வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 14 அக்டோபர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 63. இடுக்கண் அழியாமை

 


இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரி, அதுதான் துன்பத்தை வெல்லும் வழி  

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.- 622

வெள்ளம்போல பெருந்துன்பத்தையும் மனவலிமையால் வெல்லலாம்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்.- 623

துன்பத்தில் கலங்காதவர், துன்பத்திற்கே துன்பம் கொடுப்பார்கள்

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.- 624

காளைபோன்ற விடாமுயற்சியுடைவனிடம் துன்பமே துன்பப்படும்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கட் படும்.- 625

தொடரும் துன்பமும், மனவலிமையுடையவனிடம் துன்பம் கொள்ளும்

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.- 626

செல்வத்தால் பெருமிதம் கொள்ளாதவர், வறுமையில் வருந்தமாட்டார்

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதா மேல்.- 627

உடல் துன்பம் தரும் என உணர்ந்தவர் அதற்காகக் கலங்கார்

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.- 628

இன்பத்தை விரும்பாமல், துன்பத்தை இயல்பு என்பவனுக்கு ஏது துன்பம்

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.- 629

இன்பத்தால் மகிழாதவனுக்கு, துன்பத்தில் துயரம் ஏற்படுவதில்லை   

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

ஒன்னார் விழையுஞ் சிறப்பு.- 630

துன்பத்தில் கலங்காதவரை பகைவரும் விரும்புவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக