வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி 

சௌ.பிரியதர்சினி 

அவர்கள் டாக்டர் 
இராதாகிருட்டிணன் அவர்களின் ஓவியத்தை அழகாக வரைந்து வந்தார் உற்று நோக்கியபோது அதிகாரத்துக்கு ஒரு குறள் என 133 குறட்பாக்களால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. 



23.01.2013 அன்று கோவையில் பிஎஸ்ஜி (PSG CAS) கலை அறிவியல் கல்லூரியில் 

“இயன்றவரை இனிய தமிழில்“ 

என்ற தலைப்பில் 

உரையாற்றினேன். அப்போது 

நினைவுப்பரிசாக இந்த ஓவியத்தை வழங்கினார்கள். இந்த 

ஓவியத்தை இயற்பியல் துறை 

மூன்றாமாண்டைச் சார்ந்த 

மாணவர் ஆனந்த் அவர்கள் 

வரைந்தளித்தார். அவரது படைப்பாக்கத் 

திறன் கண்டு வியந்துபோனேன்.



(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)




10 கருத்துகள்:

  1. அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் மாணவர்களுக்கும்

    பதிலளிநீக்கு
  2. அருமை...

    அழகு...

    சௌ.பிரியதர்சினி அவர்களுக்கும், ஆனந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. குறள் எழுதி ஓவியமா? எப்படி ஒரு கற்பனைத் திறன்! அந்த மாணவிக்கு பாராட்டுகள்.

    உங்கள் ஓவியம் வரைந்த மாணவருக்கும் பாராட்டுகள். நன்றாக உள்ளது.

    ஓவியங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தத்ரூபமான ஓவியம். ஒரு ஆசிரியருக்கு இதை விட பெருமை வேறென்ன இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பாலா ஓவியத்தைப் பார்த்த பிறகு பேச வார்தைகளே வரவில்லை..

      வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பாலா

      நீக்கு
  5. அருமை..வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு