Tuesday, February 16, 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-1

காலகாலமாக நம் மொழியில் பலமொழிச்சொற்கள் கலந்துள்ளன. இன்று ஆங்கிலத்தோடு தமிழைக் கலந்து பேசுவது போல ஒருகாலத்தில் மணிப்பிரவாள நடை என்ற நடை பெருவழக்காக இருந்தது. மணிப்பிரவாளம் என்றால் முத்தும் மணியும் போல தமிழும் வடமொழியும் கலந்துபேசும் முறையாகும்.

தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் மறைமலையடிகளும், பரிதிமாற்கலைஞரும் செய்த மாற்றங்கள் குறிப்பிடத்தகனவாகும்.

மறைமலையடிகளின் இயற்பெயர் ஸ்வாமி வேதாசலம் என்பதாகும். தனித்தமிழ் மீது இவர் கொண்ட ஈடுபாடு காரணமாக…வேத- மறை
அசலம்-மலை
ஸ்வாமி-அடிகள் என மாற்றி மறைமலையடிகள் என்று வைத்துக்கொண்டார்.

தான் நடத்தி வந்த “ஞானசாகரம்“ இதழின் பெயரும் வடமொழிச்சொல்லாக இருந்தது அதனையும் மாற்றி “ அறிவுக்கடல்“ என்று அமைத்துக்கொண்டார்.

இவரைப் போலவே பரிதிமாற்கலைஞரும் வடமொழியிலிருந்த தன் பெயரை தமிழ் மரபுப்படி மாற்றிக்கொண்டார்.

இவரின் இயற்பெயர் சூரியநாராயண சாஸ்திரிகள்.சூரிய- பரிதி
நாராயண- மால்
சாஸ்திரி-கலைஞர் என்பதை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.

இவ்விருவரும் தம் பெயரிலிருந்த வடசொற்களை மட்டும் விரட்டவில்லை. தமிழ்மொழியிலிருந்த பல வடசொற்களையும் விரட்டினார்கள.

காலத்தின் தேவைகருதி…

தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களையும் அதற்கு இணையான தமிழ்சொற்களையும் தொடர் இடுகையாக வெளியிடயிருக்கிறேன்.

வடமொழிச் சொல் - தமிழ்ச்சொல்

1. அக்கிரமம் - கொடுமை, முறைகேடு
2. அக்கிணி - தீ, அழல்,நெருப்பு,
3. அகதி-ஏதிலி
4. அகிம்சை-இன்னாசெய்யாமை.
5. அங்கீகாரம்- ஏற்பிசைவு.
6. அசம்பாவிதம்- நேரக்கூடாதது.
7. அசாத்தியம்-செயற்கரியது.
8. அசீரணம்-செரியாமை.
9. அசுத்தம்-குப்பை.
10. அஞ்ஞானம்-அறிவிலி.
11. அட்சதை-மங்கல அரிசி.
12. அட்சயபாத்திரம்-அமுதசுரபி.
13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.
14. அத்தாட்சி- சான்று.
15. அதர்மம்-அறக்கேடு.
16. அதிசயம்-வியப்பு,புதுமை.
17. அதிபர்-தலைவர்.
18. அதிகபட்சம்-பேரெல்லை.
19. அதிகப்பிரசங்கி-வாயாடி.
20. அஸ்திவாரம்- கடைக்கால்.
21. அந்தம்-முடிவு.
22. அந்நியன்-வேற்றான்,அயலான்.
23. அநாதை-ஏதிலி.
24. அநாவசியம்- தேவையில்லை.
25. அநியாயம்-அன்முறை.

68 comments:

 1. தொடருங்கள் குணசீலன். என் வலைப்பூவை முடிந்த வரை நல்ல தமிழில் எழுத முனைகிறேன் இவைப்போன்ற பதிவுகள் எனக்கு முக்கியமானவை.நன்றி

  ReplyDelete
 2. அவ்வளவு அருமையா அவர் மாத்தினது இப்ப எம்.எம் நகரா மாறிடிச்சி.:(

  நல்லது தொடருங்கள்.:)

  ReplyDelete
 3. அட்சதை-மங்கல அரிசி.
  அட்சயபாத்திரம்-அமுதசுரபி

  மங்களம் மற்றும் அமுத சுரபி இரண்டும் வடமொழியே

  ReplyDelete
 4. இத்தனை வட மொழி சொற்களா, நன்றி முனைவரே, நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள், தூய தமிழ் இல்லை என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நல்ல தொடர்... நேரமிருந்தால் இதையும் ஒருமுறை பாருங்கள்..

  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/1.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/2.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/3.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/4.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/5.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/6.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/07/7.html

  ReplyDelete
 8. பதிவுக்கு நன்றிகள் பல.

  தொடர்ந்து இது போல தமிழ் சொற்களை பதிவு செய்யுங்கள். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சொற்களையும் பதிவு செய்யுங்கள்.

  தமிழ்நேசி

  ReplyDelete
 9. வழுதி == இதன் பொருள் அறிய ஆவல்!

  ReplyDelete
 10. மிக நல்ல விசயம், முடிந்தால் இதை ஒரு தொகுப்பாக நமது வெள்ளிநிலா இதழில் ஒரு பக்கம் முழுவதும் கொண்டுவந்துவிடலாம் !

  ReplyDelete
 11. //அசுத்தம்-குப்பை.//

  அசுத்தம் என்ற சொல்லே தமிழில்லையா??? இப்போதுதான் கேள்விப்படுகிறேன்... மிக்க நன்றிகள்...

  தங்களது இந்த இடுகைகள் தொடரட்டும்...

  ReplyDelete
 12. இதப் பத்தி , நானு மூச்சி கூட உட முடியாது , அப்பீட்டு உட்டுக்கறேன் , வாஜாரே !!

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 14. நல்ல இடுகை

  இதில் பல சொற்கள் தமிழ்ச்சொற்களே

  அ என்னும் எதிர்மறையைக் குறிப்பாக‌ சொல்லைச் சேர்ப்பது தமிழ் மொழிக்கே உரித்தது.


  அக்கி என்னும் சொல் த‌மிழாக‌ இருக்கும் பொழுது அக்கினி என்ப‌தை வேற்றுமொழிச் சொல்லாக‌ விள‌ம்புவ‌து எப்ப‌டி

  த‌ருவ‌து த‌ருமம் என்று மாறும்பொழுது
  வேற்றுமொழியின் உச்ச‌ரிப்பால் த‌ர்ம‌ம் என்று சொல்ல‌ ப‌ழ‌கிக்கொண்டோம்.

  இன்னும் இப்ப‌டி எத்த‌னையோ

  ந‌ம்முடைய‌ சொற்க‌ளை நாமே அறியாம‌ல் வேற்றுமொழிச் சொற்க‌ளாக‌ இய‌ம்புவ‌து இன்னும் எத்த‌னை கால‌ம்

  இதில் ஏதாவ‌து த‌வ‌று இருப்பின் ம‌ன்னிக்க‌வும்

  அன்புட‌ன்
  திக‌ழ்

  ReplyDelete
 15. இதுவரை தெரியாத பல தகவல்கள் தருகிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. அருமை குணசீலன்

  ReplyDelete
 17. கற்பித்தமைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 18. அவசியமான பதிவு...பகிர்ந்தமைக்கு நன்றி முனைவர்

  ReplyDelete
 19. //அட்சதை-மங்கல அரிசி.//


  மங்கள!?

  பகிர்வுக்கு நன்றி தல!

  ReplyDelete
 20. அற்புதம் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. Blogger ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

  தொடருங்கள் குணசீலன். என் வலைப்பூவை முடிந்த வரை நல்ல தமிழில் எழுத முனைகிறேன் இவைப்போன்ற பதிவுகள் எனக்கு முக்கியமானவை.நன்றி.


  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 22. Blogger ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

  தொடருங்கள் குணசீலன். என் வலைப்பூவை முடிந்த வரை நல்ல தமிழில் எழுத முனைகிறேன் இவைப்போன்ற பதிவுகள் எனக்கு முக்கியமானவை.நன்றி.


  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 23. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  அவ்வளவு அருமையா அவர் மாத்தினது இப்ப எம்.எம் நகரா மாறிடிச்சி.:(

  நல்லது தொடருங்கள்.:)  ஆம் நண்பரே..
  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. Raja said...

  அட்சதை-மங்கல அரிசி.
  அட்சயபாத்திரம்-அமுதசுரபி

  மங்களம் மற்றும் அமுத சுரபி இரண்டும் வடமொழியே..//

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..

  சமசுகிரதம் என்ற சொல்லுக்கே நன்றாகச் செய்யப்பட்டது என்று தானே பொருள். அந்த மொழிக்கென்று எதுவும் சொந்தமில்லை நண்பரே..

  ஒவ்வொரு மொழிச்சொற்களையும் தமதாக்கிக் கொண்ட மொழி வடமொழி.

  இன்றைய ஆங்கில மொழியிலுள்ள சொற்கள் யாவும் அம்மொழிக்கே சொந்தமானதா என்ன?

  அதுபோலத் தான்..

  மங்களம் மற்றும் அமுத சுரபி இரண்டுமே வடமொழி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் நண்பா..?

  அந்த சான்றுக்கு வேர் உண்டா..?

  தமிழில் நான் சொல்லிய எல்லாச் சொற்களுக்கும் வேர் உண்டு,
  அதனை அறிந்து கொள்ளவேண்டுமானால்..

  எனது வலைப்பதிவில் உள்ள லெக்சிகன் என்னும் பகுதியில் சென்று சொல்லைக் கொடுத்துப்பாருங்கள்.

  ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் எங்கெங்கு வந்துள்ளது என்ற வகைப்பாடு விரியும்..

  ReplyDelete
 25. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

  இத்தனை வட மொழி சொற்களா, நன்றி முனைவரே, நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.


  கருத்துரைக்கு நன்றி நண்பா..

  ReplyDelete
 26. Blogger Chitra said...

  நீங்கள் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள், தூய தமிழ் இல்லை என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.


  மகிழ்ச்சி சித்ரா.

  ReplyDelete
 27. Blogger சசிகுமார் said...

  அருமையான பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


  நன்றி சசி.

  ReplyDelete
 28. அருமையான பகிர்வு நண்பா, தொடர்ந்து எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  February 15, 2010 8:25 PM
  Delete
  Blogger ச.செந்தில்வேலன் said...

  நல்ல தொடர்... நேரமிருந்தால் இதையும் ஒருமுறை பாருங்கள்..

  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/1.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/2.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/3.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/4.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/5.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/06/6.html
  http://senthilinpakkangal.blogspot.com/2009/07/7.html.


  பார்த்தேன் நண்பா..
  மிக்க மகிழ்ச்சி..

  தொடர்ந்து இதுபோன்ற இடுகைகள் ஊடகத்துக்குத் தேவை..

  பிறமொழிச் சொற்களைத் தமிழர்கள் பகுத்தறிய தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

  ReplyDelete
 29. மிகவும் நல்ல முயற்சி ஐயா !

  ஒரு ஐயம்..

  //அசம்பாவிதம்- நேரக்கூடாதது //

  'மதுரையில் அசம்பாவிதம்' - இதை 'மதுரையில் நேரக்கூடாதது' என்று சொன்னால் அமைப்பாக இல்லையே..?

  ReplyDelete
 30. Anonymous Anonymous said...

  பதிவுக்கு நன்றிகள் பல.

  தொடர்ந்து இது போல தமிழ் சொற்களை பதிவு செய்யுங்கள். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சொற்களையும் பதிவு செய்யுங்கள்.

  தமிழ்நேசி.


  நன்றி தமிழ்நேசி.

  ReplyDelete
 31. T.V.ராதாகிருஷ்ணன் said...

  தொடருங்கள் குணசீலன்.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 32. பழமையண்ணே, தமிழகராதியில் உள்ள விளக்கம்..

  வழுதி - பாண்டியன்

  ReplyDelete
 33. Blogger பழமைபேசி said...

  வழுதி == இதன் பொருள் அறிய ஆவல்!//


  வருகைக்கு நன்றி நண்பரே..

  வழுதி என்பது பாண்டியன் மரபு குறித்த பெயராகும்.

  வழி வழி வந்தவன்...

  மரபு வழி வந்தவன்...

  வழித் தோன்றல் ...

  என்ற பொருளிலேயே பல பாடல்களில் ஆளப்பட்டுள்ளது நண்பரே.

  ReplyDelete
 34. Blogger வெள்ளிநிலா ஷர்புதீன் said...

  மிக நல்ல விசயம், முடிந்தால் இதை ஒரு தொகுப்பாக நமது வெள்ளிநிலா இதழில் ஒரு பக்கம் முழுவதும் கொண்டுவந்துவிடலாம் !  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 35. Blogger க.பாலாசி said...

  //அசுத்தம்-குப்பை.//

  அசுத்தம் என்ற சொல்லே தமிழில்லையா??? இப்போதுதான் கேள்விப்படுகிறேன்... மிக்க நன்றிகள்...

  தங்களது இந்த இடுகைகள் தொடரட்டும்...


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 36. Blogger டவுசர் பாண்டி said...

  இதப் பத்தி , நானு மூச்சி கூட உட முடியாது , அப்பீட்டு உட்டுக்கறேன் , வாஜாரே !!


  தொழில்நுட்ப இடுகைகளால் பெயர்பெற்ற தாங்கள் தற்போது தான் முதலில் எனது பதிவுக்கு வருகிறீர்கள்.
  தங்கள் முதல்வருகையே தங்களுக்கு எதிரானதாகவுள்ளதே என்று எண்ணவேண்டாம் நண்பரே..

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 37. வானம்பாடிகள் said...

  பகிர்வுக்கு நன்றி அய்யா.


  வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 38. Blogger திகழ் said...

  நல்ல இடுகை

  இதில் பல சொற்கள் தமிழ்ச்சொற்களே

  அ என்னும் எதிர்மறையைக் குறிப்பாக‌ சொல்லைச் சேர்ப்பது தமிழ் மொழிக்கே உரித்தது.


  அக்கி என்னும் சொல் த‌மிழாக‌ இருக்கும் பொழுது அக்கினி என்ப‌தை வேற்றுமொழிச் சொல்லாக‌ விள‌ம்புவ‌து எப்ப‌டி

  த‌ருவ‌து த‌ருமம் என்று மாறும்பொழுது
  வேற்றுமொழியின் உச்ச‌ரிப்பால் த‌ர்ம‌ம் என்று சொல்ல‌ ப‌ழ‌கிக்கொண்டோம்.

  இன்னும் இப்ப‌டி எத்த‌னையோ

  ந‌ம்முடைய‌ சொற்க‌ளை நாமே அறியாம‌ல் வேற்றுமொழிச் சொற்க‌ளாக‌ இய‌ம்புவ‌து இன்னும் எத்த‌னை கால‌ம்

  இதில் ஏதாவ‌து த‌வ‌று இருப்பின் ம‌ன்னிக்க‌வும்

  அன்புட‌ன்
  திக‌ழ்//

  உண்மைதான் நண்பரே..

  அக்கினி என்பதை அக்னி என்று ஆக்கி அச்சொல்லுக்குச் சொந்தக்காரர்களாகிவிட்டார்கள்.

  நம் தமிழர்களோ தாய்மொழியில் பேசவே தயங்கி தம் சொற்களைத் தொலைத்து நிற்கிறார்கள்.

  இப்படி ஒவ்வொரு வடசொல்லுக்கும் வரலாறு கண்டால் வடமொழி ஆட்டம் கண்டுவிடும்.

  ReplyDelete
 39. Delete
  Blogger வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

  இதுவரை தெரியாத பல தகவல்கள் தருகிறது உங்களின் ஒவ்வொரு பதிவும் . வாழ்த்துக்கள்.

  நன்றி சங்கர்.

  ReplyDelete
 40. Blogger thenammailakshmanan said...

  அருமை குணசீலன்.


  கருத்துரைக்கு நன்றி அம்மா.

  ReplyDelete
 41. Blogger புலவன் புலிகேசி said...

  கற்பித்தமைக்கு மிக்க நன்றி..


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 42. ஆரூரன் விசுவநாதன் said...

  அவசியமான பதிவு...பகிர்ந்தமைக்கு நன்றி முனைவர்.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 43. Blogger வால்பையன் said...

  //அட்சதை-மங்கல அரிசி.//


  மங்கள!?

  பகிர்வுக்கு நன்றி தல!

  இரண்டு சொற்களுமே சரிதான் நண்பரே.

  இருசொற்களுமே பலராலும் பயன்படுத்தப்படுவதாகத்தான் உள்ளது.

  மங்களம் என்பதுதான் மிகச்சரி.
  வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி.

  ReplyDelete
 44. Blogger றமேஸ்-Ramesh said...

  அற்புதம் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.

  நன்றி றமேஸ்.

  ReplyDelete
 45. வெற்றி said...

  மிகவும் நல்ல முயற்சி ஐயா !

  ஒரு ஐயம்..

  //அசம்பாவிதம்- நேரக்கூடாதது //

  'மதுரையில் அசம்பாவிதம்' - இதை 'மதுரையில் நேரக்கூடாதது' என்று சொன்னால் அமைப்பாக இல்லையே..?


  'மதுரையில் நேரக்கூடாதது நேர்ந்துவிட்டது“

  என்று சொல்வது முதலில் சற்று வேற்றுமையாகத் தெரியலாம் பயன்படுத்தினால் காலப்போக்கில் பழகிவிடும் நண்பரே.

  ReplyDelete
 46. உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.

  தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்க்களைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.

  தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 47. உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 48. நண்பரே. ஒரு சிறு திருத்தம். வேதம் = மறை; அசலம் = மலை. சலம் என்றால் அசைவது; அசலம் என்றால் அசையாதது; அதனால் அது காரணப்பெயராக மலையைக் குறித்தது. வேத + அசலம் = வேதாசலம் = மறைமலை.

  அமுதசுரபியும் வடசொல்லைப் போல் தோன்றுகிறது. மற்ற எல்லா சொற்களும் நாளும் நாம் கலந்து புழங்க வேண்டிய சொற்கள்.

  இத்தொடருக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 49. ஜெகதீஸ்வரன்.இரா said...

  உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.

  தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்ககளைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.

  தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
  மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 50. திவ்யாஹரி said...

  உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..  நன்றி நண்பரே.

  ReplyDelete
 51. Blogger குமரன் (Kumaran) said...

  நண்பரே. ஒரு சிறு திருத்தம். வேதம் = மறை; அசலம் = மலை. சலம் என்றால் அசைவது; அசலம் என்றால் அசையாதது; அதனால் அது காரணப்பெயராக மலையைக் குறித்தது. வேத + அசலம் = வேதாசலம் = மறைமலை.

  அமுதசுரபியும் வடசொல்லைப் போல் தோன்றுகிறது. மற்ற எல்லா சொற்களும் நாளும் நாம் கலந்து புழங்க வேண்டிய சொற்கள்.

  இத்தொடருக்கு நன்றி நண்பரே.


  ஆம் நண்பரே..
  அசலம் என்பது தான் சரி எழுத்துப்பிழை திருத்திக்கொண்டேன்..

  அமுதசுரபி என்பது தமிழ்தான் அதன் வேரையும் மரபையும் விரைவில் வெளியிடுகிறேன்.

  ReplyDelete
 52. //25. அநியாயம்-அன்முறை.//

  நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற.

  அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 53. //13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.//

  இது போன்ற நேரடிப் பொருள் கொள்வது, சொற்கள் அமைப்பில் பயனளிக்காது, 'அட்டகாசமாக இருக்கிறது' என்று எழுதும் இடத்தில் 'பெருஞ்சிரிப்பாக இருக்கிறது' என்று போட்டால் பொருள் வராது. மந்தகாசம் என்பது போல், காசம் என்கிற வடசொல் பொருள் சிரிப்பு என்பதால் அதை நேரிடையாக அதே பொருளில் அட்டகாசம் என்பதற்கு பெருஞ்சிரிப்பு என்று வழங்கி இருக்கிறார்கள். நாம் பெருஞ்சிரிப்பு என்று பயன்படுத்த மாட்டோம் அதற்கு பதிலாக வெடிச்சிரிப்பு என்று பயன்படுத்துவோம், அப்படியே வெடிச்சிரிப்பு பயன்படுத்தினாலும் மேற்சொன்னது போல் வரிகளில் அமைக்கும் போது அட்டகாசத்திற்கு ஒப்பான பொருளையும் தராது. 'அட்டகாசம்' என்ற சொல்லை நாம் 'வெகுசிறப்பு' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வருகிறோம்.

  ReplyDelete
 54. தமிழ் என என்னிகொண்டிருந்த பல வார்த்தைகளும் வடமொழி என்பது இன்றுதான் தெரிந்துகொள்ள முடிந்தது அதேவேளையில் ஆச்சரியமும் எப்படி நமக்குள் வடமொழி நம்மையறியாமல் நமக்குள்ளே வேருன்றி நிற்கிறது!

  அருமையான பகிர்வு தொடரட்டும்


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்

  ReplyDelete
 55. மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி!!

  ReplyDelete
 56. உம்.... அமிழ்து, அமுது, அமுதம் என்பது தமிழ், வழக்கம் போல் வடவர் அமிர்தம் என ர் சேர்த்து தமதாக்கிக் கொள்வர். சுரத்தல் தமிழ்ச்சொல்லே!
  சுரப்பி என்று ப் சேர்த்து வந்திருதால் அது தமிழ் முறை. சுரபி என்பது வடமொழி முறையாகும்.

  அன்முறை புழக்கத்திலுள்ள சொல் தான். நய, நயன்மை, நயதி, நாயம்> ஞாயம் என்பது தமிழ் முறை சார்ந்ததே!

  சலசல என்ற ஒலிக்குறிப்பு தமிழகத்தது. அதிலிருந்து சலம் என்ற சொல் தோன்றக்கூடியதென்பது வெள்ளிடைமலை.

  என் சென்ற பின்னூட்டையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
 57. Blogger கோவி.கண்ணன் said...

  //25. அநியாயம்-அன்முறை.//

  நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற.

  அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.

  நல்ல தொகுப்பு.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

  தொடர்பயன்பாட்டில் பழக்கப்பட்டுவிடும் என்று நான் எண்ணுகிறேன் ஐயா..

  ReplyDelete
 58. அக்கினி = அழல், அழனி

  கண், காண், ஞானம் தமிழுடையது.
  அல், அன் அவ்வழி அ என்பது கூட தமிழ் எதிர்மறை முன்னொட்டாகும்!

  அட்சயபாத்திரம்- அமுத சுரப்பி தனிச்சொல், இங்கு ஒப்பானது அஃகாத கலம் என்ற சொல்.
  அஃகுதல், அல்குதல் குறைதல் எனப் பொருள்படும்.

  அட்டகாசம்- இதன் இரு சொற்களுமே தமிழகத்தன. அடுத்தல், அட்டு சுடுதல் எனப் பொருள்படும்.
  காய்ச்சுதல் காய்ச்சம் காசமென்றாகும்.
  சுட்டுக் காய்ச்சி ஒளிபடும் பொருள் சிறப்பானதாக இருக்கும்! அவை உண்டான புலம் வேண்டுமானால் வட அல்லது நடுந் நாவலந்தேயமாய் இருக்கலாம்.

  அத்தாட்சி- சான்று என்பதை விட மெய்ச்சான்று என்பதே சரி!

  அதர்மம்-அதருமம், தருமம் தமிழில்லையெனில் வேறெது தமிழ்

  அதைத்தல், அதித்தலிலிருந்து அதிகம் உண்டாகும். அதிகம், அதிபர் தமிழே!
  அதிகபட்சம் - அதிகபக்கம்
  அதிகப்பிரசங்கி- அதிகம்பேசி, வாயாடி தனிச்சொல்!

  அஸ்திவாரம்- இது இருபிறப்பி, ஈறு வாரம் தமிழ்! அடிவாரம் என்பது எளிமையானது!

  தமிழிக்கும் வடமொழிக்குமான இடையாட்டு நெடியது! ஒற்றைத்தனமாக இது தமிழல்ல என்று முத்திரை பதிப்பது நல்லதெனத் தோன்றவில்லை!
  வடமொழி என நாம் கருதும் பல சொற்கள் இருபிறப்பிகளாகும்! தமிழுக்கும் வடமொழிக்குமான கொடுக்கல் வாங்கல் 3000 ஆண்டு காலத்தது!

  இணையத்தில் நல்ல தமிழ் எழுத விழைபவர்களுக்கு பெரு வரமாக இருக்கும் முனைவர்.இராம.கியின் பழைய இடுகைகளை, மடற்குழு உரையாட்டுக்களைத் தேடிப் படிக்கவும்!

  ReplyDelete
 59. Delete
  Blogger ஜெகதீஸ்வரன்.இரா said...

  உங்களின் வெளியீடு மிகவும் சிறப்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவாகவும் உள்ளது.

  தங்களது பதிவின் தாக்கம் என்னை வெகுவாக பாதித்து விட்டது...! இத்தனை நாள் தமிழ் என நினைத்து வடமொழிச் சொற்க்களைப் பயன்படுத்தினேன் என நினைக்கும் போது என் மனம் வேதனையடைகிறது.

  தங்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.  மகிழ்ச்சி நண்பரே..

  ReplyDelete
 60. திவ்யாஹரி said...

  உங்கள் வலைத்தளத்தின் அர்த்தம் (வேர்களை தேடி) இன்று புரிந்து கொண்டேன் அய்யா.. கற்பித்தமைக்கு நன்றி..


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 61. Blogger கோவி.கண்ணன் said...

  //25. அநியாயம்-அன்முறை.//

  நியாயம் சிலர் ஞாயம் என்றும் எழுதுவார்க்ள். முறையான என்று பொருள். அதற்கு எதிர்மறை முறையற்ற.

  அன்முறை கேள்விபடாத புழக்கக்த்தில் இல்லாத வழக்கற்ற சொல். பரிந்துரைகளில் தெரிந்த புழக்கத்தில் இருக்கும் சொற்களை கொடுத்தால் பயன்படுத்துபவர்களுக்கு பயனாக இருக்கும், இல்லை என்றால் நினைவு வைத்துக் கொள்வது எளிதன்று.

  நல்ல தொகுப்பு.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 62. Blogger கோவி.கண்ணன் said...

  //13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு.//

  இது போன்ற நேரடிப் பொருள் கொள்வது, சொற்கள் அமைப்பில் பயனளிக்காது, 'அட்டகாசமாக இருக்கிறது' என்று எழுதும் இடத்தில் 'பெருஞ்சிரிப்பாக இருக்கிறது' என்று போட்டால் பொருள் வராது. மந்தகாசம் என்பது போல், காசம் என்கிற வடசொல் பொருள் சிரிப்பு என்பதால் அதை நேரிடையாக அதே பொருளில் அட்டகாசம் என்பதற்கு பெருஞ்சிரிப்பு என்று வழங்கி இருக்கிறார்கள். நாம் பெருஞ்சிரிப்பு என்று பயன்படுத்த மாட்டோம் அதற்கு பதிலாக வெடிச்சிரிப்பு என்று பயன்படுத்துவோம், அப்படியே வெடிச்சிரிப்பு பயன்படுத்தினாலும் மேற்சொன்னது போல் வரிகளில் அமைக்கும் போது அட்டகாசத்திற்கு ஒப்பான பொருளையும் தராது. 'அட்டகாசம்' என்ற சொல்லை நாம் 'வெகுசிறப்பு' என்ற பொருளில் தான் பயன்படுத்தி வருகிறோம்.  ஆம் நண்பரே..

  ஹாஸியம்- என்றசொல்லே அட்டகாசம் என்றாகி இன்று வழக்கில் உள்ளது..

  படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால்?

  அட்டகாசமாகவுள்ளது என்று சொல்கின்றனர்.

  இங்கு அட்டகாசம் என்பது வெகு சிறப்பு என்ற பொருளில் தான் வந்துள்ளது.

  என்றாலும் அதன் பொருள்மரபை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியதும் நம் கடமைதானே நண்பரே.

  ReplyDelete
 63. Blogger ஜிஎஸ்ஆர் said...

  தமிழ் என என்னிகொண்டிருந்த பல வார்த்தைகளும் வடமொழி என்பது இன்றுதான் தெரிந்துகொள்ள முடிந்தது அதேவேளையில் ஆச்சரியமும் எப்படி நமக்குள் வடமொழி நம்மையறியாமல் நமக்குள்ளே வேருன்றி நிற்கிறது!

  அருமையான பகிர்வு தொடரட்டும்


  வாழ்க வளமுடன்

  என்றும் அன்புடன்
  ஞானசேகர்.


  நன்றி நண்பரே.

  ReplyDelete
 64. Arun KK said...

  மிகவும் பயனுள்ள பதிப்பு. நன்றி!!


  நன்றி அருண்.

  ReplyDelete
 65. Anonymous Anonymous said...

  உம்.... அமிழ்து, அமுது, அமுதம் என்பது தமிழ், வழக்கம் போல் வடவர் அமிர்தம் என ர் சேர்த்து தமதாக்கிக் கொள்வர். சுரத்தல் தமிழ்ச்சொல்லே!
  சுரப்பி என்று ப் சேர்த்து வந்திருதால் அது தமிழ் முறை. சுரபி என்பது வடமொழி முறையாகும்.

  அன்முறை புழக்கத்திலுள்ள சொல் தான். நய, நயன்மை, நயதி, நாயம்> ஞாயம் என்பது தமிழ் முறை சார்ந்ததே!

  சலசல என்ற ஒலிக்குறிப்பு தமிழகத்தது. அதிலிருந்து சலம் என்ற சொல் தோன்றக்கூடியதென்பது வெள்ளிடைமலை.

  என் சென்ற பின்னூட்டையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்!

  நண்பரே நானும் தங்களின் கருத்துக்களுக்கு சார்புடையவன் தான்..

  இன்ற வழக்கிலிருக்கும் வடசொற்களின் மூலம் வேர் ஆகியன நம் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளன..

  நாம் தொலைத்தோம்..
  அவர்கள் சேமித்துக்கொண்டார்கள்...


  தங்கள் கருத்துக்கள் எனது கருத்துக்களுக்கு எதிராக இருந்தாலும் அதை வெளியிடுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை..

  தாங்கள் தங்கள் சுயவிவரத்துடன் வெளியிடலாமே..

  சுயவிவரமில்லை கருத்துரைகளை நான் வழக்கமாக வெளியிடுவதில்லை..

  தாங்கள் கேட்டடதற்காகத் தான் வெளியிட்டேன்.

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 66. //சுயவிவரமில்லை கருத்துரைகளை நான் வழக்கமாக வெளியிடுவதில்லை..//

  சுயம், சுயம்பு ஆகியவை தமிழ் சொற்கள் அல்ல,

  சுய சார்ப்பு > தற்சாற்பு
  சுயம் > தன்,

  சுயவிவரம் > தன்(னுடைய) விவரம்

  விவரம் கேட்பதற்கு வடசொல் போன்று இருந்தாலும் வேர்
  தமிழ் என்றே நினைக்கிறேன்
  விறி(த்தல்) > விவரி > விபரி > விவரி என்றாகி விவரம் என்ற சொல் வந்திருக்கக் கூடும்.

  ReplyDelete
 67. ஆம் நண்பரே உண்மை தான் நல்ல விளக்கம். ஸ்யம்வரம் என்னும் சொல்லுக்கும் சுய விவரம் என்னும் சொல்லுக்கும் பெரிய வேற்றுமை இல்லை தான்.. நமக்கு வரும் அனானிமஸ் கருத்துரையார் யார் என கூகுளிடம் கேட்டால்.. அவரின் சுயவிவரம் கிடைக்கவில்லை என்று தான் பதில் வருகிறது.

  முதலில் தமிழ்- தனித்தமிழ்- வடசொல்- வடசொல் கலப்பு குறித்த விழிப்புணர்வு நம் ஊடககங்களுக்கு இன்னும் தேவை.


  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete