Sunday, October 21, 2012

காப்பீட்டுக் கழகத்துக்காக வள்ளுவர் எழுதிய குறள்


வணிகவியல் மாணவர்களுக்காக நடைபெற்ற சிறப்புசொற்பொழிவுக்காகக் காப்பீட்டுக் கழகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி பேசவந்தார். பவர்பாய்ணட் பிரசண்டேசனுடன் அழகாகப் பல புள்ளிவிவரங்களையும் சுட்டிக்காட்டி நகைச்சுவையாகப் பேசினார்.

அவர் பேச்சின் இடையிடையே மாணவர்களிடம் சிறுசிறு கேள்விளையும் கேட்டார். பதிலளி்த்தவர்களுக்கு, தான் கொண்டுவந்திருந்த இனிப்பை (சாக்லேட்) வழங்கினார். பேச்சின் முடிவில்..

ஒரு திருக்குறளின் ஆங்கில மொழியாக்கத்தைத் தந்து,
இது வள்ளுவர் எங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்காக
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய குறள் என்றார்.

இதனை கண்டுபிடித்து சொல்லும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்குவேன் என்றார். மாணவர்கள் பலருக்குத் தெரியவில்லை. சிலமாணவர்களுக்கு அதன் ஓரிரு சொற்கள் தான் தெரிந்தன. முழுவதும் தெரியவில்லை. யாருமே சொல்லாத சூழலில் நான் சொன்னேன்.

           “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
            வைத்தூறு போலக் கெடும்“ என்ற குறளா என்றேன். ஆமாம் என்று

அவர் பெரிதும் மகிழ்ந்து எனக்கு இனிப்பு வழங்கினார். காப்பீட்டு நிறுவனத்துக்காக வள்ளுவர் இந்தக் குறளை எழுதவில்லை. அவர் எழுதிய கருத்துகள் இன்றைய காப்பீட்டு நிறுவனக் கொள்ககைளுக்கு ஏற்புடையனவாக இருக்கின்றன அவ்வளவுதான் இருந்தாலும். இந்தக் குறளை அவர் உரிமையோடு சொன்னபாங்கு விரும்பத்தக்கதாக இருந்தது.

இந்த சொற்பொழிவாளரின் பேச்சில் நான் கற்றுக்கொண்ட நுட்பங்கள்.

1. நவீன தொழில்நுட்பங்களுடன் பேசுதல்
2. புள்ளிவிவரங்களுடன் பேசுதல்
3. நகைச்சுவையாகப் பேசுதல்
4. பார்வையாளர்களிடம் கேள்விகேட்டல்
5. பதிலளித்தவர்களைப் பாராட்டுதல், இனிப்புவழங்குதல்

ஆகியவனவாகும். இவற்றுக்கும் மேலாக..


எந்தத் துறைசார்ந்தவராக இருந்தாலும் வள்ளுவரை உரிமையோடு சொந்தம் கொண்டாடும்போது...
தமிழானாக  பிறந்ததில் மனம் பெருமிதம் கொள்கிறது.

18 comments:

 1. அருமை...

  அணுவைத் துளைத்து
  ஏழ்கடலைப் புகட்டிக்
  குறுகத் தரித்த குறள்.... அல்லவா ? (ஔவையார்)

  நன்றி...
  tm1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பரே

   Delete
 2. தாங்கள் கற்றுக்கொண்ட நுட்பக்கங்களை தெரிவித்ததன்மூலம் நாங்களும் கற்றுக்கொண்டோம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி வே.சுப்ரமணியன்

   Delete
 3. ஒரு காப்பீட்டு முகவராக இந்த குறளை இன்று உங்கள் பதிவின் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி..!! :)

  ReplyDelete
 4. அருமையாக அவர் சொன்னதை
  நாங்கள் அறிய சிறப்பாக பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. குறளுடன் கற்றுக் கொண்ட நுட்பங்களையும் எமக்கு அறியத் தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி மாதேவி.

   Delete
 6. காப்பீட்டுக்காக எடுத்துக் காட்டிய குரல் அருமை.எல்லாக் காலத்துக்கும் பொருத்தமாக குறள் விளங்குவதை மெய்ப்பித்துக் காட்டியது நன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா.

   Delete
 7. அன்பின் குணா - குறள் அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும் - காலம் கடந்தும் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தும். காப்பீட்டுக் கழக உயர் அதிகாரி - தனது பொருட்களைச் சந்தைப் ப்டுத்துவதில் கெட்டிக்காரர். நல்லதொரு இடுகை. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட குணநல்ன்கள் எல்லோர்ராலும் கடைப்பிடிக்க வேண்டியவை. நன்று குணா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   Delete
 8. நீண்ட காலத்தின் பிறகு உனக்கள் வலைப்பூவுக்கு வந்தேன். மிகவும் உபயோகமான தகவல்.

  ReplyDelete
 9. நல்ல பதிவு ............

  ReplyDelete
 10. அருமையான விளக்கப் ஐயா!

  ReplyDelete
 11. பொருள் வைக்குமிடம்
  ---------------------

  ஒருவர் தாம் பெற்ற செல்வத்தையெல்லாம் பாதுகாப்பாக எங்கே வைப்பதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்! அவ்வேளையில் அவ்வழியே சென்ற வள்ளுவரிடம் கேட்டார், அந்த செல்வந்தர்.

  அவருக்கு வள்ளுவர் கூறிய பதிலுரையாவது:-

  “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
  பெற்றான் பொருள்வைப் புழி”

  அற்றார் என்று பன்மையில், பெற்றான் என்று ஒருமையிலும் கூறினார்.
  அதாவது, அற்றவர் பலர் என்றும்
  பெற்றவன் ஒருவன் என்றும் பொருளாகிறது.
  பலரின் செல்வம் ஓரிடத்திற்கு செல்கிறது! அது கூடாது! என்னும் கருத்தில் உரைத்தார் என்றும் கூறலாம்.

  ReplyDelete