வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இன்று கலீலியோ பிறந்தநாள்

கலீலியோ கலிலி (பெப்ரவரி 151564 - ஜனவரி 81642) பிறந்தார். இவர் இத்தாலியில் பிறந்தார்.

இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்று போற்றப்பட்டராவார்.

“ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம், நிலா பூமியைச் சுற்றுகிறது.பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதும் இன்று நாமறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னால், 

நிலவும் சூரியனும் பூமியைச் சுற்றுகின்றன என்று நம்பினார்கள். நம் புராணங்களில் கூட அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு ஓடினான் என்றும்..

சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து மேற்கே செல்வார் என்றும் சிந்தனைகள் உண்டு. அந்தக் காலத்தில் சூரினைச்சுற்றித்தான் அனைத்துக் கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தைச் சொன்னதற்காக பெருந்துன்பத்தை அனுபவித்தார் கலீலியோ. இவர் கணிதமும், இயற்பியலும் பயின்றார். படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் நிறையவே கேள்விகள் கேட்டார். கற்பிக்கப்படும் அறிவியல் கருத்துக்களை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள இவர் மட்டும் ஆசிரியர்களிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்பார். அரிசுடாடில் கூற்றைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்கு இவருக்கு அறிவியலின் மீது ஆர்வமும், பற்றும் இருந்தது. 

சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார். வியாழன் கோளுக்கு நான்கு நிலாக்கள் உண்டு என்பதையும் கண்டுசொன்னார். சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதை அவர் கண்டார். அவை என்னவாக இருக்கும் என்ற சி்ந்தித்தபோது அவை சூரியனைச்சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்கும் என்று சொன்னார். சூரியனைச் சுற்றித்தான் அனைத்துக்கோள்களும் சுழல்கின்றன என்ற கருத்தை அதன் வழிதான் நிரூபித்தார் கலீலியோ. கலீலியோ அவர்களின் தேடல் இன்றைய இளம் தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.

17 கருத்துகள்:

 1. சூரியனைச் சுற்றித்தான் அனைத்துக்கோள்களும் சுழல்கின்றன என்ற கருத்தை அதன் வழிதான் நிரூபித்தார் கலீலியோ//
  சரியான நேரத்தில் சொல்லியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 2. நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. வானியலின் தந்தை பற்றிய நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. கலிலியோ பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன்! நன்றி!க்

  பதிலளிநீக்கு
 5. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி தமிழ்ச்செல்வி.

  பதிலளிநீக்கு