வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது(09) நன்றி நவிலுதல்.

தமிழ்மணம் விருதுகள் 2009 தேர்வில், எனது “டமிலன் என்றொரு அடிமை“ என்ற இடுகை முதல்பரிசுக்குரிய இடுகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணங்களை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துச்சொல்லும் ஊடகங்களில் தனித்துவத்துடன் திகழும் இணையம் தமிழ்மணம். தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரம், ஓட்டளித்தல், கருவிப்பட்டை எனப் பல வசதிகள் இருந்தாலும், தமிழ்மணம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது மறுமொழிதிரட்டிதான்.


இந்தவார நட்சத்திரமாக உலகிற்கு என்னை அடையாளப்படுத்திய தமிழ்மணம் தற்போது 2009 ஆம் ஆண்டு பதிவுகளில் “தமிழ்மொழி, கலாச்சாரம்,வரலாறு, தொல்லியல்“ என்னும் பிரிவில் எனது பதிவை முதல் பரிசுக்குரிய இடுகையாக அடையாளப்படுத்தியுள்ளது. அதற்காக தமிழ்மணம் இணையதளத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல விருது பெற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழந்தமிழ் இலக்கியத்துக்கு முதன்மைதந்து எழுதிவரும் எனது பதிவு முதல் பரிசு பெற அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் வலைப்பதிவு நண்பர்களாவர்.

இணையம் இந்த உலகத்தையே சிறு கிராமமாக்கியது என்றால் இந்த வலைப்பதிவுலகம் ஒரே வீடு போல ஆக்கிவிட்டது.

கூட்டுக்குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வு இந்த வலைப்பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்தது. வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் போது இந்த உறவும், உணர்வும் மேலும் வளர்கிறது.

எனது எழுத்துக்களுக்கு ஒவ்வொருமுறை அடையாளம் கிடைக்கும் போதும் நான் நன்றியோடு எண்ணிப்பார்ப்பது வலைப்பதிவு நண்பர்களைத் தான்.

என்னை எழுதத் தூண்டி, கருத்துரையளித்து, ஓட்டளித்து பின்தொடர்ந்து வரும் வலைப்பதிவு நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


_/\_ நன்றி நன்றி நன்றி _/\_

51 கருத்துகள்:

 1. பழந்தமிழ் இலக்கியத்துக்கு முதன்மைதந்து எழுதிவரும் எனது பதிவு முதல் பரிசு பெற அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் வலைப்பதிவு நண்பர்களாவர்.///

  பரிசு பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி !!! மேன்மேலும் சிறப்புடன் எழுத வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 2. தரமான இடுகைக்குக் கிடைத்திருக்கும் தகுந்த பாராட்டு.

  வாழ்த்துக்கள் முனைவரே!

  பதிலளிநீக்கு
 3. தேவன் மாயம் said...

  பழந்தமிழ் இலக்கியத்துக்கு முதன்மைதந்து எழுதிவரும் எனது பதிவு முதல் பரிசு பெற அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் வலைப்பதிவு நண்பர்களாவர்.///

  பரிசு பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி !!! மேன்மேலும் சிறப்புடன் எழுத வாழ்த்துக்கள்!!


  நன்றி மருத்துவரே..

  பதிலளிநீக்கு
 4. சுந்தரா said...

  தரமான இடுகைக்குக் கிடைத்திருக்கும் தகுந்த பாராட்டு.

  வாழ்த்துக்கள் முனைவரே!

  நன்றி சுந்தரா..

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள்!

  அன்பிணை,
  நா. கணேசன்

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள் அன்பரே. மிக்க மகிழ்ச்சி :))

  பதிலளிநீக்கு
 7. குணா உங்கள் பதிவுகளை பதிவுகளாக பார்ப்பதை விட நீங்கள் தமிழுக்கு செய்யும் சேவையாக தான் பார்க்க முடிகிறது....இது தமிழுக்கும் கிடைத்த வெற்றி..தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை கிட்டட்டும் என்றும் வெற்றி அதற்கு....வாழ்த்துக்கள் குணா..மனம் அளவில்லா சந்தோஷத்தில் திளைக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பா. தங்களின் எழுத்துகள் மேன்மேலும் சிறப்புறட்டும்...

  பதிலளிநீக்கு
 9. தமிழுக்கு மரியாதை. முதல் பரிசு பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. நா. கணேசன் said...

  வாழ்த்துக்கள்!

  அன்பிணை,
  நா. கணேசன்.


  மிக்க மகிழ்ச்சி..
  தங்கள் வருகையும் வாழ்த்துக்களும்..
  என்னை மென்மேலும் எழுதத்தூண்டுகிறது..

  நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 11. Blogger ச.செந்தில்வேலன் said...

  வாழ்த்துகள் அன்பரே. மிக்க மகிழ்ச்சி :))

  வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா..

  பதிலளிநீக்கு
 12. தமிழரசி said...

  குணா உங்கள் பதிவுகளை பதிவுகளாக பார்ப்பதை விட நீங்கள் தமிழுக்கு செய்யும் சேவையாக தான் பார்க்க முடிகிறது....இது தமிழுக்கும் கிடைத்த வெற்றி..தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை கிட்டட்டும் என்றும் வெற்றி அதற்கு....வாழ்த்துக்கள் குணா..மனம் அளவில்லா சந்தோஷத்தில் திளைக்கிறது...  தங்கள் வருகையும் கருத்துரையும் என் எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளப் பயன்படுகிறது..

  எனது வலைப்பதிவில் அதிக கருத்துரையிட்டவர்களில் முதலிடம் பெறுபவர் நீங்கள் தான் என்பதை மகழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

  நன்றி_/\_

  பதிலளிநீக்கு
 13. Blogger T.V.Radhakrishnan said...

  வாழ்த்துகள்


  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 14. Blogger குடந்தை அன்புமணி said...

  மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பா. தங்களின் எழுத்துகள் மேன்மேலும் சிறப்புறட்டும்...

  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 15. Blogger Sangkavi said...

  வாழ்த்துக்கள் முனைவரே....


  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 16. Blogger Chitra said...

  தமிழுக்கு மரியாதை. முதல் பரிசு பெற்றவருக்கு வாழ்த்துக்கள்.

  மகிழ்ச்சி..
  வாழ்த்துக்களுக்கு நன்றி சித்ரா..

  பதிலளிநீக்கு
 17. தமிழ்மணம் விருதிற்கு வாழ்த்துக்கள் முனைவரே.

  பதிலளிநீக்கு
 18. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே...உங்களின் எழுத்து பயணம் மேன்மேலும் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 19. தாங்கள் பார்த்துக்கொண்டுருக்கும் தகுதியான வேலைக்குத் தகுந்த தங்கள் தரமான படைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. கமலேஷ் said...

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே...உங்களின் எழுத்து பயணம் மேன்மேலும் தொடரட்டும்...


  நன்றி கமலேஷ்..

  பதிலளிநீக்கு
 21. Blogger ஜோதிஜி said...

  தாங்கள் பார்த்துக்கொண்டுருக்கும் தகுதியான வேலைக்குத் தகுந்த தங்கள் தரமான படைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.


  நன்றி ஜோதிஜி..

  பதிலளிநீக்கு
 22. எழுத்து பயணம் மேன்மேலும் தொடர
  வாழ்த்துக்கள்
  முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
  மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் நண்பரே....!
  தொடருங்கள் உற்சாகத்தோடும் தங்கள் எழுத்துப்பணியை!

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள் முனைவர் குணசீலன்

  பதிலளிநீக்கு
 25. வாழ்த்துக்கள் குணசீலன், நானே விருது பெற்ற மாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. குமரன் (Kumaran) said...
  வாழ்த்துகள் நண்பரே.  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 27. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முனைவரே!

  பதிலளிநீக்கு
 28. மாதவராஜ் said...

  வாழ்த்துக்கள் நண்பரே....!
  தொடருங்கள் உற்சாகத்தோடும் தங்கள் எழுத்துப்பணியை!


  மிக்க மகிழ்ச்சி நண்பரே..
  வாழ்த்துரைக்கு நன்றிகள்!!

  பதிலளிநீக்கு
 29. தமிழ்மணம் விருது பெற்றதுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் குணசீலன்

  பதிலளிநீக்கு
 30. உங்களைப் போன்ற தமிழ் துறைசார்ந்த பதிவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்! பதிவுப் பயணம் வழமை போல தமிழ் கம்பீரத்துடன் செல்லட்டும்!

  பதிலளிநீக்கு
 31. வாழ்த்துக்கள் ....
  தொடருங்கள் உற்சாகத்தோடும் தங்கள் எழுத்துப்பணியை!

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துக்கள் நண்பரே...
  தமிழ்தொண்டுக்கு கிடைத்த விருது.
  தமிழுக்காக அரிய தொண்டாற்றுகின்றீர்கள்.தொடருங்கள் தமிழ்பணி...
  வாழ்த்துக்கள்...
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  பதிலளிநீக்கு
 33. எஸ்ரா said...

  எழுத்து பயணம் மேன்மேலும் தொடர
  வாழ்த்துக்கள்
  முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
  மகிழ்ச்சி

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 34. நேசமித்ரன் said...

  வாழ்த்துக்கள் முனைவரே....

  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 35. திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

  வாழ்த்துகள் நண்பா..


  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 36. thenammailakshmanan said...

  வாழ்த்துக்கள் முனைவர் குணசீலன்.

  நன்றி அம்மா..

  பதிலளிநீக்கு
 37. ஜீவன்சிவம் said...

  வாழ்த்துக்கள் நண்பரே.

  நன்றி சிவம்..

  பதிலளிநீக்கு
 38. சைவகொத்துப்பரோட்டா said...

  வாழ்த்துக்கள் குணசீலன், நானே விருது பெற்ற மாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறது.


  நன்றி நண்பரே..

  பதிலளிநீக்கு
 39. சே.குமார் said...

  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முனைவரே!

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 40. ஸ்டார்ஜன் ) said...

  தமிழ்மணம் விருது பெற்றதுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் குணசீலன்.

  நன்றி ஸ்டார்ஜன்.

  பதிலளிநீக்கு
 41. நிலாமதி said...

  வாழ்த்துக்கள் ....
  தொடருங்கள் உற்சாகத்தோடும் தங்கள் எழுத்துப்பணியை!


  நன்றி மதி..

  பதிலளிநீக்கு
 42. Blogger வேலன். said...

  வாழ்த்துக்கள் நண்பரே...
  தமிழ்தொண்டுக்கு கிடைத்த விருது.
  தமிழுக்காக அரிய தொண்டாற்றுகின்றீர்கள்.தொடருங்கள் தமிழ்பணி...
  வாழ்த்துக்கள்...
  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  வாழத்துரைக்கு நன்றி வேலன்..

  பதிலளிநீக்கு
 43. பாத்திமா ஜொஹ்ரா said...

  வாழ்த்துக்கள் முனைவரே!

  நன்றி பாத்திமா..

  பதிலளிநீக்கு