Friday, January 1, 2010

வலையுலகப் படைப்பாளிகள்! (தினமணி)


இன்றைய தினமணி நாளிதளில் வலையுலகம் பற்றி வந்த கட்டுரையில்,

”தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.“

என்று எனது வலைப்பதிவையும் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

இயல், இசை, நாடகம் என முத்தமிழாக இருந்த தமிழ் இணையத்தமிழ் என்ற நான்காம் தமிழாக வளர்ந்துவருகிறது. எதிர்காலத்தமிழருக்கான சான்றாதரங்கள் யாவும் கொண்டதாக இந்த இணையவுலகம் வளர்ந்து வருகிறது. கருத்துச்சுதந்திரம் நிறைந்த இந்த இணையவுலகில் பலதுறை சார்ந்து எழுதுவோர் இருக்கிறார்கள்..

மொழி, இலக்கியம் சார்ந்து எழுதுவோர் குறைவாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும் தமிழ்த்துறைசார்ந்தோரும் தம் கருத்துக்களை வலைப்பதிவுகளில் வெளியிடவேண்டும்.
தமி்ழ்த்துறை சார்ந்தோர் பலர் வலைப்பதிவின் கருத்துக்களைப் படிப்வர்களாக மட்டுமே உள்ளனர். அவர்களும் வலைப்பதிவு வாயிலாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்தல் தேவையான ஒன்றாகவுள்ளது.


கட்டுரை இதோ..

வலையுலகப் படைப்பாளிகள்!
எம். மணிகண்டன்
First Published : 01 Jan 2010 12:12:00 AM IST

எழுத்துலகில் இது தலைமுறை மாற்றத்துக்கான தருணம். பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பிவிட்டு, அது பிரசுமாகும் நாளுக்காகக் காத்திருக்கும் தலைமுறையின் காலம் கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. பெரிய பத்திரிகையில் படைப்புகள் பிரசுரமாகின்றன என்பது படைப்பாளிக்குப் பெருமைதான். ஆனால், அது நடக்காவிட்டால், அந்தப் படைப்புகள் குப்பைக் கூடைக்குத்தான் போக வேண்டும் என்று இன்றையத் தலைமுறை எண்ணிக் கொண்டிருக்கவில்லை.
இந்தக்கால இளைஞர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள், சொல்ல வந்ததைத் தைரியமாகச் சொல்கிறார்கள், பிறரிடம் கருத்துக் கேட்கிறார்கள், விரிவான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். கட்டற்ற விடுதலை உணர்வு அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது. இவற்றையெல்லாம் சாத்தியமாக்க அவர்களுக்கு உதவியிருப்பது இணையம்.
உலகளாவிய வலை, மின்னஞ்சல் போன்ற நிலைகளைத் தாண்டி வேறொரு பரந்த வெளியில் இணையம் பயணிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாகிவிட்டன. இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் தெரியாதவர்களைப் படிப்பறிவில்லாதவர்கள் என சீண்டுகிறார்கள். வலைப்பூ இல்லாவிட்டால் முகவரியில்லாதவர்களைப் போலப் பார்க்கிறார்கள்.
தமிழைப் பொறுத்தவரை, வலைப்பூக்கள்தான் கருத்துகளைச் சொல்லும், படைப்புகளை வெளியிடும் தளங்களாக இருக்கின்றன. இதைப் படைப்பவர்களைப் பதிவர்கள் என்கிறார்கள். பொறியியல் வல்லுநர்கள் எழுதும் கவிதைகளையும், குடும்பத் தலைவிகள் செய்யும் நையாண்டிகளையும், இலக்கியவாதிகள் எழுதும் சினிமா விமர்சனங்களையும் வலைப்பூக்கள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. ஒவ்வொருவரும் தனது துறை தாண்டிய படைப்புகளை இங்கு வெளியிட முடிகிறது. யாரும் முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்பதால், துணிச்சலான, வித்தியாசமான, பலதரப்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் எந்தக் கொள்கைக்குள்ளும் முடங்கிப் போகாத ஊடகங்களாகவே இந்த வலைப்பூக்கள் கவனிக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள், வேறு வகையில் புகழ்பெற்றவர்கள் எல்லாம் வலைப்பூக்களை மேய்ந்தால், தங்களைப் பற்றிய உண்மையான விமர்சனத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்றே சொல்லலாம்.
நாடு, இனம், மதங்களைக் கடந்த நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கும் வலைப்பூக்கள் வாய்ப்புகளை வழங்கியிருக்கின்றன. வாசகர் வட்டங்களைப் போல பதிவர் வட்டங்களும் கூட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பதிவர்கள் அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றை வலைப்பூக்களில் வெளியிடவும் செய்கின்றனர்.
நர்சிம், பரிசல்காரன், வால்பையன், கேபிள் சங்கர், பழமைபேசி, பைத்தியக்காரன், அனுஜன்யா, அபி அப்பா, கார்க்கி, அகல் விளக்கு, க.பாலாசி, நசரேயன், நேசமித்திரன், அமிர்தவர்ஷினி அம்மா, சோம்பேறி என வித்தியாசமான புனைப்பெயர்களுடன் பதிவிடும் வலைப்பதிவர்கள், நிறைய எழுதுவதுடன் பரந்து விரிந்த நட்பு வளையத்தையும் கொண்டிருக்கிறார்கள். நேரடியாக நட்புக்கொள்வதில் இருக்கும் சில சங்கடங்கள் இல்லை என்பதை இந்த நட்பு வட்டத்தின் சிறப்பாகக் கருதலாம்.
வலைப்பூக்களில் பெண்களின் ஆதிக்கம் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று. வலைப் பதிவிடும் பெண்கள் பெரும்பாலும் கவிதை எழுதுகின்றனர் அல்லது சமையல் குறிப்புகளை வழங்குகின்றனர். வாழ்க்கை அனுபவங்கள், குடும்பப் பிரச்னைகள், அம்மாக்களுக்கான ஆலோசனைகள், திரைப்பட, தொலைக்காட்சி விமர்சனங்கள் என இவர்களது எழுத்து வட்டம் கொஞ்சம் அடக்கமானதாகவும் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்கிறது. சில பெண் படைப்பாளிகள் அரசியல், சமூகச் சிந்தனைகளையும் விதைக்கின்றனர். ஃபஹீமாஜஹான், நளாயினி, புதியமாதவி, தமயந்தி, சாந்தி லட்சுமணன், கலகலப்ரியா, ராமலக்ஷ்மி, ரம்யா, கிருபாநந்தினி, மதுமிதா, தாரணி பிரியா, பெரியார் தமிழச்சி, மாதங்கி, விக்னேஷ்வரி, மழை ஷ்ரேயா போன்ற நூற்றுக்கணக்கானோர் ஆக்கப்பூர்வமான, அபூர்வமான படைப்புகளை பதிவிடுகின்றனர். ÷தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.இன்னும் சிலர், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களையும் உதவிகளையும் தமிழில் தருகின்றனர். இதுபோன்ற முயற்சிக்கு வலைப் பதிவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவற்றுக்கிடையே, ஜெயமோகன், பாமரன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், மாலன், ஞாநி, சாரு நிவேதிதா போன்ற பிரபலங்கள் பலரும் வலைப்பூக்கள் வழியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால், வலைப்பூக்கள், ஊடகங்களின் முழுச் சுதந்திரம் கொண்ட நவீனப் பரிமாணங்களாக உருவெடுத்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை வெற்றிபெறச் செய்ததில் வலைப் பதிவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. வெளிநாடுகளில் சந்தைக்கு வரும் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வலைப்பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலிருந்து வலைப்பூக்களின் வீச்சை அறிந்து கொள்ளமுடிகிறது.
÷இன்னும் சில காலம் போனால், மரபுவழி ஊடகங்களுக்கு இணையாக வலைப்பூக்கள் மாதிரியான இணையவழி ஊடகங்களுக்கும் செல்வாக்குக் கிடைத்துவிடும். இதை மரபுவழி ஊடகங்களுக்கான அச்சுறுத்தலாகக் கருத முடியாது. ஆயினும், ஊடகங்களின் பரிமாணம் மாறிக் கொண்டிருப்பதைப் புரிந்து, வலைப்பதிவர்களுடன் சமநிலைப்படுத்திக்கொள்ள மரபுவழி ஊடகங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

33 comments:

 1. வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் நண்பரே...

  பெருமையாக உள்ளது...

  ReplyDelete
 3. காலையிலேயே படித்தேன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். புத்தாண்டில் இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
 4. Blogger அகல்விளக்கு said...

  வாழ்த்துக்கள் நண்பரே...

  பெருமையாக உள்ளது...//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 5. க.பாலாசி said...

  காலையிலேயே படித்தேன். தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். புத்தாண்டில் இந்த செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 6. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் நண்பரே..!

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் முனைவரே. உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..!

  ReplyDelete
 9. Blogger ஸ்ரீ said...

  வாழ்த்துகள்.//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 10. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் நண்பரே..!//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 11. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

  மென்மேலும் உயர வாழ்த்துகிறேன் நண்பரே..!//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 12. பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பிரபாகர்.

  ReplyDelete
 13. உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. பிரபாகர் said...

  பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  பிரபாகர்.//

  கருத்துரைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 15. Blogger Dr. சாரதி said...

  உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்//

  நன்றி அன்பரே..

  ReplyDelete
 16. Blogger கலகலப்ரியா said...

  வாழ்த்துகள்...


  நன்றி பிரியா..

  ReplyDelete
 17. தமிழ்ழுக்குத் ட்ஹொண்டு செய்தோன் சாவதில்லை.

  உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.

  ReplyDelete
 18. புத்தாண்டு வாழ்த்துக்கள் குணா...!

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் தோழர்.

  ReplyDelete
 20. வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. சுப.நற்குணன் said...

  தமிழ்ழுக்குத் ட்ஹொண்டு செய்தோன் சாவதில்லை.

  உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும்.//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே....

  ReplyDelete
 22. கார்த்திகைப் பாண்டியன் said...

  வாழ்த்துகள் நண்பரே..:-)))

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள். எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்திருப்பதுடன், நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறீர்கள்!


  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 24. நானும் படித்தேன் நண்பா..வாழ்த்துக்கள் உங்களுக்கும் நம் வலையுலகிற்கும்..

  ReplyDelete
 25. Jawahar said...

  வாழ்த்துக்கள். எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்திருப்பதுடன், நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறீர்கள்!

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 26. Blogger புலவன் புலிகேசி said...

  நானும் படித்தேன் நண்பா..வாழ்த்துக்கள் உங்களுக்கும் நம் வலையுலகிற்கும்..


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 27. வணக்கம் வாத்தியாரே.

  ReplyDelete
 28. வணக்கம் நண்பரே..
  தங்கள் வருகைக்கு நன்றி!!
  தங்களை ஈரோடு சந்திப்பில் பார்த்தேன்..
  ஆயினும் பேச வாய்ப்பு நேரவில்லை..

  ReplyDelete
 29. எம்.ஏ.சுசீலாJanuary 8, 2010 at 2:48 PM

  அன்பின் குணசீலன் அவர்களுக்கு,
  வணக்கம்.
  தங்கள் வலை உள்ளடக்கத்திலும்,உருவத்திலும் நாளும் பற்பல புதுமைகளோடு பொலிவது கண்டு இறும்பூது அடைகிறேன்.உண்மையில் எங்களைப் போன்றவர்களை விட....உங்களைப் போனற அடுத்த தலைமுறையினர் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சியே பெரிதும் வர‌வேற்கப்பட வேண்டியது என்பது என் கருத்து.

  தங்கள் பதிவின் வழிகாட்டுதலால் NHM WRITER ஐ என் கணினியில் 6 மாதம் முன் நிறுவியபோது அதன் இலகுவான கையாளுதல் எனக்கு மிக மகிழ்வளித்தது.அதைத் தங்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  தற்பொழுது ஒரு மடிக்கணினி என் வசம் கிடைத்துள்ளது.பழைய முறைப்படியே அதில் NHM WRITER ஐ நிறுவப்பார்த்தால் FOR THAT YOU MUST BE LOGGED IN AS AN ADMINISTRATOR
  என்றுதான் திரும்பத் திரும்ப விடை கிடைக்கிறதே தவிர நிறுவவும் முடியவில்லை,அதனால் மணி போன்ற குறியீடு தென்படவும் இல்லை.மடிக்கணினியில் நிறுவ வேறு என்ன வழிமுறையைக் கையாளுவது என நேரம் கிடைக்கும்போது தெரிவிக்கக் கோருகிறேன்,அப்போது மடிக்கணினியையும் தமிழோடு சுலபமாகப் பயன்படுத்த முடியுமல்லவா.
  அன்பு வாழ்த்துக்களுடன்,
  எம்.ஏ.சுசீலா,புது தில்லி
  (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)http://www.masusila.blogspot.com

  ReplyDelete
 30. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா..
  தங்களுக்கு ஏற்பட்டது சிறிய சிக்கல் தான்..

  தாங்கள் பயனர் வழியில் சென்றதால் மென்பொருளை நிறுவ இயலவில்லை..

  நிருவாகி (அட்மினிஸ்ரெட்டர்) வழி செல்லுங்கள் எவ்விதமான சிக்கலுமின்றி நிறுவலாம்..

  மேலும் விவரங்களை மின்னஞ்சல் வழி அனுப்பியுள்ளேன்..

  ReplyDelete