Saturday, January 2, 2010

சிறுபிள்ளையும் பெருங்களிறும்!

அதியமான் சங்ககாலத்தில் வாழ்ந்த அரசர்களுள் குறிப்பிடத்தக்கவன்.
அதியனுக்கும் ஔவைக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும்.
அதியன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லியை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தான்..
தான் உண்டால் நிலப்பரப்பு இன்னும் அதிகரிக்கும்..
அதனால் யாது பயன்?
ஔவை உண்டால் தமிழ் வளரும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.
அதியனின் வாழ்ந்திருந்தால் கூட அவனுக்கு இந்த அளவுக்குப் புகழ்கிடைத்திருக்குமா என்பது ஐயமே!
அதியனின் ஒவ்வொரு பண்பு நலனையும் ஔவையார் தம் பாட்டில் அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதோ ஒரு பாடல்..ஊரில் உள்ள சிறுவர்கள் தன் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதால் நீர்த்துறையில் பெரிய களிறு(யானை) படிந்துகிடக்கும்.
பெருமானே!
அவ்வாறே எங்களுக்கும் எளிமையுடையவனாக நீ விளங்குகிறாய்!
மாறாக,

அந்தக் களிறு மதம் கொண்டால் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தம் அருகே யாரும் செல்ல இயலாததாகவும் விளங்கும்
அவ்வாறே நீ உன் பகைவருக்கு இன்னாதவனாக விளங்குகிறாய்!


யானையின் எளிமையும், வலிமையும் அதியனின் பண்புக்கு உவமையானது.

யானை எளிமையாய் இருத்தல் அதியனின் அருள் உள்ளத்தையும்.
மதம் கொள்ளுதல் எதிரிகளுக்கு அஞ்சத்தக்கவனாக அமையும் வீரத்துக்கும் சான்றாயிற்று.

இருவேறு தன்மைகளையும் ஒன்றாகப்பெற்றவன் அதியன்,

யாரிடம் அன்புகாட்டவேண்டும்?
யாரிடம் வலிமையைக் காட்டவேண்டும்?
என்பதை நன்கு அறிந்தவன் என்று அதியனின் புகழை உரைக்கிறார் ஒளவையார்.


பாடல் இதோ..


ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.


புறநானூறு 94.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.


ஒவ்வொருவருக்குள்ளும் அன்பும் இருக்கும். வலிமையும் இருக்கும்.
அன்பை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?
வலிமையை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?

என்பதில் தான் இங்கு சிலருக்குக் குழப்பம் வருகிறது.


(படங்கள்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர். நன்றி)

27 comments:

 1. அருமையான இலக்கிய கட்டுரை

  ReplyDelete
 2. வணக்கம் நன்பரே.. நல்ல பதிவு..
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
  நம்ம ப்ளாக் பக்கம் வாங்க.. ஓட்டும் கருத்தும் சொல்லுங்க...
  ஆவலுடன்...

  ReplyDelete
 3. இணையத்தில் தமிழின் அழகை அருமையக எடுத்துச்சொல்லும் உங்களுக்கு எனது பணிவாண வணக்கங்கள்

  ReplyDelete
 4. சே.குமார் said...

  அருமையான இலக்கிய கட்டுரை..

  நன்றி குமார்..

  ReplyDelete
 5. அண்ணாமலையான் said...

  வணக்கம் நன்பரே.. நல்ல பதிவு..
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
  நம்ம ப்ளாக் பக்கம் வாங்க.. ஓட்டும் கருத்தும் சொல்லுங்க...
  ஆவலுடன்...


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
  இதோ வருகிறேன்..

  ReplyDelete
 6. வந்துட்டீங்க.. ஆனா ஓட்டு போட மறந்துட்டீங்க போல ப்ளீஸ் உங்க பொன்னான ஓட்ட போடுங்க...நன்றி

  ReplyDelete
 7. சிறந்த இடுகை. பாராட்டுகிறேன்.தொடருங்கள். இரட்டுற மொழிதல் பற்றி ஏதேனும் இடுகைகள் இட்டதுண்டா? இருப்பின் தெரியப்படுத்த்தவும்.

  ReplyDelete
 8. //இடுகையிட்வர் முனைவர்.இரா.குணசீலன் //

  இதை சரிப்படுத்தி விடுங்களேன்.

  ReplyDelete
 9. ஔவை என்பது ஒரு புலவர் அல்ல, ஒரு பொதுப் பெயரில் பல பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு என்று ஒரு கருத்து சொல்வார்கள். ஔவை அதியமான் நெல்லிக்கனி நட்பை பலமுறை புத்தகம் சினிமாக்களில் படித்தும் கேட்டுமிருக்கிறோம். தமிழ் சுவை தேன்.

  ReplyDelete
 10. மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
  மொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு
  //மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//

  மனமர்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஸ்ரீ said...
  சிறந்த இடுகை. பாராட்டுகிறேன்.தொடருங்கள். இரட்டுற மொழிதல் பற்றி ஏதேனும் இடுகைகள் இட்டதுண்டா? இருப்பின் தெரியப்படுத்த்தவும்.//

  ஓ நிறைய இருக்கின்றன நண்பரே..
  இனி தங்களுக்குத் தெரிவிக்கிறேன்..

  ReplyDelete
 12. ஸ்ரீ said...
  //இடுகையிட்வர் முனைவர்.இரா.குணசீலன் //

  இதை சரிப்படுத்தி விடுங்களேன்...


  மிக்க நன்றி நண்பரே..
  திருத்திக்கொண்டேன்...

  ReplyDelete
 13. RAJESH said...
  இணையத்தில் தமிழின் அழகை அருமையக எடுத்துச்சொல்லும் உங்களுக்கு எனது பணிவாண வணக்கங்கள்

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 14. ஸ்ரீராம். said...
  ஔவை என்பது ஒரு புலவர் அல்ல, ஒரு பொதுப் பெயரில் பல பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு என்று ஒரு கருத்து சொல்வார்கள். ஔவை அதியமான் நெல்லிக்கனி நட்பை பலமுறை புத்தகம் சினிமாக்களில் படித்தும் கேட்டுமிருக்கிறோம். தமிழ் சுவை தேன்.


  ஆம் நண்பரே..
  சங்ககால ஔவையார்
  தனிப்பாடல் ஔவையார்
  நீதிநூல் ஔவையார்
  பக்தி இலக்கிய கால ஔவையார்

  என பல காலத்தும் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற்புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.

  ReplyDelete
 15. கண்மணி said...
  மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
  மொக்கைப் பதிவுகள் போட்டு சூடான இடுகையில் இடம் பிடிப்பதை விட நல்ல இடுகைகள் எழுதி பின்னூட்டம் பெறவில்லையென்றாலும் வெகுஜன பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டும் தரம் பெற்றவர்களுக்கு
  //மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.//

  மனமர்ந்த வாழ்த்துக்கள்

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..
  நன்றி கண்மணி..

  ReplyDelete
 16. நல்ல இலக்கியம் ரசனையான கட்டுரைங்க..
  ஒரு இடத்தில் தமிழ் தவறிட்டு எழுத்தில்
  மாத்துங்கோ..

  ////உரைக்கிறார் ஒளைவையார்.///

  ReplyDelete
 17. அதியனின் குணத்திற்கு அழகான விளக்கங்கள். உவகை படங்கள் அருமை...

  ReplyDelete
 18. றமேஸ்-Ramesh said...

  நல்ல இலக்கியம் ரசனையான கட்டுரைங்க..
  ஒரு இடத்தில் தமிழ் தவறிட்டு எழுத்தில்
  மாத்துங்கோ..

  ////உரைக்கிறார் ஒளைவையார்.///

  நன்றி நண்பரே எழுத்துப்பிழையைத் திருத்திக்கொண்டேன்..

  ReplyDelete
 19. புலவன் புலிகேசி said...
  அதியனின் குணத்திற்கு அழகான விளக்கங்கள். உவகை படங்கள் அருமை...


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 20. அன்பின் குணசீலன்

  அருமையான விளக்கம் - புறநானூற்றில் ஔவை அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றிப் பாடிய பாடலும் விள்க்கமும் அருமை.

  தேர்ந்தெடுத்த படங்கள்

  ந்ல்வாழ்த்துகள்

  ReplyDelete
 21. cheena (சீனா) said...
  அன்பின் குணசீலன்

  அருமையான விளக்கம் - புறநானூற்றில் ஔவை அதியமான் நெடுமான் அஞ்சியைப்பற்றிப் பாடிய பாடலும் விள்க்கமும் அருமை.

  தேர்ந்தெடுத்த படங்கள்

  நல்வாழ்த்துகள்


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!!

  ReplyDelete
 22. T.V.Radhakrishnan said...
  அருமை


  நன்றி ஐயா..

  ReplyDelete
 23. ஒரு நல்ல தமிழ் படிக்கக் கிடைத்தது.
  வாழ்த்துக்கள் திரு குணசீலன்.

  ReplyDelete
 24. Blogger ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

  ஒரு நல்ல தமிழ் படிக்கக் கிடைத்தது.
  வாழ்த்துக்கள் திரு குணசீலன்...


  நன்றி நண்பரே..

  ReplyDelete
 25. சங்காலப் பாடலை இவ்வளவு சுவையாக ரசிக்க வைத்ததற்கு நன்றி

  ReplyDelete