வெள்ளி, 12 அக்டோபர், 2012

தன்மானம் மிக்கவர்..நாள்தோறும் இதுபோன்ற ஆயிரம் காட்சிகளை நாம் காண்பதுண்டு. ஆனாலும் நேற்று கண்ட இந்தக் காட்சி என் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பிச் சென்றது..

கொம்பு இல்ல..
வாலு இல்ல..
நாலு காலும் இல்ல..
என்ன இது இரண்டு கால்தான் இருக்கு..?

அடடா!
இவர் மனிதர்தான்..

இது ஒன்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமல்ல..
நேற்றுதான் இப்படியொரு காட்சியைக் கண்டேன்.

இது ஒன்றும் அரிய காட்சியல்ல..

இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் நமக்குப் பாடம் என்றொரு பொன்மொழி உண்டு. இந்தக் காட்சி எனக்கு உணர்த்திச் சென்ற பாடத்தையே இங்கு பதிவு செய்கிறேன்..

இவர்...

திருடவில்லை, பொய்சொல்லவில்லை, பிச்சையெடுக்கவில்லை,
யாரையும் ஏமாற்றவில்லை..

நாள்தோறும் நாளிதழ் படிக்கும்போதும், தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும்போதும் மனதில் கேள்விகள் எழும்...

மனிதர்களில் இத்தனை வகைகளா? இப்படியும் இருப்பார்களா? என்பதுதான்..

வாழ்க்கை ஒரு விற்பனை நிலையம்
இங்கு
தன்னைப் புரிந்துகொண்டவர்கள் விற்பனையாளனாகிறார்கள்
தன்னைப் புரிந்துகொள்ளாதவர்கள் விற்பனைப் பொருளாகிறார்கள்

என்றொரு பொன்மொழி உண்டு.

இந்த மனிதர் (பொய்சொல்லும்) விற்பனையாளனாகவில்லை
(ஏமாந்த) நுகர்வோராகக் கூட ஆகவில்லை..
விற்பனைப் பொருளாகிவி்ட்டாரே.. என்று தான் தோன்றியது.

 இன்றைய அரசியல்வாதிகளைநடிகர்களைஆன்மீகவாதிகளையெல்லாம் விட ஆயிரம் மடங்கு மேலானவராகவே இவர் தெரிகிறார்.


குளிர்சாதன அறையிலிருந்து கொண்டு குப்பைமேட்டிலிருப்பவர்களின் சுருக்குப்பையிலிருக்கும் பணத்தை எப்படி பறிப்பது என்று திட்டம் தீட்டும் ஆயிரம் ஆயிரம் படித்த முட்டாள்களைவிட படிக்காத இந்த முட்டாள் ஆயிரம் மடங்கு மேலானவர் என்பது என் கருத்து.

இவரிடமிருக்கும் தன்மானம், உழைப்பு நான் இவரிடம் கற்றுக்கொண்ட பாடம்.

தொடர்புடைய இடுகைகள்

13 கருத்துகள்:

 1. /// இவரிடமிருக்கும் தன்மானம், உழைப்பு நான் இவரிடம் கற்றுக்கொண்ட பாடம். ///

  உண்மை... கூடவே முக்கியமாக சந்தோசமும்...

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே...முகத்தில் அறையும்படி சொல்லி இருகிறீர்கள் !! நல்ல பதிவு....தொடர வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 3. இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் நமக்குப் பாடம்

  பதிலளிநீக்கு
 4. உழைப்பாளி! இவர்களைப் போன்றவர்களைச் சுரண்டும் மனிதரைத்தான் எப்படித் திருத்துவது? நினைத்தால் மனவலிதான்!

  பதிலளிநீக்கு
 5. ஆயிரம் பக்கங்க்களில் சொல்ல முடியாததை
  ஒரு சிறு கார்ட்டூன் சொல்லிப் போனது அற்புதம்
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு