வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 19 அக்டோபர், 2011

இது தான் ஆன்மீகமோ????ன்மீகம் என்பது முடிவடையாத தேடல்!
ஆன்மீகத்தைப் பற்றி, பெரிய பெரிய ஞானிகள் கூட அரிய பெரிய கருத்துக்களை முன்வைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆன்மீகம் குறித்த இளம் ஞானி ஒருவரின் சிந்தனை இன்றைய இடுகையாக...
என் மாணவன் ச.கேசவன் (இயற்பியல் துறை இரண்டாமாண்டு) ஆன்மீகம் பற்றிய தேடலோடு ஒரு கவிதையைப் படைத்து வந்தார். படித்துப் பார்த்த நான் அவர் உடலுக்கு வயது 19 இருக்கலாம் ஆனால் எழுத்துக்களுக்கு வயது 60க்குக் குறையாமல் இருக்கும் என மதிப்பீடு செய்தேன்.
இதோ அவருடைய கவிதை..

ஆன்மீகம் என்பது
அமைதிக்கு மார்க்கம்!
ஆன்மாவின் ஒழுக்கம்!
கற்பனைக்கு நெருக்கம்!
தனிமைக்கு சொர்க்கம்!
நம்பிக்கையின் விளக்கம்!
நற்கருத்துக்களின் உள்ளடக்கம்!
சான்றோரின் அனுபவச் சுருக்கம்!

பேராற்றல் கொண்ட ஆதவனை
வான்மேகம் மறைத்ததுபோல்
அண்டத்தை அடக்கிவைத்த
ஆன்மீகம் படும்பாடு பெரும்பாடு!!
இதோ சில...

வாயில்லா உயிர்களுக்கு
வாயார உணவளித்தான்!
வாயெடுத்து வாழ்த்துமுன்னே
பலிகொடுத்து பக்தி என்றான்!!

தாயின் பாதம் பதம் அறியாத ஒருவன்
ஆன்மீகம் பெயரைச் சொல்லி
பணம் உறிஞ்சும் அட்டைப்புழுவின்
பாதம் கழுவி மோட்சம் என்றான்!!

இயல்பான பெண் ஒருத்தி
சத்தமிட்டுத் தள்ளாட
சக்தி அருளாடி வந்துவிட்டாள்!
வேதவாக்கு அவள் சொல் என்றான்!!

தீயினிலே நடக்கின்றான்!
தீச்சட்டி ஏந்துகின்றான்!
சூலம் கொண்டு உடலுறுப்பை
இரத்தம் வர வருத்துகின்றான்!

இதில் என்ன இவன் வாழ்ந்துவிட்டான்?
எனக்கொன்றும் புரியவில்லை!!
இறைசிந்தனை இல்லாது
இன்புற்று வாழ்வோர் பலரே!
இறைச் சிந்தனையோடு இன்னும்
இவன் வாழும் இடம் சிறு குடிலே!!

தேங்காய் அழுகினும், வளைந்து உடையினும்
மலர் மாலை வாடினாலும், அகழ்விளக்கு அணைந்தாலும்
சிறுகாயம் ஏற்படினும்,
குற்றம் குற்றம் தெய்வக்குற்றம்??????

ஏதடா குற்றம்? எதிலடா குற்றம்?
சந்தனம் தான் ஆன்மீகம்!!
அதை ஏன் நீ
சகதியிலே கலந்துவிட்டாய்?????

இறைநம்பிக்கை தேவையல்ல
என்பதல்ல என்கருத்து!
இதில் தேவையல்ல மூடநம்பிக்கை
என்பதுதான் என்கருத்து!!

இறை நூல்கள் படிப்பதிலும்
மந்திரங்கள் ஓதுவதிலும்
தினம் வழிபாடு செய்பதிலும் தான்
இறைவன் மகிழ்கின்றானா?         
இதுதானோ ஆன்மீகம்???
இல்லை...

இறைநூல் நெறிப்படி
அதன் ஒழுக்கங்களைப்
பின்பற்றி வாழ்வதை இறைவன் விரும்புகிறானா??
இது தானோ ஆன்மீகம்???

விடை தெரியவில்லை....
தெரிந்தவர்கள் கூறுங்களேன்...

கவிதை ஆக்கம்
ச.கேசவன்
இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம்.
தொடர்புடைய இடுகைகள்


41 கருத்துகள்:

 1. நன்றாக கேட்டுள்ளீர்கள் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்கவேண்டியவை.

  பதிலளிநீக்கு
 2. மறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்
  அதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க
  முயற்சி செய்ய வேண்டும்.
  ஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.
  அழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...

  பதிலளிநீக்கு
 3. இன்று பக்தி என்பதே கொடுக்கல் வாங்கல் ஆகிவிட்டது.
  நீ ஒன்று கொடுத்தால் நான் ஒன்று கொடுப்பேன் என்று
  பேரம் பேசும் நிலை.
  மனதை சுத்தப்படுத்தும் ஆன்மிகம், கொடுக்கல் வாங்கலில்
  இல்லை என நிதர்சனமாக கவி கூறி நிற்கின்றது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஆன்மீகம் குறித்த அருமையான கவிதை.
  எழுதிய கேசவனுக்கும் பதிவிட்ட முனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஆன்மீகம் பற்றிய மிகச்சரியான விளக்கம். இதைத்தான் அன்றே பெரியார் சொன்னார், கடவுளை மற, மனிதனை நினை என்று. மனிதநேயத்தை விடவும் வேறெங்கு இறைவன் குடிகொண்டுள்ளான்? இளைய தலைமுறையிடம் இப்படியொரு அருஞ்சிந்தனை உருவாகியிருப்பது நல்லதொரு ஆரம்பம். மாணவன் கேசவனுக்குப் பாராட்டுக்களும், பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றியும் முனைவரே.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் மாணவர் ஆத்திகத்தில் இருந்து நாத்திக பாதைக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளார்.. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் அவன் கடவுள்.. அதை விட்டு விட்டு கடவுள் என்ற பிம்பத்தை நம்பி மனிதன் மிருகமாக தரம் இறங்க தொடங்கினால் உலகில் சூழ்கிறது இருள்.... கடவுள் மனிதனை தன சாயலில் படைத்தான் என்பார்கள் மதவாதிகள்... இதில் பாதி உண்மை இருக்கிறது... நல்லது கேட்டதை ஆராய்ந்து பகுத்தறிந்து நல்லவனாய் வாழ்ந்தால் மனிதன் தான் கடவுள்...

  பதிலளிநீக்கு
 7. அருமையான சிந்தனை.உங்கள் மாணவருக்கும் உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வயதுக்கு மீறிய அருமையான சிந்தனை
  ஆயினும் மதம் பக்தி மூட நம்பிக்கையினை
  ஆன்மீகத்துடன் இணைத்து யோசித்துவிட்டதுபோல் பட்டது
  எனக்கு ஆன்மீகம் பிடிக்கும் மதம் பிடிக்காது
  அரசியல் பிடிக்கும் கட்சிகள் பிடிக்காது
  இவைகளுக்கிடையே உள்ள சிறு
  வித்தியாசங்களை காலப் போக்கில்
  புரிந்து கொள்வார்
  அருமையான படைப்பாளியை அறிமுகம்
  செய்தமைக்கு நன்றி
  அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
  த.ம 5

  பதிலளிநீக்கு
 9. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.

  நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.

  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  தயவு செய்து உங்களுக்கு தேவைஇல்லை என்று நினைக்காதீர்..


  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo  Thanks
  Balu.N

  பதிலளிநீக்கு
 10. நல்ல தெளிவான சிந்தனை...
  அருமையான கவிதை...
  கவிதை படைத்த மாணவருக்கு வாழ்த்துகள்...
  எங்களோடு பகிர்ந்துக் கொண்ட தங்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 11. மாணவர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது

  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 12. தூய்மையான ஆத்திகமும், தூய்மையான நாத்திகமும் வேறல்ல. சிறிய வயதிலேயே அவருக்கு இவ்வளவு தெளிவு இருக்கிறதென்றால், எதிர்கால சமூகம் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம். உங்கள் அருகில் இருப்பது அக்கினி குஞ்சு. பத்திரமா பாத்துக்கங்க.

  பதிலளிநீக்கு
 13. /இறைநம்பிக்கை தேவையல்லஎன்பதல்ல என்கருத்து!இதில் தேவையல்ல மூடநம்பிக்கைஎன்பதுதான் என்கருத்து/
  அருமை.இத்னை சொன்னால் நாத்திகன் என்கிறார்.
  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 14. கேசவனின் கவிதை முயற்சி பாராட்டுக்குரியது. அவரை சிவவாக்கியரின் பாடல்களை வாசிக்கப் பரிந்துரையுங்கள் ஐயா!

  ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
  நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
  வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
  கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

  பதிலளிநீக்கு
 15. ஒரு பக்குவப்பட்ட ஞானியின் தேடல்.ஆழமாக யோசிக்க மனதில் பொறுமையும் அமைதியும் தேவை.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 16. பெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை  வளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..  நல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்  கேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....

  பதிலளிநீக்கு
 17. பெரியாரின் கருத்துக்கு ஏற்ப கடவுளை மற... மனிதநேயத்தை  வளர்த்துக்கொள் அதுவே இறைவனுக்கு ஒப்பாகும்..  நல்லதொரு விளக்கம் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் நண்பன்  கேசவனுக்கும் பாராட்டும் நன்றியும் பல .....

  பதிலளிநீக்கு
 18. @மகேந்திரன் தங்கள் வருகைக்கும் மாணவரை ஊக்குவித்தமைக்கும் நன்றிகள் நண்பரே..

  பதிலளிநீக்கு
 19. @suryajeeva நல்லதொரு சிந்தனையை மாணவருக்கு அறிவுறுத்திச் சென்றமைக்கு நன்றிகள் நண்பா.

  பதிலளிநீக்கு
 20. @Ramani இளம் படைப்பாளியை ஏற்றுக்கொண்மைக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 21. @ரசிகன் எதிர்பார்ப்போம் நண்பா..

  நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவோம்..

  பதிலளிநீக்கு
 22. @சேட்டைக்காரன் சித்தர் பாடல்களை முன்பே பல அறிமுகம் செய்திருக்கிறேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 23. @ஹேமா உண்மைதான் ஹேமா..

  நீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 24. மகேந்திரன் said... 2
  மறைநூல்களை படிப்பதில் இல்லை ஆன்மிகம்
  அதில் சொன்ன ஒழுக்கங்களை கொஞ்சமேனும் கடைபிடிக்க
  முயற்சி செய்ய வேண்டும்.
  ஒழுக்கமே ஒரு மனிதனை மனிதனாகச் செய்யும்.
  அழகாய் கவியில் தெரிவித்த மாணவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிவிட்ட முனைவருக்கு நன்றிகள் பல...i agree this

  பதிலளிநீக்கு
 25. தங்களது மாணவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. நல்லதொரு சிந்தனை . வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு