நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!
மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!
கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!
வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!
மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!
மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!
நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..
தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
இயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..
450 வது இடுகை வெளியிடும் இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில் வருகைதரும் அன்பு உறவுகளே “இயற்கையைப் பாதுகாப்போம்“ என்னும் சிந்தனையை முன்வைத்து..
நான் விரும்பி எழுதிய சில இயற்கை சார்ந்த இடுகைகளைத் தங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்...
3. சந்தன மரம்
7. இயற்கைக்கும் மனிதனுக்கும் 20/20
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
தங்கள் தொடர் வருகைக்கும்,
வாசித்தலுக்கும்,
புரிதலுக்கும்,
பின்தொடர்தலுக்கும்,
அறிவுறுத்தலுக்கும்,
ஆற்றுப்படுத்தலுக்கும்,
கருத்துரைகளுக்கும்...
மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
!நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00- நன்றி -00O00-நன்றி!
உங்களுக்கு இரும்பு இதயமாக இருந்தாலும், துடிக்கிறது...
ReplyDeleteமரங்கள் வளர்ப்போம்... சுற்றுசூழலைக் காப்போம்..
ReplyDelete450 வது இடுக்கைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநானும் மரமும் என்று
ReplyDeleteசொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!//
உண்மை தான் இயற்கையோடு ஒப்பிடும் அளவுக்கு இந்த மானுட ஜென்மத்துக்கு எந்த அருகதையும் இல்லை.... பாரபட்சம் பார்க்காமல் மரங்கள் அதன் பயன்களை வாரி வழங்குகிறது... ஆனால் நாம் நன்றி கடனாக வெட்டி வெட்டி உபத்திரவம் செய்துக்கொண்டிருக்கிறோம்...
மரம் --- கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ReplyDelete450 இடுகைகள்... நிறைய நட்புகள்...
சந்தோஷம் முனைவரே...
தொடர்ந்து எழுதுங்கள்... நாங்களும் தொடர்கிறோம் நட்புடன்...
வாழ்த்துக்கள்.
500 போட வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
கவிதை அருமை
ReplyDelete450வது இடுக்கைக்கு வாழ்த்துக்கள்
திரு முனைவர் அவர்களே
ReplyDelete//தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
இயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..//
ஓவ்வொருவருக்குமான உற்சாக வரிகள்
நன்றிகள் பல தங்களின் 450 ஆவது பதிவிற்க்கு..
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
தங்களது 450 ஆவது பதிவுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்கள் நிறைய எழுத வேண்டும்.
நிறைய சாதனைகள் புரிய வேண்டும்.
நன்றி ஐயா.
நானூற்று ஐம்பதாவது இடுகைக்கு முதலில்
ReplyDeleteஎன் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் முனைவரே.
அத்தனை பதிவுகளும் ஆக்கப்பூர்வ சிந்தனைகள் உள்ளவை.
இன்னும் கணக்கிலடங்கா பதிவுகளை புனையுங்கள்.
ஆக்கங்களினால் ஊக்கமூட்டும் படைப்புகளை
அள்ளித் தாருங்கள்.
மரங்களையும் இயற்கையையும் வெகுவாய் ஒன்றுபடுத்தி
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நாம் வெளிவிடும் காற்றை சுவாசித்து நாம் சுவாசிக்கும் காற்றை வெளியிடுவதால்.
மரங்கள் நமக்கு பிராண ஈஸ்வரன் போல.....
மரங்கள் வளர்ப்போம்
இருக்கும் மரங்களை பேணிக்காப்போம்.
450 இடுகைகள் எனில் இது அசுரச் சாதனை
ReplyDeleteஅதுவும் அனைத்தும் அனைவருக்கும்
பயன்படும்படியான தரமான பதிவுகள்
ஒரு வேள்வி போல தவம் போல செய்துவரும்
தங்களுக்கு எனது இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்
த.ம 10
நானூற்று ஐம்பதுக்கு என் வாழ்த்துகள்... நண்பரே...
ReplyDeleteமரங்களை பற்றிய தங்களின் படைப்பு அருமை...
அருமை....
ReplyDeleteவாழ்துக்கள்....
ReplyDeleteதமிழ் வேள்வி நடத்தும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனிதனோடு ஒன்றியே இருப்பது மரங்கள்..
ReplyDeleteஇலக்கியங்கள் எவ்வாறு மரங்கள் மையாண்டுள்ளனர் என்பதை அழகாக சொல்லியீருக்கீறீர்கள்...
மேலும் தங்களின் 450 பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு...
ReplyDeleteதங்களுக்கு 450-ஆவது இடுகை வாயிலாக வாழ்த்துக்கள்.
மரங்கள்..
ReplyDeleteமலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!///
அருமை நண்பரே!
தமிழ்க்காற்றை எங்களிடம் தவழ விட்டுக்கொண்டிருக்கும் உங்கள் படைப்புகள்
ReplyDeleteஆயிரங்களைதாண்ட வாழ்துக்கள்!
450வது இடுகைக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல இடுகைகளை தந்து உங்கள் தமிழ் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் ஆசிர்வதிப்பாராக...
ReplyDeleteகவிதை அருமை.
தமிழ் உறவுகளே நான் வாங்கிய பட்டங்களெல்லாம் எனக்கு வேலை மட்டுமே வாங்கிக்கொடுத்தன..
ReplyDeleteஇயற்கைதான் எனக்கு வாழ்க்கையை வாழக் கற்றுக்கொடுத்தது..
இயற்க்கையின் சிந்தனைக்கு நாம் யாரும் ஈடுகொடுக்க முடியாது. . .
தங்களின் 450பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .
இயற்கையின் காதலரே, குணா.
ReplyDeleteபடைப்பிற்கும், பகிர்விற்கும் பாராட்டுக்கள்.
இயற்கைச் சிந்தனையோடு கூடிய பகிர்வு... அதிலும் 450-ஆவது இடுகை எனும்போது சிறப்பு இன்னும் அதிகம்...
ReplyDeleteஉங்களது வலைப் பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள் முனைவரே....
நானூற்று ஐம்பதுக்கு என் வாழ்த்துகள்... நண்பரே...
ReplyDeleteமரங்களை பற்றிய தங்களின் படைப்பு மரமண்டைகளுக்கும் உரைக்கும் படைப்பு! அருமை...
அழகான தகவலுடன் அருமையான கவிதை நன்றி நண்பரே பகிர்வுக்கு
ReplyDelete450 ஆவது பதிவுக்கு என் அன்பு வாழ்த்துகள் குணசீலா..
ReplyDeleteஇயற்கை மனிதனுக்கு உயிர் கொடுத்தது..வாழ வழி செய்தது.....
அருமையான பகிர்வுப்பா.. அன்பு வாழ்த்துகள் குணசீலா...
@suryajeeva அந்த நுட்பத்தைத்தானே எனக்கு என் கல்வி சொல்லித்தந்திருக்கிறது..
ReplyDelete@மேரிஜோசப் அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பா.
ReplyDelete@மாய உலகம் நன்றி நண்பா.
ReplyDelete@சே.குமார் மகிழ்ச்சி குமார்.
ReplyDelete@வைரை சதிஷ் நன்றி சதீஷ்
ReplyDelete@செய்தாலி நன்றி செய்தாலி
ReplyDelete@சம்பத்குமார் நன்றி சம்பத்.
ReplyDelete@Rathnavel மகிழ்சி ஐயா
ReplyDelete@மகேந்திரன்மரங்கள் நமக்கு பிராண ஈஸ்வரன் போல.....
ReplyDeleteமரங்கள் வளர்ப்போம்
அழகாகச் சொன்னீர்கள் நண்பா..
@Ramani இது என் 3வருடக் கனவு 5வருட உழைப்பு ஐயா..
ReplyDeleteதங்கள் புரிதலுக்கு நன்றிகள்.
@ராஜா MVS நன்றி இராஜா
ReplyDelete@சசிகுமார் நன்றி சசி.
ReplyDelete@thendralsaravanan மகிழ்ச்சி தென்றல்.
ReplyDelete@கவிதை வீதி... // சௌந்தர் // நன்றி நண்பா.
ReplyDelete@NIZAMUDEEN நன்றி நிசாமுதி்ன்
ReplyDelete@கோகுல் நன்றி கோகுல்.
ReplyDelete@ஷர்மி நன்றி ஷர்மி
ReplyDelete@பிரணவன் வருகைக்கு நன்றி நண்பா.
ReplyDelete@சத்ரியன் நன்றி கவிஞரே..
ReplyDelete@வெங்கட் நாகராஜ் நன்றி நண்பா.
ReplyDelete@Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; நன்றி டாக்டர்.
ReplyDelete@M.R நன்றி நண்பா.
ReplyDelete@மஞ்சுபாஷிணி நன்றி பாஷினி
ReplyDelete