Tuesday, October 4, 2011

சாலையைக் கடக்கும் பொழுதுகளில்..

ஒவ்வொரு நாளும் நாம் சாலையைக் கடக்கும்போது எத்தனை எத்தனை காட்சிகளைப் பார்க்கிறோம்..


சில மணித்துளிகளே ஆனாலும் பல மணி நேர சிந்தனையைத் தூண்டுவனவாக இந்தக் காட்சிகள் அமைவதுண்டு..


என் மனதில் கேள்வி எழுப்பிய..
என்னைச் சிந்திக்கச் செய்த..


சில காட்சிகள் இங்கே..

முதுகெலும்பு
மூட்டை தூக்கி வாழ்ந்தாலும்
முதுகெலும்போடு
வாழ்கிறேன்!

--000--மனசு
 குப்பையை
சுத்தம் செய்தாலும்
மனசு அழுக்காய்ப்
போவதில்லை!
எமனின் அழைப்பு..
கடவுளின் குரல்!
பேருந்தின் உள்ளே கடவுள்
நடத்துனர் வடிவில் வந்து..
உள்ளே வா! உள்ளே வா!
என்று அழைக்கிறார்..

வெளியே எமன்
அலைபேசி வடிவில் வந்து..
என்னோடு வா! என்னோடு வா!
என்ற அழைக்கிறார்..

பேருந்தின் உள்ளே ஓடும்
பாடலின் பேரோசையில்

கடவுளின் குரல் கேட்பதில்லை!!

தொடர்புடைய இடுகைகள்

62 comments:

 1. பேருந்தில் உள்ளே இடமிருந்தும் படிக்கட்டில் நின்றும் தொங்கியும் வருபவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும். உங்களுக்கு அழகிய கவிதை வந்திருக்கிறது. பிரமாதம் ஐயா!

  ReplyDelete
 2. உண்மை தான் ..நன்றி

  ReplyDelete
 3. தெரு ஓரமாக பசிபடர்ந்த கண்களுடன் இருக்கும் வயோதிக இரவலர்கள். கண்கள் பார்த்து மனது வலித்து கவிதை தருகிறது. நல்ல கவிதைகள்.

  ReplyDelete
 4. அது ஒரு சுகம் தலைவரே, எமனுக்கே டா டா காட்டுவது? இந்த விளையாட்டில் பெரும்பாலும் எமன் தான் ஜெயிக்கிறான் என்பது தான் கொடுமை

  ReplyDelete
 5. குணா,

  முப்பொழுதும் சமூகச் சிந்தனையே உமக்கு!

  மூன்றும் சிறப்பு வாய்ந்தவைகளே!

  ReplyDelete
 6. சார், அருமையான பதிவு... சொல்ல வேண்டிய விஷயத்தை நறுக்குன்னு சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
 7. முதுகெலும்பு = கம்பீரம்

  மனசு = தூய்மை

  கடவுளின் குரல் = படிப்பவரின் மனதை அசைக்கும் வரிகள்....

  அத்தனையும் அருமை.. அதிலும் கடவுளின் குரல் வரிகள் சிந்திக்கவைத்த வரிகள் குணசீலா...

  அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 8. அன்பு நிறை முனைவரே,
  அன்றாடம் தம் வாழ்க்கையை ஓட்டுவதற்கு பாடுபடுபவர்கள் எத்தனை எத்தனையோ.... அதில் சிலர் இல்லையென்றால் நம்மால் சுகாதாரமாக இருக்கமுடியாது. கழிவுநீர்க் கால்வாய் சுத்தம் செய்பவர், குப்பை அள்ளுபவர், இப்படி எத்தனையோ....
  சிறு சிறு பலூன்களை விற்று பிழைப்பு நடத்துபவர்கள் இருக்கிறார்கள்.... தம் கொள்கைகளை அந்த பலூனைப் போல கட்டி பரக்கவிடுபவர்களும் இருக்கிறார்கள்.
  பன்முக வாழ்க்கை...

  பேருந்தின் படியில் பயணித்ததொடு அலைபேசியும் பயன்படுத்தும் நபரை அருமையாய் மென்மையாய் சாடி இருக்கிறீர்கள்...
  புரிந்துகொள்ளட்டும் கனவான்கள்...

  உங்களின் தொடர்புடைய இடுகைகள் பொருத்தமானவையாக இருக்கிறது முனைவரே.

  ReplyDelete
 9. நீங்கள் இட்ட அந்த கடைசிப் படத்தில் இன்னுமொரு சமுதாய மீறல், சாலைவிதிகளை மதிக்காதவர்.... தவறான பக்கம் பேருந்தை முந்திச் செல்கிறார்...

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 11. காட்சிகளுடன் இணந்த கவிதை எச்சரிக்கை மணியாக உள்ளது.பேருந்து காட்சி ஒரு பதைபதைப்பைத் தரும் அன்றாட நிகழ்ச்சி!ஒரு சிறு மணித்துளிகளில் எமனிடமிருந்து தப்பித்த சகலகலா வல்லவன்களை பார்த்ததும் உண்டு!

  ReplyDelete
 12. நீங்கள் சொல்ல்வதேல்லாம் உண்மைதான்..

  ReplyDelete
 13. படிக்காதவர்கள் தான் தங்களின் உழைப்பை மட்டுமே பணம் சேர்க்க மூலதனமாய் கொள்கின்றனர். . .

  ReplyDelete
 14. அழகான பத்தி வாழ்த்துக்கள் முனைவரே..!

  ReplyDelete
 15. அழகான கருத்துடன் அருமையான பதிவு நண்பரே

  தொங்கரவங்க தொங்கிட்டு தான் இருக்காங்க

  ReplyDelete
 16. ////////பேருந்தின் உள்ளே ஓடும்
  பாடலின் பேரோசையில்

  கடவுளின் குரல் கேட்பதில்லை!!////

  ஆம் நண்பரே உண்மை தான்.இவர்களை என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.என்ன செய்வது?நடத்துனர்(கடவுள்)தான் பாவம்

  ReplyDelete
 17. சிந்திக்க வைத்து விட்டீர்கள் முனைவரே...!!!

  ReplyDelete
 18. பேருந்தில் படியில் பயணம் செய்வோரைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. படங்களுக்கான உங்கள் கமெண்ட்ஸ் அருமை.

  ReplyDelete
 19. மூட்டை தூக்கி வாழ்ந்தாலும்
  முதுகெலும்போடு
  வாழ்கிறேன்!//சிந்திக்க வைத்து விட்டீர்கள்

  ReplyDelete
 20. அன்றாட நிகழ்வுதான் ஆயினும்
  பார்க்கத் தெரிந்தவர்கள் பார்த்தால்
  அது ஒரு அழகிய படைப்பாக மாறிவிடும்
  எனபதற்கு இந்தப் படைப்பே சான்று
  மனம் கவர்ந்த பதிவு த.ம 12

  ReplyDelete
 21. மூன்று முத்துக்கள்!
  நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 22. தனிமனிதன், சமூதாயம், விழிப்புணர்வு ஆகிய மூன்றையும் புரியும்படி நாலுவரியில்...

  மிக அருமை நண்பரே...

  ReplyDelete
 23. படங்களும், கவிதைகளும் அருமை. கச்சிதமாக இருக்கிறது.

  ReplyDelete
 24. எவ்வளவு அருமையாக அன்றாட வாழ்வை கவிதையாக்கி விட்டீர்கள். மிகவும் அருமை

  ReplyDelete
 25. படங்களும் அவற்றிற்கு உங்கள் கவிதையும் நிதர்சனம்.....

  ReplyDelete
 26. எளிய,அதே சமயம் அவசியமான மனிதர்களைப்பற்றிய காட்சிகளும்,கவிதையும் அருமை அய்யா!

  ReplyDelete
 27. சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு அழகிய
  கவிதைவரிகளுடனும் அருமை!.. வாழ்த்துக்கள் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .என் தளத்தில் புதிய பாடல்வரிகள் உள்ளது தங்கள் கருத்தினையும் எதிர்பார்த்து .

  ReplyDelete
 28. முதுகெலும்போடு வாழ்கிறேன்.ரொம்ப பிடிச்சிருக்கு!!

  ReplyDelete
 29. பொருளோடு பொறுப்போடும் மூன்று கவிதைகளும்..ரொம்ப பிடிச்சிருக்கு குணா..

  ReplyDelete
 30. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கணேஷ்.

  ReplyDelete
 31. கருத்துரைக்கு நன்றி சமுத்ரா.

  ReplyDelete
 32. கருத்துரைக்கு நன்றி சாகம்பரி..

  ReplyDelete
 33. அழகாகச் சொன்னீர்கள் சூர்யஜீவா..

  ReplyDelete
 34. நாமெல்லாம் சமூக விலங்கல்லவா..
  அதனால் தான்...

  நன்றி சத்ரியன்..

  ReplyDelete
 35. மகிழ்ச்சி பிரகாஷ்..

  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 36. தங்கள் ஆழ்ந்த பார்வைக்கும்
  ஒப்பீட்டிற்கும்
  புரிதலுக்கும்

  நன்றிகள் மஞ்சு..

  ReplyDelete
 37. கருத்துரைகளுக்கு நன்றி மகேந்திரன்.

  தங்கள் ஆழ்ந்த பார்வையும், அறிவுறுத்தலும் பெருமகிழ்ச்சியளிப்பதாக உள்ளது..

  ReplyDelete
 38. கருத்துரைக்கு நன்றிகள் தென்றல்.

  ReplyDelete
 39. உண்மைதான் பிரணவன்..

  நல்ல புரிதல்..

  ReplyDelete
 40. வருகைக்கு நன்றி எம்ஆர்.

  ReplyDelete
 41. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சதீஷ்

  ReplyDelete
 42. மிக்க மகிழ்ச்சி இரமணி ஐயா..

  ReplyDelete
 43. முத்துக்களை அணிந்துகொண்டமைக்கு நன்றிகள் புலவரே..

  ReplyDelete
 44. புரிதலுக்கு நன்றி இராஜா..

  ReplyDelete
 45. வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றிகள் அம்பாளடியாள்..

  ReplyDelete
 46. போற்றக்கூடிய செயல் புரிவோரையும், சாடுதற்குரிய செயல் புரிவோரையும் சரியாகப் பதிந்துள்ளீர்கள். சமூகத்தின் பால் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறை பாராட்டுதற்குரியது முனைவரே.

  ReplyDelete
 47. தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா..

  ReplyDelete
 48. நான் இராமசாமி தமிழ்க் கல்லுாரி அன்பு மெய்யப்பன். உங்களுடைய சிந்தனைகளும், கருத்துகளும் சிறப்பாக உள்ளன.

  ReplyDelete