Tuesday, February 12, 2013

அன்று இதே நாளில்..


1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... 

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

(தமிழில் - பூ.கொ.சரவணன்)2.இன்று சார்லஸ் இராபர்ட் டார்வின் பிறந்தநாள்..

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 121809 -ஏப்ரல் 191882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள்(HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடுதொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.
இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள்மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவதுவலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.
(நன்றி பூ.கொ.சரவணன், நன்றி விக்கிப்பீடியா)

16 comments:

 1. உலக வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றுள்ள ஆபிரகாம் லிங்கன் மற்றும் சார்லஸ் டார்வின் இருவரது பிறந்தநாளில் அவர்களைச் சிறப்பித்த முனைவருக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா

   Delete
 2. வியப்பான் விஷயம் என்ன என்றால் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாத நாடு அமெரிக்கா... அந்நாட்டின் மிகவும் மதிக்கப் படும் மனிதனின் பிறந்த நாளும் இன்றேவா?

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே.தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி.

   Delete
 3. Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷாஅன்பரசு.

   Delete
 4. ஞாபகத்துடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   Delete
 5. பொறுப்புள்ள ஒரு தந்தையின் கடமையை லிங்கனின் தந்தை செய்துள்ளார். எத்தனை முறை படித்தாலும் சலியாத வரிகள்....இருவரின் பிறந்த நாளையும் நினைவூட்டியமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்.

   Delete
 6. இரண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி குட்டன்.

   Delete
 7. லிங்கனின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு ஆணித்தரமான உண்மை. பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அழகாகப் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறாரே..

  சரித்திரத்தின் இரண்டு முக்கியமானவர்களைப்பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே!

  ReplyDelete
 8. என் வலைப்பதிவிலும் முகநூலிலும் இந்த இடுகையைப் பகிர்ந்திருக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 9. லிங்கன் சொன்னவற்றில் ஏதேனும் நான்கையாவது பின்பற்ற் முயல்வோம்.

  ReplyDelete
 10. அருமையான பதிவு, பகிர்வு

  ReplyDelete