அ
[அ - தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. உயிர்
முயற்சியாற் பிறக்கும் எழுத்துக்களுள் வாயைத் திறந்த உடனே ஒலிக்கும் ஒரு
குற்றுயிர். அஃறினைப் பன்மையீறு. அஃறிணைப் பன்மை வினைமுற்று;
ஆறாவதன் பன்மையுருபு. இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதம், சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு,
இவற்றைக் காட்டும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. தமிழ்
எண்ணியலின் எட்டு என்னும் எண்ணின் குறி. அஆ - அதிசய் விரக்கக் குறிப்பிலே வரும்
ஒரு கூட்டிடைச் சொல், விட்டிசை] ஈண்டு எண் குறட் பாக்களைக் குறிக்கும்.
அ = அந்த என்ற பொருளில், (225, 247, 254, 350,
355, 370, 411, 423, 426, 475, 489, 641, 645, 671, 677, 695, 848, 950, 967,
1091, 1187) மொத்தம் 21 குறள்களில் ‘அந்த’ என்ற பொருளை சுட்டுகின்றது. எடுத்துக்
காட்டாக 225-வது குறட்பாவில்,
“ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்,”
இந்தக் குறளில், அப்பசியை என்ற சொற்றொடரில் வரும் அப் என்ற சொல்லின்,
அ என்ற எழுத்து அந்த என்ற பொருளைச் சுட்டுகின்றது. அதனைப்
போலவே,
மற்ற 20 குறட் பாக்களிலும் அந்த என்ற பொருளைக் குறித்து
நிற்கின்றது.
அஃகாமை = சுருங்காமை,(178)
அஃகி = சுருங்கி, நுண்ணிதாய், (175).
அஃகி அகன்ற = ஊன்றி ஆராய்ந்து பெற்ற விரிந்த,
நுனித்து அகன்ற, (175).
அஃதிலர் = அதனை இல்லாதவர், கண்ணோட்டம் இல்லாதவர்கள், (572).
அஃது = அது; அது என்ற நிலை மொழிக்கு முன்னால் உயிர் எழுத்தில்
ஆரம்பமாகும் சொல் வரும்போது, அது என்பது. பெரும்பான்மையாக அஃது என்றாகும். அது ஒரு
சுட்டுப் பெயர் அஃறிணை ஒருமை. எடுத்துக்காட்டாக;
வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின்;
அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல்.(38).
இந்தக் குறட்பாவின் 4வது சீர் அஃது ஒருவன் என்றுள்ளது. அது என்ற நிலைமொழிக்கு
முன்னால் உயிர் எழுத்தில் ஆரம்பமாகும் ஒருவன் என்ற சொல்லில்,
‘ஒ’ என்ற உயிர் எழுத்து வந்ததால்,
அது என்ற சொல் அஃது என்றானது. இதனைப் போன்றே 49,
76,80, 132, 162, 170, 220, 226, 236, 242, 262, 363, 368, 414, 427, 459, 476,
556, 572, 575, 591, 600, 621, 943, 971, 1001, 1014, 1032, 1093, 1166, 1279,
1308 என்ற குறட்பாக்களிலும்
வந்துள்ளன.
அகடு = வயிறு, (936)
அகத்தது = பிறருடைய மனத்தில் இருப்பதை,
(702)
அகத்தார் = நிலைக்கு, உள்ளே இருந்து போர் புரிவோர் நிலைக்கு,
(745).
அகத்தான் = மனத்தில், மனத்துடனாகிய, (93).
அகத்து = மனத்து, (78); இடத்து, இடையில் என்ற பொருளில் (194, 694, 717,
723, 727, 814, 877, 1020, 1027, 1163, 1180, 1305, 1323) ஆகிய குறள்கள் வருகின்றன.
அகத்து உறுப்பு = உள் உறுப்பாகிய (79).
அகத்தே = உள்ளே, (271).
அகப்பட்டி = மனம் கட்டுப்பாடற்றவர்,
தம்மைக் காட்டிலும் குறைந்த; கீழ்மக்களை, (1074).
அகம் = மனம் என்ற பொருளில் (78, 277, 298,
786, 830, 1305,
1323);
இடம் (101, 547, 1055).
அகம் நக = மனம் மலரும்படியாக, (786).
அகரம் = ‘அ’ என்னும் எழுத்து,(1).
அகலம் = பரந்த அகலம், புறத்தோர்க்கு அகழல், ஆகா அடி, (743).
அகலாக் கடை = அதிகப்படாமல் இருந்தால்,
விரிவடையாதிருந்தால், (478).
அகலாத = பிரியாத, பிரியாததற்கு முன்பு, (1226).
அகலாது = அதிகமாக விலகிப் போய்விடாது,
மிக நீங்காது, (691).
அகல் = அகன்ற, பரந்த, விரிந்த, பெரிய, (25)
அகழ்வார் = தோண்டுவார்,(151).
அகறல் = நீங்குதல், நீங்கியிருப்பது, (1325).
அற்றும் = விரிவுப்படுத்தும், விசாலப்படுத்தும், (372).
அகன் = அகம்,மனம்,(84, 92).
அகன்ற = விரிந்த, (175).
அகன்றாரும் = பெருக்கம் பெற்றாரும்,
பெரியவராயினாரும். (170).
அங்கணத்துள் = முற்றத்தில், அழகான கட்டுக்கோப்பான இடத்துள்,(720).
அங்கணம் = முற்றம், ஆரியச் சொல் என்று இதனைக் கூறுவாருண்டு. இது தமிழ்ச் சொல்.
அகம் + கண் + அம் என்று இதனைப் பிரிக்கலாம். வீட்டிற்கு வெளியே உள்ள இடத்தை இது
குறிக்கும்.
அங்கம் = உறுப்பு. இச் சொல்லைச் சிலர் வடசொல் என்பர். இது
‘அ’ என்னும் சுட்டு அடியாகப் பிறந்து,
கூறுபாடு என்னும்பொருள் கொடுக்கும் தமிழ்ச் சொல் என்பதே
உண்மை.
அசாவாமை = மனந்தளராமை, மெய்யீற்று வியங்கோள் முற்று இது,(611).
அசை = துவளுகின்ற தன்மை, அசையும், அசைந்தாடும், (1098).
அசைஇ = சோம்பி, சோம்பலாக, (1040).
அசைஇயற்கு = அசை இயல் வினைத்தொகை. அசையும்
இயல்புடையவளுக்கு.
அசைவின்மை = முயற்சி, (371).
அசைவு = அசைதல், தளர்தல், சோம்பியிருத்தல்,(594).
அச்சம் = பயம், நடுக்கம், (146, 501, 534, 1075).
அச்சாணி = வண்டிக்குப் போடும் கடை ஆணி. அச்சின்
வெளிப்பக்கச் சக்கரத்தில் செருகும் ஆணி, (667).
அச்சு = இரு சக்கர வண்டிச் சக்கரம் அச்சு,
(475, 667).
அஞர் = துன்பம், இடுக்கண், (1086, 1179).
அஞ்சப்படும் = பயப்படல் வேண்டும்,
(202), அஞ்சல் வேண்டும்,
(824).
அஞ்சல் = பயப்படுதல், (428); பயப்படுதலை (1149); பயப்படாதிரு,(1154).
அஞ்சல் ஓம்பு = பயப்படுதலைத் தவிர்,
(1149).
அஞ்சற்க = பயப்படாதிருக, பயப்படாதே, பயத்தை ஒழித்திடுக, (882).
அஞ்சா = அடங்கா, (500); பயப்படாத, (725, 761, 762, 778).
அஞ்சாதவர் = பயப்படாமல் செல்ல வல்லவர்,
(723).
அஞ்சாது = பயப்படாது,(585).
அஞ்சாமை = துணிவு, (382); அஞ்சாதொழிதல், (428); உறுதிப்பாடு, திடபுத்தி, துணிவு, (497).
அஞ்சார் = பயப்படார்கள், (201).
அஞ்சான் = அவைக்கு அஞ்சாதவன், (647); பயப்படாது, (689).
அஞ்சி = பயந்து, (44, 325, 680, 730,
741, 863, 869, 883).
அஞ்சுக = அஞ்ச வேண்டும், (882).
அஞ்சுதும் = அஞ்சுகின்றேன், (1128).
அஞ்சுபவர் = பயப்படுவார்,(464, 726,
906).
அஞ்சும் = அஞ்சுதற்கு ஏதுவாகிய,
(244); அஞ்சுவர்,
(451); பயப்படுகின்ற,
(727); அஞ்சி ஒழுகும்,
(904); அஞ்சுவான்,
(905); அஞ்சுவர்,
(1152); அஞ்சுகின்றது,
(1295).
அஞ்சும் அவன் = அஞ்சுகின்றவன்,
(727).
அஞ்சுவது = அஞ்சித் தடுப்பது, (366); பயப்பட வேண்டியது; பாவம்,(428).
அஞ்சுவர் = பயப்படுவர், (201).
அஞ்சுவார் = பயப்படுவார், (729).
அஞ்சுவான் = பயப்படுகின்றவன்; சினத்துக்கு அஞ்சுகின்றவன், (905).
அடக்கமுடைமை = மனம், மொழி, செயல் ஆகியவற்றைத் தீய வழிகளில் செல்ல விடாமல் அடக்கிக்
கொள்ளுதல், (அதி.
13).
அடக்கம் = மனம், மொழி, மெய்களைத் தீயவழிகளில் செலுத்தாமல் இருக்கும் ஒழுக்கம்,
(121, 1).
அடக்கல் = ஒடுக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி
என்ற ஐம்புலன்களையும் தீய வழிகளில் போகவிடாமல் தடுத்தல்,
(126).
அடங்க = ஒடுங்க, (123).
அடங்கல் = மனதைப் புறவழிகளில் புகவிடாமல் அறவழியிலே
நிறுத்தப் பழகுதல், அடங்குதல், தன்
கட்டுக்குள் மனதை வசமாக்குதல், (130).
அடங்க = அமைவில்லாத; அவற்றின்படி நடவாத அடங்கி ஒழுகாத,
(834).
அடங்காமை = மனம், மொழி, மெய்களை அடக்காமை, {121).
அடங்கியான் = அடங்கியவனது, (124); வருத்துதல், (206); கெடுத்தல், (343); தாக்குதல், போர்செய்தல், (768); கெடுத்தல், கொல்லுதல், (893).
அடல்வேண்டின் = தன்னை அழித்துக் கொள்ள விரும்பினால்,
(893).
அடி = தாள், பாதம், (3, 4, 10, 208, 544, 610, 1120,
1279).
அடி அளந்தான் = திருமால், (610). [குறிப்பு நாவலர் நெடுஞ்செழியன் தனது திருக்குறள்
தெளிவுரையில், குறளையே
மாற்றி,
அடி அளந்தான் என்பது சரியல்ல" என்கிறார். 'எய்தும் மடி அளந்தான் என்பதுதான் சரி'
என்பது அவரது ஆய்வு. பரிமேலழக்ரை மறுக்கும் நாவலர்,
எம்.பி.
பூரணலிங்கம் பிள்ளை, மணக் குடவர், பரிதியார், காளிங்கர் போன்ற மேதைகளையும் மறுத்துள்ளார்.]
அடி உறைதல் = தாள்களில் வந்து தங்குதல்,
(208).
அடிகளுக்கு = பாதங்களுக்கு, (1120).
அடிமை = அடிமையாகும் தன்மை,(608).
அடு = வெல்லும், (567); சமைத்த, (1065); காய்ச்சப் பட்ட, (1090). அடுக்கி = மேலும் மேலும், மேன் மேலாகி, (625).
அடுக்கிய = தொடர்ந்த முன்னும் பின்னுமாக வருகின்ற,
(525); பலவாக அடுக்கிய,
(954, 1005).
அடுக்கிய கோடி = பல கோடி, (954, 1005).
அடுங்காலை = இறக்கும்போது; கூற்று கொல்லும் வேளையில், (799).
அடுங்கால் = துன்பஞ் செய்யும்போது,
(1165).
அடுத்த = மடங்கு மடங்கான, (450, 817).
அடுத்தது = தன்னை அடுத்த பொருள்களை,
(706).
அடுத்திருந்து = தொடங்கியிருந்து,
(867).
அடுத்து = தொடர்ந்திருந்து, (621); தொடங்கி, (867), நெருங்கி, (1030).
அடுத்தூன்றும் = பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற
முட்டுக்கோல் போல; நெருங்கித் தாங்கவல்ல, (1030).
அடுப = வெல்லுவர், (493).
அடுமுரண் = வெல்லும் வலி,(567).
அடும் = கொல்லும், (207, 500, 799); வெல்லும், (495).
அடைக்கும் = தடுக்கும், (38, 71).
அடைக்கும்தாழ் = அடைத்து வைக்கும் தாழ்ப்பாள்,
(7:1).
அடையாவாம் = சாராவாம், (939).
அட்டிய = வார்த்த, (1093).
அணங்கு = காம நோயால் உயிர் கொள்ளும் தெய்வப் பெண்,
(918), தெய்வப் பெண்,
(10.81).
அணங்குறுத்தல் = தலைமகள் அழகு துன்புறுத்தல்,
(109வது அதிகாரம்).
அணி - ஆபரணம், அழகு, (95); அழகு, (115, 118, 738, 742, 1014, 1102);
ஆபரணம், (701, 1089); அழகு, மலர்ச்சி, (1273).
அணி இழை = அழகிய ஆபரண மணிந்த பெண். இது வினைத் தொகை.
அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி,
ஆகு பெயரானாலும் சரி!.
அணிகலம் = அழகு, (575).
அணி நிழற்காடு = செறிந்த காடு;
அழகிய நிழலையுடைய வ்னம், (742).
அணியுமாம் = புனையும், அலங்கரிக்கும், பிறரின் தமக் கொரு மிகுதியை ஏற்படுத்திக் கொள்ளும்;
தம்மைத் தாமே புகழ்ந்து சிறப்பித்துக் கொள்ளும்,
(978).
அணுகாது = கிட்டாது; நெருங்காமல், (591).
அண்ணாத்தல் = வாய் திறத்தல்,(மணக்குடவர் இச் சொல்லிற்கு புறப்பட விடுதல் என்கிறார்,
(255).
அதர் = வழி, (594).
அதற்கு = அந்தக் கல்விக்கு (391); அவ்வினை செய்தற்கு, (518); அந்த உரிமைக்கு (802) உயிருக்கு (1124), ஊருதற்கு, (1330).
அதனால் = அது காரணமாக, (303, 642, 1031).
அதனினும் = அதிலும் பார்க்க, (152, 1158).
அதனின் = அதிலும் பார்க்க, (122, 302); அப்பொருளால், அதனளவு, (341}; அதனிலும் பார்க்க, (644, 1166).
அதனை = அதை, (32, 77, 152, 262,
495, 517, 621, 859, 1141, 1143).
அதனோடு = அதனுடன், (550). அதன் = அவை தமக்கு, (50); அதற்கு என, (323 490, 773); அதை, (1038); அதனுடைய, (1289).
அதி = மிக, (636). ஆனால், ஒரு சிலர் 'அதி' என்ற சொல் வடசொல் என்கிறார்கள். இதைத் தமிழ்ச் சொல் என்றே கூறவேண்டும்.
ஏனென்றால், அதிகாலை
என்று கூறுகிறோம். அந்த அதி என்பது அது என்றும், சுட்டுப் பெயரடியாகப் பிறந்து 'மிக’ என்னும் பொருளைக் குறிக்கின்றது. இவை என்றது
நணியவற்றை: உவை என்றது அவற்றிற் சேயவற்றை; அவை என்றது அவற்றில் சேயவற்றை,
(பரி. 40
உரை) மிகச் சேய்மையில் உள்ளது 'அதி' எனப்பட்டது. இந்தப் பொருளிலிருந்து அதி என்பதற்கு மிகுதி என்னும் பொருள்
வருதல் கூடும். வட
மொழி தொடர்பான அடி வேறு வகையதாகும்.
அதிர = நடுங்கும்படி, (429).
அது = அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர்,
{36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536,
570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
அதூஉம் - அதும். அது என்னும் முற்றுகரத்தின் மேல் இழிவு
சிறப்பும்மையின் உயிரேறி 'உம்'
என நின்று, பிறகு செய்யுள் இசையை நிறைவிக்க அளபெடுப்பதால் 'அதூஉம்' என நின்றது, (230, 546).
அத்தால் = அதனால், (524).
அத்து = சாரியை, {13); உலகத்து, ஒழுக்கத்து, (21).
அந்தணர் = அழகிய தண்ணளியை உடையவர்;
உயிர்களிடத்துக் கருணை உடையவர் (30);
அறவோர், துறவோர், (543).
அந்தணன் = கடவுள், (8); மற்றும் சிலர் அறவோர், செந்தண்மை யுடையவர் என்றும் கூறுவர். குறிப்பிட்ட ஒரு
சாதியைக் குறிக்காது. 'பார்ப்பார் என்றால் திருமறை பார்ப்பார், நாழிகை பார்ப்பார், நிமித்தம் பார்ப்பார்’ என்கிறார் நாவலர் தனது உரையில்.)
அந்நிலை = அது நிற்குமளவில், (439).
அந்நிலையே = அவ்வாறு செய்யாத நிலையில் நின்று;
முன்பிருந்த நிலையிலேயே நின்று,
(967).
அப்பால் = அப் பகுதிகளையுடைய, (950).
அப்பால் நாற்கூற்று = பரிமேலழகர்,
அந்த நான்கு பகுதிகளையுடைய, நான்கு திறத்தது. அதாவது உற்றான் முதலிய நான்கு
பகுதிகளையும் தனித்தனி நான்கு பகுதிகள் என்கிறார். மணக்குடவர் உரையில் 'நோயுற்றான்... முதலிய நான்கு கூற்றது மருந்து என்கிறார்.
மருந்து பகுதி, (950).
அப்பொருளை = அவ்விரகசியத்தை, அந்த மறைபொருளினை, (695).
அமரகத்து = போர்க் களத்தே, (1027).
அமரர் = தேவர், (121). நாவலர் நெடுஞ்செழியன் 'விரும்புகின்றவர்' என்கிறார். இந்தச் சொல்லை வட சொல் என்பர் சிலர். தமிழ்ச்
சொல் என்று இதைக் கூறுபவரும் உண்டு. அவர்கள் இந்தச் சொல்லிற்கு இனிது
அமர்ந்திருப்பவர் என்பர்.
இந்தச் சொல் வானத்தில் இருப்பவர் என்னும் பொருளில் 'அ' என்ற எழுத்து அமரர் என நின்று; பின் அமரர் என்றாயிற்று எனலாம். அ.இ. உ. என்னும்
சுட்டுகளிலிருந்து தமிழிலுள்ள சொற்களில் பெரும்பாலன தோன்றியுள்ளன என்பது தமிழ்
மொழி ஆய்வாளர் கூற்று.
அமராமை = முன்பு பொருந்தாமை; முன்பு சுற்றமாக, (529).
அமர் = போர், (814); அமர் செய் கின்ற, (1083); போரைச் செய்யும், (1125).
அமர்க்கண் = போர் செய்கின்ற கண்கள்;
அமர்த்தல்; போர் செய்தல், (1083).
அமர்த்தன மாறுபட்டிருந்தன; அவளது நல்லியல்புக்கு மாறு அமைகலா = செய்யமாட்டாத;
பட தனமையுடையனவாக செய்ய மாட்டாது,
(219). இருக்கின்றன.
குணங்கட்கும், * * w பேதமைக்கும்
ஏலாது கொடிய அக திருக்குறளில், வாய் இருந்தன என்பதாம், (1084).
அமர்ந்த = பொருந்திய, (75).
அமர்ந்து = மகிழ்ந்து, (84); மலர்ந்து, விரும்புதல், விரும்பி, (92); பொருளாக, (93).
அமிழ்தும் = சாவா மருந்து என்பர் சிலர். சுவை உணவு என்பர்
மற்றும் சிலர். இந்தச் சொல். அம்ருத என்னும் வடசொல்லின் வேறுபாடு என்பர்.
இன்பத்தில் ஆழ்த்தும் சுவை யுணவு அமிழ்தம் என்று பொருள் கூறி,
இச்சொல் தமிழே என்றும் சொல்வர் தமிழர். இந்தச் சொல் 'ழ'கர உச்சரிப்பு பெற்றுள்ளது. உலக மொழி களில் 'ழ'கர ஒலி எந்த மொழி யிலும் இல்லை. தமிழில் மட்டுமே 'ழ'கரம் தனிச் சிறப்பு ஒலி பெற்ற மொழியாக நீண்ட நெடுங் காலமாக இருப்பதால்,
இது தமிழ்ச் சொல்லே. கட்டுமரம் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில
மொழியில் கட்டமரான் ஆனது போல, அமிழ்தம்' என்ற சொல்லே வடமொழியில் 'அம்ருதமாக மாறியிருக்கின்றது. ஏனென்றால்,
வடமொழியில் 'ழ'கர ஒலி இல்லையே! அதனால்.
அமிழ்தினும் = அமிழ்தத்தினை விட,
உம்மை - உயர்வு சிறப்பு, (64).
அமிழ்தின் = அமிழ்தத்தைவிட, (64); அமிழ்தினால், (1106).
அமிழ்து = அமிர்தம், சுவையுணவு, (64, 720, 1106),
அமை = மூங்கில், (906).
அமைகலா = செய்யமாட்டாத; செய்ய மாட்டாது, (219).
அமைச்சு = திருக்குறளில் அமைச்சர்களது கடமைகள்,
ஆற்றல்கள் கூறும் 64-ம் அதிகாரம். வடமொழி பற்றாளர்கள் அமைச்சர் என்ற சொல்
ஆமாத்தியர் என்ற வட மொழியிலே யிருந்து பிறந்ததாகக் கூறுவர். அமைவு என்ற சொல்லிலே
யிருந்து இது பிறக்கவில்லை. ஆமாத்தியர்தான் வேர்ச் சொல்லென வாதிடுவர்.
பொருந்தவில்லை அவர்கள் வாதம். 381-வது குறளின்படி அரசியல் பகுதியின் இறை மாட்சியில் அமைச்சு
ஓர் உறுப்பினன் ஆவான். அந்த அமைச்சன் 631, 632, 633, 634 குறட்பாக்களில் கூறப்பட்ட எல்லாவித ஆற்றல் களையும்,
பண்புகளையும் உடையவனாக இருக்க வேண் டும். இவை அமைவு பண்பு
கொண்ட அறிவுடையோன், அடக்கமுடையோனிடம் மட்டும் தான் பொருந்தும். எனவே,
அமைவு என்ற சொல்லிலே இருந்து அமைச்சன்,
அமைச்சர் என்ற சொல் தோன்றுவதுதான் இயல்பு,
இயற்கை.
அமைதல் = பொருந்துதல்; நட்பு கொள்ளல், (825), அளவுக்கு அமைதல்; கலவி இன்பத்தில் சேருதல், (1302).
அமைந்த = அடக்கமான, (635); பெரிய, (900).
அமைந்தக் கண்ணும் = வாய்த்த விடத்தும்,
(606).
அமைந்தற்று = வேண்டுமளவில் ஆவதுபோல,
(1302).
அமைந்தார் = கணவனாக அமைந்தவரது அல்லது காதலரது,
(1155).
அமைந்தின்று = அமைந்தது இல்லை;
அமையவில்லை, (340).
அமைந்து = தன்மைகளால் நிறைந்ததென,
(118); சமாதானப்பட்டு
பொருந்தியென, (474); நிறைந்தது
என்று,
(761).
அமையல = இருக்க முடியவில்லை; மனநிறைவில்லை, (1283).
அமையா = வாழ முடியாத', இல்லாமல் இயலாத, (961).
அமையாக் கடை = ஏற்றுக் கொள்ளாத இடத்தில்;
உடன்படாத விடத்து, (803).
அமையாத = முடியாத, (632); பொருத்தமில்லாத, (825).
அமையாது = நடக்காது; முடியாது, (20).
அமையார் = அமை+ஆர் மூங்கில் போன்ற,
{906).
அமையும் = உண்டாகும், (298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது,
(708); ஏற்புடையது,
(1193).
அமைவர் = பழகுபவர், மேவுவர், (580).
அமைவில = பொறுக்கின்றில, (1178). அமைவிலன் - பொருத்தம் இலன், -(862).
அமைவிலாத = பொருத்தமில்லாத, (740).
அமைவு = பொருந்துதல்; மேவுதல்; வேத்தமைவு. எனவே, குடிகள் அவன்மேல் அன்புடை யராதலும்,
அவன் மக்கள் மேல் அன்புடயனாதலும் அடங்கின,
(740); மிகுதி,
(743); அமைதல்,
(1178).
அமைவுஇலன் = மற்றவர்களோடு பொருத்தம் இலன்,
(863).
அம் = அழகிய, (1107).
அம்பினில் = அம்பினும், அம்பை வைத்திருப்பதைவிட, (772).
அயர்கம் = உண்போமாக, செய்வோமாக, (1268).
அங்கு = இந்தச் சொல்லை வடசொல் என்பாரும் உளர். அரங்கு,
அறு என்னும் அடியாகப் பிறந்தது;
அவ்வாறானால் கோடு அறுத்தல்; வகுத்தல் எனும் பொருளுடையது. அரம் கொண்டு இரும்பை அராவு தலை,
அறுத்தலை நாம் பார்த்துள்ளோம். எனவே,
அரங்கு தமிழ்ச் சொல்லே. அரங்கு என்றால் சூதாடு கோடுகள்;
சதுரங்கக் கோடுகளையும் பொருள் குறிக்கும். சூதாடு களம்,
(401).
அரசர் = வேந்தர் (3.81). இது ராஜா எனப்படும் வட சொல்லின் திரிபு என்பர். ஐரோப்பிய
ஆரிய மொழிகளில் இந்த சொல் இல்லை. இது தமிழச் சொல்லே. அரசு என்ற தமிழ்ச் சொல் வட
மொழியில் ராஜா என வழங்குகிறது என்பது ஆய்வாளர் முடிபு. அரண்களை உடையவன்தானே அரசன்?
அரசு = அரசன், அரசனுடைய பண்புகள், தன்மைகள், கடமைகள் ஆகியவற்றை, (384, 385, 554) குறட்பாக்களில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
அரண் = கோட்டை, கோட்டை மதில், (381, 421, 492, 741,
750); காவல்,
பாதுகாப்பு, (534).
அரம் = அராவும் கருவி, (567, 888, 997).
அறம்பொருத = அரத்தால் தேய்க்கப்பட்ட,
(888).
அரிது = ஆகாது, முடியாது, (7, 8, 29,101); இல்லை, (177,227, 235, 248, 606, 647,
693, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1160, 1180, 1276); உண்டாகாது, அருமை யுடையது,(377, 419, 499).
அரிது ஆற்றி = பிரிவுக்கு உடன்பட்டு,
(1160).
அரிதே = அரியது, (213, 443,503). அரிந்தற்று - அறுத்தார் போலும்,
(1304).
அரிய = அரியவை, சுலபமாக, எளிதில் முடியாதவை. (26. 489); அரிய நூற்களை அதாவது மன்னர்கட்குரிய போர் நூல்,
பொருள் நூல், ஆட்சி நூல் முதலியன, (503); அரியவை, (537, 664, 781).
அரியது = அரிய காலம், (489); அருமையுடையது, (747).
அரியர் = சிலர், பெறுதற்கு அரியர், (723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர்,
(1138).
அரியவற்றுள் = அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும்,
(443).
அரியவை = பொறுத்தற்கரியன,(693).
அரிவை = பெண், (1107).
அரு = அரிய, அரியதான, (483, 631, 647).
அருங்கேடன் = அரிதாகிய கேடுகளை உடையவன்,
(210).
அருங்கேடு : = அழிவில்லாமை, (732).
அருஞ்செவ்வி = தன்னைப் பார்க்க வருபவர்க்குச் சமயமின்மை,
(565).
அருட்செல்வம் = அருளால் வரும் செல்வம்,
அருளுடைமையாகிய செல்வம், (241).
அருட்பொருள் = அருளாகிய பொருள்,(914).
அருந்தியது = உண்டது, (942).
அருப்பு = கிளைத்தல், அரும்பி வளர்தல்; அரும்பு,(522).
அருமறை = அரிய இரகசியங்களை, (847).
அருமை = முடியாமை, கடுமை, (611); பொறிகள் இருப்பதால் கடத்தற்கு அருமை. (743);
அடைதற்கு அருமை, (1142).
அருமை உடைய = பிறர் செய்தற்கு அருமையுடைய,
(975).
அரும் = அறிதற்கரிய, (198); பெற முடியாத, (462); இன்மை, (732).
அரும்பயன் = அருமை தரும், நன்மை தரும் செயல்கள், (198).
அரும்பி = உண்டாக்கி, (1223); முகிழ்த்து, மொட்டாகி, (1227).
அருவினை = முடித்தற்கருமையுடைய செயல்,(483,631).
அருளல்லது = பாவம், உயிர்க்கொலை, (254).
அருளற்றார் = அருள் இல்லாதவர்கள்,
(248)
அருளாட்சி = அருளால் வரும் பயன்,
(242).
அருளாதான் = அருள் இல்லாதவன், இரக்கம் கொள்ளாதவன், (249).
அருளாள்க = கருணையுடைய செயல்களில் பழகுக,
(242).
அருளின்மை = கருணையின்மை, (1209).
அருளென்னும் = அருளாகிய, (757). =
அருளொடும் = அருளுடைமை யோடும்;
குடிகளிடத்துச் செய்யும் அருளோடும்,(755).
அருள் = அருளொழுக்கத்தை; துறவு, (176); கருணை அருள் உடைமை, அருளுடைமை, என்பது என்னவென்றால், "யாதானும் ஓர் உயிர் துன்பப் படுமிடத்து,
தனது உயிர் வருந் தினாற்போல் வருந்தும் நீர்மை"
என்கிறார் இளம்பூரணர் எனும் உரை மேதை.(241,248,251, 252, 254,
285, 938).
அருள் ஆள்வாற்கு = கருணை உடையவனாய் இருப்பவனுக்கு,
(244).
அருள் பொருள் ஆயும் = அருளைப் பொருளாக ஆராயும்;
அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும்,
(914).
அரோ = அசைநிலை, ஈற்றசை, (1153, 1256).
அலகு = நெற்கதிர், நெல், (1034).
அலகை = பேய், (850).
அலந்தாரை = துன்பமடைந்திருப்பவரை,
(1303).
அலரறிவுறுத்தல் = களவொழுக்கத்தை அறிந்த மற்றவர்கள்,
ஊரர்கள் தூற்றுதல், தனக்கு நன்மையானவைகளை நாயகன் நாயகி தோழிக்குத் தெரிவித்தல்
(அதிகாரம் 115
அலர் அறிவித்தல்).
அலர் = ஊரார் அறிதல்; உறவு முறையில் பலர் அறிதல், (1141, 1142,
1146, 1149, 1296, 1301).
அலர் எழ = பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (1141).
அலர் நாண = அலர் தூற்றுவதற்கு வெட்கப்பட,
(1149).
அலை = அலையும் தொழில் வருந்துதல்,(551).
அலைக்கும் = தொந்தரவு கொடுக்கும்,
(735).
அல் = அல்லாததாகிய, (301); ஆகா, (1299); அல்லாத, (1300).
அல்ல = ஒழிந்த, (61); ஆகா, (95); இல்லை, (115, 1012); நடுவல்லாதவற்றை, (116); பாவங்கள், (150); அல்லாதன (157,173); பாவம், (181); அல்லாத, (289); இல்லை, (279); அன்றி, (337); அல்லாதவற்றை, (466, 700, 944, 962).
அல்லதற்கண் = துன்பத்தில், (798).
அல்லது = அல்லாத்து, (108); இல்லது, (231,254); அல்லாமல், (491, 570, 751, 951, 1131, 1159,
1168); செய்வதல்லது (1090);
குற்றமுள்ளது செய்யக் கருதின்,
(795).
அல்லம் = அல்லாதவராவோம், (1209).
அல்லர் = அவர் இல்லை, (143, 880,926,973); அல்லராதல், (1300).
அல்லல் = துன்பம், (245,379, 460, 555,
626, 787, 936, 938, 1160, 1301, 1303).
அல்லவை = அல்லாதவரை, (751).
அல்லவற்றை = இல்லாதவற்றை, (351).
அல்லவை = பாவங்கள், தீமைகள், (96,164,182,246); தவமல்லாத தீய ஒழுக்கங்கள், (274); அருளல்லாதவை, (384); அறமல்லாதவற்றை, (551); பிறவற்றை, (1286).
அல்லற்கண் = இடுக்கண் நேர்ந்த விடத்து,
(798).
அல்லனேல் = அல்லாதவனாயின், (386).
அல்லாதவர்க்கு = இல்லாதவர்க்கு,
(1077).
அல்லார் = அல்லாதார், (266, 419, 720, 822,
973).
அல்லார்க்கு = அல்லாதவர்க்கு, (726, 918,
999).
அல்லால் = அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406,
497, 515, 762, 1095, 1183).
அல்லாவார் = வருந்தார், (598).
அல்லிடம் = செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலிமையான இடம்,
(301).
அல்லை = நீ அப்படி இல்லை, (1221).
அல்வழி = ஆகாதபோது, துணையாக வராவிட்டால், (1299, 1300).
அவம் = வீண்; கேடு, (262); பயனில்லாதன, (266).
அவரின் = அவரிலும் பார்க்க, (1074).
அவர் = மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314); துறவாதவர், (348); கல்லாதவர், (410); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183,
1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321),
அவர்க் கண்ட = அவரைக் கண்ட, (1177).
அவர்க் காணாது = அவரைக் காணாது,
(1178).
அவர்க் காதல் = அவருக்காக நிற்றல்;
அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல்,
{1291).
அவர் பழி = இரக்கப்பட்ட வர்க்குப் பழியல்லது,
(1051). அவர் பொருள்
அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63).
அவர் வயின் விதும்பல் = பிரிந்திருந்த நாயகனை மனைவியர்
காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல்,
(அதிகாரம் 127).
'அவர் வயின் விதும்பல்” என்பது,
பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும்,
காதல் வேட்கை அதிகமானதால் அவர்களுள் ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.
அவலம் = கவலை, (1072).
அவள் = அந்தப் பெண், (1098, 1113, 1279).
அவற்றின் = பகை இரண்டனுள் ஒன்றை,
(875).
அவற்றுள் = செல்வங்களுள், (51); அவைகளுள், (504).
அவனின் = அவன் போல, (526).
அவன் = நிறைந்திருக்கும் தன்மையுடைய அவன்,
(684); கற்றார் அவைக்களத்து
அஞ்சுபவன், (727).
அவா = ஆசை, (35, 361, 364, 365, 366, 368,
369, 370, 513); விரும்பப்படும்
பொருள்,
(10.75); ஆசை,
(1310),
அவாம் = விரும்பிச் செய்யும், (215); விரும்பும், (681).
அவாய் = அவாவி; விரும்பி, (643).
அவாவின்மை = பொருள்மேல் ஆசை இன்மை,
(513).
அவி = அவி என்பதே வடமொழியில் ஹவிஸ் என வழங்கப்படுகிறது
என்பர் மொழி ஆய்வாளர். தமிழில் அவித்துப் படைப்பதை அவி எனப்படுகின்றது. அவியல்
என்ற உணவுப் பொருளை உண்டோரும் இதனை அறிவர். நெய், (259); வானோர்களை நினைத்து ஹோமத்தில் சொரியும் நெய் முதலியன,
(413).
அவித்தான் = அறுத்தான், (6); அடக்கியவனது, (25).
அவித்து = நீக்கி, தவிர்த்து, (694).
அவியின் = இறந்தால், (420).
அவிர் = விளங்கும்; ஒளி விடுகின்ற, (1117).
அவை = சபை, (67); அரங்கு, (332}; அது என்பதன் பன்மை அவை, (400, 658, 659); சபை, (711, 717, 723, 725, 727, 729); அப்பொருள்கள், (1105).
அவை அஞ்சாமை = சபையில் எழுந்து பேசும்போது அஞ்சாதிருத்தல்.
இது,
திருக்குறளில் வரும் 73-வது அதிகாரம். அறிஞர்கள், பண்பாளர்கள், கல்விமான்கள் கூடியுள்ள அவையில்,
திறமை யும், தகுதியும் பெற்ற ஒருவர் உரையாற்றத் துவங்கும்போது,
அந்த அவையைக் கண்டு அஞ்சாமல் உரை முழக்கமிடல் வேண்டும்
என்பதாகும்.
அவை அவை போலுமே = விரும்பப்படும் அந்த அந்த பொருள்கள் வந்து
இன்பம் தருவது போலும், (1105).
அவை அறிதல் = அரசனைச் சூழ்ந்திருப்பவரின் மனநிலையை அறிந்து
பேசுதல்.
திருக்குறளில் இது 72-வது அதிகாரம். அறிவுடையார், கல்வியாளர்கள், சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் பேச எழும்போது,
அந்த அவையில் குழுமியுள்ளோர் யார்?
எத்தகையர்? அவர்கள் உணர்வுகள் யாவை? என்பனவற்றை நன்றாக அறிந்துணர்ந்து பேசுதலே அவை அறிதல்
எனப்படும்.
அவை நீக்கி = தீயவழியிலிருந்து நண்பனை நீக்கி,
(787).
அவையத்து = சபையில், (67).
அவ் = அந்த, (254).
அவ்வது = அவ்வாறு, (426).
அவ்வித்து = பொறாமைப்பட்டு, (167).
அவ்விய = அழுக்காற்று, (164).
அவ் வுலகம் = வீட்டுலகம், (247).
அழ = வருந்தி, (659).
அழச்சொல்லி = கண்டித்துச் சொல்லி,
அழும்படிக் கூறி அவற்றை விலக்கி,
(795).
அழப்போம் = சேர்த்தவன் அழுமாறு போய் விடும்,
(659).
அழல் = நெருப்பு, (1228).
அழிக்கல் = அழித்தல், கெடுத்தல், (421).
அழிக்கும் = கெடுக்கும், (934).
அழிதல் = கண் விதுப்பு அழிதல். காதலர்கள் ஒருவரை ஒருவர்
விரைந்து காண வேண்டும் என்று வருந்துவதாகக் கூறுதல், (அதிகாரம் 118).
அழித்து = உணர்ன்வக் கெடுத்து,
(359); அந்தப் பார்வையை
மாற்றி,
(775): மதித்து,
அதற்கு மாறாக, (1317).
அழிந்து = கெட்டு, (498).
அழிபசி = அதிகப்பசி, மிக்கப் பசி, (226).
அழிப்பது = கெடுப்பது, (744).
அழிய = அழியும்படி, (958).
அழிவதூஉம் = அழிவதனையும், (461).
அழிவந்த = அழிவு வந்தவை, (807).
அழிவிலான் = கலக்கமில்லாதவன், (625).
அழிவின் அவை = அழிவைத் தருகின்ற தீய வழிகள்,
(787).
அழிவின்று = போரில் கெடுதல் இல்லை,
(764).
அழிவு = கேடு, (615, 764, 876).
அழீஇ = அழித்துச் சொல்லி, (182).
அழுக்கறுப்பான் = பொறாமை கொள்வான்,
(163, 166).
அழுக்கற்று = பொறாமை கொண்டு, (170).
அழுக்காறு = பொறாமை, (35, 135, 161, 165,
167, 168).
அழுக்காற்றின் = பொறாமை யினின்று,
(162); அழுக்காறு ஏதுவாக,
(164).
அழுத = அழுவதால் சிந்திய கண்ணீர்,
(555, 828).
அழுத கண்ணீர் = அழுதலால் ஏற்பட்ட கண்ணீரும்,
(555); அழுகின்ற கண்ணீர்,
(828).
அழுதள் = புலம்பினாள்; அழலாயினாள், (1318); அழுந்தும்; வருந்தும், (835).
அளக்கும் = அளந்து அறியும், (710).
அளந்தான் = கடந்தான், (610).
அளப்பது = அளந்தறிவது, அளப்பதற்கு கருவியாக உள்ளது, (796).
அளவல்ல செய்து = அளவற்றத் தீயச் செயல்களைச் செய்து,
(284). அளவளாவு - நெஞ்சு
கலத்தல்,
(523).
அளவில் = நேரத்தில், (1187).
அளவினான் = அளவு கடவாத, வேண்டப்படும் அளவுக்கு, (574).
அளவிறந்து கெடும் = எல்லையைக் கடந்து கெடும்,
(283).
அளவின்றிப்படும் = அளவில்லாமல் உண்டாகும்,
(947).
அளவு = வரை, (224); எல்லை, (283); அளத்தல், (287, 288); நேர்மை அறிந்தார், (289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (474); பொருளின் அளவு, (477, 478, 479); அளவை நூல், (725): காலம் வரை, (848), செரிக்கும் அளவு, (943), பசியளவு, (947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (949).
அளறு = நரகம், (255, 835, 919).
அளவாவிய = அளைந்த, துளாவிய, (64).
அளி = கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (390); அருள், (557, 1192, 1209, 1322).
அளிக்க = காக்க, (387).
அளிக்கும் = செய்யும், (1192, 1312).
அளிக்கும் ஆறு = செய்யும் வகை,
(1321).
அளித்து = அருளி, (1154); அருளுடையதாயிருந்தது, (1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (1256).
அளியர் = இரங்கத் தக்கவர், அன்பு காட்டத் தக்கவர், (1138).
அளைஇ = கலந்து, அளாவி (91).
அள்ளிக் கொள்வற்றே = அள்ளிக் கொள்ளும் பொருள் போலக்
குவிந்தது. என்னை முழுவதும் அப்படியே வாரிக் கொள்வது போலப் படரத் தொடங்கிற்று,
(1187).
அற = நீங்க, ஒழிய, (184, 258, 391); முழுமையாக, (465); நீங்க அல்லாமல், (717, 845).
அற ஆழி = அறக் கடவுளாகிய, அறக்கடலாக விளங்கும், அறம் பூண்டவர், (8).
அறஞ்சார நல்குரவு = அறத்தோடு பொருந்தாத வறுமையுடையவன்
என்பர் பரிமேலழகர்; அறத்தோடு பொருந்தி வராத வறுமை அடைய நேர்ந்தால்; நாவலர் நெடுஞ்செழியன்; பொருளையும் சிந்தித்து நல்கூர்தல் என்பர் மணக்குடவர்,
(1047).
அறத்தாறு = அறத்தின் பயன், (37).
அறத்தாற்றின் = அறவழியில், (46).
அறத்திற்கும் = அதிற் கூறப்பட்டுள்ள அறத்திற்கும்,
அற நூலிலுள்ள நெறிகட்கும், (543).
அறத்திற்கே அன்பு சார்பு = அறத்திற்கே அன்பு துணையாக
இருக்கும், (76).
அறத்தின் = நல்வினையிலும், அறத்தினைவிட, (31,32).
அறம் = தருமம், (8); துறவறம், (23); நன்மை, (31,32); தருமம், (35 முதல் 39, 46, 93, 96, 185, 249, 288,
296,297, 501, 1018, 1019, 1047); தவம்
76;
அற நெறி, (77); அறவோர் ஒழுக்கம்,
(130);
அற நூல்களையும், (141, 189); அறம் என்னும், (181); அறமென்பது அறநூலை; இது ஆகுபெயர், (183); அறக்கடவுள், (204).
அறம் நாணத் தக்கது = அறம் அவனிடம் தங்கியிருக்க
வெட்கப்படும் அல்லது நானும், (1018).
அறம் நோக்கி = எண்ணி, (189).
அறல் = சமித்தல், செரித்தல், (1326).
அறவினை = அறச் செயல், (33, 321); அறச்செயல்களைச் செய்தல், (909).
அறவோர் = துறவோர், தண்ணளியாகிய அறத்தையுடையோர், (30).
அறன் = அறம், நல்வினை, நற்செயல், அறநெறிகள், (34, 40, 45, 48, 49, 142, 147,
148, 150, 157, 163, 173, 179, 182, 189, 366, 384, 441, 635, 644, 754).
அறன் அழீஇ = அறத்தை அழித்து இழிவாகப் பேசி,
அறம் என்ற ஒன்று இல்லை என்று அழித்துச் சொல்லி,
(182).
அறன் ஆக்கம் = அறத்தையும் செல்வத்தையும்,
(163). அறன் எனப்பட்டது -
இல்லறம்,
துறவறம் என்ற இரண்டறங்களுள் அறமென்று சிறப்பித்துச்
சொல்லப்பட்டது, (49).
அறன்கடை = பாவம், தீய நெறி, (142).
அறன் சொல்லும் நெஞ்சம் = மற்றவர்கள் செய்யும் நன்மைகளை
நெஞ்சாரக் கூறும் மனம், (185).
அறா = நீங்காத, (552, 1295).
அறி = அறிந்த, (218).
அறிக = உணர்க, அறிந்து கொள்க, (116, 210).
அறிகல்லாதவர் = அறிய மாட்டாதவர்,
(427).
அறிகிலார் = அறியாதிருக் கின்றார்,
(1139).
அறிகென்று = அறிந்தவர் சொல்லை அல்லது அறிவுறுத்துவோர் அறிவை
ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638).
அறிதல் = தான் துப்புத் துலக்கும் ஒற்றாடலால் அறிதல்,
(582), செய்யத் தக்கதை
அறிதல்,
(632).
அறிதோறும் = நூல்களை ஆய்ந்தாய்ந்து புதுப்புது பொருளை
அறியும் தோறும், (1110).
அறிந்த = அறியவல்ல, அறிவினால் ஆராயத்தக்க, அறிவுடைய, (61); பயன்படுத்த, அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143).
அறிந்த கடைத்தும் = அறிந்த விடத்தும்,
(637).
அறிந்தது = அறியப் பெற்றது, (1226),
அறிந்தவை = கேட்டறிந்த செயல்கள்,
(587).
அறிந்தார் = அறிந்தவர்கள், பயின்றவர்கள், (288); ஆராய்தல் வல்லார், (717).
அறிந்தான் = அறிந்தவன், (635).
அறிந்து = மற்றவர்களால் அறியப்பட்டு,
(123); உணர்ந்து,
(136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645,
687, 696, 711,
721,
725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக்கும், (12.87); கருதி, (1312).
தெரிந்து = தெரிந்து கொண்டேன்,
(1083).
அறிய = பிறரறிய, (590); அறிந்து நடக்கும்படி செய்ய, (795).
அறியலம் = அறியமாட்டேன், (1257).
அறியா = அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116).
அறியாது = அறியமாட்டாது, (1142).
அறியாமை = அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த அறியாமை, (1110).
அறியார் = கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141).
அறியார்க்கு = எந்த வகையிலும் அறியாதவர்களுக்கு,
(877).
அறியார் கொல் = வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ,
(228).
அறியான் = அறிவதும் செய்யாது, (474); அறியான் ஆயினும், (638) அறிய வேண்டியவற்றை அறியானாகவும்,
(863).
அறியும் = அனுபவிக்கப்படும், (1101); அறிந்து கொள்ளும், (1308).
அறியேன் = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207).
அறிவது = கண்டறிவது, மதிப்பது, (61); ஒன்றனை அறிவது, (293); அறிந்து கொள்வது, (1255).
அறிவல் = அறிவேன், (1129).
அறிவறிந்து = அறியவேண்டியவற்றை அறிந்து,
(123); அறிவினால் அறிய
வேண்டியவற்றை அறிந்து, (618).
அறிவன் = மெய்யறிவினை உடையவன்;
அறிவாற்றலில் சிறந்தோன், கடவுள், (2).
அறிவாம் = அறிந்து செய்வோம், (36).
அறிவாரின் = அறிகின்றவரினும், (1072).
அறிவார் = அறிந்தவர், (427, 428, 995,
1053).
அறிவான் = அறிவினையுடையவன், (215).
அறிவான் = அறிகின்றவன், (214, 318, 677, 701).
அறிவிப்ப = உணர்த்துவ, (1233).
அறிவிலா = அறிவில்லாத, நீதியை அறியாத, (869).
அறிவிலார் = அறியார், அறியாதார், (140).
அறிவிலான் = புல்லறிவாளன், (847).
அறிவில்லன் = அறிவில்லாத மற்றவர்கள்,
(1140).
அறிவினவர் = அறிவினையுடையவர்,(857,915,918,941).
அறிவினார் = அறிவினையுடையார், (198).
அறிவினர்க்கு = அறிவினை உடையவர்க்கு,
(429).
அறிவினான் = தான் பெற்றுள்ள அறிவினால் (நாவலர்
நெடுஞ்செழியன்); துறவிகள்
தாம் பெற்ற அறிவினால் (திருகுறள் முனிசாமி உரை); அறிவால் (பரிமேலழகர் உரை) அறிவுடையனாகிய அதனால்,
(மணக்குடவர்) (315).
அறிவினுள் = அறிவுத் திறன்களுள்,
(203).
அறிவு = அறிவுடைய, (61); அறிவோடு இணைந்த கல்வியறிவு, (68); அடங்குவது தான் நமக்கு அறிவென்று,
(123); கல்வியறிவு,
(174, 179); அறியும் தன்மை,
(214, 287, 331, 355, 358, 373, 382, 396, 404, 421, 427, 430, 441, 454, 507,
513, 622, 682, 684, 842, 847).
அறிவு அறிந்து = அறிய வேண்டியவற்றை அறிந்து,
(618).
அறிவு ஆண்மை = அறிவினை யுடையவராய் இருத்தல்,
(287).
அறிவுடைமை = கல்வி கேள்வி அறிவொடு பகுத்தறியும் உண்மை. [இது
திருக்குறளின் 43-வது
அதிகாரம். ஒருவன் கேள்விகளினால் கல்வி அறிவுடைமை பெறுவதும்,
அவற்றால் பயனடைவதும், அவன் உண்மை அறிவுடையனாவது குறித்தும் கூறப்பட்ட
அதிகாரமாகும்.]
அறிவுடையார் = அறிவுடையவர், (463,816); அறிவுடைய ராகிய காதலர், (1153).
அறிவும் = இயற்கை, செயற்கை அறிவும்,(1022).
அறிவே = அறிவே பேதைமை அறிவு, (373).
அறின் = பயனில்லாதபோது; செல்வமற்ற விடத்து, (812).
அறு = நீங்கிய, (119,352); ஆறு, (560); குறைந்த, (1117).
அறுக = இல்லாமற் போவதாகிய, (1177).
அறுக்கல் = அறுத்தலை, நீக்க முயலுதல், (345).
அறுக்கும் = ஒழிக்கும், நீக்கும், (349).
அறுதொழிலோர் = அறுதியிட்ட முக்கிய தொழில்களையுடையோர்.
அறுதொழில் வினைத்தொகை. அறுதி செய்யப்பட்ட தொழில். வரையறை செய்யப்பட்ட தொழில் என
பொருள் படும். அந்தத் தொழில்கள் யாவன? கல்வி கற்பித்தல், உழவுத் தொழில் செய்தல், நெசவுத் தொழில் செய்தல், சிற்பத் தொழில் செய்தல், தச்சுத் தொழில் செய்தல்-கொல்லுத் தொழில் செய்தல் போன்ற
முக்கிய தொழில்களைக் குறிக்கும் (நாவலர் நெடுஞ் செழியன் உரை). ஆறு வகைப்பட்ட
தொழில்கள். இயல்புடைய மூவர் என்று 41-ம் குறளில் குறிப்பால் கூறியது போல,
இந்தக் குறளிலும், அறு தொழிலோர்' என்றார். (உலகத் தொழில்கள் பொதுத் தன்மையில் உழவர்,
வாணிகர், ஆசிரியர், கம்மியர், கலைஞர், மருத்துவர் என்பவற்றுள் அடங்குவதாகும். திருக்குறளார்.
முனிசாமி உரை.]
அந்தணர் = அறத்தை வரையறுத்துக் கூறுவோர்,
(560).
அறுப்பார் = கைவிடுவார், (798).
அறுப்பன் = கெடுப்பவன், நீக்குபவன், (346).
அறுவாய் = முன்பு குறைந்த நிலையிலிருந்து,
பின்பு நிறைவு பெற்ற, (கலை); குறைந்த இடம், (1117).
அறை = வீட்டிலுள்ள அறை, (913); அடிக்கப்படும் பறை, (1180).
அறைந்தான் = அடித்தவனது கைவலிபோல,
(307).
அற்கா = சுருங்கா; அல்கா என்பது அற்கா எனத் திரிந்து நின்றது;
நிலைத்து நிற்காத, (333).
அற்குப = நிலை பெறுவன, (333).
அற்ற = ஒழிந்த, (349,521, 649, 654,
699, 956).
அற்ற கண்ணும் = செல்வம் அழிந்து வறியவனானாலும்,
(521).
அற்றதிலர் = உலகப் பற்றற்றவர் ஆகார்,
(355).
அற்றது = நீங்கியது, (365); சமித்தது, முன்பு உண்ட உணவு செரித்த பிறகு,
(942, 944).
அற்றம் = குற்றம், கேடு, (421); முடிவு, (434); மறைத்தற் குரிய உறுப்புக்களை, (846); குற்றம், (980); ஒளி குறையும் நேரம், (1186).
அற்றவர்க = உலகப் பற்றற்றவர், (365).
அற்றாக = அவ்வாறாக, (365).
அற்றவரை = சுற்றமில்லாதவரை, (506).
அற்றார் = நீங்கியவர், (106); வறியவர்,(226); அழிந்தவரே, (248); நீங்கினார், (503.646).
அற்றார்க்கு = பொருள்; பணமற்றவர்க்கு, (1007).
அற்றால் = போன்றதாகும், (720, 758, 838); உணவு செரிக்கக் கூடிய அளவினை அறிந்து,
(943); போன்றது,
(1107, 1145, 1148).
அற்றான் = நீங்கினவன், (350).
அற்று = போன்றது. (100, 208, 215, 216,
217, 249, 273, 274, 332, 338, 401, 402, 407, 415, 452, 460, 718, 890, 913, 929,
939, 1000, 1020, 1058, 1107, 1192, 1302, 1304. 1306); இழந்து 1261.
அற்றே = அந்த அளவிற்று; அத்தன்மையே; அவ்வளவே, (261); போன்றது 716, 1288).
அற்றேம் = இழந்தோம், (88); துறந்தோம், (275); பொருளற்ற, வறியவரானோம், (626).
அனிச்சப்பூ = அனிச்சத்தின் மலர்,
(1115).
அனிச்சமே = அனிச்சம் பூவே, (1114).
அனிச்சம் = நாகமல்லிகை, (90, 1120).
அனைத்தினும் = அவ்வளவானாலும், (416).
அனைத்திற்கு = அந்த அளவிற்கு, (1129).
அனைத்து = எல்லா, (34) "அவன் எண்ணுகிற அளவுக்கு”, நாவலர் நெடுஞ்செழியன் உரை; "அளவிற்றாகும் போலும்- என்கிறார் மணக்குடவர்,
(387) அத்தன்மையது,
(394): அளவுக்கு,
(396); அவ்வளவு ஒத்த,
(409) அவ்வளவு,
(416); அத்தன்மையது,
(828); அந்த
அளவினது, (1208) - 'என்னுடைய அவயவங்கள் அனைத்தும்'
திருக்குறள் முனிசாமி உரை; "எனது உடல் அழகை எல்லாம்" நாவலர் நெடுஞ்செழியன் உரை,
(1320).
அனைய = அளவின. (595); போன்ற, (622); அளவின் குன்றிமணி, (965).
அனையர் = போன்றவர், வேடமுடையவர், (277); ஒப்பர், (310, 406); வேறுபாட்டையுடையர், (410); ஒப்பர், (650, 964); ஒத்திருப்பார்கள். (1073).
அனையாரும் = பெருமை பெற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்,(965).
அனைவரையும் = எல்லோரையும், (584).
அன் = ஓர் உயிரின், (259); உடைய,(360).
அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை = மனத்தில் அன்பில்லா
உயிரினது இல்லற வாழ்க்கை, (78).
அன்பிலவர்க்கு = அன்பில்லாதவருக்கு,
(79).
அன்பிலன் = உறவு முறைகள் மீது அன்பு இல்லாதவன்,
(762).
அன்பிலார் = அன்பில்லாதவர், (72).
அன்பிற்குமுண்டோ = "அன்பிற்கும் என்ற உம்மை சிறப்பு
பொருள் படவும் உண்டோ என்ற ஓகாரம் எதிர்மறைப் பொருள்படவும் நின்றன. அன்பினுக்கும்
இருக்கின்றதோ' திருக்குறள்
முனிசாமி உரை, (71).
அன்பின் - அன்பினுடைய (79) அன்பின் காரணமாக, (911). அன்பீன் : அன்பினின்றும் தோன்றிய,
அன்பினால் பெறப்பட்ட, (757).
அன்பு = அனைவரிடத்தும் காட்டும் அன்பு,
(45); உறவினர்களிடம் காட்டும் அன்பு,
(74); தன்னைச் சேர்ந்தவரிடம் தோன்றும்
உள்ள நெகிழ்ச்சி, (76, 78, 79, 80, 513, 681, 682, 807,
-983, 1009).
அன்புடைமை = மன்னனிடத்தில் அன்புடையவராய் இருத்தல்,
(681); எல்லாரிடமும் அன்பு
டையவராய் இருத்தல், (992).
அன்புடையராதல் = அருளின் மேல் அன்புடையராதல்'
- பரிமேலழகர் உரை;
உயிர்கள் மீது அன்புடையராதல்' - மணக்குடவர் உரை: 'அருளுடை மையை எண்ணி உயிர்களிடம் அன்புடைவராக விளங்கும்
பண்பு" - நாவலர் உரை "அருளின் பெருமையை அறிந்து அதன்மேல் அன்பு கொண்டு
நடப்பதென்பது - திருக்குறளார் முனிசாமி உரை, (285).
அன்புடையர் = அன்பைப் பெற்றவர்,
(72).
அன்புற்றமர்ந்த வழக்கென்ப = 'அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகியதின் பயன் என்று கூறுவர்'
- பரிமேலழகர்;
"முற்பிறப்பின்கண் பிறர்மேல்
அன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவார்' - மணக்குடவர், (75).
அன்பொடும் = குடிமக்கள் தங்களுக்காகக் காட்டும் அன்பொடு,
(755).
அன்போடியைந்த = அன்போடு பொருந்துவதற்கு வந்த,
(73).
அன்மை = வேறாதல், (162); அல்லாமை, (172); இன்மை, (185).
அன்றி = இல்லாது, (437, 947).
அன்று = பின்பு, (36); இல்லை, (82); அப்பொழுதே, (108); அல்லாத, (379); அன்று, மிக்கது, (438).
அன்றே = அப்பொழுதே, (108, 113); அல்லவோ, (555).
அன்ன = போன்ற, (109); ஒத்த, (296, 308, 363, 527, 889, 1071,
1119, 1137, 1142, 1143, 1260, 1267, 1294, 1305).
அன்ன ஒப்பார் = போல ஒத்திருப்பவர்,
(1071).
அன்னது = போன்றது, (565, 1082).
அன்னம் = அன்னப் பறவை, (1120).
அன்னர் = போன்றவர், ஒப்பானவர்கள், (1076). அன்னள் வாழ்தலோடு ஒத்தவள், (1124).
அன்னார் = போன்றவர் (667, 814, 889, 969,
1061); போல,
ஒற்றுமையுடையவர், (1323).
அன்னான் = எருதுபோல, தடைகளைக் கடந்து தளராமல் நடைபோடும் வல்லவன்,
(624).
அன்னை = பெற்ற தாய், (1147).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக