Wednesday, October 5, 2011

நயமான ஊடல்.


பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் 


புதல்வனைத் தூக்கி விளையாடினான்..

தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை..

பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..

பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல 


அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் 


பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு 


இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் 


நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்..

அழகான உவமை.

பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு,

ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது!

அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன!

இக்காட்சியானது புகழ்பெற்ற ஆடுமகளின் அழகிய நெற்றியில்  தாழும்படி 


அழகுடன் செருகி இருந்த “வயந்தகம்“ போல இருந்தது!

இத்தகைய குளிந்த துறையினைக் கொண்ட ஊரனே கேள்...

நயமான ஊடல்.

பரத்தையர் அணிந்த அணிகளோடு இங்கு வந்து நீ எம் புதல்வனைத் 
தூக்கவேண்டாம்...

மணியை ஒத்த அவனது சிவந்த வாயிலிருந்து ஊரும் நீரெல்லாம் உன் மார்பில் அணிந்த சந்தனத்தை அழித்துவிடும். பிறகு உன்னை அனுப்பிய பரத்தை நீ 


வேறு மகளிரோடு கூடினாயோ என்று வருந்துவாள் அல்லவா?

எம் புதல்வனை நீ தழுவுதல் வேண்டாம். அவன் உன் மார்பில் அணியப்பட்ட வடங்களாகிய முத்தாரத்தைப் பிடித்து அறுப்பான். பின்..  உன் பரத்தையர் அவரிட்ட அடையளம் காணாது... உன்னோடு ஊடிவிடுவார்களல்லவா?


எம் புதல்வனை நீ தேடி எடுத்துக்கொள்ளாதபோதும் அவன் உன்னிடம் வருதல் கண்டாலும் அவனைத் தூக்கிக்கொள்ளாதே..

நின் தலையில் வண்டுகள் ஒலிக்கும் மலர்க்கொத்துகள் அணிந்துள்ளாய்! அவன் அம்மாலையை அறுப்பான். உன்னைச் சேர்ந்தவர்கள் யார் என்பதை 


அறிய அடையாளமாக வைத்த மாலை அழகிழந்திருப்பதை அறிந்து அப்பரத்தையர் உன் மீது சினம் கொள்வாள் அல்லவா?


மலர் போல அழகிய கண்களைக் கொண்ட புதல்வனைப் பொய் பல சொல்லிப் பாராட்டி அவனைவிட்டு நீங்காமலும்...

உன் பரத்தையர் உனக்கு அடையாளமாக அணிவித்து அனுப்பிய மாலை, அணிகலன், சந்தனம் உள்ளிட்டவை சிதையாது அவனிடமிருந்து பாதுகாத்தும் உன்னால் இருக்கமுடியாது அதனால் நீ எம் வாயிலில் நிற்காதே..
நின்றால் அவன் உன் அணியைச் சிதைப்பான்...

அதனால் எம் புதல்வனை எம்மிடம் தந்துவிட்டு நீ மீண்டும் பரதையரிடமே செல்வாயாக.....
என்றாள் தலைவி..

பாடல் இதோ..புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த 
முள் அரைத் தாமரை முழு முதல் சாய்த்துஅதன் 
வள் இதழ் உற நீடிவயங்கிய ஒரு கதிர், 
அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் அணி நுதல் 
வகை பெறச் செரீஇய வயந்தகம் போல்தோன்றும்

தகை பெறு கழனி அம் தண் துறை ஊர! கேள்: 
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி; 
மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால்; 
'தோய்ந்தாரை அறிகுவேன்யான்எனகமழும் நின் 
சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ;

புல்லல் எம் புதல்வனைபுகல் அகல் நின் மார்பில் 
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானான்; 
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் 
பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ; 
கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதிநின் சென்னி

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால்; 
'நண்ணியார்க் காட்டுவது இதுஎனகமழும் நின் 
கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ; 
என ஆங்கு 
பூங் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி,


நீங்காய் இகவாய் நெடுங் கடை நில்லாதி; 
ஆங்கே அவர் வயின் சென்றீ அணி சிதைப்பான் 
ஈங்கு எம் புதல்வனைத் தந்து.

கலித்தொகை -79
ஊடற் காலத்தே தலைவி தலைவனைச் செல்க எனக் கூறிவிடுத்தனள். தலைவன், இடமும் காலமும் பற்றி அறிந்து இனிச் செல்லான், உடன் இருப்பான்  என்ற நிலையில் ஊடல் உள்ளத்தால் கூடப் பெறாதாள்  செல்க எனக்கூறி விடுத்து ஆற்றினள்.

பாடல் வழியே..

 1. தலைவன் பரத்தையரிடம் செல்வது சங்ககால வழக்கமாக இருந்தது என்பதையும் அதனைச் சமூகம் தண்டிக்காவிட்டாலும். குடும்பத் தலைவி விரும்பவில்லை என்பதையும் பாடல் சுட்டுகிறது.
 2. தாமரை மலர் மீது நெற்கதிர்கள் தலைசாய்ந்திருப்பது  ஆடுமகளின் நெற்றிச்சுட்டி போல இருந்தது என்ற உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது.
 3. தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டாலும் நயமாகப் பேசும் விதம் தலைவன் தன் தவறை உணர தக்க கருவியாக அமைகிறது.

தமிழ்ச் சொல் அறிவோம்..

 1. இமிழ்தல் ஒலித்தல்
 2. செரிஇய  - செருகிய
 3. வயந்தகம் நெற்றிச்சுட்டி
 4. பல்காழ் பல்வடம் (அணிகலன்)
 5. காய்ககுவள் வருந்துவள்.
தொடர்பான இடுகைகள்

38 comments:

 1. அன்புநிறை முனைவருக்கு சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள்.
  ஒரு பெண்ணின் மனதை படம்போட்டு காண்பிக்கும்
  அழகிய பதிவு. எந்த பெண்தான் ஒத்துக்கொள்வாள், கணவன்
  பரத்தையிடம் செல்வதை. அங்கே கணவனுக்கான பிள்ளைப்
  பாசத்தையும் அழகிய வர்ணனைகளுடன் எளிமையுற
  விவரித்திருக்கிறீர்கள்.
  அருமை.

  ReplyDelete
 2. த.ம.4

  ஊடுதல் காமத்திற்கின்பம் அல்லவா?!

  ReplyDelete
 3. //பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு,

  ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது!

  அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன!

  இக்காட்சியானது புகழ்பெற்ற ஆடுமகளின் அழகிய நெற்றியில் தாழும்படி //

  எனை வசீகரித்தது.

  வாழ்த்துக்கள் முனைவரே...!

  ReplyDelete
 4. இந்த பாட்டுல உள்குத்து இல்லையே

  ReplyDelete
 5. பாடல் அருமை முனைவரே

  ReplyDelete
 6. தமிழ்ச் சொல் அறிவோம்..

  புதிய விஷயங்கள் ........


  நன்றி நண்பா ........

  ReplyDelete
 7. பாடல் அருமை... நண்பரே...

  ReplyDelete
 8. அருமையான பதிவு நண்பரே பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 9. நல்ல பாடல் நன்றி

  ReplyDelete
 10. தமிழுக்கு இணை தமிழ் தான்

  ReplyDelete
 11. பாடலும் பயன்தரு விளக்கமும்
  நன்று முனைவரே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. ஃஃஃஃபரத்தையர் அணிந்த அணிகளோடு இங்கு வந்து நீ எம் புதல்வனைத்
  தூக்கவேண்டாம்...ஃஃஃஃ

  இந்த பரத்தையர் என்ற சொல்லை தெளிவாகப் புரிந்து கொண்டேன்..

  நன்றி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  கணக்குத் திருடும் Hackers இடம் இருந்து தப்புவதற்கு எனக்குத் தெரிந்த இலகு வழி

  ReplyDelete
 13. அருமையான பாடல்... தவறைச் சுட்டிக்காட்டுவதிலும் எவ்வளவு நேர்த்தி....

  ReplyDelete
 14. தான் பெற்றக் குழந்தையைக் கொஞ்சும் பாக்கியத்தை இழக்க எந்தத் தகப்பன்தான் முன்வருவான்? குழந்தையைக் கொண்டே தன் உள்ளக்குமுறலை மனைவி கணவனின் மனத்தில் அழகாகப் பதிவு செய்தமை அழகு. பழங்காலப் பாடல்களில் உள்ள உவமைநயம் என்றுமே வியப்புக்குரியது. பகிர்வுக்கு நன்றி முனைவரே.

  ReplyDelete
 15. தங்கள் தொடர் வருகைக்கும் ஆழ்ந்த வாசித்தலுக்கும் புரிதலுக்கும் நன்றி மகேந்திரன்..

  ReplyDelete
 16. உண்மைதான் சென்னைப்பித்தன்..

  தொடர்புடைய குறளை உவமித்தமைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
 17. தங்களை வசீகரித்தது இலக்கியச்சுவையல்லவா நிரோஷ்..

  ReplyDelete
 18. அறிந்துகொண்டமைக்கு நன்றி இராஜா.

  ReplyDelete
 19. சூர்யஜீவா..

  உள்குத்துதான் இருக்கு..

  போ என்று தலைவி சொன்னாலும்
  போனா நடக்குறதே வேற என்றுதான் மிரட்டுகிறாள்..

  ReplyDelete
 20. தங்கள் தொடர் வருகைக்கு நன்றி சதீஷ்

  ReplyDelete
 21. கருத்துரைக்கு நன்றி உங்கள் நண்பன்..

  ReplyDelete
 22. உண்மைதான் வெங்கட்..

  இரசித்தலுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 23. இலக்கிய நயம் வாசித்தமைக்கு மகிழ்ச்சி கீதா.

  ReplyDelete
 24. அருமை முனைவரே.....உங்கள் சேவை தொடரட்டும்......

  ReplyDelete
 25. அருமை முனைவரே.....உங்கள் சேவை தொடரட்டும்......

  ReplyDelete
 26. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சீனு.

  ReplyDelete