வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


வெள்ளி, 23 ஜனவரி, 2026

திருக்குறள் – மருந்து அதிகாரம் நோட்புக் எல்.எம் வழி ஓர் ஆய்வு

   


(கோபி,பி.கே.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 22.01.2026 அன்று நடைபெற்ற இலக்கியங்களில் தொழில்நுட்பம் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கில் வழங்கிய ஆய்வுக்கட்டுரை)

Abstract

Thirukkural is a book full of wisdom. People gain knowledge by reading Thirukkural. Depending on the level of knowledge of the readers of this book, new ideas can be gained. This article explores the techniques of converting the subtle messages of Thiruvalluvar's medicinal power into media files suitable for learning and teaching using the Google Notebook LM tool.

குறிச்சொற்கள்

திருக்குறள், Google Notebook LM tool. செய்யறிவுக் கருவி, செயற்கை நுண்ணறிவு, மருந்து,

முன்னுரை

              நவில்தொறும் நயம்தரும் நூல் திருக்குறள். எல்லாப் பொருளும் இதன்பால் உள அதனால் தொட்டனைத் தூறும் மணற்கேணிபோல படிக்கப் படிக்க மனிதகுலம் திருக்குறளால் அறிவுபெறுகிறது. இந்நூலைப் படிப்பவர்களின் அறிவுநிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. திருவள்ளுவர் கூறும் மருந்து அதிகாரத்தின் நுட்பமான செய்திகளை கூகுள் நோட்புக் எல்.எம் என்ற செய்யறிவுக் கருவி வழி, கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற ஊடகக்கோப்புகளாக மாற்றும் நுட்பங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திங்கள், 19 ஜனவரி, 2026

திருக்குறள் – உணர்வுப் பகுப்பாய்வு

 (இந்த ஆய்வுக்கட்டுரை அரிமாநோக்கு இதழில் 

Volume-20 / Issue-1 / Jan-Mar 2026 

வெளியிடப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்) 



ஆய்வுச் சுருக்கம்

        திருக்குறளுக்கு, பல உரைகள், மொழிபெயர்ப்புகள், திறனாய்வுகள் அச்சுவடிவில் உள்ளன. தேடுபொறி நுட்பங்கள், செய்யறிவு நுட்பங்களுக்கேற்ப ஒருங்குறி வடிவிலும், சொல்லடைவு, தொடரடைவு, பெரிய மொழி மாதிரி என பல வடிவங்களில் இணையத்தில் திருக்குறளை தரவாக்கம் செய்வது காலத்தின் தேவை என்பதை உணர்த்துவதுடன், திருக்குறளில் இடம்பெறும் உணர்வுகளை தொல்காப்பியரின் மெய்ப்பாட்டிலை அடிப்படையாகக் கொண்டு பெரிய மொழிமாதிரியாக உருவாக்கும் வழிமுறைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்

          திருக்குறள், உணர்வுப் பகுப்பாய்வு, மெய்ப்பாடு, பெரிய மொழி மாதிரி, Sentiment analysis, LLM,

முன்னுரை

          மனித வாழ்வின் வழிகாட்டியாகத் திகழும் நூல் திருக்குறள். இந்நூலுக்குப் பல உரைகள் வந்தாலும் நவில்தொறும் நயம்தரும் நூலாகவும், தொட்டனைத் தூறும் மணற்கேணி போலவும் இந்த நூலை வாசிப்போர் அறிவு நிலைகளுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைப் பெறமுடிகிறது. இன்றைய சூழலில் திருக்குறளுக்கான பொருளை சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற செய்யறிவுக் கருவிகளில் உரை, படம், ஒலி, காணொலி வடிவில் பெறும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பதிலின் துல்லியத்தன்மை குறைவாகவே உள்ளது. திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரியை (Large Language Model (LLM) உருவாக்கி, அதில் ஒவ்வொரு குறளிலும் இடம்பெற்ற உணர்வுகளை வகைப்படுத்தி அகராதியாக உருவாக்கி, இயந்திரக் கற்றலில் மொழி மாதிரிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) வழங்கினால் துல்லியமான பதில்களைப் பெறமுடியும். பெரிய மொழி மாதிரி உருவாக்கத்தில், திருக்குறளில் உணர்வுப் பகுப்பாய்வின் (Sentiment analysis) தேவையையும் அதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.