வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

இன்று தமிழ்த்தாத்தா பிறந்தநாள்.

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 281942உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாகதமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.


அச்சு பதித்த நூல்களின் பட்டியல்


மேலும்..

(நன்றி விக்கிப்பீடியா)

தொடர்புடைய இடுகை


அந்த மூன்று பூக்கள்


சங்க இலக்கியங்களையோ, காப்பியங்களையோ எப்போது படித்தாலும் உ.வே.சா அவர்களை நன்றியோடு எண்ணிப்பார்ப்பதுண்டு. தன்னலம் கருதாது தமிழுக்காக அவர் செலவிட்ட நேரங்களையும், அவரது தேடலையும் எண்ணிப்பார்க்கும்போது இவருக்கெல்லாம் எத்தனை முனைவர் பட்டம் கொடுத்தாலும் போதாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தமிழரும் இவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று எண்ணி்க்கொள்வதுண்டு.

11 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 2. அய்யாவை நினைவில் கொண்டு அவர்போல் தமிழ் வளர்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.

   நீக்கு
 3. நடிகர்களின் பிறந்தை நாளை மட்டும் ஒரு வாரகாலமானாலும் விமர்சித்து கொண்டாடுபவர்களிடையே தமிழ் தாத்தாவின் பிறந்த நாளை நினைவுப் படுத்தி உயர்ந்து விட்டீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தமிழ் தாத்தாவின் அச்சுப் பணிகள் என்றைக்குமே போற்றுதற்குரியவை! நினைவு கூர்ந்து பதிவிட்டமைக்கு நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 5. தமிழ் தாத்தாவை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

  (http://blogintamil.blogspot.in/2013/02/4.html)

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஐயா, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் எழுத்துக்களை இன்று படித்தேன், நீண்ட நேரம் படித்தேன். உங்கள் எழுத்துக்களின் அருமையை நான் புதிதாக சொல்ல தேவையில்லை. பயனுள்ள தகவல்கள்.

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு