வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் சொற்பொருள் - ஆ

 

 

[ஆ -தமிழ் நெடுங்கணக்கில் வரும் ஒரு நெட்டுயிர் உயிர் முயற்சியால் பிறக்கும் எழுத்துக்களுள், வாயைத் திறந்த அளவிலே ஒலிக்கும் ஒரு நெடில் உயிர். அஃறிணை, படர்க்கை, எதிர்மறைப் பலவின் விகுதி, ஆக என்பதின் குறுக்கம். ஆதலைச் செய்யென் ஏவல், இசை, இரக்கம், இரண்டாம் உயிரெழுத்து இது. எதிர்மறை ஒரு வினையெச்ச விகுதி. சொல்லிசை, பசு, பெண் மான், பெண் எருமை, வியப்பு. விலங்கின் பெண் பொது, வினா இணைப்பு, அந்தம், உருக்கம், குறைவு, பிரிப்பு இவற்றை உணர்த்தும் இலக்கியச் செய்யுட் கூறுபாடு. அஆ - வியப்புச் சொல், வியப்பிரக்கச் சொல், இரக்கச் சொல், ஆக - ஆகட்டும் உவமையுருபு முழுவதும் அடங்கியுள்ள எழுத்து]

 

 

ஆ = பசு, 560-ஆவது குறளின் முதற்சீரின் முதல் எழுத்து. ''. பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியர்கள் '' என்றால் பசு என்று கூறி, அது தருகின்ற பயன் எனப்படும் பால் என்றும் சுட்டுகிறார்கள். [திருக்குறளார் முனிசாமி 'பசுக்கள் தரும் பயனான பால்' என்று பரிமேலழகர் உரைப் பாதையினையே நமக்கும் வழி காட்டுகிறார்.]

 

[ஆனால், நாவலர் நெடுஞ்செழியன் தனது உரையில், '' என்றால் பசு என்ற பரிமேலழகர் உரையை மறுத்து, ஆபயன் = வினைத்தொகை. குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள். ஆவின் பயன் என்று பொருள் தரும் 'ஆப்பயன்' என்பது பாடமல்ல. அது பொருந்தி வராது என்கிறார்!] (குறள் 560). [ஆனால், இரவு அச்சம் என்ற 197-ஆவது அதிகாரத்தின் 1966-ஆவது குறளின் முதல் சீரான ''விற்கு என்பதில் வரும் '' என்ற சொல்லுக்குப்

 

'பசு என்று உரை கூறுகிறார் நாவலர். சிந்திக்க.]

 

ஆ = ஆக, (82, 104, 119, 300, 429, 433, 443, 444, 451, 507, 634, 1163, 1193, 1250, 1315).

 

ஆக = உடையவனாக, (92); உளவாயிருக்க, (100); உண்டாக, (117, 278, 424, 434, 445, 666, 951, 1127, 1128, 1147, 1242, 1249, 1263, 1317).

 

ஆகல் = ஆக்குதல், ஆதல், (372).

 

ஆல் ஊழ் = பொருளை உண்டாக்கும் ஊழ், ஆகூழ் என்பர் பரிமேலழகர். [கைப் பொருளை ஆக்கக் கூடிய இயற்கைப் பண்பறிவு என்பது நாவலருரை] (372).

 

ஆகா = நில்லா, (376); முடியாத, (421); ஆகாமல் போகும், (456). ஆகாதது - ஆக நில்லாதது, (1291).

 

ஆகாதவை = முடியாதவை, (537}. ஆகாதாகி - இல்லவையாகி, (128).

 

ஆகாது = ஆக்கம் இல்லை; உண்டாகாது, (619).

 

ஆகாவாம் = நில்லாமற் போய்விடும், {376).

 

ஆகி = உடையவளாகி, மருந்தாகி என்ற சார்புகளிலே, (51, 217) பொருளாகி வரும், (481, 586, 587. 732, 744, 745, 1218, 1227, 1228).

 

ஆகிய = ஆகவும், ஆயிருப்பதன், (270); உண்டாகிய, {283); உடையராகிய, (329); ஆவ தற்குக் காரணமாகிய இயல் பினர், (817).

 

ஆகிவிடும் = தீதாக முடிந்து விடும், (128); அழிந்தே போவாம், (476).

 

ஆகு = செல்வம் உண்டாகும்; பொருள் திரள்வதற்குக் காரணமாகிய வழி, (371).

 

ஆகுஆறு = செல்வம் வரும் வழி: பொருள் வருமானம் வரக் கூடிய ஆக்கம், (478).

 

ஆகு ஊழ் = செல்வம் வருவதற்குக் காரணமான வழி; நன்மை தரும் வகையில் இயற்கை முறையாக அமையும் இயற்கைப் பண்பறிவு, (371).

 

ஆகுதல் = ஆவது என்பது, (683, 823).

 

ஆகுதிர் = நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (1319).

 

ஆகும் = முடியும், (134): ஆக இருக்கும், (128, 205, 235); பொருந்தும், (262); உண்டாகும், (328, 459, 630); ஆல், இருக்கும், (344, 368, 436, 452, 454, 456), உண்டாகும், (459); வெளிப்படுத்தியவனாவான், (590); இயலும், (1049, 1079, 1214).

 

ஆகுல = ஆரவாரிக்கும், (34).

 

ஆகுவது = ஆவது ஒரு பயன் (315).

 

ஆக்கத்தின் = செல்வத்தைக் காட்டிலும், (657). ஆக்கமும் செல்வப் பெருக்கமும், (169); நன்மைகளும், (642).

 

ஆக்கம் = செல்வம், மேலும் மேலும் பெருகுவது, (31, 32, 112, 113, 122, 135, 163, 177, 183, 283, 328, 457); செல்வம், (522,527, 544, 562, 593, 642, 651,755, 858, 859, 902); மேல் வரும் மிகு ஊதியம், (463); உயர்வு, (492).

 

ஆக்கி = உண்டாக்கி, உளவாக்கி, (12); முடித்து, (678).

 

ஆக்கிக் கோடல் = செய்து முடித்துக் கொள்ள வேண்டும், (678).

 

ஆக்கும் = வளர்க்கும், (616).

 

ஆங்கு = முன்பிருந்தபடியே, போலவே, (15, 265, 666); அசை, (43, 584, 1307); போல, (247, 803); அதுபோல, (252); அந்த வகையே, (279); அங்கே அயல் அரசரோடு, (474); அதுபோல, (534); அசை இடத்தும் எனினும் ஆம், (676); மேற் கூறிய, (740); அத்தகையது கூட, (1325).

 

ஆங்கே = அப்பொழுதே, அவ்விடத்தே, (16, 171, 179, 289, 333, 487, 566, 788, 1215).

 

ஆசற்றார் = குற்றங்கள் இல்லாதவர்கள், (503).

 

ஆசாரம் = ஒழுக்கம். இது வடச் சொல் என்று கூறுவர் பார்ப்பன பற்றாளர். தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு என்பதைக் கற்றார் அறிவர். அவ்வாறுள்ள சொல்லை. உடனே வட்சொல் என்ற முடிவுக்கு வந்து விடுவது தவறு என்று மொழி நூலார் கூறுவர்.

 

[ஆசாரம் என்பதற்குத் தமிழில் அரசிருக்கை, ஒழுக்கம், சீலை, பெருமழை என்று பல பொருள்கள் இருப்பதாக வீரமாமுனிவர் சதுர அகராதி கூறு கின்றது].

 

ஆசாரம் = அரசிருக்கை, அனுட் டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெருமழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள்களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழியகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று கூறவில்லை.

 

ஒழுக்கம் என்ற துய தமிழ்ச் சொல்தான் ஆசாரம் என்கிறார் நாவலர் திருக்குறள் தெளிவுரை எனும் அவருடைய உரையில்.

 

எனவே, ஆசாரம் என்பது ஆரியச் சொல் அல்ல என்று பாவணர் போன்ற தனித்தமிழ் அறிஞர்களும் கூறுகின்றார்கள் என்பதைச் சிந்திப்பீர்களாக,(1975).

 

ஆசு = குற்றம், (503).

 

ஆசை = பற்று, (256).

 

ஆடவர் = ஆண் மக்கள், (1003).

 

ஆடி = முழுகி, (278); வட்டாடும் காயுருட்டி விளையாடுவது, (401).

 

ஆட்சி = ஆறுதல், பயன் கொள்ளுதல், (252).

 

ஆட்டு = ஆடுதல் செய்கின்ற, (332).

 

ஆணி வண்டிச் சக்கரத்தில் செருகும் கடை ஆணி (667, 1032).

 

ஆண்டு = அந்த புன் சிரிப்பினிடத்தே, (1098); அவ்விடத்தில், (1279).

 

ஆண்டும் = அந்த இடத்தும், வேறு எங்கும், (363).

 

ஆண்மை = வீரம், (148); மன ஆக்கம், (287); உடையவராக இருத்தல், (331); மிகுதியாக உதவி செய்யும் தன்மை, (480); தன்னை ஆட்கொண்டிருப்பதை, (609); செய் வினையை முடிவடையும்போது வெளிப்படுத்துவதே, (663); ஆண் மகனது ஆண்மையைவிட, (907); ஒன்றுக்கும் தளராமல் நிற்கும் வீரம், (1133).

 

ஆஅதும் = மேலாக உயர வேண்டும், (653).

 

ஆதலே - தனி வடிவமே, (600).

 

ஆதல் = ஆக இருத்தல், (34); ஆவதே, (95); ஆயிருத்தல், (219, 285, 374, 419, 714, 1291); உயர்வடைதல், (248}.

 

ஆதி = அடிப்படைக் காரணம் கடவுள், இறைவன், சூரியன், நேரோடல், பழமை, முதல் என்கிறது வீரமாமுனிவர் சதுர அகராதி. ஆவா யென்னு முற்று - ஆவதற்குக் காரணமாக தொழிற் பெயர், (543).

 

ஆதி பகவன் - கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் = பகவன் சூரியன் என்கிறார்.

 

ஆதியாய் = அடிப்படைக் காரணமாய், (543).

ஆபயன் = பசுவால் பெறப்படும் பயன் பால் என்பர் பலர், (560); ஆப்பயன் என்பது பாடமல்ல; ஆபயன் வினைத் தொகை, குடிமக்களின் முயற்சியால் ஆகும் பயன்கள் என்கிறது நாவலருரை, (560). 'உலகம் அனைத்திற்கும் 'பால்’ இன்றியமையாததாகவும், பொது வாகவும் உள்ளதால் '' என்றாரென்றறிக என்கிறது’ திருக்குறளார் முனிசாமி உரை, (560).

ஆமை = ஆமை தனது ஒட்டுக்குள் ஐந்து உறுப்புக்களை அடக்கிக் கொள்ளும் ஒரு நீர் வாழ் பிராணி, (126).

ஆம் = ஆகும், (93, 113 449, 488, 492, 643, 1002, 1298); உளதாகும், (351); முடியும், (375); போய்விடும், (376); சார்வனவாகும், (320); ஆவான், (390); துணை நிற்கும், (414); அளவாம், (433); உண்டாகும், (453); உண்டாக்குவதும், (685); ஆவான், (686, 690, 785, 830, 858); அசை (889, 932).

ஆம்கால் = உண்டாகும்போது, (379).

ஆய = உண்டாகிய, (2); ஆன. (12); ஆகியவற்றை, (1286).

ஆயதூஉம் = நின்றதும், (12).

ஆயன் = இடையன் (1228).

ஆயார் = ஆகியவர், (106).

ஆயிடை - ஆக இரு வகையிலும், (1179).

ஆயிரம் = ஆயிரம் வேள்விகளைவிட, (259).

ஆயினும் = இருப்பினும், ஆயிருந்தாலும், (52, 127, 144, 355, 404, 409, 414, 458, 478, 599, 656, 889, 900, 961, 1005, 1321, 1325).

ஆயின் = ஆனால், (44, 45, 209, 563, 566, 1119, 1156, 1216, 1306).

ஆயும் = ஆராயும், (198); ஆராய்ந்து செய்யும், (914).

ஆய் - உடையவனாய், (446); சிறந்த, அழகிய, (1081); உடையதாய், (1216).

ஆய் இழை = ஆராய்ந்தெடுத்த நகைகளை அணிந்த இந்தப் பெண், (1124). -

ஆய்ந்தொடியார் = ஆய்ந்தெடுத்த வளையல்களையுடைய விலை மகளிர், (911):

ஆய்ந்தவர் = செயல்களை ஆராய்ந்து செய்பவர், (622).

ஆய்ந்து = ஆராய்ந்து, (517, 792, 795).

ஆய்ந்து ஆய்ந்து = நிறைவையும் குறைவையும் குணங்களையும் குற்றங்களையும், பலகாலும் பல முறைகளிலும் ஆராய்ந்து ஆராய்ந்துப் பார்த்து, (792).

ஆர = நிறைய பயனைப் பெற, (835); நிறைய, (1265).

ஆரா = ஒருக்காலும் நிறைவு பெறா, (370).

ஆராய்ந்த = ஒரு சொல்லின் பயனை ஆராய்ந்து, (682); ஆராய்ந்து உணர்ந்துக் கற்ற கல்வி, (684).

ஆராய்ந்து = ஆராய வேண்டியவற்றை ஆராய்ந்து அறிந்து, (586); அவற்றுக்கு ஏற்ற சொற்களைத் தெரிந்து ஆராய்ந்து,

 

(682); ஏற்ற சொற்களின் திறத்தை மேலும் ஆராய்ந்து, (711).

 

ஆதய்வது = பொருத்தமாக ஆராய்வது, (584).

 

ஆராய்வான் = ஆராய்ந்து நீக்கத் திறனுடையவன், (512).

 

ஆரார் = உணவு உண்டு நிறையப் பெறாதவர்கள், (936).

 

ஆரிருள் = நரகம், நிறைந்த துன்பம், {121}.

 

ஆருயிர் = அருமைமிகு உயிர் பெற முடியாத அரிய உயிர், (73).

 

ஆர் = இது பலர் பால் விகுதி, (43, 1189); அரிய, (73, 1141); தாங்க முடியாத, (121}; நிறைந்த, (1105); மிக்க, (1179).

 

ஆர்க்கும் = பிணிக்கும் அல்லது கட்டும் கயிறு, (482).

 

ஆர்வம் = பிறரிடம் காட்டும் விருப்பம், (74).

 

ஆர்வலர் = அன்புடையவர் (74).

 

ஆல் = மூன்றாம் வேற்றுமை உருபு (11); அசை நிலை, (91, 216, 217, 256); கண், போது, (102); கொண்டு, (129); காரணமாக, (208, 220, 371, 457, 514, 548); காரணத்தால், (265); கருவியாக, (282, 309, 418); ஏற்ப, (294); உடனே, (387); 397-வது குறளில் 'நாடு ஆமால்', 'ஊர் ஆமால்' என்ற இரண்டு இடங்களில் வந் துள்ள 'ஆல்'கள் இரண்டும் அசைகள், (397) ஆலே, (525}; கொண்டு, (537): ஆலும், (588); ஆல், (732, 757, 817, 827, 1004); அசைநிலை, (840, 875, 925, 966, 993), பொருட்டு, (1017).

 

ஆவது = வளர்வது, (283); ஆகக்கூடியது, (427); உண்டா

 

கும் ஆக்கத்தையும் அதாவது பொருளையும், (461).

 

ஆவது போல = வளர்வது போலத் தோன்றி, (283).

 

ஆவதூஉம் : பின்னால் வரப்போவதையும், (461).

 

ஆவர் = செய்வர்; செய்வாரோ, (1165); ஆகுவார், துன்பமுறுவார், (1189); ஆக நிற்பார், (1218).

 

ஆவன் என்ன ஆவேன், எப்படி வாழ்வேன், (1207).

 

ஆவார் = செய்வார் (1299).

 

ஆவிற்கு = பசு குடிப்பதற்கு, பசுவுக்கு, (1066).

 

ஆழி = கடல், (8); கடல் மண், கடல் கரை, (989).

 

ஆழும் = அழுந்தும், (919).

 

ஆழ் = சேற்றில் புதையும், புதையும் தன்மை, (500).

 

ஆளப்படும் = வேலைகளுக்கு அமர்த்தப்படுவான், ஆக்கப்படுவான், (511).

 

ஆளரை = உடையவரை, (1230).

 

ஆளும் = மேற்கொள்ளும், (251); மேற்கொள்ளச் செய்யும், நடு இரவிலும் அடக்கி ஆளும், (1252).

 

ஆளும் தொழில் = தொழில் படுத்தி அடக்கி ஆளும், (1252).

 

ஆள் = ஆட்கள், வீரர், (500); உடையவர், (1005, 1119, 1125, 1142).

 

ஆள்க = உடையவர்களாகுக (242); விடுக, போக்குக, (589).

 

ஆள்பவர் = பண்பாட்சியுடையார், (1017).

 

ஆள்பவர்க்கு = ஆளும் திறமை பெற்றோர்க்கு, (383); அவை

 

யவை கூறும் வழியில் நிற்பவர்க்கு, (791).

 

ஆள்பவற்கு = ஆட்சி செய்பவனுக்கு,(383).

 

ஆள்வாரை = உடையாரை, (447).

 

ஆள்வார் = காப்பவர்க்கு, (244).

 

ஆள்வினை = இது 62-வது அதிகாரத்தின் தலைப்பு. ஒருவன் இடைவிடாத மெய்ம் முயற்சி உடையவனாக இருப்பதுதான். ஆள்வினை. ஒவ்வொரு மனிதனும் இதை மூதாதையர் சொத்து போல் காப்பது நல்லது. முயற்சி, (632, 1022).

 

ஆறாது = மாறாது, (129).

 

ஆறு = வழி, பயன், நெறி, (37, 161, 219, 222, 324, 465, 478, 662, 787, 932, 1140); 20 வினைகளை, (43), தன்மை, இருப்பது, (397,849,1321).

 

ஆறு உய்த்து = நல்ல நெறியில் நடக்கச் செய்து, (787).

 

ஆறும் = தீரும், மாறும், (129).

 

ஆற்ற = மிகவும், (64); முற்றிலும், (367); மிக, (732, 1209).

 

ஆற்றலரிது = கைம்மாறாக ஈடு செய்ய முடியாது; நிறையில் சமமாதல் அரிது, (101).

 

ஆற்றலின் = வலிமை, (225).

 

ஆற்றலுள் = செய்வதுள்; உபாயம் செய்தற் கண்ணும்; செய்யுமிடத்தும் -மணக்குடவருரை, (469).

 

ஆற்றல் = வலிமை - ஒத்தல், (25); நிறையாற்றுதல் - மணக்குடவர் உரை, (25, 269, 765, 891. 985); வலிமை பொறுத்தல், (225); பெருமை (287).

 

ஆற்றறுத்து = வீழ்த்தி விட்டு, (814) - இராவுத்தனின் சேவுகத்தைக்

 

கெடுக்கின்ற என்பார் காளிங்கர் தனது உரையில்.

 

ஆற்றறுப்பார் = கைவிட்டு விடுவார், (798).

 

ஆற்றா = முடியாதபடி, (1174); தாங்க முடியாதபடி, தூங்க முடியாதபடி, (1175).

 

ஆற்றாக்கடை = செய்யாவிடின், செய்யாவிட்டால், (469).

 

ஆற்றாதார் = வலிமை அற்றவர்கள்; குன்றிய வலிமையுடையவர்கள்.(894).

 

ஆற்றாதான் = பொருள் கொடாதான், கருமி, கஞ்சன் செல்வம், (1007).

 

ஆற்றாது = பொறுக்க மாட்டாது, (555); செய்ய மாட்டாது, (1032).

 

ஆற்றாமை = மணம் செய்து கொண்ட காதலர்கள், கல்வி, பொருள், போர் போன்றவற்றுக்காக நாயகன் நாயகியைப் பிரிய நேரும்போது, நாயகி பிரிவு ஆற்றாமையால் வருந்துதல் பற்றி கூறும் 62-ஆம் அதிகாரம்.

 

ஆற்றாராகி = செய்ய முடியாத வர்களாகி, (998).

 

ஆற்றாரும் = வலிமையில்லாதவராயினாரும், (493).

 

ஆற்றார் = வலிமை இல்லாதவர், (493); செய்ய மாட்டார்கள், (908).

 

ஆற்றால் = வழியால், நெறிகளால், (367).

 

ஆற்றி = செய்து, தேடிய, பெற்ற (212); வலியுடையராய், (493); இடையூறுகளைத் தாங்கிக் கொண்டு செய்து முடிக்கும், (515); பொருந்தியிருந்து, (568);

 

பயன்படுத்திக் கொண்டு, (669); வலியவராய் காக்கும் வல்லவராய், (748); சுடுதலைச் செய்ய வல்லதாகுமோ, (1159); உடன்படும் செயலைச் செய்து, (1160); பிரிவை மிகவும் ஆற்றி, பிரிவை மீண்டும் செய்து, (1276).

ஆற்றின் = செய்தால், (38); வழியில் நடத்தினால், செலுத்து வானாயின், (48); நல்வழியிலே, (123); வல்லவனாயின், (126); வல்லவனது, (130); தெறியால், (164); இல்லற நல்லொழுக்கம், (176); செய்வானாயின், (297, 525); முடிக்கும் வழியில், (463); ஈதல் நெறியில்; தனது வருவாய் வழியின் நின்று, (477); நல்ல ஒழுக்க நெறியில் நின்ற ஒருவன், (716); சொற்பொருள் இலக்கண நெறியில், (725); செயல்களைச் செய்வதற்குரிய வழியில், (975).

ஆற்றின் கண் = இல்லறத்தின் அறவழி நெறியிலே - மணக்குடவர் உரை, (176).

ஆற்று = வலிமை, (798); வலி துணை, (814).

ஆற்றுபவர் = வலிமையினால் பகைமேல் படை நடத்துபவர், (741); அப்பொழுதே செய்து முடிக்க வல்ல பெரியோர்களுக்கு, (893); செய்யக் கூடியவர், (1165).

ஆற்றுமோ = வல்லதாகுமோ, (1159).

ஆற்றும் = செய்யும், (67, 70); பொறுத்தல், தாங்குதல், (189);

செய்தல் உண்டு, (211); செய்ய வேண்டிய செய்யும், (579); செய்து கொள்ளும், (835).

ஆற்றுவர் = செய்யத் துணிந்த செயலை முடிக்கும் சிறந்த திறமையுடையவர்களின், (891); வலிமையுடையவர்களுக்கு, (894); செய்ய வல்லவராவர், (975); ஒரு செயலைச் செய்யும் ஆற்றலுடையவர்கள், (985); நடத்த வல்லவர், (1027).

ஆற்றேன் = வல்லமையற்ற வளாக உள்ளேன், (1162).

ஆனால் - இருந்தால், (53).

ஆனும் = ஆயினும், (128,317, 397); ஆனாலும், என்றாலும், (416).

ஆன்= மூன்றாம் வேற்றுமை உருபு இது. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி என்ற பொருள்களில் திருக்குறளில் இது பல இடங்களில் வந்துள்ளன. எடுத்துக்காட்டாக "தோட்டியான் ஓர் ஐந்தும் 'காப்பான்" 24, என்பவை.

ஆன்ற = மிகுந்த, மேலான, (148); நிறைந்த, (416); உயர்ந்த வலிய, (862, 992); சிறந்த, (909); அகன்ற, (1022).

ஆன்றார் = தேவர், புலனடக்கத்தோடு நோற்பவர்கள் என்பது நாவலருரை; தேவர்கள் என்பது திருக்குறளாருரை; தேவர் பரிமேலழகர் கூற்று, (413).

ஆன்று = அறிவால் நிறைந்து, (635).

 


 


 


 


 


 


 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக