வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

முல்லையும் பூத்தியோ!ஒரு மாவட்ட ஆட்சியர் அன்புடன் ஒரு நாய் வளர்த்தார். அந்த நாய் ஒரு நாள் இறந்து போனது. ஊரிலுள்ள பல்வேறு மக்களும் அவரிடமும் அவர் உறவினரிடமும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர்.

ஒருநாள் அந்த மாவட்ட ஆட்சியரே இறந்துபோனார்.
ஆனால் அவரின் இறப்பைக் கேட்க யாருமே வரவில்லை!!

ஊர்மக்களிடம் ஒருவர் கேட்டார் என்னங்க அவர் வீட்டு நாய் இறந்ததைக் கேட்க நிறைய பேர் வந்தார்கள்.
இன்று அவரே இறந்து போனார் யாருமே வரவில்லையே? என்று. அதற்கு அந்த ஊர் மனிதர் ஒருவர் சொன்னார்.

மாவட்ட ஆட்சியர் வாழும்போது அதிகாரியாகவே வாழ்ந்தார்!
பணத்துக்கும் தன் சுயநலத்துக்கும் கொடுத்த மதிப்பை அவர் மக்களுக்குத் தரவில்லை.

மக்களோ அவரிடமிருந்த பதவிக்காகவும். அவரால் சில பயன்களை அனுபவிக்கவும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

இன்று அவரே இல்லை அவர் வீட்டுக்கு ஏன் மக்கள் போகப்போகிறார்கள்?என்றார்.


ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.

மண் பயனுற வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை!
அவர்களின் உடல் மட்டுமே அழிந்துபோகிறது!


மண் பயனுற வாழ்ந்த மனிதனும் மக்கள் மனமும்...


ஒல்லையூர் நாட்டு வள்ளல் சாத்தன் இறந்ததால் அவ்வூர் மக்கள் வருந்தியிருக்கின்றனர். முல்லை மலர் இயல்பாக மலர்ந்திருக்கிறது. அதைப் பார்க்கிறார் புலவர்,

முல்லையே!
இளைய வீரர்கள் சூடமாட்டார்கள்!
வளையல் அணிந்த இளமகளிரும் பறிக்கமாட்டார்கள்!
நல்ல யாழை வாசிக்கும் பாணனும் பறிக்கமாட்டான்!
பாடினியும் சூடிக்கொள்ள மாட்டாள்!

தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு வீரர் பலரையும் எதிர்நின்று கொன்றவன், வலிய வேலையுடைய சாத்தன், அவன் இறந்த பின்பு, இந்த ஒல்லையூர் நாட்டிலே முல்லையே நீயும் பூத்தனையே?
சாத்தன் இறந்தால் பகைவர் அகம் மலர்வர்!
முல்லை மலரே நீ ஏன் மலர்ந்தாய்?

என்று பாடுகிறார்.

பாடல் இதோ..


இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?


புறநானூறு 242.
பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல். துறை: கையறுநிலை.


இவ்வாறு கையற்றுப் புலம்புதல் “கையறுநிலை“ என்னும் புறத்துறையாகும்.

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. கையறுநிலை என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
2. வாழ்ந்தால் மண்பயனுற வாழவேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது.
3. அரசன் மீது மக்கள் கொண்ட அன்பு பாடலைப் படிப்போர் மனதை நெகிழச்செய்வதாகவுள்ளது.

18 கருத்துகள்:

 1. அருமையான கருத்தை... அழகான பாடல் மூலம் விளக்கியிருக்கிறார்கள்...

  அருமை... அருமை...

  பதிலளிநீக்கு
 2. ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.

  மண் பயனுற வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை!
  அவர்களின் உடல் மட்டுமே அழிந்துபோகிறது!
  ///

  பாடல் புகழுடன் வாழ்ந்தவரை காலம்கடந்து காட்டி நிற்கிறது!!

  பதிலளிநீக்கு
 3. அகல்விளக்கு said...

  அருமையான கருத்தை... அழகான பாடல் மூலம் விளக்கியிருக்கிறார்கள்...

  அருமை... அருமை...


  நன்றி நண்பா..

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்தை... அழகான பாடல் மூலம் விளக்கியிருக்கிறார்கள்...
  தேவன் மாயம் said...

  ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.

  மண் பயனுற வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை!
  அவர்களின் உடல் மட்டுமே அழிந்துபோகிறது!
  ///

  பாடல் புகழுடன் வாழ்ந்தவரை காலம்கடந்து காட்டி நிற்கிறது!!


  ஆம் மருத்துவரே..
  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 5. ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.


  .........ஆழ்ந்த கருத்தின் அருமை, பாடலில் அழகாய் விளக்கி சொல்லி இருப்பதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அருமை நண்பரே...படலுன் மூலம் விளக்கியக் கருத்துகளுக்காக நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 7. உண்மைதான், நாம் அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தினால் இப்படிதான் நடக்கும், நன்றி
  பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 8. Chitra said...

  ஒருமனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவனுடைய இறப்பு தெளிவாகக் காட்டிவிடும்.


  .........ஆழ்ந்த கருத்தின் அருமை, பாடலில் அழகாய் விளக்கி சொல்லி இருப்பதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!

  பதிலளிநீக்கு
 9. புலவன் புலிகேசி said...

  அருமை நண்பரே...படலுன் மூலம் விளக்கியக் கருத்துகளுக்காக நன்றிகள்...


  நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 10. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

  உண்மைதான், நாம் அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தினால் இப்படிதான் நடக்கும், நன்றி
  பகிர்வுக்கு.


  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 11. ////வாழ்ந்தால் மண்பயனுற வாழவேண்டும் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது.///
  அற்புதமான பாடலை நமக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்


  தம்பியும் சூடமாட்டான்
  என் இள முல்லையும்
  உன்னைத்
  தொடமாட்டாள்
  பாடினிக்கும் பாணண்
  யாழ் வாசிப்பான்
  பாழாய் உன்னை
  தீண்டமாட்டான்
  வீரம் விளை
  மண்ணின் - தீரன்
  உடல் மரிக்கும்
  வீரம் தளைக்கும்
  இவ் ஒல்லையூரில்
  நீ ஏன் பூத்தாய்
  முல்லையே...

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி றமேஸ்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான கருத்தை... அழகான பாடல் மூலம் விளக்கியிருக்கிறார்கள்...

  அருமை... அருமை...

  பதிலளிநீக்கு
 14. இன்னும் பலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள் . மிகவும் அருமையான பதிவு . பகிர்வுக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 15. "மண் பயனுற வாழ்ந்தவர்கள் இறப்பதில்லை!"
  அரிய கருத்தும் விளக்கமும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாழ்ந்தால் மண் பயனுற வாழ வேண்டும்.. உண்மை குணசீலன்

  பதிலளிநீக்கு
 17. ஒரு மனிதன் எப்படி வாழ்தான் என்பதை அவனுடைய இறப்பு
  வெளிப்படுத்திவிடும். உண்மைதான் சகோ .
  நல்ல தமிழ் இலக்கிய பாடல் ஒன்றினை அருமையான கருத்துக்களுடன் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோ .

  பதிலளிநீக்கு
 18. புரிதலுக்கு நன்றி குமார்.
  நன்றி சங்கர்.
  நன்றி மாதேவி.
  நன்றி தேனம்மை.
  நன்றி தாமஸ்.

  பதிலளிநீக்கு