Friday, October 28, 2011

ஏற்றுமதியான நாகரிகம்பழந்தமிழர்கள் கடல் கடந்தும் வாணிகம் செய்தனர். அதனால் நம் நாகரிகங்கள் பல நாடுகளிலும் பரவும் சூழல் ஏற்பட்டது. சென்ற இடங்களில் நம் பொருளோடு சேர்த்து நம் நாகரிகங்களையும் விற்றுவந்தோம் என்பதையே இலக்கிய ஆதாரங்கள் காட்டுகின்றன.
தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் தரும் இலக்கியச் சான்று ஒன்றைக் காண்போம்..

தமிழில் “கறி“ என்ற சொல் மிளகைக் குறித்தது. அந்தக் காலத்தில் குழம்பு, இரசம் போன்றவற்றில் மிளகைத்தான் பயன்படுத்தினார்கள். பின்பு மிளகுபோல் குழம்பில் சுவை சேர்க்கப் பயன்பட்ட, புதிதாக வந்த காயை மிளகாய் என்றார்கள். 

சங்க காலத்தில் உலகெங்கும் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. யவனர்கள் பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகை வாங்கிக் கொண்டு பாய்மரக் கப்பலில் சென்றதைச் சங்கப்பாடல்களால் அறிகிறோம். இதனால் கறி என்ற சொல்லும் பிற மொழிகளில் இடம்பெற்றது.
ஆங்கிலத்தில் எந்த அகராதியிலும் Curry   என்ற சொல்லைப் பார்க்கலாம். இச்சொல் நம் நாகரிகத்தின் சிறப்பைக் காட்டுவது போல் பல மொழிகளிலும் சென்று இவ்வாறு வழங்கப்படுகிறது.

            ஆங்கில அகராதிகளில் “கூலி“ (Cooli, Cooly) என்ற  சொல்லையும் தவறாது காணலாம். “கூலம்“ என்ற சொல் தானியத்தைக் குறிக்கும். அதனையே வேளாண்மை வேலைக்குத் தரும் பணமாகக் கொடுத்ததால், கூலி வந்தது.
எந்த வேலையாயினும் காசுக்கு வேலை செய்து அங்ஙனம் வாங்கும் பணத்தைக் “கூலி“ என்றனர். பின் அங்ஙனம் வேலை செய்பவனையே குறித்தனர். திருவள்ளுவர் மெய்வருத்தக் கூலிதரும் என்றது பயன்தரும் என்ற பொருளிலாகும். இந்தச் சொல்லும் ஆங்கில வழியாக எல்லா மொழிகளிலும் சென்று வழங்குகிறது. கறி, கூலி போன்ற சொற்களுக்குக் கீழே (Tamil) என்று அடைப்பில் போட்டிருப்பதை “சேம்பர்ஸ்“ அகராதியில் பார்க்கலாம். “வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் உடல் உழைப்பு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேலையாட்கள், வெளிநாட்டவர்க்கு அடிமை வேலை பார்க்கும்  இந்திய வேலைக்காரர்கள் என இச் சொல்லுக்கு ஆங்கில அகராதியில் பொருள் எழுதப்பட்டிருக்கும். ஏற்றுமதியான இச்சொல்  நம் நாகரிகம் இறங்கி வந்ததைக் காட்டுகிறது.

 (ஆசிரியர் -தமிழண்ணல் -நூல்- சொல் புதிது சுவை புதிது 57-58)

தொடர்புடைய இடுகைகள்.

35 comments:

 1. நான் தான் முதலாவதா.........

  ReplyDelete
 2. மிளகு மிளகாய் பற்றிய விளக்கம் அருமை ஐயா.நல்ல தகவல் தெரிந்து கொண்டேன்.நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
 3. உங்களுடைய எழுத்து பேசுகிறது
  பண்பாடு நாகரிகம் எல்லாமே நம் முன்னோர்களின்
  ஏற்றமிகு சொத்துக்கள்
  நம் தமிழர் வாழ்வியலின் ஒழுங்களையும் பிற நாட்டார் பயன்படுத்தினர் என்பதை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அரிய தக்வல்
  அறியத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 5. உலகினுக்கு அறிவுரைத்த
  தமிழ் நாகரீகத்தை ஏறுபட
  கூறியிருக்கிறீர்கள்.
  பண்டமாற்று வணிகத்தில் மிளகின் பங்கை
  அழகுற உரைத்திருக்கிறீர்கள்.

  வளர்க தமிழ் நாகரீகம்.

  ReplyDelete
 6. கறி, கூலி போன்ற சொற்களுக்குக் கீழே (Tamil) என்று அடைப்பில் போட்டிருப்பதை “சேம்பர்ஸ்“ அகராதியில் பார்க்கலாம்./// ஓஹோ அப்படியா தெரியாத தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றிகள்.,

  ReplyDelete
 7. நண்பரே தமிழ்மணம் தரவரிசையில் 11 இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள். மேலும் தாங்கள் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துத் தக்கவைத்துக் கொள்ள நான் இறைவனை வேண்டுகின்றேன்.
  முனைவர் ப. சரவணன்

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி....

  ReplyDelete
 10. தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்... நண்பரே..

  பகிர்ந்தமைக்கு நன்றி....

  ReplyDelete
 11. தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 12. அருமை முனைவரே...

  ReplyDelete
 13. தகவல் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. அழகான விளக்கம் ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 15. நண்பரே தமிழ்மணம் தரவரிசையில் 11 இடத்தினைப் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. @சண்முகம் முதல் வருகைக்கு நன்றி சண்முகம்

  ReplyDelete
 17. பயனுள்ள தகவல். இயற்கை வாழ்வியலில் எனக்கு சமீப காலமாக ஈடுபாடு அதிகரித்து வருகிறது. உங்களது இந்த தகவல், எனது உணவில் மிளகை அதிகரிக்கும். பகிர்ந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 18. @ரசிகன் கேட்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே..

  ReplyDelete