Thursday, October 20, 2011

வருக! வருக! என வரவேற்கிறேன்!

வாங்க! வாங்க!

மிழர் பண்பாட்டில் வரவேற்றல் குறிப்பிடத்தக்க பண்பாடாகும்.       இப்பண்பாட்டை புறப்பாடல் வழி இயம்புவதே இவ்விடுகையின்    நோக்கமாகிறது.


அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகிறோம்.                            
புன்சிரிப்புடன் புகழ்மொழி கூறுகிறோம்.பெரியோராயிருந்தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கிறோம்.    வரவேற்பதிலே இன்றும் கூடப் பலவகை உண்டு. 

கை கும்பிட்டு வரவேற்பது. கை கொடுத்து சமத்துவமாக வரவேற்பது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்பது. இப்படிப் பல வகையில் வரவேற்கிறோம்.

இவற்றுள் கை குலுக்கி வரவேற்பது தமிழர் நாகரிகம் அன்று. இந்த முறை  மேல் நாட்டாரிடம்  நாம் கற்றுக் கொண்டது  என்போர் உண்டு. உயர்ந்தவர்களை பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து வணங்கி வரவேற்கவேண்டும் சமமுள்ளவரைக் கண்டால்  கும்பிட்டு வரவேற்கவேண்டும். தன்னிலும் தாழ்ந்தவரை இளையவரைக் கண்டால்  தழுவிக் கொண்டு  வரவேற்கவேண்டும்.  இதுவே தமிழரின் வரவேற்பு முறை இந்திய நாட்டு நாகரிகம் என்றும் கூறுகின்றனர்.

இவை தமிழர் நாகரிகமாக இருக்கட்டும்.இந்திய நாகரிகமாகவும் இருக்கட்டும். இந்த நாகரிகத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

கை கொடுத்து வரவேற்பது  மேல் நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான் நம் கேள்வி...

என்று தம் பண்பாடு சார்ந்த வினாவை புறநானூறு தமிழ் நாகரிகம் என்னும் நூலில் முன் வைக்கிறார் 
தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். இதற்கு அவர் சான்று கூறும் புறப்பாடலில் இந்தப் பண்பாடு எந்த அளவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

பிலர் ஒருநாள் டுங்கோ வாழியாதனைச் சந்திக்கச் சென்றார் வேந்தனும் எழுந்து வந்து கைகொடுத்து வரவேற்றான். கபிலரின் கைகளைத் தொட்டபோது வேந்தனுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றியது..

நம் கைகளைவிட புலவரின் கைகளில் மிகவும் மென்மையாக இருக்கிறதே?“ என்பதுதான் அந்தக் கேள்வி. அதை வாய் திறந்து புலவரிடமே கேட்டுவிட்டான் வேந்தன்..

அதற்குக் கபிலர் பதிலளிப்பதாகவே இப்பாடல்அமைகிறது..  


கபிலர் கடுங்கோ வாழியாதனைப் பார்த்து ...

அரசே.. நீ உழைப்பாளி

யானையை அடக்கியாளும் இரும்பாலான அங்குசம்!

குதிரையின் கடிவாளம்!

அம்பு, வில் மற்றும் ஆயுதங்கள்! ஆகியவற்றையெல்லாம் பிடித்துக் கொண்டே இருப்பதல்லவா உன் கைகள் வன்மையாக இருக்கின்றன!!

ஆனால் என் கையோ சுவையான ஊன் கலந்த சோற்றை உண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பதல்லவா என் வேலை.. அதனால் தான் என் கைகள் மென்மையாக இருக்கின்றன என்கிறார். பாடல் இதோ..

கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5.
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10.
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15.
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)
 புறநானூறு -14

கபிலர் வேந்தனைப் பார்த்து..
மன்னா நீயோ..
வலிமைகொண்ட யானைகளைக் கொண்டு எதிரிகளின் காவல் மிக்க கோட்டைகளை அழிப்பாய்!

அக்கோட்டையின் உள்ளே தாழிடப்பட்ட எழு என்னும் கணைய மரத்தைச் சிதைப்பாய்!

இரும்பாலான அங்குசத்தைத் தாங்கி யானைகளை போர்க்களத்தே செலுத்துவாய்!

எத்தகைய போரானாலும் அச்சமின்றிச் சென்று தாங்கி நிற்பாய்!

குந்தாலியால் கற்பாறைகள் உடைக்கப்பட்டு அவ்விடத்தே பெரிய குழிகளாகவும் அதில் நீர் நிறைந்தும் காணப்படும். ஆழமான அக்குழிகளில் குதிரைகள் வீழ்ந்துவிடாமல் குதிரைகளைக் கடிவாளத்தாலே கட்டுப்படுத்துவாய்!

அம்புசுமந்த உன் முதுகிலிருந்து அம்பெடுத்து வில்லின் நாணை இழுத்துப் பிடித்து எதிரிகளின் மீது அம்புகளை எய்வாய்!

உன்னை நாடிப் பரிசில் வேண்டி வருவோர்க்கெல்லாம் இல்லை என்றுரைக்காமல் பொன்னும் பொருளும் அணிகலனும் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பாய்.. இவ்வாறு உன் கைகள் ஓயாது பணியாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதனால் உன் கைகள் வலிமையானதாகக் காட்சியளிக்கின்றன.

என் போன்ற புலவர்களின் கை உன் கைக்கு நேர் எதிரானது. எங்களுக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது..

உன் போன்ற வள்ளல்கள் தரும் ஊன் கலந்த உணவை உண்டுவிட்டு, அது செறிக்கவில்லையே என வருந்தி வயிறு தடவிக் கொண்டிருப்பது மட்டுமல்லவா எங்கள் வேலை என்கிறார்.


 பாடல் வழியே..

1. விருந்தினரைக் கை கொடுத்து வரவேற்கும் தமிழர் பண்பாடு அறிவுறுத்தப்படுகிறது.
2. கடுங்கோவின் வீரம், கொடை ஆகியன நயமாகப் புலப்படுத்தப்படுகின்றன.

தொடர்புடைய இடுகைகள்.
44 comments:

 1. அருமையான ஆய்வு... ஊன் கலந்த உணவை உண்டால் சீக்கிரம் செரிக்காது என்பதையும் கூறியிருப்பதை சுட்டி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்..

  ReplyDelete
 2. எந்த ஒரு நாட்டினருக்கும் பண்பாட்டில் சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள். அருமையான புறப்பாடலின் வழியே நல்ல கருத்தை எடுத்தியம்பி உள்ளீர்கள் முனைவரையா...

  ReplyDelete
 3. வருகை தந்தேன் , விசயம் அறிந்தேன் ,மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 4. கையைக் கொடுங்கள் சார்.நன்று.

  ReplyDelete
 5. ஈரோடு, கோவை மாவட்டத்தில் வரும் விருந்தினரை கும்பிட்டுவது மட்டுமின்றி வாங்க....வாங்க.... என்று விளித்து வரவேற்பதுடன் வீட்டு பெண்கள் (சோம்பு) குவளையில் தண்ணீர் அல்லது மோர் தருவது மரபு புறநானுறில் இருப்பது ஆச்சர்யம் அருமை அருமை

  தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...
  http://veeedu.blogspot.com/2011/10/blog-post_19.

  ReplyDelete
 6. நாகரீகத்தை உலகத்துக்கு
  கற்றுக்கொடுத்த சமூகம் அல்லவா
  நம் தமிழ் சமூகம்.
  வரவேற்பு பற்றி அருமையாய் சொல்லியிருகீங்க
  முனைவரே.

  ReplyDelete
 7. அருமையான விளக்கத்துடன்கூடிய சிறந்த படைப்பு .
  வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 8. அருமையான ஆய்வு... நன்று.
  வாழ்த்துக்கள் முனைவரே.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. கை கொடுத்து வரவேற்பதை - இது நாள் வரையில் அந்நியரிடமிருந்து கற்றது என்றே எண்ணி இருந்தேன். இன்றைய உங்கள் பதிவால் தெளிவு பெற்றேன். மிக்க நன்றி.

  ( இந்த “சல்யூட்”-னு ஒன்னு செய்யிறமே , அப்பழக்கம் சுட்டதா? நம்முடையதேவா? - தெரிந்துக்கொள்ள ஆசை.)

  ReplyDelete
 11. வணக்கம்! அருமை! பதிவினி்ல் சங்க இலக்கிய மணம் கமழச் செய்யும்
  தங்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. அட.. அப்ப கைகுலுக்கலும் இங்கேயிருந்து copy தானா...

  ReplyDelete
 13. வணக்கம் சொல்லிக் கை கொடுப்பதற்கும் கும்பிடுவதற்கும் ஒருவர் சொன்ன விளக்கம்.கை கொடுப்பதால் தொற்றுக்கள் தொற்றக்கூடும் என்பது.சரியாகத்தானே இருக்கிறது குணா !

  ReplyDelete
 14. அழகிய பாடல் அருமையான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 15. அருமையான விளக்கம்... நானும் கைக்கொடுத்தல் நம் பழக்கமில்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

  ReplyDelete
 16. இந்த அடிப்படையில்தான் வாங்க என்றும் வருகைக்கு நன்றி என்றும் பதிவிற்கு வருபவர்களை கூட அவ்வப்போது அழைக்கிறோம்.

  வேலை செய்யாத கைகள் மிருதுவாகத்தானிருக்கும்.

  ReplyDelete
 17. அருமையான ஆய்வு

  அருமையான பகிர்வு

  நன்றி முனைவரே

  ReplyDelete
 18. கைகொடுங்க!பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 19. நிறைய விடயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள் தெடரட்டும் பணி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 20. @suryajeeva தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பா..

  ReplyDelete
 21. @கணேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா.

  ReplyDelete
 22. @veedu தொடர்புடைய செய்தியைத் தந்தமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
 23. @சத்ரியன் நானறிந்தவரை கும்பிடுவதுதான் நம் மரபு நண்பரே..

  சல்யுட் என்பது மேல்நாட்டார் மரபுதான்.

  ReplyDelete
 24. @ஹேமா அட இதுகூட நல்லா இருக்கே..

  மருத்துவ அறிவியல் கூறும் உண்மையும் கூட இதுவன்றோ..

  நன்றி ஹேமா..

  ReplyDelete
 25. @thirumathi bs sridhar தமிழ்த்தேடலுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 26. @கோகுல் கைகொடுத்தமைக்கு கை கொடுக்கிறேன் கோகுல்..

  ReplyDelete
 27. வருக வருக முனைவரே
  தருக கையும் முனைவரே

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 28. veedu said... 5
  ஈரோடு, கோவை மாவட்டத்தில் வரும் விருந்தினரை கும்பிட்டுவது மட்டுமின்றி வாங்க....வாங்க.... என்று விளித்து வரவேற்பதுடன் வீட்டு பெண்கள் (சோம்பு) குவளையில் தண்ணீர் அல்லது மோர் தருவது மரபு புறநானுறில் இருப்பதுஅருமை

  நுணுக்கமான பதிவு

  ReplyDelete
 29. அருமை அருமை....மேலும் வாசித்து வருகிறேன்

  ReplyDelete
 30. @புலவர் சா இராமாநுசம் தங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி புலவரே..

  ReplyDelete