Wednesday, January 13, 2010

மண்திணிந்த நிலனும் (போரும் சோறும்!)இயற்கை ஐந்து கூறுகளால் ஆனது.
அணுக்களால் செறிந்த நிலமும்,
நிலத்தின் கண் ஓங்கியிருக்கும் வானமும்,
வானளவு பொருந்தித் தடவி நிற்கும் காற்று,
காற்றினால் பெருகும் தீ,
தீயுடன் மாறுபட்ட நீர்,
என ஐந்து வகையான பெரிய ஆற்றல்களைக் கொண்டது இயற்கை!

அவ்வியற்கைக்கு ஒப்பான ஆற்றல்களைக் கொண்டவன் சேரன்.

அவன்.
தன்னைப் போற்றாத பகைவர் தம்பிழையை, நிலம் போலப் பொறுத்திருக்கிறான்!

அப்பகைவரை அழிக்க அவன் வானளவு சிந்திக்கிறான்!

பகைவரை அழிக்க அவன் கொண்ட நால்வகைப்படைகளும் காற்றுக்கு ஒப்பான வலிமையுடையன!

பகைவரை அழிக்கும் அவன் திறன் தீயிற்கு ஒப்பானது!

இவ்வாறு இயற்கையின் ஐம்பெரும் கூறுகளின் தன்மைகளையும் தம்மகத்தே கொண்டவனாக விளங்குகிறான் சேரன் என்று புகழ்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.

மேலும்,

உன் கடலில் பிறந்த ஞாயிறு மீண்டும் நின் மேற்கு கடலில் மூழ்கும்!
புதுவருவாய் நிறைந்த பல நல்ல ஊர்களைக் கொண்ட நாட்டுக்கு அரசனே!
வானத்தை எல்லையாகக் கொண்டவனே!

அசையும் தலையாட்டத்தைக் கொண்ட பாண்டவர் ஐவர்,
அவருடன் பகைத்த கௌரவர் ஆகிய இரு பெரும் படையினரும் போரிட்ட போது அவ்விருபடையினருக்கும் உணவளித்து “பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்“ என்று பெயர்கொண்டவனே!!

பக்க மலையில் சிறிய தலையமைந்த குட்டிகளுடன் பெரிய கண்ணமைந்த மான்கள் தங்கும் மாலை வேளையில் அந்தணர் செய்வதற்கரிய வேள்வியில் ஆவுதியிடுவர். அந்த ஒளியில் மான்கூட்டங்கள் இனிது உறங்கும். இத்தீக்கு அஞ்சிப் புலிகள் வராது ஆகையால் மான்கள் இனிது உறங்கின. சேரனுக்கு அஞ்சிப் பகைவர் வாரார் ஆகையார் மக்கள் இனிது உறங்கினர் என்பது குறிப்பாகும்.

அவ்வாறு துயிலுதல் அமைந்த பொற்சிகரங்களையுடையன இமயமலையும், பொதியமலையும் ஆகும்.

பால் கெட்டுத் தன் இனிய சுவைகுன்றிப் புளிப்பினும்,
கதிரவன் ஒளிகுன்றி இருண்டாலும்,
நால்வேதங்கள் சொல்லிய ஒழுக்கங்கள் மாறுபடினம்,
நல்ல அமைச்சர்களின் சுற்றத்துடன்,
நடுக்கின்றி அமைந்த இமையமும், பொதியமும் போன்றே நீயும் வாழ்வாயாக என்று சேரனை வாழ்த்துகிறார் புலவர்.பாடல் இதோ,


பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

சேரனின் வீரமும் கொடையும் ஆகிய பண்புகள் கூறப்பட்டதால் இது பாடாண் திணையாகியது..
மன்னன் மனம் கொள்ளும் விதமாக புலவர் அருகமைந்து சொல்லியதால் இப்புறத்துறை செவியறிவுறூஉ“ ஆனது.


இப்பாடல் வழி அறிவன…
.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களும் ஒன்றை ஒன்று சார்ந்தன! ஒன்றை நீங்கி ஒன்று இயங்கும் தன்மையற்றன.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களைக் கொண்டவனே மனிதன்! ஐம்பெரும் கூறுகளால் ஆனதே மனித உடல்! ஆகையால் ஐம்பெரும் ஆற்றல்களும் அவனுக்குள் உள்ளன. என்னும் பழந்தமிழரின் அறிவியல் அறிவை அறிந்து கொள்ள முடிகிறது.

○ பாண்டவருக்கும், கௌரவருக்கும் அளவற்ற உணவளித்ததால் சேரன் “பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்“ என்ற பெயர் பெற்றான் என்ற தொன்மச் செய்தியையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

32 comments:

 1. நாந்தான் முதல்லயா ..

  அருமையான புறநானுற்றுச் செய்திகள்

  கேட்க கேட்க தெவிட்டாதது சங்ககால இலக்கியம்

  ReplyDelete
 2. ஆம் நண்பரே..
  பதிவிட்ட மறுநொடியே வந்துவிட்டீர்கள்..

  எனது பதிவை நான் இணைக்கும் முன்பாகவே யாரே இணைத்துவிட்டனர்..

  அந்த முகம் தெரியாத நண்பருக்கும் நன்றி!!

  ReplyDelete
 3. பழம் தமிழரின் அறிவியல் அறிவையும்,

  “பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்“ பற்றியும் அறிந்து கொண்டேன்.

  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சேரலாதனின் சிறப்புப் பொருந்திய நல்லாட்சிபோல இங்கும் அமையட்டும் :)

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. மாதேவி said...

  பழம் தமிழரின் அறிவியல் அறிவையும்,

  “பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்“ பற்றியும் அறிந்து கொண்டேன்.

  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி!!

  ReplyDelete
 6. Blogger சுந்தரா said...

  சேரலாதனின் சிறப்புப் பொருந்திய நல்லாட்சிபோல இங்கும் அமையட்டும் :)

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தரா!

  ReplyDelete
 7. அந்த இயற்கையினை நாம் காக்க வேண்டும்.
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அழகான விளக்கம். நன்றி குணா. உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நல்ல பதிவு.
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  நல்ல பதிவு.அழகான விளக்கம்

  ReplyDelete
 11. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. சைவகொத்துப்பரோட்டா said...

  அந்த இயற்கையினை நாம் காக்க வேண்டும்.
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.//

  ஆம் நண்பரே..
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. வானம்பாடிகள் said...

  அழகான விளக்கம். நன்றி குணா. உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!!

  ReplyDelete
 14. ஸ்ரீ said...

  நல்ல பதிவு.
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  நன்றி நண்பரே..
  தங்களுக்கும் தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. சே.குமார் said...

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  நல்ல பதிவு.அழகான விளக்கம்.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்ரே..
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 16. Blogger துபாய் ராஜா said...

  தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

  தங்களுக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

  ReplyDelete
 17. அருமையான விளக்கம்.
  இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..::))

  ReplyDelete
 19. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. T.V.Radhakrishnan said...

  அருமை//

  நன்றி நண்பரே..

  ReplyDelete
 21. Dr.எம்.கே.முருகானந்தன் said...

  அருமையான விளக்கம்.
  இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்..


  நன்றி மருத்துவரே..
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. Blogger பலா பட்டறை said...

  பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..::))

  மகிழ்ச்சி நண்பரே...
  தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 23. அம்பிகா said...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் வாழ்த்துக்கள் அம்பிகா..

  ReplyDelete
 24. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. தங்களுக்கும் வாழ்த்துக்கள் மருத்துவரே.

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் நண்பரே..தமிழுக்கு அருமையாக தொண்டாற்றுகின்றீர்கள்.
  தொடருங்கள்.
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 27. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 28. நண்பரே
  வாழ்த்துக்கள்
  தமிழ்மணம் விருதுக்கு..::))

  ReplyDelete
 29. "தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

  என்றும் அன்புடன்,
  சிங்கக்குட்டி.

  ReplyDelete
 30. தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete