாரத்தில் திருவள்ளுவர்,
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து
அறிவதே அறிவு
என்றும்,
மெய்யுணர்தல்
அதிகாரத்தில்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. (355)
எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு
என்றும்
உரைத்துள்ளார்.
இவ்விரு
குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும்
உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.
“நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ“
என்ற
பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.
பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே என்றும்,
மூத்தோர்
சொல் வார்த்தை அமிர்தம்
எனவும் உரைத்தார் ஒளவையார்.
மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும்
பிறகு இனிக்கும் என்பது பழமொழி
மூத்தோர்
சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
என்றார் உலகநாதர்
செவி வாயாக நெஞ்சு களனாக
கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து
என்றார் பவணந்தி முனிவர்.
அரசர்க்கு நல்லறிவுச் சிந்தனைகளைத் தரும் புறத்துறை செவி அறிவுறூஉ எனப்படும்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன், அதன் விளைவுகளைப் பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது வெற்றிக்கான முதல்படி.
குழந்தைப் பருவத்தில் நாம் முதல் அடி எடுத்துவைத்ததிலிருந்து
இந்த மணித்துளி வரை நம் சொல், செயல் இரண்டிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த
மாற்றங்களுக்குள் இயல்பாகவே இருப்பது எண்ணுதல் மற்றும் துணிதல் ஆகிய பண்புகளே. இப்பண்புகளை
மேலும் கூர்மைப்படுத்தும்போது நம் செயல் சிறப்பாக அமையும்.
கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் என்கிறது உலகநீதி.
(சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். ( 664)
சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று திருவள்ளுவர் சொல்லுவது போல அரிய செயல்களைச் செய்பவர்களாக
இருக்கிறோமா?
வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் சொல்வது போல இருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள்
உண்டு.
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று
பாடல் உண்டு.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.
அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,
உழைப்பை இருவகைப்படுத்தலாம்..
அறிவு உழைப்பு - உடல் உழைப்பு
அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்
உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு
பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக
உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?
என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வாழ்க்கையில் வெற்றிபெறத்
தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.
சோம்பலின்
இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின்
பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும்
பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.
ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில்
ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும்
தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது
ஊக்கத்தை மனதின் எழுச்சி,
புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..
ஊக்கத்தை உள் ஊக்கம்,
புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.
உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..
புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும்
சூழல்களாலும் தோன்றுகிறது.
ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.
ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். இன்பம் சிரிப்பையும், துன்பம் அழுகையையும் வரவழைக்கிறது. உண்மையான
நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இரண்டு மடங்காகிறது.
துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறைகிறது. நமக்குப் பிடித்த செயல்களில்
உள்ள துன்பங்களை மனம் கண்டுகொள்வதில்லை. நமக்குப் பிடிக்காத செயல்களில் உள்ள சிறு
துன்பங்களையும், மனம்
ஏற்றுக்கொள்வதுமில்லை, சகித்துக்கொள்வதுமில்லை. பக்குவமுடையவர்கள் இன்பங்களையும் துன்பங்களையும்
சமமாகவே பார்ப்பார்கள். பக்குவத்தின் முதிர்ந்த நிலை துன்பத்திலும் சிரிப்பது.
அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621
துன்பம் வரும்போது சிரி, அதுதான் துன்பத்தை வெல்லும் வழி என்றார் திருவள்ளுவர். துன்பத்தில் சிரிக்கமுடியுமா? அப்படிச் சிரித்தால் அவர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும். இவருக்கு மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்றுதானே பார்க்கும். மருத்துவர் ஊசி போடும் போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம். ஆனால் பெரியவர்கள் அழுவதில்லை. இது எப்படி சாத்தியமானது? இருவருக்கும் வலி பொதுவானதுதானே.. இருந்தாலும் வலியை ஏற்றுக்கொள்ள மனம் துணிந்துவிட்டால் துன்பங்கள் தெரிவதில்லை..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
அறிவை வளர்க்கும் வாயில்களுள் நூல்கள் குறிப்பிடத்தக்கன.
கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் என பதிவுசெய்யப்பட்ட மனித சமூகத்தின் அனுபவங்கள்
அச்சுவடிவில் புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டன.
புத்தகங்களைப் பணம்கொடுத்து வாங்குகிறோம்..
ஆனால் அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது என்பதை
நினைவில் கொள்ளவேண்டும். ஆம்..
புத்தகங்களுக்குக் கொடுக்கும் பணம் என்பது அச்சாக்கத்துக்குப்
பயன்படுத்திய மை மற்றும் காகிதங்களுக்கான பணம் தானே தவிர அறிவுக்கானது அல்ல..
அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது.
அச்சுப் புத்தகங்களை வாசித்த காலம் மாறி இன்று மின்
புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் தொழில்நுட்ப மாற்றத்தால் பல வடிவங்களில் நூல்கள்
கிடைக்கின்றன.
உயிர்களுக்கு சுவாசித்தல் எவ்வளவு முதன்மையானதோ அதுபோல மனிதர்களுக்கு வாசிப்பு மிகவும் தேவையானது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14