ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பழங்காலத் தமிழர் வாணிகம்சங்க இலக்கிய ஆய்வு நூல்களின் வரிசையில் இன்று நாம் காண இருப்பது,
பழங்காலத் தமிழர் வாணிகம்.
இந்நூலின் ஆசிரியர்
மயிலை. சீனி வேங்கடசாமி ஆவார்.
பழந்தமிழர்கள் பண்ட மாற்று முறை, நாளங்காடி, அல்லங்காடி, தரைவாணிகம், கடல் வாணிகம் என்று வாணிகத்தில் மிகவும் தேர்ச்சியுடையவர்களாக இருந்தனர்..
பழந்தமிழர்களின் வாணிகத்தின் தனிச்சிறப்பை இயம்பும் நூல் ‘பழங்காலத் தமிழர் வாணிகம்’ஆகும்.

இந்நூலின் உள்ளடக்கம்……….

1. சங்க கால மக்கள் வாழ்க்கை
2. பண்டமாற்று
3. போக்குவரத்து சாதனங்கள்
4. தமிழ்நாட்டு வாணிகம்
5. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள்
• கிழக்குக் கரை
• கொல்லத்துறை
• எயிற்பட்டினம் (சோபட்டினம்)
• அரிக்கமேடு (போதவுகே)
• காவிரிப்பூம்பட்டினம்.
• தொண்டி
• மருங்கூர்பட்டினம்
• கொற்கை
• குமரி

7.தமிழகத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள்
• மங்களூர்
• நறவு
• தொண்டி
• மாந்தை
• முசிறி
• வைக்கறை
• மேல்கிந்த
• விழிஞம்
8.இலங்கைத் துறைமுகங்கள்
• மணிபல்லவம் (ஜம்புகொல பட்டினம்)
• மாதிட்டை (மாதோட்டம்)
9.விளை பொருளும் உற்பத்திப் பொருளும்
• வெல்லமும் சர்க்கரையும்
• கள்ளும் மதுவும்
• மிளகு
• அறுவை(துணி)
• உப்பு
• வளை
• முத்து
• யானைக் கோடு
• நீலக்கல்


என்பது நூலின் உள்ளடக்கமாகும்.

நூலின் முகவுரை

சங்க காலத் தமிழர் வாணிகம் என்னும் இந்தப் புத்தகம் கடைச்சங்க காலத்தில் (அதாவது கிமு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி.இரண்டாம் நூற்றாண்டு வரையில்) தமிழர் நடத்திய வாணிகத்தைப் பற்றிக் கூறுகிறது.
அந்தக் காலத்துப் பழந்தமிழர், பாரத தேசத்தின் வடக்கே கங்கைக் கரை(பாடலிபுரம்) முதலாகக் கிழக்குக் கரை மேற்குக் கரை நாடுகளில் நடத்திய வாணிகத்தைப் பற்றியும் தமிழகத்துக்கப்பால் கிழக்கே இலங்கை, சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்)மலேயா, பர்மா, முதலான கடல் கடந்த நாடுகளோடு செய்த வாணிகத்தைப் பற்றியும், மேற்கே அரபு நாடு, அலெக்சாந்தரியம்(எகிப்து) உரோம் சாம்ராச்யம் (யவண தேசம்) ஆகிய நாடுகளுடனும் செய்த வாணிகத்தைப் பற்றியும் கூறுகிறது. அந்தப் பழங்காலத்து வாணிகச் செய்திகளைச் சங்க காலத்து நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டது. மற்றும் தாலமி, பிளைனி முதலான யவன ஆசிரியர் எழுதின குறிப்புகளிலிருந்தும் ‘ செங்கடல் வாணிகம்’ என்னும் நூலிலிருந்தும் , புதைபொருள் ஆய்வுகளிலிருந்தும் கிடைத்த செய்திகளிலிருந்தும் கிடைக்கும் சான்றுகளைக் கொண்டும் எழுதப்பட்டது.

சங்க கால மக்களின் வாணிகம், சமூக நிலை, வரலாற்றுச் செய்திகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள எண்ணுவோரும். சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்வோரும் படிக்க வேண்டிய நூலாக இவ்வரிய நூல் விளங்குகிறது.

7 கருத்துகள்:

 1. எல்லோரும் அறியத்தக்க வகையில் தமிழரின் கடல் கடந்த வணிகம் மற்றும் ஆண்ட பகுதிகள் பற்றியும் எழுதலாமே!!

  பதிலளிநீக்கு
 2. ஓ இதைப்பற்றியும் நூல்களா?

  பதிலளிநீக்கு
 3. எல்லோரும் அறியத்தக்க வகையில் தமிழரின் கடல் கடந்த வணிகம் மற்றும் ஆண்ட பகுதிகள் பற்றியும் எழுதலாமே!!/

  எழுதுகிறேன் மருத்துவரே...

  பதிலளிநீக்கு
 4. ஆய்வாளர்களுக்குப் பயனுள்ள தகவல்........../

  நன்றி முனைவரே..

  பதிலளிநீக்கு
 5. ஓ இதைப்பற்றியும் நூல்களா?ஃ

  வருகைக்கு நன்றி தமிழ்...

  பதிலளிநீக்கு