வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கோபம் வரும்போதெல்லாம்..


  1. கோபம் என்பது கொடிய நோய்..
  2. இந்நோய் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருக்கும் சுற்றத்தாரையும் அழிக்கவல்லது.
  3. மிக விரைவாக அருகே இருப்பவருக்கும் பரவக்கூடிய நோய்..

  4. கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதில்தான் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உள்ளது.

  5. கோபம் வரும்போது..

    தண்ணீர் குடிக்கவும்..
    ஒன்று இரண்டு என எண்ணவும்..
    கண்களை மூடிக்கொள்ளவும்..
    கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவும்..

    என பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்..
    நம் வள்ளுவர் சொல்கிறார்...

    நீங்க கோபப்படுறீங்களா?
    உங்களுக்கு நீங்களே ஏன் தண்டனை கொடுக்கறீங்க..
    நிலத்தில் தன் கைகளை ஓங்கி அடித்துக்கொண்டவனுக்குக் கை வலிக்காமலா போகும்?
    அதுபோலத்தான் அவன் கொள்ளும் கோபத்தால் அவனுக்கு வலி ஏற்படும். அவன் கோபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து தப்பமுடியாது என்கிறார்.

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    குறள் 307: 
    கோபம் வரும்போதெல்லாம் நான் இந்தக்குறளை நினைத்துக்கொள்கிறேன்..


21 கருத்துகள்:

  1. அருமையான ஆலோசனைகள் அண்ணா! எனக்கு அவ்வளவாக கோபம் வருவதில்லை :))

    பதிலளிநீக்கு
  2. இதுவரை அறியாத திருக்குறளை எளியமுறையில் விளக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நானும் இனி அவசியம் இந்தக் குறளையும்
    பொமொழியையுன் நினைத்துக் கொள்வேன்
    பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அருமையா சொன்னீங்க நண்பா ..ரொம்ப பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு
    அருமையான குறள் விளக்கம்.
    நன்றி முனைவர் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. கோபம் எனும் கொடிய நோய்க்கு மருந்தான குறள் விளக்கம்.

    பதிலளிநீக்கு
  7. தன்னையே கொள்ளும் சினம்...

    குறள் விளக்கம் அருமை... (TM 11)

    பதிலளிநீக்கு