Friday, October 21, 2011

உயிர்க் கதறல்......


உயிர்
நானும் குழந்தையாகத்தான் பிறந்தேன்
எனக்கு அப்போது தெரியாது
நானும்
பல அவதாரம் எடுப்பேன்
தினம் இறப்பேன்
தினம் பிறப்பேன் என்று..

கல்விச் சாலை சென்றேன்..
கல்வி என் உயிர் பறித்துச் சிற்பமாக்கியது! 

வாழ்க்கைப் பள்ளி சென்றேன்..
பணம் என்னைக் கொலை செய்து இயந்திரமாக்கியது!

ஒவ்வொரு நாளும்..
சுயநலம் என்னைப் புழுவாக்கியது!
பொதுநலம் எனக்குச் சிறகு தந்தது!

துரோகம் என்னைப் புலியாக்கியது!
நன்றி என்னை நாயாக்கியது!
இப்படி...
என் உயிரைத் தொலைத்துவிட்டுத்
தேடிக்கொண்டே இருந்தேன்..

அனுபவமே என்னை மீண்டும்
 உயிர்ப்பித்து மனிதானாக்கியது!

இருந்தாலும்...
பசி என் கண்களை மறைத்தது!
உழைப்பே என் கண்கள் திறந்தது!

துன்பம் என்னைக் கோழையாக்கியது!
இன்பமே எனக்குத் தன்னம்பிக்கையளித்தது!

இளமையில் தொலைத்த நாட்களை
முதுமை கணக்குப் பார்க்கிறது!

இப்படியாக நான் தினமும்
பல அவதாரம் எடுக்கிறேன்
 பிறக்கிறேன்
 இறக்கிறேன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே
ஒவ்வொரு மணித்துளியும்
உயிரோடு 
உணர்வோடு
மனிதனாக வாழ
 முயற்சிக்கிறேன்.......

 தொடர்புடைய இடுகைகள்

53 comments:

 1. குணா வாழ்வியலை அப்படியே சொல்லிட்டீங்க..சிலது எப்படி சொல்றதுன்னு தெரியாம இருக்கும் எல்லாவற்றையும் அழகா கவிதையா சொல்லிட்டீங்க...

  ReplyDelete
 2. கவிதை அருமை சார், எல்லோரும் நினைக்கிறோம் ஆனா முடியுதா?

  ReplyDelete
 3. இது இது தான் வாழ்வின் தேடல்...
  அத்தனை நிலையிலும் நாம் நம்மை
  இழக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
  ஆனாலும் ஒன்றை இழந்தால் மற்றொன்றை
  பெற்று விடுகிறோம், அப்போதான் அடுத்த
  போர்களத்துக்கு தயாராக முடியும்.
  உயிரின் கதறல் அருமை முனைவரே.

  ReplyDelete
 4. வாழ்க்கையின் எதார்த்தமான உண்மைகளை
  பட்டவர்த்தனமாக கவிதை வடிவில்
  மிக அருமையாக வடித்துள்ளீர்கள்... நண்பரே...

  ReplyDelete
 5. ஒவ்வொரு அனுபவப் பாடத்திற்குப் பின்னும் நாம் இறந்து நம்மைப் புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கிறோம். உங்கள் உயிரின் கதறல் மனதில் ஒட்டிக் கொண்டது முனைவரையா...

  ReplyDelete
 6. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 7. அனுபவ பாடம். சிறந்த பதிவு.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. உயிரின் கதறல் அருமை
  சமரசத்திற்கு அடங்கா உச்சம் தொடத் திமுறுகிற
  உயிரின் நிலையினை மிக அழகான
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. வாழ்வின் ஒவ்வொரு படிகள் ஆம்
  கடந்து வந்த படிகளை ஆழமாக பதிந்துள்ளீர்கள்

  ReplyDelete
 11. உயிரோடு
  உணர்வோடு
  மனிதனாக வாழ
  முயற்சிக்கிறேன்.......

  உண்மை ... உலகில் எல்லோரும் முயற்சித்துக் கொண்டே தான் இருக்கிறோம் ...

  ReplyDelete
 12. வாழ்க்கை அனுபவம் . பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 13. அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம் ,த.ம 5

  ReplyDelete
 14. தோழரே .. அற்புதம்...

  ReplyDelete
 15. குணா...பலரது வாழ்க்கைக் கவிதை இப்படித்தானிருக்கும் !

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு

  ReplyDelete
 17. அற்புதம். எண்ணங்கள் யாவற்றையும் எழுத்துக்களாய் பதிவு செய்யுந்திறன் எளிதில் கைவரப்பெற்ற தங்களால் நாங்களும் பயனடைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

  ReplyDelete
 18. //
  இருந்தாலும்...
  பசி என் கண்களை மறைத்தது!
  உழைப்பே என் கண்கள் திறந்தது!
  //
  அருமையான வரிகள்

  ReplyDelete
 19. உங்கள் அவதாரங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வாழ்க்கைக்கு அவசியமும் கூட சகோ.

  ReplyDelete
 20. நல்ல கவிதை முனைவரே
  நானும் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்
  உயிரின் ஓலம் என்ற தலைப்பில் அரு இராகநாதனின்
  காதல் பத்திரிக்கையில் கதை ஒன்று எழுதினேன்
  இக் கவிதை அதை நினைவூட்டியது

  கவிதை நன்று!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. அருமையான கவிதை வரிகள் மனிதனது வாழ்வியலை
  மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் மிக்க
  நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் இன்று என்
  தளத்திற்கும் .

  ReplyDelete
 22. நானும் கவிதை எழுதுகிறேன் சில அற்புதமாக வரும். சில ஒரு மாதிரி வரும். உங்கள் கவிதை எனக்கு மிகப் பிடித்தது. நல்ல கருத்துகள் புதைத்த சுரங்கமாக உள்ளது. மகிழ்ச்சி. உங்கள் பல இடுகைகளைத் தவற விட்டிட்டேன் இன்று முற்பகல் இரா. குணசீலன் நேரம் என் வீட்டில். வாழ்த்துகள் சேர்....
  வேதா. இலங்காதிலகம்.
  http://www. kovaikkavi. wordpress.com.

  ReplyDelete
 23. மிகவும் நன்றாக உள்ளது....

  ReplyDelete
 24. @மகேந்திரன்அழகான ஆழமான புரிதல் நண்பா..

  மகிழ்ச்சி.

  ReplyDelete
 25. @M.Rபுரிதலுக்கு நன்றி தோழரே.

  ReplyDelete
 26. @ஹேமா வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஹேமா.

  ReplyDelete
 27. @கீதா

  எழுதுவதையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட உங்களுடன் பகிர்ந்து கொளவதில் எனக்கல்லவா மகிழ்ச்சி கீதா.

  ReplyDelete
 28. @கீதா

  எழுதுவதையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட உங்களுடன் பகிர்ந்து கொளவதில் எனக்கல்லவா மகிழ்ச்சி கீதா.

  ReplyDelete
 29. @புலவர் சா இராமாநுசம் தங்கள் வாழ்வியல் மதிப்பீட்டிற்கு நன்றி புலவரே...

  ReplyDelete
 30. @அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் அம்பாள்

  ReplyDelete
 31. @kovaikkavi கேட்பதற்கே மகிழ்சசியாகவு்ளளது வேதா..


  நன்றிகள்.

  ReplyDelete
 32. nalla karuththu! manithan piranththathu oru murai .iranthathu athikam!

  ReplyDelete
 33. @Seeni தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 34. @Seeni தங்கள் ஆழமான புரிதலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete